11. அரசர் நீதி கோணவும், நன்னெறி ஒழுக்கம் வழுவவும், துயரப்பட்டு மெலியவும், அருந் தவம் ஒடுங்கி ஒழியவும், நல்வினை எல்லாம் மடிந்து குறையவும், சத்திய வேதம் வேறுபட்டு ஒளி மங்கவும், பெண் கற்புக்குரிய காவலற்று அழியவும், பகை, சினம், காமம், களவு, கொலை, உலோபம் முதலிய பாவங்கள் கரையொன்றின்றிப் பெருகி வெள்ளமாகப் பெருகவும், முளைத்த லுத்தேர் என்னும் பெரும் பாவி திறந்த பாவ வழியைக் கொடிய நெஞ்சின ருங் காமத்தழிந்த உணர்வினருங் கள்ளுண்ட வெறியில் மதி கெட்டவரும் அநுசரித்தார்களொழிய, நல்லோர் எல்லாரும் அவ்வழிப் பகைத்து, லுத்தேர்மேல் இரங்கி, அவனை நன்னெறியில் நிறுத்த உபாயங்களைத் தேடி , மறுக் கப்படாத நியாயங்களை ஒப்பித்துத் துங்கினவனை எழுப்பப் பிரயாசைப்பட்டார்கள்.
அதற்கு லுத்தேர் அசையாமல் திருச்சபை கூடினால் சொன்னபடிக் கேட்பேன் என்றான். அப்படியே அர்ச் பாப்பு உலகெங்குமிருந்த மேற்றிராணிமாரும், வேதபாரகரும், இராசாக்கள் ஸ்தானாபதிகளுங் கூடச் சொல்லி அழைத்துத் திறிதேந்தென்னு மாநகரில் 255 பேருங் கூடி, நம்பிக்கை ஓலைகளை அனுப்பி, லுத்தேர் என்பவனைப் பலமுறை அழைப்பித்தார்கள். லுத்தேரோவெனில், உண்மையை அறிய ஆசையில்லாமையாலும், தான் சொன்னதெல்லாம் அபத்தமென்று தான் நன்றாய் அறிந்ததினாலும், ஒளியைத் தாங்கமாட்டாத வௌவாலைப்போல ஒளிந்திருந்தான். ஒளிந்த லுத்தேர் ஆங்காரத்தை ஒளியாமல் வந்த நம்பிக்கை ஓலைக்கு எழுதின மறுவுத்தரமாவது:' இரு பதினாயிரங் காலாளும், ஐயாயிரங் குதிரையும் என்னைச் சூழ்ந்து வரக் கூடினபின்பு நான் அந்தக் கூட்டத்துக்கு வருவேன். அப்போது நான் சொன்னதை விசுவசிக்கச் செய்வேன்'' என்று எழுதினான்.
ஆகையால், ஏழைச் சனங்களை ஏய்த்தாற்போல அங்கே கூடின சாஸ்திரிகளை ஏய்க்க முடியாமல், தான் சொன்ன அபத்தங்களைச் செலுத்த ஒரு பெரும் படை வேண்டிய தொழிய அதுகளை ஒப்பிக்கத் தனக்கு ஒரு நியாயமில்லை என்றுதானே கண்டு கொண்டானல்லோ. அப்படி அவன் வரமாட்டாமையால் அங்கே கூடின நல்லோர், லுத்தேர் உண்டுபண்ணின தப்பறை எல்லாம் நெடுநாளாய் ஆராய்ந்து, வேதத்திற்கும் நியாயத்திற்கும் ஒவ்வாதென்று ஒன்றொன்றாய்ச் சொல்லிச் சபித்த பின்பு, சேசுநாதர் அர்ச். மத்தேயு எழுதின சுவிசேஷத்து 18-ம் அதிகாரம் 17-ம் வசனத்திற் சொன்னபடி, "கூடின. திருச் சபை வார்த்தையைக் கேளாதவன் உனக்கு அக்கியானி களில் ஒருவனாகக்கடவான்" என்றமையால், அழிந்த உறுப் புனை மற்ற உடல் கெடாதபடிக்கு அறுத்தெறிந்தாற்போல லுத்தேர் என்பவனையும், அவனைச் சேர்ந்த யாவரையும் பெருஞ் சாபமாக இடித்துத் திருச்சபைக்கு அப்புறத் தொழிய விலக்கினார்கள்.
