19. கிளைத்த கொம்புகளை ஒன்றொன்றாய் வெட்டி எறிவது நெடுநாள் வேலை என்று, வேரைத் தோண்டிப் பறிப்பாரைப்போல, நாமும் புறச்சமயங்களில் கிளைத்த அபத்தங்களை வெவ்வேறே மறுத்துத் தள்ளாமல் அந்தச் சமயங்கள் முளைத்த வகையைக் காட்டி ஒருப்படப் பிடுங் கப் பிரயாசப்பட்டோம். இற்றைவரைக்கும் நான் சொல் லிக் காட்டினதைக்கொண்டு புறச்சமயங்களும், அதுகளில் விபரீதங்களாய்ச் சொன்ன அபத்தங்களும் பொய்யென்று தோன்றவும், நல்ல அறிவுடையோர் எல்லாரும் அதுகளை மூன்றொன்றாய் வெறுத்து மறுக்கவும் நியாயமுண்டாம். ஆகிலுங் கீழ்த்திசைப் பதிதர் தேவமாதாவையும், மற்ற மோக்ஷ வாசிகளையும் நாம் வணங்குகிறதினால் நம்மை அக்கி யானிகளென்று வெட்கமில்லாமற் சொல்வதைப்பற்றிய விஷயத்திற்கு விரிவாக உத்தரஞ் சொல்லத் துணிந்தோம்.
மதிகெட்டவர்கள் பிதற்றிச சொல்லும் அபத்தம் லுத்தேர் நாளில் புதிதாய் முளைத்ததல்ல. லுத்தேருக்கு முன்னே 1,100 வருஷமாகக் கர்த்தர் திரு அவதாரம் பண் ணின 402-ம் ஆண்டில் துவக்கின தப்பிதமாகும். நாம் எல்லாரும் போர்க்களமாகிய இப்பூவுலகில் பசாசோடு யுத்தஞ் செய்துகொண்டு வருகையில், மேற்படை யென்னும் மோக்ஷவாசிகள் நமக்கு உதவியாக நின்றால் எளிதாய் செயங்கொண்டு கரை ஏறுவோமென்று பசாசு அறிந்து, அந்த உதவி நமக்கு இல்லாதபடிக்குத் தேவமாதாவின் ஆராதனையும், மற்ற அர்ச்சியசிஷ்டவர்களுடைய வணக்க மும் ஒழிப்பதற்குப் பிரயாசப்பட்டதாம். ஆகிலும் சூரிய னைப் பகைத்த வௌவாலைப்போலவும், சிங்கத்தை எதிர்த்த நரிக்கூட்டத்தைப்போலவுந் தேவமாதாவையும் மற்ற மோக்ஷவாசிகளையும் பசாசினால் ஏவப்பட்டுப் பகைத்த பாவிகள் உண்டுபண்ணின அபத்தம் முளைத்த நாளில் தானே ஒழிந்து, பழையபடிக்குச் சுகிர்த வேத முறைமை வழுவாத வணக்கம் விளங்கின தாமே.
20. ஆயிரம் வருஷத்துக்குப்பிறகு லுத்தேரும் கல்வீனும் இவர்களோடு சேர்ந்து பிரிந்த மற்றப் பதிதர் எல்லாருஞ் செத்து நாறிக்கிடந்த நாயிடத்து முளைத்தப் புழு மாணிக்கமாகத் தோற்றுவிக்க நினைத்தாற்போல, முன் புதைக்கப்பட்டிருந்த இந்தத் தப்பறையை வேதமாக வெளிப்பட எடுத்து வெட்கமில்லாமல் சொல்லத் துவக்கி னார்கள். இதில் தெளிவாய் நடக்கும்படிக்கு இரு விசே ஷங்களைப் பிரிக்கக்கடவோம். அதின் முதலாவது: தேவ மாதாவையும் மற்ற மோக்ஷவாசிகளையுந் திருச்சபை வணங் கின முறை நல்லதோ இல்லையோவென்று யோசிக்கவும். 2-வது வணங்கப்பட்ட மாதாவுக்கும், அர்ச்சியசிஷ்டவர்களுக்கும், சேசுநாதருக்கும் சுரூபங்களை வைத்து வணங்கின முறை நல்லதோ இல்லையோ வென்று யோசிக்க வும். இவ்விரு முறைகளையும் ஆராயாதத்தன்மையால் அந் தப் பதிதர் எல்லாரும் அக்கியானம் என்றார்கள். நாம் இங்கே முதல் முறைக்கடுத்த நியாயங்களை மூன்று அதிகா ரங்களில் வெளிப்படுத்தினபின்பு, சுரூபங்களுக்கு நாம் செய்யும் வணக்கத்தின் உத்தம முறையைச் சொல்லிக் காட்டித்தருவோம்.
