முன்னுரை...
நம் ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்து நாதர் வசித்த புண்ணிய பூமியைத் தரிசிக்கும்படி பக்தியுள்ளவர்கள் பல நூற்றாண்டுகளாக சிரமத் தைப் பொருட்படுத்தாமல் பலஸ் தீனாவுக்குப் போய் வந்திருக்கிறார்கள். நம் நேச இரட்சகர் சிலுவை சுமந்து சென்ற பாதையில் அவர்கள் நடந்து, அவ ரது வேதனைகளாலும் மரணத்தாலும் அர்ச்சிக்கப் பட்ட இடங்களில் அவரது பாடுகளைப் பற்றி சிந்தித் தும் ஜெபித்தும் வந்திருக்கிறார்கள்.
ஆழ்ந்த பக்தியும் தவத்தின் மேல் ஆசையையும் எழுப்ப கிறிஸ்துநாதரது பாடுகளையும் மரணத்தை யும் பற்றி சிந்திப்பது சிறந்த சாதனமாகும். ஆத லின் இந்த பக்தி முயற்சிக்கு அநேக பலன்களைப் பாப்புமார்கள் அளித்திருக்கிறார்கள். அந்தப் பலன் கள் பக்தியுள்ள திருயாத்திரைகளுக்கும் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனைப்படும் ஆத்துமங்களுக்கும் பயன்படும்.
பலஸ்தீனாவின் பரிசுத்த ஸ்தலங்களைத் தரிசித்து திருயாத்திரிகள் அடைந்த அதே பலன்களை சிலுவைப்பாதை செய்யும் சகல கத்தோலிக்கரும் அடையலாம்.
அநேகமாக எல்லாக் கத்தோலிக்கக் கோயில்களி லும் பலன் ஸ்தாபித்த பதினான்கு சிலுவைகளைக் காணலாம். ஒவ்வொன்றிலுமுள்ள படம் அல்லது சுருபம் ஆண்டவர் பாடுபட்ட பாடுகளின் நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக் காட்டுகிறது. அந்த நிகழ்ச்சிகள் பிலாத்தின் அரண்மனையில் தொடங்கி, கல்வாரியில் ஆண்டவரது திருச் சரீரத்தைக் கல்லறையில் வைப் பதுடன் முடிவடைகின்றன.
இந்த ஞானத்திரவியங்களைப் பெறுவதற்கு ஒரு ஸ்தலத்திலிருந்து இன்னொரு ஸ்தலத்திற்கு நடந்து சென்று, ஒவ்வொன்றிலும் ஆணடவர் பட்ட பாடு களைப் பற்றி பொதுவிலோ, அல்லது குறிப்பிட்ட ஸ்தலத்தில் அவர்பட்ட வேதனை அவமானத்தைப் பற்றியோ சிந்திக்க வேண்டும்.
சிலுவைப்பாதையைத் தக்க விதமாய்ச் செய்ப வர்கள் தங்களுக்கு வரும் துன்ப வேதனைகளைப் பொறுமையுடன் சகிப்பார்கள், கடவுளுக்குக் கீழ்ப் படிவார்கள், அவரது திருச் சித்தத்துக்குப் பணிந்த மனதுடன் நடப்பார்கள்; ஞான நன்மைகளை ஏராள மாய்ப் பெறுவார்கள், கிறிஸ்து நாதருடைய உண்மை யான சீடன் சிலுவையின் பாதையில் அவரைப் பின் செல்வான்.
“எவனாவது என் பிறகே வர மனிதாயிருந்தால், தன்னைப் பரித்தியாகம் செய்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என் பிறகே வரட்டும். (மத்.16/24.)
முன் செபம்....
ஓ இரக்கமுள்ள யேசுவே, மனஸ்தாப இருதயத்துடனும் தவம் செய்யும் ஆசையுடனும் உமது கொடிய பாடுகள் மரணம் இவற்றிற்குத் தோத்திரமாக இதோ நான் சிலுவைப்பாதை செய்யப்போகிறேன்.