12. இட்ட சாபத்தை நகைத்த லுத்தேர் கொஞ்ச நாட்போனபின் இராத்திரி நன்றாய்ச் சாப்பிட்டுப் படுத் துக்கொண்ட இடத்துத் தன் பாவத்தின் பாரத்தைத் தானே பொறுக்கமாட்டாமல் தன் கையால் தன் கழுத்தை நெருக்கிச் சகல பாவங்களைப் போதித்த நாக்குப் புறப் படச் செத்துப் பசாசுகள் மிகக் களிகூரப் பாழ் நரகத்தில் வீழ்ந்தான். இது நாம் அறிந்த வகையேதெனில், அவன் துர்ப்புத்தியைக் கேட்டு மயங்கி அவனுக்கு ஊழியஞ் செய்திருந்த ஒருவன் கூடநின்று தன் குரு செத்த அவல மான சாவைக் கண்டு அஞ்சி , ஓநாயினிடமிருந்து தப்பிப் பிழைத்த ஆட்டுக்குட்டியைப்போல அவனுந் தப்பிவந்து சகல பாவத்துக்கும் ஏதுவாகிய நீச லுத்தேர் சமயத்தை வெறுத்து, திருச்சபை மடியில் வீழ்ந்து, நடந்த யாவை யுஞ் சொல்லி, முன் தான் செய்த பாவங்களைக் கழுவ மிக வும் அழுது, நன்னெறி வழுவாமல் நடந்தான்.
13. இதுவெல்லாம் நடந்துகொண்டு வருகையில் காலிய இராச்சியத்தில் பிறந்த கல்வீன் என்பவன் தன் ஊர்ப் பாவிகளுக்குள்ளே பெரும் பாவியாக விளங்கி, செய்த துரோகங்களால் தள்ளுண்டு ஓடிப்போய் லுத்தேரோடு கூடி, அவனை ஆண்டவரால் அனுப்பப்பட்ட அப்போஸ் கலன் என்று புகழ்ந்து சிலநாள் பின் துடர்ந்த பின்பு, தனக்கும். பேராகும்படிக்கு அவனை விட்டுப் பிரிந்து, விரோதமாய்ச் சிலதுகளை உணர்த்தி, லுத்தேர் என்றவனை அக்கியானி என்றும், மதி கெட்டவன் என்றும் இகழ்ந்து, கூடின நாய்கள் தம்மைக் கடித்தன போல இருவருங் கூடி யும் பிரிந்தும் ஒரு கருத்தோடு வேதத்தைக் கெடுக்க வருந் தினார்கள். அப்படியே கல்வீனுக்கும் லுத்தேருக்கும் விரோகமும் பகையு மட்டின்றி வளர்ந்து வருகையில் லுத் தேர் பிரிய சீஷனாகிய மேலந்தோனுக்குக் கல்வீன் எழுதினதாவது :
''நமக்குள்ளே வந்த விரோதங்கள் இனி வருங்காலத்தில் எவருக்குஞ் சந்தேகத்தோடாயினும் பரம்பாதபடிச் செய்வது மிகவும் வேண்டிய எச்சரிக்கைத்தானே. அதே னென்றால், ஒழுங்குடன் உலகமெல்லாம் அநுசரித்து உட் கொண்ட விசுவாசத்தை நாமே கைவிட்டு எல்லாரையும் பகைத்தபின்பு, வழுவில்லாத திருச்சபையை நெறியில் நிறுத்த வந்தோமென்று நாம் துணிந்த துவக்கத்தில் தானே நமக்குள்ளே ஒவ்வாமல் விரோதித்து இருந்தோ மென்று அறிந்தால், இதைப்பற்றி அனைவரும் நகைத்து இகழத்தகுந்தது ஒன்றுமில்லை" என்றான். இதோ ஆண்ட வர் பரம நீதியால் பதிதரே தங்கள் வாயால் தங்களுக்குக் கேடாகத் தீர்வையிட்ட முறை. மீளவுங் கல்வீன் லுத்தேர் என்ற இருவர் தம்முட் சிலதுகளில் பகைத்ததன்றி, ஒவ்வொருவன தன்னோடு ஒவ்வாமல் இன்று சொன்னதை யே நாளை மறுத்து விரோதமாய் உணர்த்திக்கொண்டு, ஒரு நிலைகொள்ளாமல் சொன்ன ஒவ்வாத தப்பறை எல்லாம் ஆண்டவர் அருளிச்செய்த வேதமென்று பிதற்றித் திரிந்தார்கள்.
