கலாத்தியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 04

நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத் தினின்று மீட்கப்பட்டு அபிரகாமின் சுயா தீன புத்திரராயிருக்கிறோமென்பது.

1. இப்போது நான் சொல்லுகிற தாவது: சுதந்திரவாளி எல்லாத்துக்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளை யாயிருக்குமட்டும் அவனுக்கும் அடிமை யானவனுக்கும் வித்தியாசமில்லை.

2. தன் பிதாவினால் குறிக்கப்பட்ட காலம் வரைக்கும், அவன் வீட்டு விசா ரணைக்காரருக்கும், காரியஸ்தருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

3. அத்தன்மைபோல, நாமும் சிறுவர்களாயிருக்கும்போது இவ்வுலகத்தின் பஞ்சபூதியங்களுக்கு அடிமைப் பட்டவர்களாயிருந்தோம்.

4. இப்படியிருக்க, நாம் சுவீகாரப் புத்திரர் ஆகும்படி, நியாயப்பிரமா ணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக் கொள்ளத்தக்கதாக,

5. காலம் நிறைவேறியபோது ஸ்திரீ யினிடத்தில் பிறந்தவரும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவருமான தம்முடைய சுதனை சர்வேசுரன் அனுப்பினார். (அரு. 1:12.)

6. அல்லாமலும் நீங்கள் புத்திரர்களாயிருக்கிறபடியால் சர்வேசுரன் அப்பா, பிதாவே என்று கூப்பிடுகிற தம்முடைய சுதனுடைய இஸ்பிரீத்துவை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். (உரோ. 8:15.)

7. ஆதலால் இப்போது (உங்களில்) எவனும் அடிமையாயிருக்கிறதில்லை, புத்திரனாயிருக்கிறான். புத்திரனாகில், சர்வேசுரனுடைய கிருபையால் சுதந்திரவாளனுமாயிருக்கிறான்.

8. முற்காலத்தில் நீங்கள் சர்வேசுர னை அறியாதிருந்தபோது, சுபாவமாய்த் தேவர்களல்லாதவர்களுக்கு அடிமை களாயிருந்தீர்கள் என்பது மெய்யே.

9. இப்பொழுதோ, நீங்கள் சர்வேசுரனை அறிந்திருக்கிறதுந்தவிர, அவராலே அறியப்பட்டவர்களுமாயிருக்கக் கொள்ள, பலவீனமும் வெறுமையுமான பஞ்சபூதியங்கள் பாரிசமாய் மறுபடியும் திருப்பி, அவைகளுக்கு இன்னமும் அடி மைப்படவிரும்புகிறதெப்படி?

* 3-9. பஞ்சபூதியங்களென்பது இவ்விடத்தில் வெளியாசாரச் சடங்குகளாம்.

10. நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் அநுசரித்துக்கொண்டு வருகிறீர்களே. (கொலோ. 2:16, 20.)

* 10. கலாத்தியர் மாதங்களையும் நாட்களையும் வருஷங்களையும் அநுசரித்து, அவைகளில் சில அதிர்ஷ்ட நாளென்றும், சில கெடுதியானதென்றும் எண்ணி, அதன்படி நடந்துவந்ததினால் இந்த வசனத்தில் அர்ச். சின்னப்பர் அவர்களைக் கண்டிக்கிறார். ஆனால் கிறீஸ்தவர்கள் வாரத்தில் வெள்ளி சனி நாட்களையும், வருஷத்தில் பற்பல திருநாட்களையும் அநுசரிக்கவொண்ணாது என்று சொல்லுகிறதில்லை.

11. நான் உங்களுக்காக உழைத்தது வீணாய்ப்போயிற்றோவென்று உங்களைப்பற்றிப் பயந்திருக்கிறேன்.

12. நான் உங்களைப் போலானேனே. சகோதரரே, நீங்கள் என்னைப்போலாகுங்களென்று உங்களை மன்றாடுகிறேன். நீங்கள் எனக்கு ஓர் குறையும் செய்யவில்லை.

