அர்ச். அருளப்பர் வெளிப்படுத்தின காட்சியாகமம் - அதிகாரம் 21

மோட்சமாகிய புதிய எருசலேமும், அதன் சிறப்பு மகிமையும் வெளியாக்கப்படுகிறது.

1. பின்பு நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும் கண்டேன். ஏனெனில் முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின. சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. (இசை. 65:17; 66:22; 2 இரா. 3:13.)

2. அருளப்பனாகிய நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் சர்வேசுரனிடத்தினின்று பரலோகத்தை விட்டிறங்கிவரக் கண்டேன். அது தன் பத்தாவுக்காக அலங்கரிக்கப்பட்ட மண வாளியைப்போல் ஆயத்தமாக்கப்பட் டிருந்தது.

3. அப்போது சிங்காசனத்திலிருந்து ஒரு பெரிய குரல் சத்தம் உண்டாகி: இதோ, மனிதரோடு சர்வேசுரன் வசிக்கும் ஸ்தலம். அவர்களோடு அவர் வாசம்பண்ணுவார்; அவர்களும் அவ ருடைய ஜனங்களாயிருப்பார்கள். சர்வே சுரன்தாமே அவர்களுடைய தெய்வ மாக அவர்களோடேகூட இருப்பார்.

4. சர்வேசுரன் அவர்களுடைய கண் களினின்று கண்ணீர் யாவையும் துடைப் பார்; இனி மரணமே இராது: இனி துக்கமும், அழுகைச் சத்தமும் துயரமும் கிடையாது. முந்தினவைகள் ஒழிந்து போயின என்று உரைக்கக்கேட்டேன். (காட்சி. 7:17; இசை. 25:8.)

5. அன்றியும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத் தையும் புதிதாக்குகிறேன் என்றார். மீளவும் அவர் என்னைப்பார்த்து: இவைகள் மகா பிரமாணிக்கமும், உண்மையுமான வார்த்தைகள். இவை களை எழுது என்றார். (இசை. 43:19; 2 கொரி. 5:17.)

* 5. சகலத்தையும் புதிதாக்குகிறேன்:- பாவத்தினால் உலகத்துக்கு உண்டான துன்பங்களும், கேடுகளும் ஒழிந்துபோனபின், சர்வ சிருஷ்டிகளும் தத்தமக்குரிய பாக்கியமான ஸ்திதியில் நிலைபெற்றிருக்கும் என்பதாம். (2 கொரி. 5-ம் அதி. 17-ம் வச.)

6. மேலும் அவர் என்னை நோக்கி: எல்லாம் முடிந்தது; நானே ஆல்பாவும் ஓமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக் கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு ஜீவிய நீரூற்றில் இலவசமாய்க் குடிக்கக் கொடுப் பேன். (காட்சி. 1:17.)

7. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவன் இவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுவான். நான் அவனுக்குத் தேவனாயிருப்பேன்; அவன் எனக்குப் பிள்ளையாயிருப்பான்.

8. ஆனால் கோழைகளும், அவிசுவா சிகளும், அருவருப்புக்குரியவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக் காரர், பொய்யர் அனைவரும் அக்கினி யும், கெந்தகமும் எரிகிற தடாகத்திலே பங்கடைவார்கள். இரண்டாம் மரணம் இதுவே என்றார்.

* 8. கோழைகள்:- வேதகலகங்களில் ஆக்கினைகளுக்குப் பயந்து வேதத்தை மறுதலித்தவர்கள். பொய்யர்:- கள்ளப் போதகங்களைப் போதிக்கிறவர்கள். இரண்டாம் மரணம்:- நித்திய சாபத்தின் தீர்ப்பு.

9. பின்பு கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு பாத்திரங்களையுடைய ஏழு தூதரில் ஒருவர் வந்து என்னுடனே பேசி: நீ இங்கே வா, செம்மறிப்புருவையானவருடைய பத்தினியாகிய மனைவியை உனக்குக் காண்பிப்பேன் என்றார்.

10. உடனே பெரிதும் உயரமுமான ஒரு பருவதத்தின்மேல் என்னைப் பரவ சமாகக் கொண்டுபோய், சர்வேசுர னிடத்தினின்று பரலோகத்தை விட்டி றங்கிவருகிற எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை எனக்குக் காண்பித்தார். அது தெய்வீக மகிமைப் பிரதாபமுடை யதாயிருந்தது.

11. அதன் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கைப்போல் துலக்கமான வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

12. அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், அதில் பன்னிரண்டு வாசல் களும் இருந்தன. அந்த வாசல்களில் (எசே. 48:31, 34.)