நிர்ப்பாக்கிய பாவியாகிய என் பொருட்டு பாரச் சிலுவையைச் சுமந்து செல்ல உம்மைத் தூண்டிய எல்லையற்ற உமது நேசத்துக்காக உமக்கு நான் தாழ்ச்சியுடன் நன்றி செலுத்துகிறேன்.
இந்த பக்தி முயற்சிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சகல ஞான நன்மைகளையும் நான் அடைய என்னைத் தகுதியுள்ளவனாக்கும்.
இந்தப் பலன்களையெல்லாம் எனது பாவங்களுக்குப் பரிகாரமாகவும் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்கு ஆறுதலாகவும், இறக்க இருக்கும் பாவிகள் மனந்திரும்பும் வரம் பெறவும், புண்ணிய பாதையில் நான் கடைசி வரை நிலை நிற்கும் படியாகவும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்.
மனஸ்தாப முயற்சி...
ஓ என் சர்வேசுரா, உம்மை மனநோகச் செய்ததற்காக நான் முழு மனதுடன் துயரப்படுகிறேன். என் சகல பாவங்களையும் நான் வெறுத்துப் பகைக்கிறேன். ஏனெனில் என் பாவங் களால் மோட்ச உரிமையை இழந்தேன்; நரகத்துக் குப் பாத்திரனானேன்; விசேஷமாக, மிக மிக நல்ல வரும், நன்மையே உருவான வரும், என் முழு அன்புக் குட் முற்றிலும் உரியவரும் என் சர்வேசுரனுமான உம்மை என் பாவங்களால் நான் மனநோகச் செய் தது பற்றி நான் மிக வருந்துகிறேன். உமது வரப் பிரசாத உதவியால் என் பாவங்களை வெளிப்படுத்தி, தபசு செய்து என் வாழ்க்கையைத் திருத்த நான் உறுதியான தீர்மானம் செய்கிறேன். ஆமென்.
(ஒவ்வொரு ஸ்தலத்திலும் கொடுக்கப்பட்டிருப்பதை வாசித்த பின் சற்று தாமதித்து மௌனமாய்த் தியானி.)
முதல் ஸ்தலம்
யேசுவை சாவுக்குத் தீர்ப்பிடுகிறார்கள்
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒரே இரத்தமாய் இருக்கும் யேசு என் நிமித்தம் தம்மை மிகப் பயங்கரமான மரணத்துக்குக் கையளித்து தம் எதிரி களிடம் தம்மை ஒப்படைக்கிறார். என் ஆன்மா மீது அவர் கொண்டிருக்கும் நேசத்தைச் சிந்தித்துப் பார்ப் பேன். என் ஆத்துமத்தை நான் தக்கவி தமாக மதிக்கிறேனா? கடவுள் அதைப் பெரிதாக மதித்து அதை மீட்கும்படி தம் திருமகனையே கொடிய மர ணத்துக்குள்ளாக்கினார்.
பர., அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய யேசுவே, என் மேல் இரக்கமாயிரும்.
இரண்டாம் ஸ்தலம்
யேசுவின் தோள் மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்
தம்மை அறைய இருக்கும் சிலுவையை யேசு ஆசையுடன் ஏற்றுக்கொள்கிறார். எனது மிகப் பாரமான சிலுவையை முழுமனதுடன் நான் ஏற்றுக் கொள்கிறேனா? எனது மிகப் பாரமான சிலுவை என்ன? என் சர்வேசுரா, உமது சிலுவையுடன் என் சிலுவையைச் சேர்க்கிறேன். எனது சிலுவையைப் பொறுமையுடன் சுமந்து செல்ல எனக்கு உதவி செய்வீராக. எவனாவது உம்மைப் பின் செல்ல விரும்பி னால் அவன் தனது சிலுவையைச் சுமந்து வர வேண்டும் என நான் அறிவேன்.
