கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 07

சின்னப்பர் கொரிந்தியர்மேல் தமக்குள்ள நேசத்தின் மிகுதியை விவரித்துக்காட்டுகிறார்.

1. இந்த வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிற படியினாலே, மிகவும் பிரியமானவர்களே, மாம்சத்திலும் மன திலும் உள்ள எவ்வித அழுக்குகளும் நீங்க நம்மைச் சுத்திகரித்து, தெய்வபயத் தை முன்னிட்டு நமது அர்ச்சிப்பின் வே லையைப் பூரணமாய் முடிக்கக்கடவோம்.

2. எங்களை அங்கீகரித்துக்கொள்ளுங்கள். நாங்கள் ஒருவனுக்கும் அநியா யஞ் செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக் கவில்லை.

3. உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டு நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறதில்லை. ஏனெனில் நாங்கள் உங்களுடன் மரிக்கவும், ஜீவிக்கவுந்தக்கதாக நீங்கள் எங்கள் இருதயங்களிலிருக்கிறீர்களென்று உங்களுக்குச் சொல்லியிருக்கிறோமே.

4. உங்கள்மட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு; உங்களைப்பற்றி நான் மிகவும் மேன்மை பாராட்டுகிறேன்; ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு நேரிடும் சகல உபத்திரவ துன்பங் களுக்குள்ளும் சந்தோஷப் பூரிப்பா யிருக்கிறேன்.

5. எப்படியெனில் நாங்கள் மக்கேதோனியா தேசத்துக்கு வந்தபோது எங்கள் சரீரத்துக்கு யாதோர் இளைப் பாற்றியும் கிடையாமற்போனதுமன்றி அகத்தில் அச்சமும், புறத்தில் போராட் டமுமாக பலவித துன்பமும் பட்டு வருந்தினோம்.

6. ஆனால் தாழ்மையுள்ளவர்களைத் தேற்றுகிறவராகிய சர்வேசுரன் தீத்து என்பவருடைய வருகையினாலே எங்களைத் தேற்றினார்.

7. அவர் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் அழுகையையும், என்னைப்பற்றி உங்களுக்குண்டான பக்தி வைராக்கியத்தையும் கண்டு அவர் உங்களாலே அடைந்த ஆறுதலை எங்களுக்குத் தெரியப்படுத்தினதினாலும் நான் ஆறுதலையடைந்து, அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.

8. ஏனெனில் என் நிருபத்தினால் உங்களுக்குத் துக்கம் வருவித்திருந்தாலும், அந்த நிருபம் கொஞ்ச வேளைக்கென்றாலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனவருத்தப்பட்டிருந்தாலும், இப்பொழுது மனவருத்தப்படுகிறதில்லை.

9. இப்பொழுது சந்தோஷமாயிருக்கிறேன். ஏனெனில் நீங்கள் துக்கப்பட்டதினாலேயல்ல, தபத்திற்கேதுவாக நீங்கள் துக்கப்பட்டதினாலே நான் சந்தோஷமாயிருக்கிறேன். எங்களாலே உங்களுக்கு ஒன்றிலும் நஷ்டமுண்டாகாதபடி நீங்கள் கடவுளுக்குப் பொருந்திய துக்கப்பட்டீர்களே.

10. சர்வேசுரனுக்குப் பொருந்திய துக்கமானது இரட்சணியத்துக்குரிய நிலைமையான தபத்தை விளைவிக்கின்றது. இலெளகீக துக்கமோ மரணத்தைப் பிறப்பிக்கின்றது. (1 இரா. 2:19.)

11. இப்படி நீங்கள் கடவுளுக்குப் பொருந்தியபடி மனஸ்தாபப்பட்டீர்களே. இதோ, அந்த மனஸ்தாபம் உங்களிடத்தில் எவ்வளவோ கவலையை உண்டாக்குகிறது. இன்னமும் நியாயச் சலுகையையும், வெறுப்பையும், பயத்தையும், ஆசையையும், உரோசத்தையும், பரிகாரத்தையும், உங்களிடத்திலே உண்டாக்குகின்றதே. இந்த விஷயத்திலே நீங்களும் ஒருவகையிலும் மாசுபடவில்லையென்று காண்பித்திருக்கிறீர்கள்.