* 12. முன்னே உங்களைப்போல் நானும் பழைய ஏற்பாட்டு முறைமைகளை யெல்லாம் அநுசரித்துக்கொண்டு வந்தேன். ஆனால், சேசுநாதரைப் பற்றிக்கொள்ளும்படிக்கு இவைகளையெல்லாம் விட்டுவிட்டேன். நீங்களும் அப்படிச் செய்யுங்களென்றர்த்தமாம்.

13. ஏற்கனவே நான் உங்களுக்குச் சுவிசேஷத்தைச் சரீர பலவீனத்தோடே அறிவித்தேனென்று அறிந்திருக்கிறீர் கள். ஆகிலும் என் சரீரத்தில் உங்களுக்குச் சோதனையா யிருந்ததினிமித்தம்,

14. நீங்கள் என்னைப் புறக்கணியாமலும் அரோசியாமலும் சர்வேசுரனுடைய தூதனைப்போலவும், சேசுக்கிறீஸ்துநாதரைப்போலவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

15. அப்பொழுது உங்களுக்குண்டாயிருந்த ஆனந்தம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக் கக்கூடுமானால், அவைகளையும் கொ டுத்திருப்பீர்களென்று நானே உங்க ளுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.

16. உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லி உங்களுக்குச் சத்துராதியானேனோ?

17. அவர்கள் உங்களுக்குக் காண்பிக்கிற சிநேகப்பற்றுதல் நல்ல கருத்தோடு காண்பிக்கிறதல்ல. ஏனெனில் அவர்கள்மீது நீங்கள் சிநேகப்பற்றுதல் வைக்கும்படி உங்களை (எங்களிடத் தினின்று) பிரிக்கத் தேடுகிறார்கள்.

18. நான் உங்களோடிருக்கும் போது மாத்திரமல்ல, எப்போதும் நன்மையில் நன்மையை நாடி நடங்கள்.

19. என் சிறு பிள்ளைகளே, கிறீஸ்துநாதர் உங்களில் உருவாகுமட்டும் நான் மறுபடியும் பிரசவவேதனைப்படுகிறேன்.

20. நான் உங்கள் விஷயத்தில் சந்தேகப்படுகிறபடியால், இப்போது நான் உங்கள் நடுவில் வந்திருந்து, வேறு வகையாய்ப் பேசக்கூடுமானால் நன்று.

21. நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப் பட்டிருக்க விரும்புகிறவர்களே, நீங்கள் நியாயப்பிரமாணத்தை வாசித்த தில்லையோவென்று எனக்குச் சொல்லுங்கள்.

22. அபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்களென்று எழுதியிருக்கிறது. ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். (ஆதி. 16:15; 21:2.)

23. அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான்; சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான்.

24. இவைகள் ஒட்டுவமைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஏனெனில் அவ்விரண்டு ஸ்திரீகளும் இரண்டு ஏற்பாடுகளாம். ஒன்று சீனாய் மலையில் உண்டாகி, அடிமைத்தனத்தில் புத் திரரை உற்பத்தியாக்குகிறது. அது ஆகார் என்பவளாமே.

25. ஏனெனில் சீனாய் என்பது அரேபிய தேசத்தின் மலை. அது இப்பொழுது இருக்கிறதும், தன் மக்களோடு அடிமைத்தனத்துக்குள்ளா யிருக்கிறதுமாகிய ஜெருசலேமுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. 

26. உன்னதத்திலிருக்கிற ஜெருசலேமாகிய மற்றொருத்தியோ சுயாதீனமுள்ளவள். அவள்தான் நம்முடைய தாய்.

27. அதைப்பற்றித்தான்: பிள்ளைகளைப் பெறாத மலடியே, மகிழ்ச்சியா யிரு. பிரசவிக்காதவளே, ஆனந்தங் கொண்டெழுந்து ஆர்ப்பரி; ஏனெனில் புருஷனுள்ளவளைப் பார்க்கிலும் கை விடப்பட்டவளுக்குப் புத்திரர் அநேகர் என்று எழுதியிருக்கின்றது. (இசை. 54:1.)

28. சகோதரரே, நாம் ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் புத்திரராயிருக்கிறோம். (உரோ. 9:8.)

29. ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் இஸ்பிரீத்துவின்படி பிறந்தவனை அப்போது எப்படித் துன்பப்படுத்தினானோ, இப்போதும் அப்படியே ஆகிறது.