14. இவ்விருவர் செய்தபடிக்கு இவர்களைப் பின் சென்ற சீஷருங் குரு வழி விட்டுக் கொஞ்ச வருஷத்தில் லுத்தேர் சமயம் 78 பிரிவுகளாகவும், கல்வீன் சமயமும் விபரீத பலப் பாகங்களாகவுங் கண்டோம். நீசர் நினைவும், மெய்வழி தப்பி வழுவின் தப்பறையும், ஆடுகள் சாயுங் காட்டுவழியைப் போல ஆயிர முகத்தளவாகப் பிரிந்து, பூவுலகெங்கும் நிந்தையாக மெலிந்து கிடந்தமையால் அது பொய் வழி என்று தோன்றுமல்லோ . அதெப்படியென்றால், ஆண்டவர் அருளிச்செய்த வேதம் மெய்யாகையால் தீயின் முகத்து அழியாத தங்கத்தைப்போலவும், காற்றின் முகத்து அசையாத வயிரமலையைப்போலவும், மேக முகத்து அழுக்கடையாத சூரியனைப்போலவும் எக்காலத் தும் ஒருமுகமாய் நின்று வந்து பகையின் முகத்து ஒளி பெற்று வளர்வதொழியக் குறையவுங் கெடவுமாட்டாது.
அப்படியே சேசுநாதர் மனுஷனாகப் பிறந்து 1956-ம் வருஷமுமாகி அவர் அருளிச்செய்த வேதத்தைப் பகைத் து, தம்முள் ஒன்றோடொன்று ஒவ்வாமல் முந்நூறு வெவ்வேறு புறச்சமயங்களாகப் பிரிந்து தோன்றினவாம். ஆட்டுக்குட்டிகளைச் சூழ்ந்த ஓநாய் கூட்டம்போல எப் போதும் எங்கும் ஆயிரம் வகைப் பதிதர் சத்தியவேதத்தை விழுங்கச் சூழ்ந்து பகைத்தாலும், அது சத்தியவேதமாகக் கொள்ள இந்நாள்வரைக்குஞ் சற்றுங் கெடாமல் உலக மெங்கும் ஒருகண்ட சீராய் விளங்கினதொழிய வேறு படாமல் நிலைகொண்டதாகக் கண்டோம்.
இந்நாள் வரைக்கும் அர்ச். பாப்பு, மற்ற வேதபார கருஞ் சொன்ன தேவ இரகசியங்களை ஒன்றும் அறியாத கிழவியும் மாறாமற் சொல்வாள். புறச்சமயத்தாரோ வெனில், காற்றின் முகத்து விரித்த கொடிகளைப்போல ஆடின உணர்வினோடு நாடோறும் வழியை மாறி, வேர்க் கொள்ளாத பாசியைப் போல அலைந்து, நீர்மேற் குமிழி யைப் போல அழிந்து மறைந்து போனார்கள். அப்போஸ் தலர்மார் நாள் துவக்கி ஓயாமற் பிறந்த பல புறச்சம யங்கள் லுத்தேர் முளைத்த நாளில் ஐரோப்பாக் கண்டத் தில் எல்லாம் மடிந்து புதைக்கப்பட்டிருந்ததொழிய, ஒன்றா கிலும் அப்போது விளங்கி நின்றதில்லை, அதற்கு ஒரு கோயிலும், ஒரு கூட்டமும், ஒரு ஸ்தலமும் நின்றதுமில்லை. லுத்தேர் முதற்கொண்டு தோன்றின புறச்சமயங்களோ வெனில், இன்னம் நின்றாலும் ஒரு வழியாய் நில்லாமல் ஆயிரம் பிரிவாக வேறுபட்டு, ஒரு முகமும் ஒரு நிலையுமில் லாமற் சிறிது மூலையிலே அலைவதைக் கண்டோம்.
