பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 02

அந்நியோந்நிய சமாதானமும் சிநேகமும், தாழ்ச்சியுமுள்ளவர்களாயிருந்து, பயத்தோடே தங்கள் ஈடேற்றத்தை நிறைவேற்ற வேண்டுமென்று புத்திசொல்லுகிறார்.

1. ஆகையால் கிறீஸ்துநாதரிடமாய் யாதொரு தேறுதலும், பரம அன்பின் யாதொரு ஆறுதலும், இஸ்பிரீத்துவின் யாதொரு ஐக்கியமும், இரக்கமுள்ள யாதொரு நெஞ்சமும் உங்களுக்கு உண்டானால்,

2. நீங்கள் ஒரே சிந்தையாயிருந்து, என் சந்தோஷத்தை நிரப்புங்கள். ஆகையால் ஒரே பரம அன்பும், ஒரே மனமும், ஒரே உணர்வும் உள்ளவர்களாயிருங்கள்.

3. யாதொன்றையும் பிடிவாதத்தினாலாவது, வீண் மகிமையினாலாவது செய்யாமல், தாழ்ச்சியோடு ஒருவரை யொருவர் தனக்கு மேற்பட்டவர்களென்று எண்ணிக்கொள்ளுங்கள்.

4. அவனவன் தன் நலத்தையல்ல, பிறனுடைய நலத்தையே கோருவானாக. (1 கொரி. 10:33.)

5. கிறீஸ்து சேசுவினிடத்தில் உண்டாயிருந்த சிந்தைகளே உங்களிடத்திலும் உண்டாயிருக்கக்கடவது.

6. அவர் தேவரூபமாயிருக்கையில் தாம் சர்வேசுரனுக்குச் சரிசமானமாயிருப்பதைத் திருட்டென்று எண்ணாமல்.

7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலாகி, மனுரூபமாகக் காணப்பட்டார்.

8. தம்மைத்தாமே தாழ்த்தி, மரண மட்டுக்கும் அதாவது சிலுவை மரண மட்டுக்கும் கீழ்ப்படிதலுள்ளவரானார். (எபி. 2:9.)

9. அதனிமித்தம் சர்வேசுரனும் அவரை உயர்த்தி, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்து,

* 8-9. சேசுநாதர் சிலுவைமரணமட்டும் தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்படிந்ததினாலே அறிவுள்ள சகலமான படைப்புகளும் அவருடைய திருநாமத்துக்குப் பணிந்து அதை எப்போதும் வணங்கி நமஸ்கரிக்கும்படி பிதாவாகிய சர்வேசுரன் கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் அந்தத் திருநாமத்துக்குப் பண்ணப்படுகிற வணக்கம் இரண்டு விதமாயிருக்கிறது. மோட்சத்திலே சம்மனசுக்களும், அர்ச்சியசிஷ்டவர்களும், பூலோ கத்திலுள்ள விசுவாசிகளும், பாதாளத்தில் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களும், தேவசிநேகத்தோடு கூடின வணக்க நமஸ்காரத்தைப் பொருந்தின மனதோடு அத்திரு நாமத்துக்குச் செலுத்துகிறார்கள். பூலோகத்திலுள்ள அவிசுவாசிகளும், நரகத்தி லுள்ள பசாசுகளும், தேவசிநேகமின்றிக் கட்டாயமாய் நடுநடுக்கத்தோடு அந்தத் திருநாமத்துக்குப் பணிகிறார்கள்.

10. சேசுவின் நாமத்திற்குப் பர மண்டலத்தாரும், பூமண்டலத்தாரும், பாதாளத்தாருமாகிய சகலரும் முழந் தாட்படியிடவும், (இசை. 45:24; உரோ. 14:11.)

11. ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதர் பிதாவாகிய சர்வேசுரனுடைய மகிமையில் வீற்றிருக்கிறாரென்று எல்லா நாவும் அறிக்கையிடவும் பண்ணினார்.

12. ஆகையால் எனக்கு மிகவும் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழு தும் எனக்குக் கீழ்ப்படிந்து வந்ததுபோல, என் முகதாவில் மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும் அதிக மதிகமாய் அச்ச நடுக்கத்தோடு உங்கள் ஈடேற்ற வேலையைப் பாருங்கள்.

* 12. அச்ச நடுக்கத்தோடு: - இரட்சணியமடைவோமென்று மிதமிஞ்சின நம்பிக்கையால், எச்சரிக்கை தப்பி, மனம்போல் நடவாமல், எங்கே கெட்டுப் போவோமோ என்று எப்போதும் பயத்தோடும் எச்சரிக்கையோடும் நடக்கப் புத்தி சொல்லுகிறார். ஏனெனில் மிஞ்சின நம்பிக்கையானது ஆங்காரத்தைப் பிறப்பிக்கிறது. ஆங்காரம் சகல பாவத்துக்கும் மூலமாமே. பயமானது தாழ்ச்சியையும், தன்னை நம்பாமையையும், தேவ நம்பிக்கையையும், எச்சரிக்கையையும் பிறப்பிக்கிறது.

13. ஏனெனில் உங்களிடத்தில் விரும்புதலையும், செய்து முடித்தலையும் சர்வேசுரன்தாமே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி செய்து கொண்டுவருகிறார்.

