14 பரிசுத்த உதவியாளர்களின் பக்தி எனப்படும் பக்தி எது?

தங்கள் வரைக்கும் கொண்டு வரப்பட்டிருக்கிற பரிசுத்த கத்தோலிக்கப் பாரம்பரிய செல்வ வளங்களில் பெரும் பகுதி மறக்கப்பட்டு விட்டதையும், அலட்சியம் செய்யப்பட்டு விட்டதையும் கண்டிருக்கிற இன்றைய கத்தோலிக்கர்கள், குறிப்பாக, கடந்த சில தலைமுறைகளைச் சேர்ந்தவர்களில் மிகச் சிலர் ஒருவேளை 14 பரிசுத்த உதவியாளர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் பதினான்கு பரிசுத்த உதவியாளர்களும் பல நூற்றாண்டுகளாகத் திருச்சபையில் மகிமைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த அவர்களுடைய பக்தி ஒருபோதும் மறக்கப்படக்கூடாததாக இருக்கிறது. இவர்கள் பல்வேறு நோய்களுக்கு எதிரான பாதுகாவலர்களாகிய பதினான்கு அர்ச்சியசிஷ்டவர்களாக இருக்கிறார்கள். 

இந்தப் பதினான்கு பரிசுத்த உதவியாளர்கள் பக்தியானது, பெருமளவுக்கு, கருப்பு மரணம் என்று அழைக்கப்பட்ட கொள்ளை நோயின் விளைவாகவே பதினான்காம் நூற்றாண்டில் தொடங்கியது. (இக்கொள்ளை நோய் தொடை மடிப்பிலோ, அக்குளிலோ தோன்றும்  நெறிக்கட்டுகளால் மரணத்தை விளைவிக்கும் ஒரு நோயாகும்.) இந்தப் புனிதர்களால் நிகழ்ந்தவையாகச் சொல்லப்படுகிற புதுமைகள் 14 பரிசுத்த உதவியாளர்கள் என்னும் பட்டத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்தன. 

கடவுளுக்கு நன்றி செலுத்தத் தேவையான வகையில், தேவ வரப்பிரசாதத்தால், நோய்களுக்கான ஏராளமான சிகிச்சை முறைகளையும், மருந்து வகைகளையும் நாம் கொண்டுள்ள இந்த நம்முடைய நவீன காலகட்டத்திலும் கூட, உலகின் அதிக வளர்ச்சிபெறாத பகுதிகளில், அநேக, சிகிச்சை பெற முடியாத, அல்லது குணப்படுத்தப்பட முடியாத நோய்களின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இறக்கும் அநேகருடைய ஆத்துமங் களுக்காக இந்தப் பதினான்கு புனிதர்களின் பாதுகாவலை நாம் இருந்து மன்றாட முடியும்.

இந்தப் பதினான்கு பரிசுத்த உதவியாளர்கள் யார் யார்?

பின்வரும்  அர்ச்சியசிஷ்டவர்களே அந்தப் பரிசுத்த உதவியாளர்கள் ஆவர்:

அர்ச். அகாத்தியுஸ், அர்ச். பார்பரம்மாள், அர்ச். ப்ளேய்ஸ், அர்ச். அலெக்ஸாந்திரியா கத்தரீனம்மாள், அர்ச். கிறீஸ்டோபர், அர்ச். சீரியாக்குஸ், அர்ச். டெனிஸ், அர்ச். எராஸ்முஸ்,  அர்ச். யூஸ்டஸ், அர்ச். ஜார்ஜ், அர்ச். ஜைல்ஸ், அர்ச். அந்தியோக்கு மார்கரீத்தம்மாள், அர்ச். பாந்தலியோன், அர்ச். வீத்துஸ் ஆகியோர் ஆவர்.

இந்தப் பதினான்கு உதவியாளர்களும் எவற்றிற்கு எதிரான பாதுகாவலர்களாக இருக்கிறார்கள்?