பர., அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்
மூன்றாம் ஸ்தலம்
யேசு சிலுவையின் கீழே விழுகிறார்
சிலுவையின் கீழே விழ யேசு சித்தமாகிறார். அவரது உதவியில்லாவிட்டால் நான் பாவத்தில் விழு வேன் என அவர் கற்பிக்க அவர் சித்தமானார். என் யேசுவே, எனது பலவீனத்தில் எனக்குத் திடனளிப் பீராக. என் சகல பாவங்களுக்கும் மூல காரணமாகிய இந்தப் பாவத்தில்........... நான் திரும்ப விழாத படி என்னைக் காப்பாற்று வீராக.
பர. , அருள் ., திரி,
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்.
நான்காம் ஸ்தலம்
யேசு தம் திரு மாதாவைச் சந்திக்கிறார்
மரியாயி எப்பொழுதும் தன் தேவமகனுக்குச் சமீபமாக இருந்தாள். இப்பொழுது சற்று அவரை விட்டுப் பிரிந்த பின், அவமானத்தையும் துயரத்தை யும் பொருட்படுத்தாமல் அவரை நாடிப் போகிறாள். யேசுவை விட்டுப் பாவத்தால் பல நாட்களாகப் பிரிந் திருக்கும் நான், வசதிக் குறைளைப் பொருட்படுத்தா மல் பாவசங்கீர்த்தனம் செய்து திவ்விய நன்மை உட் கொள்கிறேனா? இந்தத் தேவதிரவிய அனுமானங் கள் என்னைக் கடவுளுக்குச் சமீபமாக வைத்திருக் கின்றன.
பர., அருள். , திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்.
ஐந்தாம் ஸ்தலம்
யேசு சிலுவை சுமக்க சீமோன் உதவி செய்கிறார்
கிறிஸ்து நாதரது வேதனையைத் தணிக்க சீரேனான சீமோன் உதவி செய்கிறார். யேசுவின் திரு இருதய துயரத்தை அதிகரிக்கக்கூடிய தவறை பிறர் செய்யாதபடி தடுக்க என் நன்மாதிரியாலும் ஜெபத் தாலும் முயல்கிறேனா? என் இரட்சகரே; உமது சிலு வையின் பாரத்தைத் தணிக்க ஒரு சிறிதாகிலும் நான் செய்வதற்கான வரத்தை எனக்கு அளிப்பீராக.
பர., அருள் ., திரி.
உலகத்தின் பாவங்களைப்போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்.
ஆறாம் ஸ்தலம்
யேசுவின் முகத்தை ஒரு பெண் துடைக்கிறாள்
வெரோணிக்கம்மாள் என நாம் அழைக்கும் பெண் பயமின்றிக் கூட்டத்தைக் கடந்து, இரத்தம் வடித்துக் கொண்டிருந்த இரட்சகரைத் தேற்ற விரைந்து செல்கிறாள். கிறிஸ்துநாதருக்காக ஒவ் வொருநாளும் நான் ஏதாவது நன்மை செய்கிறேனா? இனிமேலாக இது விஷயத்தில் நான் அதிக கவனமா யிருப்பேன். இந்த வாழ்வில் நான் விதைப்பேனாகில் மறு உலக வாழ்வில் அறுப்பேன்.
பர. , அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்.
ஏழாம் ஸ்தலம்
யேசு இரண்டாம் விசை விழுகிறார்
யேசுவின் பலவீனம் அதிகரித்தமையால் இரண்டாம் முறையாக சிலுவையின் கீழே விழுகிறார். நான் பாவச் சோதனைகளையும் பாவச் சமயங்களையும் விலகி நடந்து, ஜெபத்தினாலும், தேவதிரவிய அனுமானங் களாலும் திடன் பெற்றாலொழிய நான் திரும்பத் திரும்பத் தவறி விழுவேன் என்று எனக்குக் கற்பிக்க வும் அவர் சித்தம் கொண்டார். என் பலத்துக்கு மேற்பட்ட சோதனை ஒருபோதும் எனக்கு வராது என்றாலும், கடவுளது வரப்பிரசாத உதவியில்லா விட்டால் நான் பலவீனனே.