21. ஆகையால், இரு கண் கெட்ட குருடனே! உச்சி மத்தியானம் இன்னம் விடியவில்லை என்று சாதித் தாற்போலச் சந்தேகம் ஒன்றின்றித் திருச்சபையில் வழங்கின வழுவாமுறையின் விளக்கத்தைப் பதிதர் காண மாட்டாமல் மோக்ஷவாசிகளை வணங்கினவனா அக்கியானி கள் என்றார்கள். என்றபின்பு பதிதர் முழுத் தேங்காயைக் கடித்தவனைப்போல உட்சுவையாகிய நியாயத்தைக் கண்டு பிடிக்கமாட்டாமல் சில வேத உதாரணங்களைக்கொண்டு மோக்ஷவாசிகள் ஆராதனை ஆகாதென்று ஒப்பிக்கப் பிரயா சப்படுகிறார்கள்.
22. ஆகிலும், இங்கே அவர்கள் சொல்லுவதை ஆராய்ந்து - மறுக்கு முன்னமே, நாம் மோக்ஷவாசிகளை வணங்கும் வகை ஏதென்று சொல்லக்கடவோம். அதே தெனில், அர்ச்சியசிஷ்டவர்கள் ஆண்டவருக்கு உகந்தவர் களாகக்கொள்ள அவர்களைப் புகழ்ந்து, அவர்கள் நமக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ள மன்றாடுவது நாமே மோக்ஷவாசிகளுக்குச் செய்யும் ஆராதனை யொழிய, வேறு ஆராதனை செய்கிறதில்லையென்பது நிச்சயமாமே. இது இப்படியிருக்கையில் நாமும் அவர்களும் ஒருப்பட ஒத்துச் கொண்ட ஒரு சத்திய விசேஷம் அறியக்கடவீர்கள். அதாவது :
நாம் இப்பூவுலகில் உயிர் பிழைத்திருக்கிறவர்களை நமக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ள மன்றாடலா மென்று பதிதரும் ஒத்துக்கொள்ளுகிறார்கள். இதுவும். நியாயந்தானே. அர்ச். சின்னப்பர் கொலேசியருக்கு எழுதின நிருபத்து 4-ம் அதிகாரம் 2-ம் வசனத்தில் திருவுளம்பற்றின தாவது : ''செபத்தை விடாமல் கிறீஸ்து வின் பரம இரகசியத்து உபதேச வாசலை நமக்கு ஆண்டவர் திறக்கும்படிக்கு அவரை வேண்டிக்கொள் ளுங்கள்'' என்றார். மீளவும் அவர் தானே தெசலோனிய ருக்கு எழுதின முதல் நிருபத்து 5-ம் அதிகாரம் 25-ம் வசனக்தில் தம்பிமாரே, நமக்காக மன்றாடுங்கள்'' என்றார். அவர்களுக்கு எழுதின 2-ம் நிருபத்து 3-ம் அதிகாரம் முதல் வசனத்தில் 'தேவ உபதேசம் வழங்கும்படிக்கு நமக் காக வேண்டிக்கொள்ளுங்கள் " என்றார்.
அர்ச். யாகப்பரொவெனில் எழுதின நிருபத்தின் 5-ம் அதிகாரத்து 16-ம் வசனத்தில் மோக்ஷக் கரை ஏறும் படிக்கு ஒருவன் ஒருவனுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். இதெல்லாமா கையில் நாம் உயிரோடிருக்கும் மற்றவர்களை நமக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுவது வேதத்தில் வழங்கின முறைமையாமே. உயிரோடிருக்கிற வர்கள் ஆண்டவருக்கு உகந்தவர்களோ இல்லையோ வென்று அறியாமலிருக்கவும், உகந்தவராகிலும் முற்ற முடிபோக நடப்பவரோ, வழுவி நரகத்திற்குப் போகத் தக்க வரோவென்று அறியாமலிருக்கவும், நமக்காக ஆண்டவரை வேண்டிக்கொள்ள வேத முறையின்படியே மன்றாடலா மென்று இருக்கையில், ஆண்டவர் தரிசனத்தை யடைந்து, அவருக்குச் சனுக்களாகி, வழுவ மாட்டாக மகாத்துமாக் களாகிய மோக்ஷவாசிகளை நமக்காக மன்றாடும்படிக்கு நாம் வேண்டக்கூடாதென்பதென்ன? வேண்டினால் அக்கியான வணக்கம் என்பதென்ன?
