கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 11

ஸ்திரீபூமான்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதத்தைக் கற்பித்துத் தேவநற்கருணை ஸ்தாபிக்கப்பட்ட விதத்தையும், அபாத்திரமாய் அதனை உட்கொள்ளுகிறவர்கள் கட்டிக்கொள்ளுகிற துரோகத்தையும் விளக்கிக் காட்டுகிறார்.

1. நான் கிறீஸ்துநாதரைக் கண்டு பாவிக்கிறதுபோல, நீங்களும் என்னைக் கண்டுபாவித்து நடங்கள். (1 கொரி. 4:16; பிலிப். 3:17.)

2. சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூர்ந்து, நான் உங்களுக்குப் படிப்பித்தபடி நீங்கள் என் கற்பனைகளை அநுசரித்து வருகி றதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.

3. இப்போது நீங்கள் அறியவேண்டு மென்று நான் விரும்புகிறதாவது: எந்தப் புருஷனுக்கும் கிறீஸ்துநாதர் தலைமை யாயிருக்கிறார். ஸ்திரீக்கோ புருஷன் தலைமை. கிறீஸ்துநாதருக்கோவெனில் சர்வேசுரன் தலைமையா யிருக்கிறார். (எபே. 5:23; 4:15; ஆதி. 3:16.)

4. ஜெபம் பண்ணும்போதாவது தீர்க்கதரிசனம் சொல்லும்போதாவது தன் சிரசை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் சிரசை அவமானப்படுத்துகிறான். (1 கொரி. 12:10.)

5. ஜெபம் பண்ணும்போதாவது தீர்க் கதரிசனம் சொல்லும்போதாவது தன் சிரசை மூடாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் சிரசை அவமானப்படுத்துகிறாள். ஏனெனில் அது அவளுக்குத் தலையை மொட்டையடித்ததுக்குச் சமானமாம். 

6. ஆதலால் ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால், தலைமயிரையுங் கத்தரித்துப்போடக்கடவாள். ஆனால் தலைமயிரைக் கத்தரிக்கிறதும், மொட்டையடிக்கிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால், முக்காடிட்டுக்கொள்ள வேண்டும்.

7. புருஷனோ தன் சிரசை மூடிக் கொண்டிருக்கக்கூடாது. ஏனெனில் அவன் சர்வேசுரனுடைய சாயலும், மகிமையுமாயிருக்கிறான். ஸ்திரீயோ புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். (ஆதி. 1:27; 5:1.)

8. அதெப்படியென்றால், புருஷன் ஸ்திரீயினிடத்தினின்றல்ல; ஸ்திரீயே புருஷனிடத்தினின்று உண்டாக்கப்பட்டாள்.

9. ஆகையால் ஸ்திரீயைப்பற்றிப் புருஷன் உண்டாக்கப்பட்டவனல்ல; ஆனால் புருஷனுக்காகவே ஸ்திரீ உண்டாக்கப்பட்டவள். (ஆதி. 2:18.)

10. ஆகக்கொள்ள, தேவதூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் சிரசின் மேல் முக்காட்டைப்போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

* 10. இங்கே சொல்லப்பட்ட முக்காடு மூலபாஷைகளில் அதிகாரமென்று சொல்லப் பட்டிருக்கிறது. ஏனென்றால் கலியாணஞ் செய்த ஸ்திரீகள் புருஷனுடைய அதிகாரத்துக்கு உட்பட்டவர்களென்றும், அப்படிப்பட்ட அதிகாரத்தை ஸ்திரீகள் தரித்துக்கொள்வது வழக்கமாயிருந்தது. தேவதூதர் அல்லது சம்மனசுக்களின் நிமித்தம் என்பதேதெனில் கிறீஸ்தவர்கள் ஜெபம் பண்ணும்போது விசேஷமாய்த் தேவாலயத்தில் ஒன்றாய்க் கூடிவரும்போதும் அவர்களுடைய ஜெபத்தைச் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுக்கும்படிக்கு அவர்களோடேகூட அவர்களுடைய காவல் சம்மனசுகளும் இருப்பதி னாலே அவர்களுக்குச் சங்கையாக ஸ்திரீகள் முக்காடிடவேண்டும் என்றறிக.

11. ஆகிலும் ஆண்டவரிடத்தில் ஸ்திரீயில்லாமல் மனுஷனுமில்லை, மனுஷனுமில்லாமல் ஸ்திரீயுமில்லை.

12. எவ்வாறெனில், ஸ்திரீயானவள் மனுஷனிலிருந்து உண்டானது போல மனுஷனும் ஸ்திரீயின் வழியாய் உண்டாகிறான். ஆகிலும் எல்லாம் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறது.

13. ஸ்திரீயானவள் முக்காடில்லாமல் சர்வேசுரனை வேண்டிக்கொள்ளுகிறது இலக்ஷணமாவென்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.