15. புறச்சமயமெல்லாம் பொய் வழியாகையால், இந்த விபரீதமாவதற்கு அது ஓர் காரணமன்றி இதற்கு வேறொரு காரணமுண்டாம். அதேதெனில், வேதத்துக் கெல்லாம் ஆண்டவர் திருவுளம் பற்றின வாக்கியங்களே மாதிரியாகும். இம்மாதிரியாகத் தாமும் புறச்சம் யத்தார் எல்லாரும் நிற்பதென்பார்களாயினும், ஆண்டவர் திருவுளம் பற்றின வாக்கியங்களின் மெய்யை அறிய ஆசை யோடுந் தெளிந்த உணர்வினோடும் ஆராய்ந்து பாராதே போனால், மெய்யான உள் அர்த்தத்தைக் கண்டு அறிவ தரிதே. அப்படியே அர்ச். இராயப்பர் எழுதின உ-ம் நிரு பத்து 3-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் தாமே எழுதின தாவது: ''சின்னப்பர் எழுதிவைத்ததில் கண்டுபிடிப்பதற் கரிய சிறிதுகளை வைத்தார். அதுகளை மற்றத் தேவ வாக்கி யங்களைப் போலத் தெளியாமல், களர்ந்த உணர்வினோர் தங் களுக்குக் கேடாக அர்த்தத்தைச் சொல்லிக் கெடுக்கிறார் கள் என்றார்.''
இதுவெல்லாம் இப்படியிருக்கையில், புறச்சமயத்தார் எல்லாருந் தேவ வாக்கியங்களுக்கு அர்த்தத்தைச் சொல்ல வேறொருவன் வார்த்தையைக் கேளாமல், அவனவன் தனக் குத்தோன்றின படி அர்த்தத்தைக் கொள்ளச் சொன்னார்கள். ஆகையால் வேதபாரகர் கூடிக் கல்வியின் துறையெல்லாங் கடந்து, நெடுநாளாய் ஆராய்ந்து நிச்சயித்துச் சொன்ன அர்த்தத்தை விட்டுச் சக்கிலியன் செருப்புகளைத் தைத்த போதும், வண்ணான் சீலையைத் தப்பினபோதும், குயவன் சக்கரத்தைச் சுழற்றினபோதும், சண்டாளன் நிறையக் கள்ளுண்ட போதும் இவர்களெல்லாரும் நினைத்த அர்த்தமே நல்லதென்று மெய்யாக அனுசரிக்கக் கட்டளையிட்டார்கள். இப்படியாகையில் புறச்சமயங்கள் நாடோறும் வேறுபட்டு ஆயிரமுகமாய் நிற்பது அதிசயமோ?
16. உரோமன் கத்தோலிக்குச் சாத்தியவேதத்தாரோவெனில் பிறந்த நாடும், பேசின சொல்லும், கற்ற நூலும் , நடந்த முறையும் வேறுவேறாகித் தாமுந் தம்முள் மற்றக்காரியங்களில் வேறானாலும், வேத முறைமையிற் சற்றும் வேறுபடாமல் ஒருமுகமாய் ஒரு நிலையாய் நிற்பதேதெ னில், நம்முடைய கர்த்தராகிய சேசுநாதர் திருச்சபைக் கெல்லாம் அர்ச். இராயப்பரைத்தொட்டு அர்ச். பாப்புக் களைத் தலைவராகக் கட்டளையிட்டக் காலத்துவரை முன் விசுவாசந் தளராமலும் மயங்காமலும் நிற்கும் என்றார். என்றமாத்திரத்தில், அர்ச். இராயப்பர் துவக்கி , விடாத துடர்போடு வந்த அர்ச். பாப்புக்கள் ஒவ்வொருவர் வேதத் திலேயும், தேவ வாக்கியங்களிலேயும் பிறந்த சந்தேகங்க ளைத் தப்பிதமின்றித் தீர்ப்பதற்கு உறுதியாகச் சேசுநாதர் தாமே துணையாய் நின்றார்.
இதனை மனதில் நிச்சயமாக எண்ணின நல்ல கிறீஸ்து வர்கள் எல்லாரும் வேத முறையிற் சந்தேகம் வந்தவிடத்து அர்ச். பாப்புதாமே ஸ்தாபித்தமையாலும் தாம் கூட்டின மேற்றிராணிமாரும் வேதபாரகரும் நெடிது ஆலோசனை செய்து ஸ்தாபித்தமையாலுஞ் சலஞ்சாதியாமல் மற்ற எவரும் ஒத்துக்கொண்டமையால் இந்நாள்வரைக்கும் ஒரு மெய்யான வேதத்தை அநுசரித்து வேறுபடாமல் நின்றார்கள்.