23. இதற்குப் பதிதர் சொல்லும் முதல் நியாயமா வது : மோயீசன் 5-ம் புஸ்தகத்து 6-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் எழுதின தாவது: உன் கர்த்தாவாகிய சர்வே சுரனை வணங்கி, அவர் ஒருவருக்கே ஊழியஞ் செய்வாயாக வென்றார். ஆகையால் அவர் ஒருவரை வேண்டுவது நியா யமாகையால் அவரை விட்டு மோக்ஷவாசிகளை வேண்டு வது ஆண்டவருக்குச் சங்கைக்கேடாகும் என்பார்கள். ஆயினும் ஆண்டவரை விட்டு உயிரோடிருக்கிற மகாத்து மாக்களை நமக்காக வேண்டும் படிக்கு மன்றாடுவது ஆண்டவ ருக்குச் சங்கைக் கேடாகாமல் முன் சொன்னபடி வேதத் தில் வழங்கின முறையாவானேன். இவ்வண்ணமே ஆண் டவருக்குக் குறைசெய்யாமல் இப்பூவுலகிலுள்ள நல்லோ ரையும், வானுலகில் வாழும் மோக்ஷவாசிகளையுஞ் சக் கித்து வேண்டிக்கொள்ளலாம். அதேனெனில் முன் சொன்ன தேவ வாக்கியத்தில் சர்வேசுரனே தேவனொழிய மற்றவரைத் தேவராக வணங்கவும், சேவிக்கவும் வேண்டா மென்பதாம்.
அப்படியே மோயீசன் 2-ம் புஸ்தகத்து 20-ம் அதி காரத்து 3-ம் வசனத்தில் விவரமாய் ஆண்டவர் கட்டளை யிட்டார். நாமோவெனில் தேவமாதாவையும், மோக்ஷ வாசிகளையும் வணங்கி மன்றாடும் போது அவர்களைத் தேவர் களாக எண்ணவுமில்லை, மன்றாடவுமில்லை. நமக்காக அர சனை மன்றாடச் சொல்லி மந்திரிகளை வேண்டினால் அவர் களை அரசர்களாக வணங்கினோமென்றும், அரசனுக்கு இதனால் குறை உண்டென்றும் மதி கெட்டவனுஞ் சொல் லமாட்டான்.
24. மீளவும் பாதிதர் சொல்லும் இரண்டாம் நியா யமாவது : மனிதனாகப் பிறந்த சேசுகிறீஸ்து ஒருவரே ஆண்டவருக்கும், மனிதருக்கும் நடுவே நிற்பவரென்று, அர்ச் . சின்னப்பர் திமோத்தேயுஸென்பவருக்கு எழுதின முதல் நிருபத்தில் 2ம் அதிகாரத்து 5-ம் வசனத்தில் எழு திவைத்தார். ஆகையால் சேசுநாதர் ஒருவரே மனிதருக்கு உதவியாக நடு நின்று ஆண்டவருடைய உறவும், வரங்க ளும் நமக்கு வரும்படி செய்கிறவராகையால் அவரை அல் லாமல் மற்ற மோக்ஷவாசிகளை வேண்டுவது அவர் உதவி போதாது என்றாற்போலச் சேசுநாதருக்குக் குறையாகு மென்று பதிதர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
ஆயினும் உயிரோடிருக்கும் நல்லவரை வேண்டுவது சேசுநாதருக்குக் குறையல்லவென்று பதிதர் தாமே சொன்ன பின்பு, மோக்ஷவாசிகளை மாத்திரம் வேண்டுவது குறையா மென்பது என்ன ? அர்ச். சின்னப்பர் முன் சொன்ன இடத்தில் எழுதிவைத்ததெல்லாஞ் சொன்னால் ஈந்தேகப்பட இடமில்லை. ஆகையால் ஆண்டவருக்கும், மனிதருக்கும் சேசுநாதர் ஒருவரே நடு நிற்பவர் என்ற வுடனே அதற்கு நியாயத்தைக் காட்டி, அவரே சகலபேர் ஈடேற்றத்திற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தாரென்றார். ஆகையால் ஒழுங்குப்படத் தெளிவாக சின்னப்பர் திருவுளம் பற்றினதைத் திருப்பிச்சொல்லும்படிக்கு, மனிதர் யாவரை யும் இரட்சிக்கிறதற்குச் சேசுகிறீஸ்து ஒருவரே தாம் தம் மைப் பலியாகத் தந்ததினால் அவர் ஒருவரே ஆண்டவ ரோடு மனிதர் உறவாகும்படிக்கு நடுவில் நிற்பவரென்றார், அர்ச். சின்னப்பரென்க.
