கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 04

அவர் தாம் எவ்வளவு உண்மையோடும் ஊக்கத்தோடும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தாரென்றும், அதற்காக அநுதினமும் தாம் பட்ட துன்ப உபத்திரவங்கள் தேவவல்லமைக்குத் தோத்திரமாகவும், திருச்சபைக்குப் பிரயோசனமாகவும், தமக்கு நித்திய மகிமைக்கு ஏதுவாகவும் இருக்கிறதென்றுங் காண்பிக்கிறார்.

1. ஆகையால் இவ்வித (தேவ) ஊழியத்தைக் கைக்கொண்டவர்களாகிய நாங்கள் இரக்கம் அடைந்திருப்பதால், சோர்ந்துபோகிறதில்லை.

2. ஆனால் வெட்கத்துக்குரிய அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்துத்தள்ளி, தந்திரமாய் நடவாமலுஞ் சர்வேசுரனுடைய வாக்கியத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துவதினால் சர்வேசுரனுக்கு முன்பாகச் சகல மனிதரும் எங்களைத் தங்கள் மனச்சாட்சியிலே மதிக்கும்படியாக நடக்கிறோம்.

* 2. முந்தின அதிகாரத்திலே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் உத்தியோகத்தின் மகிமையை காண்பித்தபிறகு அர்ச். சின்னப்பர் கள்ளப்போதகர்கள் தமதுபேரில் சொன்ன அவதூறுகளை மறுக்கத் துவக்கி, சர்வேசுரனாலே அழைக்கப்படாமல் தங்கள் வயிற்றின் பிரயோஜனத்தைப்பற்றித் தாங்களாய் அந்த ஞானத் தொழிலிலே பிரவேசித்த கள்ளப்போதகர்கள் துன்பங்களைக் கண்டு, சோர்ந்து பின்வாங்குகிறது போல நாங்கள் சோர்ந்துபோகாமல் அந்தத் தொழிலை நிறைவேற்றிக்கொண்டு வருகிறோமென்றும், அந்தக் கள்ளப்போதகரைப்போல அந்தரங்கத்தில் ஒருவிதமாயும், வெளியரங்கத்தில் ஒருவிதமாயும் நடவாமல், எப்போதும் எதார்த்தமாய் நடக்கிறோமென்றும் காண்பிக்கிறார்.

3. ஆகையால் எங்கள் சுவிசேஷம் இன்னும் மூடப்பட்டதாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மூடப் பட்டதாயிருக்கும்.

4. ஏனெனில் தேவ ரூபமாகிய கிறீஸ்துநாதருடைய ஜோதிப்பிரதாபமான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசியாதபடி அவர்களுடைய மனக் கண்களை இப்பிரபஞ்சத் தேவன் குருடாக்கினான்.

5. நாங்கள் எங்களைப் பிரசங்கியாமல், நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரைப் பிரசங்கிக்கிறோம். எங்களையோ சேசுநாதரைப் பற்றி உங்கள் ஊழியர் என்கிறோம்.

6. ஏனெனில் இருளிலிருந்து வெளிச் சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன சர்வே சுரன்தாமே சேசுக்கிறீஸ்நாதருடைய முகத்திலே விளங்குகிற தெய்வப் பிர தாபத்தின்அறிவாகிய ஒளியை நாங்கள் தோன்றப்பண்ணும்படி எங்களிருதயங் களில் பிரகாசித்தார்.

7. ஆயினும் இந்த பொக்கிஷத்தை மண்பாண்டங்களிலே கொண்டிருக்கிறோம். இந்த உன்னத (சுவிசேஷ) மகத் துவம் எங்களால் ஆகாமல், தெய்வ வல்லமையால் ஆனதென்று விளங்கும் படியாமே. (1 கொரி. 2:5.)

8. நாங்கள் எவ்விதத்திலும் நெருக்கப் படுகிறோம்; ஆயினும் நசுங்கிப் போகிற தில்லை. திகைக்கிறோம், ஆனாலும் தெம்பற்றுப்போகிறதில்லை.

9. உபாதிக்கப்படுகிறோம்; ஆயினும் கைவிடப்படுகிறதில்லை. தள்ளுண்டு விழுந்தாலும், சாகிறதில்லை.

10. சேசுவின் ஜீவியம் எங்கள்மேனிகளில் தோன்றும்படி எங்கள் மேனியைச் சுற்றிலும் சேசுவின் மரணப் பாடுகளைப் பதித்துக்கொண்டிருக்கிறோம்.