14. மனிதன் கூந்தல் வளர்த்தால், அது அவனுக்கு ஈனமாயிருக்கிற தென்று சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா?

15. ஸ்திரீயோவென்றால் கூந்தலை வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறது. ஏனெனில் கூந்தல் முக்காடாக அவளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதல்லோ.

16. ஆகிலும் யாதாமொருவன் இதைப்பற்றித் தர்க்கிக்க மனதாயிருந்தால், எங்களுக்கும் சர்வேசுரனுடைய சபைக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லை.

* 16. ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் கோவிலிலே அநுசரிக்கவேண்டிய மேரை மரியாதையைக்குறித்து இதுவரைக்கும் நான் சொன்னதின்பேரில் யாதொருவன் தர்க்கிக்க விரும்புவானாகில் அவனோடு சச்சரவு செய்யத் தேவையில்லை. ஆனால் எங்களுக்குள்ளேயும் உலகமெங்கும் இருக்கிற சர்வேசுரனுடைய திருச்சபைக்குள்ளேயும் நான் சொன்ன முறைமையயாழிய வேறு முறைமை நடக்கிறதில்லையென்று அறியக்கடவான் என்றர்த்தமாம்.

17. நீங்கள் கூட்டங்கூடுவது நன்மைக்கு ஏதுவாயிராமல், தீமைக்கு ஏதுவாயிருப்பதால், உங்களைப் புகழாமல் உங்களுக்கு நான் கற்பிக்கிறதாவது: (1 கொரி. 11:22.)

18. முந்தமுந்த நீங்கள் ஒன்றாய்க் கூடிக் கோவிலுக்கு வரும்போது உங்களுக்குள்ளே கட்சிப்பிரிவுகள் உண்டாயிருக்கிறதாகக் கேள்விப்படுகிறேன். அதையும் பாதி நம்புகிறேன். (1 கொரி. 1:10-12; 3:3.)

19. ஏனெனில் உங்களுக்குள்ளே புண்ணியத்தில் திடமானவர்கள் இன் னாரென்று வெளியாகும்படி பதிதத் தனங்கள் உண்டாயிருக்கவேண்டியது தான். (1 அரு. 2:19; உபாக . 13:3.)

20. ஆகையால் நீங்கள் ஒன்றாகக் கூடிவருவது ஆண்டவருடைய இராப்போஜனம் உண்பதற்கல்ல.

21. ஏனெனில் அவனவன் தன் போ ஜனத்தை முந்திப் புசிக்கத் துவக்கு கிறான். அப்படியே ஒருவன் பட்டினி யாயிருக்க, வேறொருவன் குடிவெறிய னாகிறான்.

22. புசிக்கவும் குடிக்கவும் உங்களுக்கு வீடுகளில்லையா? அல்லது சர்வே சுரனுடைய ஆலயத்தைப் புறக்கணித்து, ஒன்றுமில்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களோ? இதிலே நான் உங் களுக்கு என்ன சொல்லுவேன்? உங்க ளைப் புகழுவேனோ? இதிலே உங்க ளைப் புகழேன். (இயா. 2:5.)

* 22. அப். நடபடி ஆகமம் 2-ம் அதி. 42-ம் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிற வண்ணம் சபையார் கோவிலுக்கு ஒன்றாய்க் கூடிவரும்போது, அவனவன் தன் தன் பண வசதிக்குத்தக்க சில போஜன பதார்த்தங்களைக் கொண்டுவந்து, பூசை கண்டு, திவ்வியநற்கருணை உட்கொண்டபிற்பாடு எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து அவரவர் கொண்டு வந்த பதார்த்தங்களைச் சகலருமாகப் பகிர்ந்து சாப்பிடுவது அக்காலத்திலே வழங்கி வந்தது. இந்தவகை விருந்தை ஆண்டவருடைய போஜனமென்றும் அன்பின் விருந்தாய் மனந்திரும்பினவர்களுக்குள்ளே அன்னியோன்னிய சிநேகமுண்டாயிருக்கும்படிக்கு இஸ்பிரீத்துசாந்துவின் ஏவுதலால் இந்த வழக்கம் உண்டுபண்ணப்பட்டிருந்தது. ஆயினும் அது எப்போதும் நடந்தேறினதல்ல. அப்படியே அக்காலத்தில் மனந்திரும்புகிறவர்களெல்லோரும் தங்கள் வீடு வாசல் நிலபுலங்கள் முதலியவற்றை விலைக்கு விற்று ரொக்கத்தை அப்போஸ்தலர் பாதங்களிலே வைப்பது வழக்கமாயிருந்தது. அந்த வழக்கமும் அப்போஸ்தலர் காலத்திலேயே நின்றுபோனதாகக் காண்கிறோம். இதிலே அர்ச். சின்னப்பர் 23-ம் வசனந்துவக்கி 32-ம் வசனம் வரைக்கும் தேவநற்கருணையைக் குறித்து பேசினபிறகு 33-34-ம் வசனங்களில் இந்த அன்பின் போஜனத்தைக் குறித்து மறுபடியும் பேசுகிறார்.