பர., அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்.
எட்டாம் ஸ்தலம்
எருசலேம் நகர்ப் பெண்களை யேசு தேற்றுகிறார்
தமது வேதனைகளைப் பற்றி யேசு எவ்வளவு சொற்பமாக நினைக்கிறார். தமக்கு வரும் வேதனைகளை யும் படும் அவஸ்தையையும் அவர் பொறுமையாக சகிக்க மனதாயிருக்கிறார். ஆனால் தாம் யாருக்காக பாடுபடுகிறாரோ அவர்கள் உண்மையை உணர வேண்டும். தங்களது பாவங்களே அவர்களது பாடு களின் காரணம் என அவர்கள் அறிந்து பாவத்தை விலக்க வேண்டும். இதுவே அவர் விரும்புவது, நமது பாவங்களுக்காக அவர் காயப்பட்டார். எனது எந்தப் பாவம் கிறிஸ்துநாதருக்கு அதிக வேதனை கொடுத் தது என சிந்தித்துப் பார்ப்பேனாக.
பர., அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என்மேல் இரக்கமாயிரும்.
ஒன்பதாம் ஸ்தலம்
யேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
என் சகல பாவங்களுக்கும் முதற் காரணமான பாவத்தை விலக்கி, குறிப்பிட்ட சில நற்கிரியைகளைச் செய்வேன் என்று எத்தனை முறை நான் பிரதிக்கினை செய்திருக்கிறேன்? எவ்வளவுகாலம் அந்தத் தீர்மானத் தின்படி நடந்திருக்கிறேன்? மூன்றாம் முறையாக விழுந்த யேசுவே, என் பலவீனத்தை நான் மேற் கொண்டு, இறுதி வரை உம்முடன் நடந்து வர எனக்குப் பலம் தருவீராக.
பர., அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என்மேல் இரக்கமாயிரும்.
பத்தாம் ஸ்தலம்
யேசுவின் உடைகளைக் கழற்றுகிறார்கள்
பரிசுத்த கற்புக்கு விரோதமாக நாம் செய்துள்ள பாவாக்கிரமங்களுக்கு யேசு இந்த ஸ்தலத்தில் பரி காரம் செய்கிறார். இந்தப் பரிசுத்த புண்ணியத்துக்கு விரோதமாக நான் பாவம் செய்கிறதுண்டா? கண் பார்வையினாலா? செவியினாலா? நாவினாலா? உடையி ாைலா? செய்கையாலா? இந்தப் பாவங்கள் கடவுளுக்கு வருவிக்கும் நிந்தைகளுக்கு பரிகாரம் செய்யும்படி யேசு தம் சரீரத்தைக் கையளிக்கிறார். என் இரட்சகரே, என் இருதயமும் ஆத்துமமும் எப்பொழுதும் நீர் வசிக்கத்தக்க ஆலயமாயிருக்கும்படி நான் என் மேல் விழிப்பாயிருந்துவர எனக்கு உதவி செய்வீராக,
பர.. அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என்மேல் இரக்கமாயிரும்.
பதினோராம் ஸ்தலம்
யேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
யேசுவை அவரது மரணப்படுக்கையோடு சேர்த்து ஆணிகளால் அறைகிறார்கள். அவர் மிகக் கொடிய வேதனைப்படுகிறார். நல்ல யேசுவே, விரிக்கப் பட்டிருக்கும் உமது கரங்களால் என்னை ஆசீர்வதியும். காயப்பட்டிருக்கும் உமது கரத்திலிருந்து ஒரு துளி இரத்தம் என் ஆன்மாவில் விழுந்து அதைச் சகல பாவத்தினின்றும் சுத்திகரிக்கட்டும். என் வாழ்க்கை யானது இனி உமது பாடுகளின் காரணமாயிராத படி அருள் புரிவீராக.
பர., அருள்.. திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, என்மேல் இரக்கமாயிரும்.