அப்படித் தாம் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு, மரணத்தை அடைந்து, நம்மை இரட்சித்த சேசுநாதரொ ழிய, மற்ற மோக்ஷ வாசிகளை நம்மை இரட்சித்தவர்க ளென்று சொல்லவும், கருதவுங்கூடாது. ஆகிலும் சேசு நாதர் பாடுபட்ட பலனைக்கொண்டு மோக்ஷவாசிகளும், பூவு லகில் வாழும் மகாத்துமாக்களும் நமக்காக வேண்டிக்கொள் ளச் சொன்னால் சேசுநாதருக்குப் புகழ்ச்சி யாகுமொழியக் குறையும், நிந்தையும் ஆகுமென்று நல்லறிவுடையோர் நினைக்கவுமாட்டார்கள்.
25. மூன்றாவது, பதிதர் சொல்லுவது ஏதெனில்: ஆண்டவர் அளவிறந்த தயையுள்ளவரும், நம்மை இரட் சிக்க மிகவும் ஆசையுள்ளவருமாகையில் பல மோக்ஷ வாசி சளைச் சிபாரிசு செய்யத் தேடி, ஆண்டவரை நமக்காக வேண்டி மன்றாடச் சொல்லும் போது, ஆண்டவர்மேல் அவநம்பிக்கையைக் காட்டினாற்போலேயாகும். அர்ச் சின் னப்பரோவெனில் எபிறேயருக்கு எழுதின நிருபத்தில், +-ம் அதிகாரத்து 16-ம் வசனத்தில் நாம் வேண்டிக்கொள் ளும்போது ஆண்டவர் சந்நிதியிலே முழு நம்பிக்கை போடே சேரக்கடவோமென்றார். ஆகையால் ஆண்டவரை பன்றி மோக்ஷ வாசிகளை வேண்டுவது அவநம்பிக்கையாகி, ஆகாத வணக்கமாகுமென்று பதிதர் சொல்லுகிறார்கள்.
ஆகிலும் அந்த அர்ச். சின்னப்பர்தாமே முன் சொன் ன்படி தமக்காகச் சனங்களை வேண்டிக்கொள்ளச் சொல்லி எழுதின இடத்தில் ஆண்டவர் பேரில் அவநம்பிக்கை காட்டினாரோ, இல்லையென்பார்கள் பதிதர்தாமே. ஆகை யால் மோட்சத்தில் வாழும் அர்ச்சியசிஷ்டவர்களையும் அவ நம்பிக்கை காட்டாமல் வேண்டிக்கொள்ளலாமென்று சொல்லுவது நியாயமாமே. மீளவும் வேதத்தில் எழுதப்பட்ட தைப் பார்க்கில் இதுவெளியாகும். ஆகையால் யோபு ஆக மத்தில் 42- ம் அதிகாரத்து 8-ம் வசனத்தில் ஆண்டவர் தாமே யோபென்பவன் சிநேகிதருக்குத் திருவுளம் பற்றி ன தாவது: உங்களுக்காக வேண்டி யோபென்பவன் பூசை செய்யவும், நம்மை வேண்டிக்கொள்ளவும் அவன் முகத்தைப் பார்த்து, நீங்கள் மதி கேடாகச் செய்த குற்றங்களைப் பொறுப்போமென்றார்.)