23. ஆண்டவரிடத்தில் நான் பெற்றுக் கொண்டதையே உங்களுக்குக் கையளித்தேன். அதென்னவெனில், ஆண்டவராகிய சேசுநாதர் தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, (1 கொரி. 15:3.)

24. தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் இதை வாங்கிப் புசியுங்கள்; இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் சரீரமாயிருக்கிறது. என் ஞாபகமாக இதைச் செய்யுங்கள் என் றார். (மத். 26:26; மாற். 14:22; லூக். 22:19.)

25. அசனம் பண்ணினபின்பு அந்தப் பிரகாரமே அவர் பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத் தத்தில் புதிய உடன்படிக்கையா யிருக்கின்றது. இதை நீங்கள் பானம் பண்ணும் போதெல்லாம் என் ஞாபக மாகச் செய்யுங்கள் என்றார்.

26. ஆகையால் ஆண்டவர் வருமளவும் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்திலே பானம் பண்ணும் போதெல்லாம் அவருடைய மரணத்தை அறிவிப்பீர்கள்.

27. இப்படியிருக்க, யாதொருவன் அபாத்திரமாய் இந்த அப்பத்தைப் புசிப்பானாகில் அல்லது ஆண்டவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுவானா கில், ஆண்டவருடைய சரீரத்தின்மட்டி லும் குற்றவாளியாவான். (அரு. 6:59; எபி. 6:6; 10:29.)

28. ஆதலால் எந்த மனிதனும் தன்னைத்தானே பரிசோதித்தபின்பு இந்த அப்பத்தில் புசித்து, இந்தப்பாத்திரத்தில் பானம்பண்ணுவானாக. (2 கொரி. 13:5)

29. என்னத்தினாலெனில் ஆண்டவருடைய சரீரம் என்று நிதானித்துணராமல், எவன் அபாத்திரமாய்ப் புசித்துப் பானம்பண்ணுகிறானோ, அவன் தன் ஆக்கினைத்தீர்ப்பைப் புசித்துப் பானம்பண்ணுகிறான்.

30. இதினிமித்தம் உங்களுக்குள்ளே பலவீனரும், நோயாளிகளும் அநேக ருண்டு, அநேகரும் (மரண) நித்திரை யடைந்திருக்கிறார்கள். (1 கொரி. 15:20.)

* 30. நித்திரையடைந்திருக்கிறதென்பது வேதாகமங்களிலே மரணமாய்ப் போனதுக்கு அர்த்தமாம்.

31. நமக்கு நாமே தீர்வையிட்டுக் கொண்டால், நாம் தீர்வையிடப்பட மாட்டோம்.

32. நாம் நியாயந்தீர்க்கப்படும்போது, இவ்வுலகத்தோடுகூட நாம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு ஆண்டவராலே சிட்சிக்கப்படுகிறோம். (எபி. 12:5.)

* 32. அபாத்திரமானவிதமாய் அதாவது சாவான பாவத்தோடு தேவநற்கருணையை உட்கொள்ளுகிறவன் சேசுநாதருடைய திருச் சரீரத்தை உட்கொள்ளுகிறேனென்று நினையாமல், அதை அவசங்கைப்படுத்துகிறபடியினாலே நரகாக்கினைக்கு ஏதுவாகத் தன் சாபத்தைத்தானே உட்கொள்ளுகிறான். அப்படிப்பட்ட தேவ துரோகத்துக்குத் தண்டனை யாக இவ்வுலகத்திலே சர்வேசுரன் அநேகர்களுக்கு வியாதி துன்பஞ் சரீரப் பலவீனத்தையும், மரணத்தையும் முதலாய் சில சமயங்களில் அனுப்புகிறாரென்று கண்டுவருகிறோம். தேவநற்கருணையை வாங்குமுன் அவனவன் தன் ஆத்துமத்தை நன்றாய்ப் பரிசோதித்து, பாவமுண்டானால் நல்ல பாவசங்கீர்த்தனத்தினாலேயும் மெய்யான உத்தம மனஸ்தாபத்தி னாலேயும் ஆத்துமத்தைச் சுத்திகரித்துத் தேவநற்கருணையை வாங்கினால் சொல்லப்பட்ட தண்டனைகளுக்கு ஆளாய்ப் போகமாட்டான்.

33. ஆகையால் என் சகோதரரே, நீங்கள் அசனம்பண்ணக் கூடிவரும்போது ஒருவர் ஒருவருக்காகக் காத் திருங்கள். 

34. நீங்கள் கூடிவருவது குற்றத்துக்கு ஏதுவாகாதபடிக்கு ஒருவனுக்குப் பசியாயிருந்தால், அவன் தன் வீட்டிலே சாப்பிடக்கடவான். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன்.