ஒன்பதாம் வேத கலாபனை. காலம் : கி.பி. 270 - 275.

நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி அவ்ரேலியன். 
காலம் : கி.பி. 270 - 275.

மாரியுஸ் என்ற போர்வீரர் சக்கரவர்த்தியின் சேனையில் பணியாற்றினார். அவருடைய தகுதியைக் கண்டு அவருக்கு செந்தூரியன் பதவி கொடுக்கப் பட்டிருந்தது. குறிக்கப்பட்ட நாளில் செந்தூரிய னுடைய அடையாளக்கோல் அவருக்குக் கொடுக்கப் பட்டபோது, அவருக்கு அடுத்த தகுதியிலிருந்த மற்றொரு போர்வீரன் முன்வந்து, மாரியுஸ் இந்தப் பதவியை ஏற்கத் தகுதி பெறவில்லை , மாரியுஸ் ஒரு கிறீஸ்தவன் என்று குற்றஞ்சாட்டினான்.

மாரியுஸுக்கு மூன்று மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் அவர் சாம்ராஜ்ய தெய்வங்களின் சிலைகளுக்குப் பலியிட ஒப்புக் கொள்ள வேண்டும்!

இச்செய்தி மேற்றிராணியாரான தியோதேனுஸ் என்பவருக்கு எட்டியது. அவர் மாரியஸை தேவால் யத்தினுள் கூட்டிச்சென்று அங்கே ஒரு போர்வீரனின் ஆயுதமான வாளையும், சுவிசேஷப் புத்தகத்தையும் அவருக்குக் காண்பித்து, இரண்டில் ஒன்றைத் தெரிந்துகொள் என்றார். ஒரு விநாடி கூட தயக்க மில்லாமல் மாரியுஸ் சுவிசேஷ புத்தகத்தைப் பற்றிக் கொண்டார். ''நல்லது மாரியுஸ்; கடவுளைக் கெட்டியாய்ப் பற்றிக் கொள். இப்பொழுது சமாதா னத்துடன் போ" என்று கூறினார் ஆயர். மாரியுஸ் உடனே தலை வெட்டப்பட்டு வேதசாட்சியானார்.

இதே வேதகலாபனையில், உரோமை கேளிக்கை அரங்கில் 260 வேதசாட்சிகள் உரோமைப் போர் வீரர்களால் அம்பு எய்து கொல்லப்பட்டார்கள். இன்னும் அநேகர் இதே காலத்தில் வேதத்துக்காகப் பல வேதனைகளுக்குப் பலியாகி இறந்தார்கள்.

சக்கரவர்த்தி அவ்ரேலியனுடைய அந்திய காலத் தில் நடந்த இக்கலாபனைச் சட்டம் தேசத்தின் கடை எல்லைகளைச் சென்றடையும் முன்பே அவன் மரித்து விட்டான். ஆயினும் அவனுடைய கருத்து கிறீஸ்தவர்களை அழிப்பதே என்று கூறி கீழ்மட்ட அதிகாரிகள் கிறிஸ்தவர்களுக்கு எண்ணற்ற கொடுமைகளை இழைத்து துன்புறுத்தினார்கள்.

அவ்ரேலியனுக்குப் பின் 20 ஆண்டுகள் திருச் சபை கலாபனை இன்றி செழிப்புற்றது. ஏராளமான பேர் கிறிஸ்தவர்களானார்கள். செழிப்போடு சீர்கேடு களும் புகுந்ததனால் அதைத் துப்புரவு செய்ய பத்தாவது வேத கலாபனையைக் கடவுள் அனுமதித் தார். அது மகா கொடியதாக இருந்தது.