மீளவும் மோயீசன் முதல் புஸ்தகத்தில் 20 -- ம் அதி காரத்து 7-ம் வசனத்தில் ஆண்டவர் செறார் நாட்டு அர சனாகிய அபிமெலேக்கென்பவன் அபிரகாம் பெண்சாதி யைப் பறித்ததற்குத் திருவுளம் பற்றின தாவது: புருடனுக் குத் தன் ஸ்திரீயை உடனே ஒப்புக்கொடுக்க, அவனுந் தீர்க்கத்தரிசியாகையால் உனக்காக வேண்டிக்கொள்ளு வான். நாமும் பொறுத்து, நீ பிழைப்பாயென்றார். மீள வும் மக்கபெயர் இரண்டாம் புஸ்தகத்தில், 3-ம் அதிகா ரத்து 23 --- ம் வசனந்துவக்கி, 34-ம் வசனமட்டும் எழு தப்பட்ட வர்த்தமானமாவது : எருசலேமாநகரில் சர்வேசு ரனுக்குக் கட்டியிருந்த கோயிலில் உள்ள திரவியங்களைக் கொள்ளையிட்டுக்கொண்டு வரும்படிக்கு அரசனால் அனுப் பப்பட்ட எலியோ துரன் போய்க் கட்டளையிட்டபடி செய் யத் துணிந்தவளவில், ஆகாயத்தில் தோன்றின ஒரு சம்ம னசு ஏறின குதிரை எலியோதரனை மார்பில் உதைத்தவு டனே, சூழ நின்ற சேவகர் எல்லோரும் ஓடிப்போக எலி யோ துரன் கீழே விழுந்தான். விழுந்த பின்பு வேறு இரு சம்மனசுகள் தோன்றி, இருபக்கத்தும் நின்று குதிரைச் சம்மட்டிகளால் அவனை மிகவும் அடித்தமையால், அவன் மூச்சின்றிச் சாகக் கிடந்தான்.
அப்போது பிரதான குருவாகிய ஒனியஸென்பவர் அவன் செத்தால் இது நாம் செய்த வஞ்சனையென்று: இராசா நினைப்பானோவென்று மன திரங்கி, அவனுக்காக வேண்டிச் சர்வேசுரனை மன்றாடிப் பூசை செய்தார். எலியோதுரனை முன் அடித்த இரு சம்மனசுகள் மீளவும் அவ னுக்குத் தோன்றி ஒனியஸென் னுங் குருவானவரைத் தோத்திரஞ் செய்யக்கடவாய், அவரைக் குறித்து ஆண்ட வர் உனக்கு உயிர் தந்தார் என்றார்கள்.
இதுவுமன்றி இத்தகைப்பட்ட வாக்கியங்களும், வர்த் தமானங்களும் வேத புஸ்தகங்களில் எங்கும் மட்டின்றிக் காணப்படுமே. ஆகையால் பிறரை நமக்காக வேண்டிக் கொள்ளச் சொல்லுவது பதிதர் சொன்னபடி அளவிறந்த தயையுள்ள நாதர் மேல் அவநம்பிக்கையைக் காட்டினதா கில், ஆண்டவர்தாமே பிறருக்காகச் சில மகாத்துமாக்களை வேண்டிக்கொள்ளச் சொல்லுவானேன்? அவர்கள் பிறருக் காகச் செய்த வேண்டு தலைத் தாமே கேட்பானேன்? தான் தானே தன் கண்ணைப் பிடுங்கினாலொழிய உச்சிப் பகலி னும் விளங்கின இந்த நியாயங்களைக் காணாதிருப்பவர் ஒருவர் உண்டோ ?