17. இதில் நன்றாய் யோசிக்கக்கடவது ஒன்றுண் டாம். அதாவது, ஆண்டவர் ஒன்றினைப்பற்றி வேண்டும், வேண்டாம் என்னவுமாட்டார். ஆம், அல்ல என்னவுமாட் டார். ஆகையால், இருநூறு வருஷத்தில் இருநூறு விப ரீத முகமாய்த் திரிந்து நிற்கும் புறச்சமயங்கள் எல்லாம், ஆண்டவரால் வராமல் பொய் விளைவிக்குங் காரணமாகிய பசாசினால் வந்ததென்று நிச்சயமாகும். உரோமன் திருச் சபையாரிடத்து இந்நாள் வரைக்கும் அற்ப விபரீதமாகி லும் இல்லாதபோது, அவர்கள் அநுசரிக்கிற வேதம் ஆண் டவரால் அருளிச்செய்யப்பட்ட வேதம் என்பதற்கு நியாய மாமே. புணர்வின்றி எல்லா நன்மையில் ஓர் உத்தம நன் மையாகி, சர்வேசுரன் அருளிச்செய்த வேதமும் ஒன்றாகி, விரிவாய்ப் பிரிந்து எழுபத்திரண்டு புஸ்தகங்களாக எழுதினதாயினும், பலரைக் கொண்டு எழுதுவித்ததாயி னும், அதில் தம்முள் விபரீதமுள்ள இரு மொழிகளைக் காண்பாரில்லை.
அவ்வண்ணமே உரோமன் கத்தோலிக்குத் திருச் சபை சர்வேசுரன் கட்டளையிட்ட முறைமையில் வழுவா மையினால் சூரியன் கதிர் படாத இடம் உண்டெனினும் திருச்சபை வழங்காத இடமே உலகமெங்கும் இல்லாதாயி னும், எக்காலத்தும், எவ்விடத்தும், எக்குலத்தும் ஒரு முகமாய் ஒரு நிலையாய் ஒரு நூலாய் விபரீதமின்றி மயக்க மின்றி எல்லாப் பாஷைக்கும் ஒரு பொருளாய், எல்லா வாய்க்கும் ஒரு மொழியாய், எல்லா நெஞ்சத்தும் ஒரு சுட ராய், எல்லா உயிருக்கும் ஒரு பலனாய் இந்நாள் வரைக்கும் நின்ற தொழிய, உலகமுடியுமளவும் வேறுபடாமல், அழிவு படாமல், நிலைகொண்டு எங்கும் வழங்குமாமே.
18. ஆகையால், தன் பத்தாவைப் பார்த்த கண்ணாற் பிறரைப் பார்க்க மாட்டாத கற்புடையாளைப்போல உரோ மன் திருச்சபை சேசுகிறீஸ்துவுக்கு ஒரே நெறியில் நிற்கும் கற்புடையாளாக வேதத்தில் புகழப்பட்டதாமே. பதிதர் சமயங்களோவெனில், நாளுக்குநாள் வேறாகி அவனவன் ஆசைக்களவாக விபரீதங்களைக் காட்டினதனாற் பொருளைப் பற்றி அன்பின மாறி வந்த யாவருக்கும் பிரியங் காட்டி, எவரையும் வஞ்சகமாகக் கெடுத்து, ஒரு காவலும், ஒரு நெறியும், ஒரு நட்பும், வெட்கமுமில்லாமல் இகழப்படும் விலைமாதராக அச்சமயங்கள் எல்லாம் வேதத்தில் நிந்திக் கப்பட்டனவென்று நிச்சயமாய் அறிவோம்.
ஆகையால், நல்ல அறிவுடையோர் அனைவரும் புறச் சமயங்களில் வேறே அபத்தங் காணாதாயினும், இந்த விபரீ தம் ஒன்றினைப் பற்றி அதுகளைத் தப்பிதமென்றும், பசாசி னால் வந்த மதங்களென்றுந் தாமே நிச்சயித்து, உயிரைக் கொல்லுங் கொடிய வஞ்சகப் பரத்தையரை நீக்கி உயிரைப் பேணுங் கற்பில் அசையாத குலஸ்திரீயை அணுகுவாரைப் போலப் புறச்சமயங்கள் எல்லாவற்றையும் வெறுத்து நிந்தித்தொழித்துக் கரை ஈடேற்றத்துக்குரிய ஒரே வழியா கிய உரோமன் கத்தோலிக்குத் திருச்சபையின் வேத மொன்றினை அநுசரிப்பதற்கு இதுவே நியாயமென்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.