கிறீஸ்துநாதர் சர்வேசுரனுடைய சாயலென்றும், அவரால் எல்லாம் படைக்கப்பட்டதென்றும், திருச்சபைக்குத் தலைவரென்றும், அவரால் சகலமும் சர்வேசுரனோடு உறவாக்கப்பட்டதென்றும் சொல்லுகிறார்.
1. சர்வேசுரனுடைய சித்தத்தினாலே சேசுக்கிறீஸ்துநாதருடைய அப்போஸ்தலனாகிய சின்னப்பனும், சகோதரனாகிய தீமோத்தேயுவும்,
* 1. அர்ச். சின்னப்பர் இந்த நிருபத்தை எழுதும் சமயத்தில் தீமோத்தேயு என்பவர் உரோமாபுரியில் இருந்ததாகத் தோன்றுகிறது. ஒருவேளை அப்போஸ்தலர் சொல்ல, அவரே இந்த நிருபத்தை எழுதியிருக்கலாமென்றுஞ் சிலர் நினைக்கிறார்கள். (அப். நட. 18:5)
2. சேசுக்கிறீஸ்துநாதருக்குள் கொ லோசா நகரத்திலுள்ள அர்ச்சிக்கப் பட்டவர்களும், விசுவாசிகளுமான சகோதரருக்கு எழுதுவது:
3. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனாலும், ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவினாலும் உங்களுக்கு இஷ்டப் பிரசாதமும், சமாதானமும் உண்டாவ தாக. உங்களுக்காக எப்பொழுதும் வேண்டிக்கொண்டு, நம்முடைய கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம் பண்ணுகிறோம்.
4. ஏனெனில், பரலோகத்தில் உங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கையை முன்னிட்டு, சேசுக்கிறீஸ்துவின்மேல் நீங்கள் கொண்டிருக்கிற விசுவாசத்தையும், அர்ச்சிக்கப்பட்ட எல்லோர்மேலும் உங்களுக்குள்ள அன்பையுங் குறித்துக் கேள்விப்பட்டோம்.
5. நீங்கள் அந்த நம்பிக்கையைச் சத்திய வசனமாகிய சுவிசேஷத்தினாலே கேட்டறிந்திருக்கிறீர்கள்.
6. இந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பினதுபோல உங்களிடமும் வந்துசேர்ந்து, சத்தியத்தில் சர்வேசுரனுடைய கிருபையை நீங்கள் கேட்டு அறிந்த நாள்முதலாக உங்களிடத்தில் பலன் தந்து வளருகிறது போல, எங்கும் பலன் தந்து வளருகிறது.
7. இதை எங்களுக்கு மிகவும் பிரிய மான உடன்வேலையாளும், உங்கள் மட்டில் சேசுக்கிறீஸ்துநாதருடைய உண்மையுள்ள ஊழியனுமாகிய எப்பாப் புராஸ் என்பவரிடத்தில் நீங்கள் கற்றுக் கொண்டீர்கள்.
* 7. எப்பாப்புராஸ் என்பவர் அர்ச். சின்னப்பருடைய சீஷனாயிருந்து கொலோசாப் பட்டணத்து திருச்சபையை முந்தமுந்த ஸ்தாபித்தவரென்று தோன்றுகிறது. இந்த நிருபம் எழுதப்பட்டபோது அவர் உரோமாபுரியில் அர்ச். சின்னப்பரோடு காவலிலிருந்தார்.
8. அவரே உங்கள் ஞான அன்பையும் எங்களுக்குத் தெரியப்படுத்தினார்.
9. ஆகையால் நாங்களும் இதைக் கேள்விப்பட்ட நாள்முதல் இடைவிடா மல் உங்களுக்காக ஜெபஞ்செய்து, எல்லா ஞானத்தோடும், இஸ்பிரீத்து வின் விவேகத்தோடும், சர்வேசுர னுடைய சித்தத்தை அறியும் அறிவினால் நீங்கள் நிரப்பப்படவும்,
10. எவ்வித நற்கிரியைகளாகிய பலனைத் தந்து, சர்வேசுரனை அறியும் அறிவில் வளர்ந்து, சகலத்திலும் சர்வேசுரனுக்குப் பிரியப்பட்டு, அவருக்கு யோக்கியமானவிதமாய் நடந்து கொள்ளவும்,
11. அவருடைய பிரதாப வல்லமைக்கேற்றபடி எவ்வித புண்ணியத்திலும் பலப்படுத்தப்பட்டு, சந்தோஷத்தோடுகூடிய சகல பொறுமையிலும், நீடிய சாந்தத்திலும் நடந்து வரும்படி உங்களுக்காகப் பிரார்த்தித்து வருகிறோம்.