11. ஏனென்றால் சேசுவின் ஜீவியமும் சாவுக்குரிய எங்கள் மாம்சத்தில் விளங்கும்படி உயிரோடிருக்கிற நாங்கள் சேசுவைப்பற்றிச் சாவுக்கு எப்போதும் எங்களைக் கையளிக்கிறோம்.

12. ஆகையால் மரணம் எங்களிடத்திலும், உயிர் உங்களிடத்திலும் முயற்சியாயிருக்கின்றது.

13. விசுவசித்தேன், அதனிமித்தம் பேசினேன் என்று எழுதியிருக்கிற பிரகாரம் நாங்களும் அந்த விசுவாச இஸ்பிரீத்துவையே கொண்டவர்களாய் விசுவசிக்கிறோம்; ஆகையால் பேசுகி றோம். (சங். 115:1.)

14. ஏனெனில் சேசுவை உயிர்ப்பித்தவர் சேசுவோடேகூட எங்களையும் உயிர்ப்பித்து, உங்களோடே எங்களையும் நிலைநிறுத்துவாரென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.

* 13-14. 1-வது. தீர்க்கதரிசியாகிய தாவீதென்பவர் கொண்டிருந்த விசுவாசத்தையே நாமும் கொண்டிருக்கிறோம் என்று அர்ச். சின்னப்பர் இதிலே சொல்லுகிறபடியினாலே சேசுநாதருடைய வருகைக்கு முன்னும் அவருடைய வருகைக்குப் பின்னும் விசுவாசம் ஒன்றுதானென்று அறிந்துகொள்ளுகிறோம். பிதாப்பிதாக்கள் வரவேண்டிய இரட்சகரை விசுவசித்தார்கள். நாம் வந்த இரட்சகரை விசுவசிக்கிறோம்.

2-வது. விசுவசிக்கிறவன் தான் விசுவசிக்கிறதைப் பேசக் கூச்சப்பட்டால், மெய்யாகவே விசுவசிக்கிறவன் அல்ல. நீதிமானாகிறதற்கு இருதயத்திலே விசுவசிக்கவும் இரட்சணி யத்தை அடைவதற்கு வாயினாலே அதைப் பிரசித்தப்படுத்தவும் வேண்டும். (உரோ. 10:10.) மனிதர் முன்பாக என்னையும் என் வாக்கியத்தையும்பற்றி வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப்பற்றி நானும் என் பிதாவின் முன்பாகவும், அவருடைய தூதர் முன்பாகவும் வெட்கப்படுவேன். (லூக். 9:26.) அப்போஸ்தலர்களும் வேதசாட்சிகளும் மெய்யாகவே விசுவசித்தார்கள். ஆகையால் பேசத்துணிந்தார்கள். பேசத்துணிந்து இவ்வுலகத்திலே ஜீவனை இழந்தார்கள். ஆனால் அதற்குப் பதிலாய் நித்திய ஜீவனை அடைந்தார்கள்.

3-வது. அப்போஸ்தலர்களிடத்திலும் வேதசாட்சிகளிடத்திலும் நித்திய ஜீவியத்தைப் பெறுவித்த விசுவாசம் நம்மிடத்திலும் நித்திய ஜீவியத்தைப் பெறுவிக்கிறது. அதெப்படி யென்றால் விசுவாசத்தினால் நீதிமான்களானார்கள். பேசினதினால் தங்களுக்கு நித்திய ஜீவியத்தைப் பெறுவித்தார்கள். நமக்கோ விசுவாசத்தின் வாசலைத் திறந்தார்கள். கேள்வியினால் விசுவாசம் உண்டாகிறதென்று உரோ.10:17-ம் வசனங் காண்க.

15. சர்வேசுரனுடைய மகிமை விளங் குவதற்கு ஏதுவாக வரப்பிரசாதமானது அநேகருடைய தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள் நிமித்தம் உண்டாயிருக்கிறது.

16. இதனிமித்தம் நாங்கள் மனச் சோர்வு அடைவதில்லை. ஏனெனில் நமது புறத்து மனிதன் அழிந்தாலும், உள்ளத்து மனிதன் நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறான்.

17. ஏனெனில் இம்மையில் இலகுவாயும் ஒரு நொடிப்பொழுதுக்குமாத் திரமிருக்கிற நமது துன்பமானது நித்திய கனத்தையுடைய மகிமைப்பிரதாப மகத்துவத்தை அளவின்றிப் பெறுவிக்கும். (உரோ. 8:18.)

18. நாங்கள் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கிக்கொண்டிருக்கிறோம். ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவை; காணப்படாதவை களோ நித்தியமானவை.