பன்னிரண்டாம் ஸ்தலம்
யேசு சிலுவையில் இறக்கிறார்
ஓ உயிர்விட இருக்கும் யேசுவே, உமது சிலுவை யடியில் முழந்தாளிட்டிருக்கும் நான் உமது மரணத் துக்குக் காரணமான என் பாவங்களுக்காக மன்னிப் புக் கேட்கிறேன். என் சகல பாவங்களுக்காகவும் நான் முழு மனதுடன் துக்கிக்கிறேன். தேவ இரட்சகரே, என் கடைசி நேரத்தில் நீர் என்னுடன் இருப்பீராக. மனஸ்தாபப்பட்ட திருடனுக்கு நீர் மன்னிப்பு அளித் தது போல் எனக்கும் மன்னிப்பளித்து, என் ஆத்துமத்தை நித்தியத்துக்கும் பரகதியில் ஏற்றுக் கொள்வீராக.
பர. , அருள்.. திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என்மேல் இரக்கமாயிரும்.
பதின்மூன்றாம் ஸ்தலம்
யேசுவை அவர் மாதாவின் மடியில் வளர்த்துகிறார்கள்
ஓ மரியாயே, யேசுவின் மாதாவே, என் தாயே, உம்முடைய நேச சுதனது உயிரற்ற உடலருகே உமக் குச் சமீபமாக நான் முழந்தாளிட அனுமதி தாரும். அவரது கட்டளைகளின் பாதையில் நான் நடந்து எப் பொழுதும் நான் அவருக்குப் பிரமாணிக்கமாயிருக் கும் வரம் பெற்றுத்தருவீராக. அவருடனும் உம்முட னும் நான் நித்திய காலத்துக்கும் ஒன்றித்திருக்கும் வரை அவரை நான் தக்கவிதமாக திவ்விய நற்கருணை வழியாக உட்கொள்ளும் வரத்தை எனக்குப் பெற்றுத் தருவீராக,
பர., அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுர னுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்.
பதினான்காம் ஸ்தலம்
யேசுவை அடக்கம் செய்கிறார்கள்
வாழும் விதத்தையும் சாகும் விதத்தையும் யேசு எனக்குக் கற்பித்திருக்கிறார். வாழ்விலும் சாகும் நேரத்திலும் நான் அவருக்குச் சமீபமாக இருப்பேனா னால், அவர் போல், நானும் கல்லறையிலிருந்து மகிமை யுடன் எழுந்து, நித்தியத்துக்கும் அவருடன் மோட்சத்தில் இன்பம் அனுபவிப்பேன் என இப்பொழுது யேசு எனக்கு நினைப்பூட்டுகிறார். நல்ல யேசுவே, உம் முடன் நித்தியத்துக்கும் மோட்ச மகிமை அனுபவிக்க நான் தகுதியுள்ளவனாகும்படி இப்பொழுது நானும் உயிர் வாழ எனக்கு உதவி செய்வீராக.
பர., அருள்., திரி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும்.
சிலுவைப் பாதைக்குப் பின் ஜெபம்
சர்வ வல்லபரும் நித்தியருமான சர்வேசுரா, இரக்கமுள்ள பிதாவே, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பொறுமை இவற்றின் மாதிரியாக உம்முடைய ஏக சுதனை மானிட சந்ததிக்கு அளித்து, அவர் தமது சிலுவையைச் சுமந்து, வாழ்க்கையின் பாதையில் எங்களுக்கு முன் நடந்து செல்லத் திருவுளமானீரே; அவரது அளவற்ற நேசத்தைப் பார்க்கும் நாங்கள் அவரது சுவிசேஷத்தின் இனிய நுகத்தடியையும் எங்கள் சிலுவையையும் நாங்கள் சுமந்து அவருடைய உண்மையான சீடர்கள் போல் அவரைப் பின் சென்று ஒரு நாள் நாங்களும் அவருடன் மகிமையுடன் உயிர்த்தெழுந்து பரலோகத்தில் நித்திய பாக்கியம் அனுபவிக்கக் கூடியவர்களாகும்படி கிருபை செய்தருள்வீராக.
ஆமென்.