26. ஆகிலுங் கண்ணால் கண்ட நியாயமும், கையால் தொட்ட சத்தியமும் மறுத்துச் சலஞ்சாதிப்பது பதிதர் இயல்பாகையால், சொன்னதற்கு மறுவுத்தரமில்லா மலும், ஒத்துக்கொள்ளாமல் நம்மை நகைத்துச்சொல்லும் நாலாங் குருட்டு நியாயமாவது : நாம் சொன்னபடி மோக்ஷ வாசிகளை வேண்டுவது குறையில்லா தாயினும், அதனாலா கிய பலன் என்ன? மோக்ஷவாசிகள் நமக்கு வந்த இடை யூறுகளை அறியவுமில்லை, நாம் அவர்களுக்குச் செய்யும் வேண்டு தலைக் கேட்கவும் இல்லை. செவிடருக்கு வாசித்த வீணையைப் போலவும், குருடருக்குக் காட்டின கண்ணாடி யைப் போலவும் ஆகுமென்பார்கள். அரசர் 3-ம் ஆகமத்து 3-ம் அதிகாரம் 39-ம் வசனத்தில் சகல மனிதர் உணர்வினை ஆண்டவர் ஒருவரே அறிந்தாரென்ற தாகையால் மோக்ஷ வாசிகளும் அறிவார்களென்றால் வேதத்திற்கு ஒவ்வாத அக்கியானம் என்பார்கள்.
ஆகிலும் மனிதர் உணர்வினை இயற்கையால் அறிந்த வர் சர்வேசுரன் ஒருவர் தாமே. அவர் தாம் தந்த காட்சியாற் செயற்கை அறிவினோடே மோக்ஷவாசிகளும் எம் முணர்வினை அறிந்தார்களென்றால் குறையென்ன? அப்ப டித்தானல்லோ தீர்க்கத்தரிசிகளெல்லாரும் வருவதையும், அகன்றதையும், மனதில் ஒளித்ததையும் அறிந்து வெளி யாகச் சொன்னார்கள். அப்படியல்லோ சாமுவேல் அரசர் முதல் ஆகமத்து 9-ம் அதிகாரம் 19-ம் வசனத்தில் சவுல் மனதில் நினைத்த யாவையும் அறிந்து, அவனுக்குச் சொன்னார். அப்படி யல்லோ அரசர் 4-ம் ஆகமத்து 5-ம் அதிகாரம் 25-ம் வசனத்தில் எவிசேயுஸென்பவர் தூர நின்ற தன் சீஷன் செய்ததை அறிந்து சொன்னார். அங் கேதானே 6-ம் அதிகாரத்து 3-ம் வசனத்தில் அந்த எலிசேயுஸ்தானே சீரிய இராசா நினைத்த யாவையும் அறிந்து இசறாயேல் இராசாவுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இத்ககைப்பட்ட பலவும் வேதத்தில் எழுதியிருக்கையில் இப்பூவுலகில் ஆண்டவர் தம்முடைய சிநேகிதருக்கு இவ்வகைக் காட்சியைத் தந்தது நிச்சயமா கக் கொள்ள மோக்ஷத்தில் உத்தமவிதமாய்த் தம்மோடு ஒன்று பட வாழுஞ் சிநேகிதருக்குக் கொடுக்கமாட்டாரோ?
27. ஆகிலும் இது எவருக்குத் தெளிவாகும்படிக்கு இங்கே அறியவேண்டிய தாவது: மோக்ஷத்தில் பேரின்ப தரிசனத்தை அடைந்த யாவருஞ் சர்வேசுரனை முகமுக மாய்க் கண்டு வாழ்வார்கள். தெளிந்த கண்ணாடியைப்பார்த் தவன் அதிலே தன் முகத்தைக் காண்பதன்றி அக்கண்ணா டியை அடுத்த யாவையுங் காண்பான். அவ்வண்ணமே அள விறந்த தெளிவுள்ள ஞானக் கண்ணாடியாகிய தேவசுபா வத்தை மறைவின்றிப் பிரத்தியக்ஷமாய் மோக்ஷவாசிகள் எல்லோருங் கண்டபடி, ஆண்டவர் சுபாவமாய் அறிந்த யாவையும் அவர்களும் அதிலே காண்பார்களென்று சொல் லத்தகுஞ் சாத்தியமாமே.
குன்றாத இந்த நியாயத்தை வேத உதாரணங்களால் ஒப்பிக்கும்படிக்குத் தோபியன் ஆகமத்து 12-ம் அதிகா ரம் 12-ம் வசனத்தில் இரபயேலென்னுஞ் சம்மனசு தோபியனைப் பார்த்து, நீ கண்ணீரை விட்டு அழுது வேண்டின அளவில், நானே ஆண்டவருக்கு உன் வேண்டுதல்களை ஒப் புக்கொடுத்தேனென்றார். அர்ச். அருளப்பர் கண்ட காட்சி யின் 5-ம் அதிகாரம் 3-ம் வசனத்திலும், 3-ம் அதிகாரக்து 3-ம் வசனத்திலும், 24 கிழவராகிய அக்காலத்துள்ள மோக்ஷவாசிகளும், மற்றச்சம்மனசுகளும் ஆண்டவர் சமு கத்தில் விழுந்து பொற் பாத்திரத்தில் பூம்புகை காட்டின பாவனையாகப் பூவுலகிலிருந்த நல்லோர் செய்க வேண்டு தலைக் காட்டி மன்றாடினதாக எழுதி வைத்தார்.