* 12. இஸ்ராயேல் புத்திரராகிய பன்னிரு கோத்திரத்தாரும் பூர்வீகத்தில் சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களாயிருந்ததுமன்றி, பன்னிரு அப்போஸ்தலர்களாலும் புறஜாதியாருக்குள் மனந்திருப்பித் திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட கிறீஸ்து வர்களுக்கு அவர்கள் அடையாளமுமாயிருந்தார்கள். ஆகையால் அவர்களுடைய கோத்திர நாமங்கள் பரலோக வாசல்களில் பதிக்கப்பட்டதாகக் காண்பிக்கப்பட்டதாமே.

13. கீழ்புறத்தில் மூன்று வாசல்களும், வடபுறத்தில் மூன்று வாசல்களும், தென் புறத்தில் மூன்று வாசல்களும், மேல் புறத்தில் மூன்று வாசல்களும் இருந்தன.

14. நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திவாரங்கள் இருந்தன; அவைகளின் செம்மறிப்புருவையானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பன்னிரண்டு நாமங்களும் இருந்தன.

15. என்னுடனே பேசினவர் நகரத்தையும், அதன் வாசல்களையும், அதன் மதிலையும் அளப்பதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்துக்கொண்டிருந்தார். (எசே. 40:3.)

16. அந்த நகரம் சதுரமாகக் கட்டப் பட்டிருக்கிறது. அதன் நீளம் எவ்வள வோ, அகலமும் அவ்வளவுதான். அவர் அந்தப் பொற்கோலைக்கொண்டு பன் னீராயிரம் ஸ்தாது அளந்தார். அதன் நீளமும், உயரமும், அகலமும் எல்லாம் சரிசமானமாயிருந்தது.

17. பின்பு அதன் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்று நாற்பத்து நான்கு முழம் உயரமாயிருந்தது.

* 17. சரீரமில்லாத சம்மனசுகளுக்குக் கை இல்லாததினாலே அவர் அளந்த அளவு மனுஷருடைய முழக்கணக்கின்படி இத்தனை முழமென்று கணக்கிடப்பட்டது.

18. அதன் மதில் கட்டிடம் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அந்த நகரம் தூய பளிங்குக்கு ஒப்பான பசும்பொன்னாயிருந்தது.

19. நகரத்து மதில்களின் அஸ்திவாரங்கள் எவ்வித இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலாவது அஸ்திவாரம் வச்சிரக்கல்லும், இரண்டாவது நீலக்கல்லும், மூன்றாவது சந்திரகாந்தமும், நான்காவது மரகதமும்,

20. ஐந்தாவது கோமேதகமும், ஆறா வது பதுமராகமும், ஏழாவது சுவர்ன ரத்தினமும், எட்டாவது படிக்கைப் பச்சையும், ஒன்பதாவது புஷ்பராகமும், பத்தாவது வைடூரியமும், பதினோரா வது சுநீரமும், பன்னிரண்டாவது சுகந்திக் கல்லுமாயிருந்தது.

21. தனித்தனியே பன்னிரண்டு வாசல் களும் பன்னிரண்டு முத்துக்களாம். ஒவ் வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாலா னது. நகரத்தின் வீதி துலக்கமான பளிங்கு போல் சுத்தப் பொன்னாயிருந்தது.

22. அதிலே நான் ஆலயத்தைக் காண வில்லை. ஏனெனில், சர்வ வல்லப கடவு ளாகிய ஆண்டவரும் செம்மறிப்புருவை யானவருமே அதற்கு ஆலயமாயிருக் கிறார்கள்.

23. அந்த நகரத்தில் பிரகாசிப்பதற்குச் சூரியனாவது சந்திரனாவது வேண்டியதில்லை. ஏனெனில், தெய்வப் பிரதாபம் அதைப் பிரகாசிப்பிக்கிறது; செம்மறிப்புருவையானவர் அதற்குத் தீபமாயிருக்கிறார். (இசை. 60:19.) 

24. ஜனங்கள் அதன் ஒளியில் நடப்பார்கள். பூமியின் இராஜாக்கள் தங்கள் மகிமையையும், மேன்மையையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.

25. பகலில் அதன் வாசல்கள் அடைக் கப்படுவதில்லை. இராக்காலமும் அங்கே கிடையாது. (இசை. 60:11.)

* 25. கோட்டை வாசல்கள் சாதாரணமாய் இராக்காலங்களிலும், யுத்த காலங்களில் பகலிலே முதலாய் அடைக்கப்படுவது வழக்கம். மோட்ச இராச்சியத்திலோ அப்படி இரா. இருளும், சத்துரு பயமுமின்றி எப்போதும் சதா பகலாய் சமாதானம் குடியிருக்கும். ஆகையால் அதன் வாசல்கள் அடைக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது.

26. ஜனங்களுடைய மகிமையை யும் மேன்மையையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்.

27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய எதுவும் அதில் பிரவேசிப்பதில்லை. செம்மறிப்புருவையின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்களே அதில் பிரவேசிப் பார்கள்.