சாவான பாவம்

நம் தசையில் குத்தியுள்ள ஒரு முள் தரும் வேத னையை நாம் எல்லோருமே உணர்கிறோம். உண்மையில், நம் இருத்தலுக்கு அந்நியமான எந்த ஒரு பொருளும் நமக்கு வேதனை தருகிறது. அதை அகற்றும் வரை நாம் ஒருபோதும் இளைப்பாற முடிவதில்லை.

பாவமானது நம் ஆத்துமங்களுக்குள் ஊற்றுகிற விஷம் அந்த முள் தரும் வேதனையை விட பாரதூரமான அளவுக்கு மிகக் கடுமையானதாக இருக்கிறது. கசப்பான மனக்குத்தலும், தண்டனை பற்றிய பயமும், கடவுளின் கடுஞ்சினத்தைப் பற்றிய அறிவும் நம்மீது பாரமாக சுமந்து, நம்மை நசுக்குகின்றன. அடிப்படைக் கத்தோலிக்க அறிவு இல்லாததால், இவற்றைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றியும் கூட நாம் அறிந்திருக்கிறோம்.

கனமான பாவ நிலையில் இருக்கும்போது, நாம் கடவுளுக்கெதிரான ஒரு வெளிப்படையான கலக நிலையில் இருக்கிறோம். ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்வு ஊசலாடுகிற நூல் அறுந்து விடுமானால், தப்புவது அல்லது மன்னிக்கப் படுவது பற்றிய அற்ப நம்பிக்கையுமின்றி நாம் நரகத்தில் விழுந்து விடுவோம். இந்த பயங்கரத்துக்குரிய நிலையில் தொடர்ந்து இருக்கும் வரையிலும், பசாசின் ஆதிக்கத் திற்குள் நாம் இருக்கிறோம். கடவுளை நம் அருகிலிருந்து துரத்தி விட்டோம். இப்போது நாம் அவருடைய எதிரிகளாகவும், அவரோடு போரிடுபவர்களாகவும் இருக் கிறோம். இதன் விளைவாக தீய அரூபியானது நம்மீது ஓர் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறது. தனது சக்திக்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நம்மைக் காயப்படுத்தவும், நமக்கு எரிச்சலூட்டவும், நம்மை அழித்து விடவும் அது பாடுபடுகிறது.

தன் படுக்கையில் சுருண்டு கிடக்கும் ஒரு விரியன் பாம்போடு அமைதியாக உறங்க எந்த மனிதனால் முடியும்? தன் அறையில் இரத்த வெறி பிடித்த ஒரு பைத்தியக்காரன் இருக்கும்போது, கவலையின்றிப் படுத்துறங்க எந்த மனிதன்தான் சம்மதிப்பான்? ஒரு கொடூரமான, இரக்கமற்ற எதிரிக்குத் தன்னையே கையளித்து விட எவன்தான் நினைப்பான்? ஆயினும் சாவான பாவம் கட்டிக்கொண்டு, அதிலேயே நிலைத்திருக்க விரும்பும் ஆண்களும் பெண் களும் மிகச் சரியாக இதைத்தான் செய்கிறார்கள்.

பயனற்ற அச்சங்களை அல்லது மிகைப்படுத்தப்பட்ட மனவுறுத்தல்களைப் பற்றி சம்மனசுக்கொத்த வேத பாரகராகிய அர்ச். அக்குயினாஸ் தோமையாரை யாராலும் குற்றஞ்சாட்ட முடியாது. இருந்தும், உலகம் முழுவதுமே தமக்குப் பரிசாகத் தரப்பட்டாலும் அதற்காக ஒரே ஒரு இரவு கூட சாவான பாவத்தோடு கழிக்கத் தம்மால் இயலாது என்று அவர் கூறுவதோடு, புத்தி விபரம் அறிந்த எந்த ஒரு மனிதனும் அப்படிச் செய்ய எப்படித் துணிய முடியும் என்பது தமக்கு விளங்கவில்லை என்றும் அவர் அறிக்கையிடுகிறார்! மரண ஆபத்து ஒரு கூரிய வாளைப் போல, எப்போதும் நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண் டிருக்கிறது. “சுயஞ்சீவியரான கடவுளின் கரங்களில் விழுவது பயங்கரமான காரியம்'' (எபி.10:31).