30. ஆகிலும் வேதம் இதைப்பற்றிச் சொல்லுகிறதென்ன? அடிமையையும் அவள் குமாரனையும் துரத்திவிடு. ஏனெனில் அடிமையின் புத்திரன் சுயாதீனமுள்ளவளுடைய புத்திரனோடே சுதந்திரவாளியாய் இரானென்று சொல்லுகிறது. (ஆதி. 21:10.)

31. ஆதலால் சகோதரரே, நாம் அடி மையானவளுக்குப் பிள்ளைகளாயிரா மல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைக ளாயிருக்கிறோம். அந்தச் சுயாதீனத்திற் குக் கிறீஸ்துநாதர் நம்மை விடுவித்தார். 

* 30-31. அபிரகாமுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். சுயாதீனமுள்ள சாராளும் அடிமையாயிருந்த ஆகாருமாம். அந்த ஆகாரென்பவள் இஸ்மாயேல் என்ற புத்திரனைப் பெற்றாள். ஆனால் அவன் வாக்குத்தத்தத்தின்படியல்ல, சுபாவத்தின்படி பிறந்தவன். சாராளோவெனில் சுபாவமாய் மலடியாயிருக்கையில் வாக்குத்தத்தத்தின்படி ஈசாக்கைப் பெற்றாள். சிலகாலத்துக்குப்பிறகு சுபாவத்தின்படி பிறந்த இஸ்மாயேல் வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஈசாக்கை அடித்துத் துன்பப்படுத்தின போது இஸ்மாயேலையும் அவன் தாயையும் துரத்திவிடும்படி சர்வேசுரன் கற்பித்தார். இதுவே சரித்திரம். இதிலே அடங்கியிருக்கிற உவமையாவது: அபிரகாமுடைய இரண்டு கலியாணம்: இரண்டு உடன்படிக்கை. அவ்விரு மனைவிகள்: பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடுமாம். அந்த இரண்டு தாய்மாரிடம் பிறந்த பிள்ளைகள்: யூதர்களும் கிறீஸ்தவர்களுமாகிய இரண்டு தேவ பிரஜைகளாம். அபிரகாமுடைய முதல் விவாகம், சர்வேசுரன் யூதர்களோடு செய்த பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கை. அடிமையாயிருந்த ஆகாரென்பவள் சீனாய்மலையில் சர்வேசுரன் யூதர்களுக்கு மோயீசன் கையில் கொடுத்த வேதப்பிரமாணமாம். அது அடிமைகளைப் பிறப்பிக்கிறது. ஏனெனில் அடிமைகளை நடத்துகிறாப்போல அந்தப் பிரமாணம் யூதர்களை நடத்திக்கொண்டு வந்தது. அபிரகாம் சுயாதீனமுள்ளவளோடு செய்த மற்றொரு கலியாணம் வாக்குத்தத்தத்தின்படி மனுஷர்களைப் பசாசின் அடிமைத்தனத்தினின்று விடுவித்து, சுயாதீனர்க ளாக்குகிற சுவிசேஷப் பிரமாணமாம். சாராளிடம் பிறந்த ஈசாக்கு யாரென்றால் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாகிய கிறீஸ்தவர்களாம். அதைப்பற்றித்தான் கிறீஸ்தவர் கள் அபிரகாமுடைய ஞானப் புத்திரரும் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளும் என்னப் படுகிறார்கள். ஆனால் அப்போது இஸ்மாயேல் ஈசாக்கையும் அவன் தாயையும் பகைத்துத் துன்பப்படுத்தினதுபோல திருச்சபையின் துவக்கத்திலிருந்த யூதர்கள் கிறீஸ்தவர்களையும் சுவிசேஷத்தையும் பகைத்துத் துன்பப்படுத்திக்கொண்டு வந்தார் கள். ஆதலால் அபிரகாம் இஸ்மாயேலையும் அவன் தாயையும் துரத்திவிட்டதுபோல சர்வேசுரன் யூதர்களையும் பழைய பிரமாணத்தையும் விலக்கிவிட்டாரென்று அர்த்தமாம்.