12. பிரதாப ஒளியில் அர்ச்சியசிஷ்டவர்களுடைய சுதந்திரத்தில் பங்கடை வதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்க ளாக்கின பிதாவாகிய சர்வேசுரனுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரஞ் செலுத்து கிறோம்.
13. அவரே அந்தகாரத்தின் வல்லமையினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்புள்ள குமாரனுடைய இராச்சியத்தில் சேர்த்துக்கொண்டார்.
14. இவருடைய இரத்தத்தின் மூலமாய் நாம் இவருக்குள் பாவப்பொறுத்தலாகிய மீட்பை அடைந்திருக்கிறோம்.
15. இவரே காணப்படாதவராகிய சர்வேசுரனுடைய சாயலும், சகலசிருஷ்டிகளுக்கும் முந்தின பேறுமானவர்.
* 15. காணப்படாதவராகிய சர்வேசுரனுடைய சாயல்:- சேசுநாதர் பிதாவாகிய சர்வேசுரனுக்குச் சகலத்திலும் சரிசமானமாயிருப்பதால் அவருடைய சாயல் என்று சொல்லப்படுகிறார். முந்தின பேறுமானவர்:- சிருஷ்டிகளைப்போல் முதல்முதல் உண்டானவரென்று அர்த்தங்கொள்ளாமல், யாதொரு சிருஷ்டியும் உண்டாக்கப்படுமுன் நித்தியத்தில் பிதாவினால் ஜெனிப்பிக்கப்பட்டு, பிதாவோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் சரிசமானமாயிருக்கிறாரென்று அர்த்தமாம். இதுவுமன்றி அவரெடுத்த மனுUகத்திலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் சகல சிருஷ்டிகளுக்கும் மேன்மையினால் முந்தினவரென்று அர்த்தமாம்.
16. அதெப்படியென்றால், பரலோகத்திலும் பூலோகத்திலும் காணப்பட்டவைகளும், காணப்படாதவைகளுமான சகலமும் இவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டது; பத்திராசனரோ, நாதகிருத்தியரோ, பிராதமிகரோ, பலவத்தரோ, சகலமும் இவர் மூலமாயும் இவருக்கென்றும் உண்டாக்கப்பட்டன.
17. இவரே எல்லோருக்கும் முந்தின வராயிருக்கிறார். இவருக்குள்ளே சகலமும் நிலைபெறுகின்றது.
18. அவரே திருச்சபையாகிய சரீரத் துக்குத் தலைமையானவர். எல்லாவற் றிலும் தலைமைப்பட்டம் பெற்றவ ராயிருக்கும்படிக்கு அவரே ஆதியும், மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறு மானவர்.
* 18. மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்: - முதன்முதல் மரித்தோரினின்று மகிமையோடு உயிர்த்தவராம். இதனால் ஆதாம் எப்படி முதல் மரித்தவராயிருந்து தனது பிதிர்வழிக்கெல்லாம் மரணத்துக்குக் காரணமாயிருந்தாரோ, அப்படியே சேசுநாதரும் மகிமையோடு உயிர்த்தவர்களில் முதல்வராயிருந்து தம்முடைய அவயவங்களாகிய நல்ல கிறீஸ்தவர்களெல்லோரும் மகிமையோடு உயிர்ப்பதற்குக் காரணமாயிருக்கிறாரென்று அப்போஸ்தலர் இங்கே காட்டுகிறார்.
19. ஏனெனில், சகல சம்பூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,
20. அவர் சிலுவையில் சிந்தின இரத் தத்தினால் பூலோகத்திலுள்ளவைகளா னாலுஞ்சரி, பரலோகத்திலுள்ளவைக ளானாலுஞ்சரி, சகலத்çயும் சமாதானப் படுத்தி, அவர் வழியாய்த் தம்மோடு உறவாக்கிக்கொள்ளவும் (பிதாவுக்கு) சித்தமாயிற்று.
21. மேலும் நீங்கள் முன் ஒரு காலத் திலே அவருக்கு அந்நியராகவும், துர்க் கிரியைகளினாலே மனதில் சத்துருக்க ளாகவும் இருந்தபோதிலும்,
22. இப்போது தமக்கு முன்பாக உங்களைப் பரிசுத்தர்களாகவும், மாசற்றவர்களாகவும், குறையற்றவர்களாகவும் செய்யும்படி அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே (உங்களை) உறவாக்கினார்.