14. ஆகையால் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தத்தளிப் பில்லாமலும் நிறைவேற்றிவாருங்கள். (1 இரா. 4:9.)

15. இத்தன்மையாய்க் கோணலும், மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வே சுரனுடைய நேர்மையான பிள்ளைக ளாகவும், மாசற்றவர்களாகவும் இருப் பீர்கள். (மத். 5:16.)

16. ஏனெனில் நான் வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசைப்பட்டது மில்லையென்கிறதினாலே கிறீஸ்துவின் நாளில் எனக்கு மகிமையுண்டாயிருக்கும்படிக்கு நீங்கள் அவர்கள் நடுவிலே ஜீவ வாக்கியத்தைக் கையிலேந்திக் கொண்டு, உலகத்தில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிறீர்கள். (1 தெச. 2:19.)

17. பின்னும் உங்கள் விசுவாசத்தின் ஆராதனைப்பலியின்மேல் நானும் பலியாவேனாகில், நான் மகிழ்ந்து உங்கள் அனைவரோடும் சந்தோஷிப்பேன்.

18. இதனிமித்தம் நீங்களும் என்னுடனேகூட சந்தோஷித்து, மகிழுங்கள்.

* 17-18. யூதர்களுடைய பூசையில் பலியைப் பீடத்தின்மேல் வைத்து, அதன்மேல் இரத்தத்தின் அடையாளமாகத் திராட்சரசத்தை வார்ப்பார்கள். இவ்விடத்திலே, நான் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, உங்களை விசுவாசிகளாக்கினதினால் பிரியமான பரிமளப்பலியாக உங்களைச் சர்வேசுரனுக்குக் கொடுத்தேன். அந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் வேதசாட்சியாக என் இரத்தத்தைச் சிந்துவேனாகில், என் இரத்தம் உங்கள் பலியின்மேல் வார்க்கப்பட்டதாயிருக்குமென்கிறதினால், நான் சந்தோஷத்தோடு உங்களுக்காக என்னை ஒப்புக்கொடுப்பேன் என்கிறார்.

19. அல்லாமலும் நான் உங்கள் செய்திகளை அறிந்து, மனத்தேறுத லடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்புவேனென்று ஆண்டவராகிய சேசுவினிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். (அப். 16:1.)

20. ஏனெனில் என்னைப்போல உண்மையான பட்சத்தோடே உங்கள்பேரில் கவலையுள்ள மனதைக்கொண்ட வேறொருவனும் என்னிடத்திலில்லை.

21. ஏனெனில் (மற்ற) எல்லோரும் சேசுக்கிறீஸ்துநாதருடையவைகளைத் தேடாமல் தங்களுடையவைகளையே தேடுகிறார்கள். (1 கொரி.13:5.)

22. தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ் செய்வதுபோல அவர் என்னோடேகூடச் சுவிசேஷத்துக்கு ஊழியஞ் செய்தாரென்பதினால், அவருடைய சற்குணத்தைப் பரீட்சித்தறிந்துகொள்ளுங்கள்.

23. ஆதலால் எனக்குச் சம்பவிக்கப்போகிறதேதென்று நான் அறிந்தவுடனே அவரை உங்களிடத்தில் அனுப்பலாமென்று நினைக்கிறேன்.

24. அன்றியும் நானும் உங்களிடத்தில் சீக்கிரமாக வருவேனென்று ஆண்டவருக்குள் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

25. ஆனால் என்னுடைய சகோதரனும், உடன்வேலையாளும், உடன் சேவ கனும், உங்கள் அப்போஸ்தலனும், என் அவசரங்களில் எனக்கு உதவி செய்த வனுமாகிய எப்பாப்புரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்புவது அவசர மென்று எண்ணினேன்.

26. ஏனெனில் அவர் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவரும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப் பட்டவருமாயிருந்தார்.

27. அவர் வியாதிப்பட்டு, மரண அவஸ்தையாயிருந்தது மெய்தான். ஆகி லும் சர்வேசுரன் அவர்பேரில் இரக்கமா யிருந்தார். அவர்பேரில் மாத்திரமல்ல, எனக்குக் கஸ்தியின்மேல் கஸ்தியுண்டா காதபடிக்கு என்பேரிலும் இரக்கமா யிருந்தார்.

28. ஆகையால் நீங்கள் அவரை மறுபடியும் கண்டு, சந்தோஷப்படும்படியாகவும், நானும் கஸ்தியில்லாம லிருக்கும்படியாகவும் அவரை நான் அதிகத் தீவிரமாய் அனுப்பினேன்.

29. ஆகையால் கர்த்தரிடத்தில் எவ்வித சந்தோஷத்தோடும் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறதுந்தவிர, அப்படிக்கொத்தவர்களைக் கனம்பண்ணுங்கள்.

30. ஏனெனில், நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய பணிவிடையிலே உங்களால் இயலாததை நிறைவேற்றும் படிக்கு, அவர் தம்முடைய பிராணனையும் எண்ணாமல், கிறீஸ்துநாதரின் ஊழியத்தினிமித்தம் மரண அவஸ்தைக் குள்ளானார்.