அர்ச்.  கிறீஸ்டோபரும், அர்ச். ஜைல்ஸம் இந்தக் கொள்ளை நோய்க்கு எதிராகவே பிரார்த்திக்கப்பட்ட புனிதர்கள் ஆவர். 

அர்ச். டெனிஸ் தலைவலியிலிருந்து நிவாரணம் தருகிற பாதுகாவலராக இருக்கிறார். 

அர்ச். ப்ளேய்ஸ்; தொண்டை நோய்களுக்கு எதிரான பாதுகாவலர். 

அர்ச். எல்மோ வயிற்று நோய்களுக்கு எதிரானவர், 

அர்ச். பார்பரம்மாள் காய்ச்சலுக்கு எதிரானவள், 

அர்ச். வீத்துஸ் கை கால் வலிப்பு நோய்க்கு எதிரான பாதுகாவலர். 

அர்ச். பாந்தலியோன்; மருத்துவர்களின் பாதுகாவலர். 

அர்ச். சீரியாக்குஸ் மரணப் படுக்கையில் எழும் சோதனைக்கு எதிரானவர். 

அர்ச். கிறீஸ்டோபரும், அர்ச். பார்பரம்மாளும், அர்ச். கத்தரீனம்மாளும் சரியான ஆயத்தமற்ற சடுதி மரணத்திற்கு எதிரான பாதுகாவலர்கள் ஆவர். 

அர்ச். ஜைல்ஸ் நல்ல பாவசங்கீர்த்தனத்திற்கான பாதுகாவலர். 

அர்ச். யூஸ்டஸ் குடும்பப் பிரச்சினைகளைக் குணப்படுத்துபவராவார். 

வீட்டு மிருகங்களும் மேற்கண்ட கொள்ளை நோயால் தாக்கப்பட்டன. எனவே, அர்ச். ஜார்ஜ், எல்மோ, பாந்தலியோன், வீத்துஸ் ஆகியோர் அவற்றின் பாதுகாவலுக்காக மன்றாடப்பட்டனர். 

அர்ச். அந்தியோக்கு மார்கரீத்தம்மாள் சுகமான குழந்தைப்பேற்றின் பாதுகாவலியாக இருக்கிறாள். 

(ஆதாரம்: Hammer,  Bonaventure (1995) "The Fourteen Holy Helpers." Retrieved 6 November 2007).

14 பரிசுத்த உதவியாளர்களுக்கென்று ஒரு திருநாள் இருக்கிறதா?

பாப்பரசர் நிக்கோலாஸ் இந்தப் பதினான்கு பரிசுத்த உதவியாளர்கள் மீதான பக்தி முயற்சிகளுக்கு ஞானப் பலன்களை வழங்கினார். பாரம்பரிய கத்தோலிக்க நாட்காட்டியில் இந்த எல்லா அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் தனித் தனி திருநாட்கள் இருக்கின்றன. ஆனால் துர்ப்பாக்கியமான விதத்தில், இவர்களில் நால்வருடைய திருநாட்கள் 6-ல் வந்த புதிய முறை நாட்காட்டி மாற்றங்களில் அகற்றப்பட்டு விட்டன. என்றாலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக நிறைவேற்றப்படுகிற திரிதெந்தீன் இலத்தின் திவ்ய பலிபூசையில் இந்தப் பதினால்வரும் இன்றும் மகிமைப்படுத்தப்படுகின்றனர்.

மேலும், பதினான்கு பரிசுத்த உதவியாளர்களுக்கும் சேர்ந்து ஆகஸ்ட் 8-ம் நாள் ஒரு கூட்டுத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. என்றாலும், இந்தத் திருநாள் பொதுவான உரோமைக் கத்தோலிக்க நாள்காட்டியில் ஒரு பகுதியாக ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக, அது சில இடங்களில் மட்டும் கொண்டாடப் படுகிறது.