23. இதற்காக நீங்கள் கேட்ட சுவி சேஷத்தினாலுண்டாகும் நம்பிக்கையை விட்டு அசையாமல், விசுவாசத்தில் ஊன்றி, ஸ்திரமாய் நிலைத்திருந்தாலல் லோ சரி. அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழுள்ள சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங் கிக்கப்பட்டு வருகிறது. இதற்கே சின் னப்பனாகிய நான் ஊழியனானேன்.
24. இப்போது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷித்து, கிறீஸ்துவின் பாடுகளில் குறை வாயிருப்பதை அவருடைய சரீர மாகிய திருச்சபைக்காக என் மாம் சத்தில் நிறைவேற்றி வருகிறேன்.
* 24. கிறீஸ்துநாதருடைய பாடுகளில் குறைவாயிருப்பதை அவருடைய சரீரமாகிய திருச்சபைக்காக என் மாம்சத்தில் நிறைவேற்றிவருகிறேன் என்கிற இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? சேசுநாதர் திருச்சபைக்காகப் பட்ட பாடுகள் போதாமல் குறைவாயிருந்ததென்று அர்த்தமாகாது. ஆனால் சேசுநாதருடைய பாடுகளில் குறைவா யிருக்கிறதை என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேனென்று அவர் சொல்லும்போது, நான் சேசுநாதருடைய பாடுகளுக்குப் பங்காளியாயிருக்கும்படிக்கும், அந்தப் பாடுகளை எனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளும்படிக்கும், என் பங்காக எனக்கு நியமிக்கப்பட்டிக்கிற பாடுகளை என் சரீரத்தில் நிறைவேற்றி, சேசுநாதருடைய பாடுகளோடு கூட்டிச் சேர்த்து வைக்கிறேனென்று அர்த்தமாகும். பின்னும் திருச்சபைக்காக அந்தப் பாடுகளை நான் நிறைவேற்றுகிறேனென்று அவர் சொல்வதென்ன? சேசுநாதர் திருச்சபைக்காகப் பாடு பட்டதுபோல, சேசுநாதருடைய அவயவமாகிய ஒவ்வொரு கிறீஸ்தவனும் தனக்காக மாத்திரமல்ல, பொதுவாயிருக்கிற திருச்சபைக்காகவும் பாடுபடவும், புண்ணிய பலன் களைச் சம்பாதித்துக்கொள்ளவும் கடனாளியாயிருக்கிறானென்று காட்டும்படி இப்படிச் சொல்லுகிறார். ஏனென்றால் சரீரத்தைச் சேர்ந்த ஒவ்வொரு அவயவமும் தன் தொழிலை நிறைவேற்றும்போது தனக்காகமாத்திரமல்ல, மற்ற அவயவங்களுக்காகவும், சரீர முழுமைக்காகவும் பிரயோசனமாகச் செய்கிறது.
25. தேவ வாக்கியத்தைப் பூரணமாய் அறிவிப்பதற்கு உங்கள்மட்டில் சர்வேசுரனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தத் திருச்சபைக்கு ஊழியனாயிருக்கிறேன்.
26. தேவ வாக்கியமாகிய இந்தப் பரம இரகசியம் முந்தின காலங்களுக்கும், தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைக்கப்பட்டிருந்து, இப்போது அவருடைய அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு வெளியாக்கப்பட்டிருக்கிறது.
27. இந்தப் பரம இரகசியத்தின் மகிமைத் திரவியங்கள் அஞ்ஞானிகள் மட்டில் எம்மாத்திரம் விளங்குகிறதென்று சர்வேசுரன் தமது அர்ச்சிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கச் சித்தமானார். உங்களுக்கு மகிமையின் நம்பிக்கையாகிய கிறீஸ்துநாதரே இந்தப் பரம இரகசியம்.
28. சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் எந்த மனுஷனையும் உத்தமனாக வெளிப் படக் காட்டும்படிக்கு அவரையே நாங்கள் பிரசங்கித்து, எந்த மனுஷனுக் கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எவ்வித ஞானத்தோடும் உபதேசிக்கி றோம்.
29. இதற்காகவே அவர் என்னி டத்தில் வல்லமையோடு செய்விக்கிற செய்கையின்படி நான் உழைத்துப் போராடுகிறேன்.