மக்கபெயர் இரண்டாம் ஆகமத்து 1.5-ம் அதிகாரம் 12-ம் வசனந் துவக்கி யூதளென்பவன் கண்ட காட்சியா வது: பிரதான குருவாயிருந்த ஓனியஸென்பவர் யூதர்களுக்காக வேண்டிக் கையெடுத்து ஆண்டவரை மன்றாடக் கண்ட பின்னர், அவர் அண்டையிலே வயதிலும், பெருமையிலும் உயர்ந்த மற்றொருவர் தோன்றவே யூகஸென்பவனை நோக்கி ஒளியஸென்பவர் சொன்னதாவது: இவரே நம்மு டைய சனங்களுக்காகவும், எருசலேமென்னுந் திரு நகருக்காகவும் மிகவும் வேண்டிக்கொண்டிருப்பவர். இவரே ஆண்டவர், தீர்க்கத்தரிசியாயிருந்த எரேமியஸென் பவரென்றார். உடனே எரேமியஸென்பவர் கையை நீட்டிப் பொன்னாற் பூண்ட வாளை யூதஸென்பவனுக்குத் தந்து, சர்வேசுரன் உனக்கு அனுப்பின திரு வாளை வாங்கிக்கொண்டு இசறயேல் சனங்களுக்குள்ள பகைவரை வெட்டிச் சங்கரிப்பா யாகவென்றார்.)
இதுகளையும், வேதத்திலுள்ள பலவற்றையுஞ் சலஞ் சாதியாமற் பார்த்தால் சம்மனசுகளும், மற்ற மோக்ஷவா சிகளும் ஆண்டவரைப் பிரத்தியக்ஷமாகக் கண்ட இடத் தில் அவர்கள் தேவ சுபாவத்தில் நம்முடைய துன்பங்க ளையும், வேண்டுதலையும் அறிவார்களென்றும், அறிந்து நமக்காக மன்றாடுவார்களென்றுஞ் சந்தேகமறத் தெரியப் படுமே. மீளவும் ஒனியஸென்பவரும், எரேமியஸென்பவ ரும் இசறாயேல் சனங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தபோது அவர்கள் இருவரும் மோக்ஷ தரிசனத்தை அடைந்தவர்களல்ல. பிதாக்கள் ஸ்தலத்தில் இருந்தவராகி லும் அவர்களுக்காக வேண்டவும், உதவவுஞ் செய்தார்க ளென்றால் சேசுநாதர் மோக்ஷ இராச்சியம் சென்ற பின் னர் அந்த இருவரும், மற்ற மோக்ஷவாசிகளும் அடைந்த பிரத்தியக்ஷ தரிசனத்தால், நாம் செய்யும் வேண்டுதலை அறி யவும், மனம் பொருந்தி உதவியாக நமக்காக வேண்டி மன் நடவுஞ் செய்வார்களென்று கண்ணுடைய யாவருங் கண் டுச் சொல்வார்கள் அல்லோ.
சொன்ன யாவையும் மெய்யென்று அறிவதற்கு ஆசையோடு எவ்வளவாகிலும் ஆராய்ந்து பார்க்கில், நியா யத்தைக் காணாதபடி தனக்குத்தானே கண்ணைப்பிடுங்கினா லொழிய மோக்ஷவாசிகளைக் குறித்துத் திருச்சபையில் வழங்கும் வணக்கம், வேதத்திற்கு ஒத்திருக்கிற நியாய மென்று காணப்படுமே. ஆகையால் அந்த வணக்கத்தைப் பதிதர் அக்கியான மென்றபோது அவர்களைப் பார்க்க மதி கெட்டவரும் இல்லை, அக்கியானிகளும் இல்லை என்பது நிச்சயந்தானே.