* 11. 8-ம் வசனமுதல் 11-ம் வசனவரைக்கும் பொருளாவது: என் முந்தின நிருபத்தில் உங்களுக்கு அதிகக் கண்டிப்புச்செய்ததினாலே உங்களைக் கஸ்திப்படுத்தினேன். ஆகிலும் அந்தக் கஸ்தியினாலே வந்த ஞான நன்மையை நான் பார்க்கும்போது உங்களைக் கஸ்திப் படுத்தினதற்காகச் சந்தோஷப்படுகிறேன். நான் சந்தோஷப்படுவது உங்களைக் கஸ்திப் படுத்தினதற்காக அல்ல. அந்தக் கஸ்தியானது நீங்கள் புண்ணிய முயற்சிகளை அநுசரிப் பதற்கு ஏதுவாயிருந்ததினாலே சந்தோஷிக்கிறேன். அந்தக் கஸ்தி சர்வேசுரனைப்பற்றி உண்டானதினாலே உங்களுக்குப் புண்ணிய முயற்சியாயிருந்தது. உலகத்தாருடைய கஸ்தியோ ஆத்துமத்துக்குப் பிரயோசனமில்லாமற் போவதுந்தவிர சரீரத்துக்கு முதலாய்க் கெடுதியாமே. மெய்யாகவே சர்வேசுரனை முன்னிட்டு நீங்கள் பட்ட மனஸ்தாபத்தினாலே எத்தனையோ புண்ணிய முயற்சிகள் உண்டாகக் காரணமாயிருந்தது. உங்கள் குற்றத்தைப் பரிகரிப்பதற்கு எத்தனையோ சுறுசுறுப்பு, குற்றக்காரர்பேரில் எத்தனையோ சினம், அந்தக் குற்றங்களினிமித்தஞ் சர்வேசுரன் உங்களைத் தண்டிப்பாரென்று எத்தனையோ பயம், இனிக் குற்றமற்றவர்களாய் நடக்கிறதற்கு எத்தனையோ ஆசை, எல்லோரும் புண்ணிய நெறியில் நடக்கிறதற்கு எத்தனையோ உரோசம், குற்றக்காரனுக்கு எத்தனையோ கண்டனை நடத்தப்பட்டது என்பது கருத்தாம்.

12. ஆகையால் நான் உங்களுக்கு நிருபம் எழுதினபோதிலும், அது உங்கள் மட்டில் சர்வேசுரனுக்கு முன்பாக நமக்குண்டான கவலையைக் காட்ட வேண்டுமென்று அல்லாதே, மற்றப் படி அக்கிரமஞ்செய்தவனைப்பற்றி யும் அல்ல, அந்த அக்கிரமத்தால் வருத் தப்பட்டவனைப்பற்றியும் அல்ல.

13. ஆகையால் ஆறுதலடைந்திருக்கிறோம். ஆனால் உங்கள் அனைவராலும் தீத்தென்பவருடைய மனங்குளிர்ந்ததினாலே அவருடைய மனோகரத்தைப் பார்த்து மென்மேலும் எங்கள் ஆறுதலும், சந்தோஷமும் பெருகிற்று.

14. ஆகையால் நான் அவரோடு பேசி, உங்களைக்குறித்து மகிமை பாராட்டியிருந்தால், அதைப்பற்றி நான் வெட்கப்படவில்லை. ஆனால் நாம் உங்களுக்குச் சகலத்தையும் சத்தியத்துக்கொத்தபடி சொன்னதுபோல, தீத் தென்பவரிடத்தில் நாம் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசினதும் சத்தியத்துக்கொத்தபடியென்று வெளியாயிற்று.

15. அவர் உங்கள் எல்லோருடைய அக்கறையையும், நீங்கள் அச்ச நடுக்கத்தோடு அவரை உபசரித்த மாதிரியையும் நினைவுகூர்கையில் அவர் நெஞ்சம் உங் கள்மட்டில் பூரிப்படைந்திருக்கின்றது.

16. ஆகையால் எல்லா விஷயத்திலும் நான் உங்களை உறுதியாய் நம்பலாமென்று சந்தோஷிக்கிறேன்.