13. இறைவன் நம்மைக் காப்பவர் எனறால் அர்த்தமென்ன?
நாம் ஒவ்வொருவருக்கும் புதியதோர் ஆன்மாவைத் தாய் வயிற்றில் வளரும் கருவோடு இணைத்து, உயிருள்ள மக்களாக உண்டாக்கின துமட்டுமன்று. இவ்வான்மா வும், உடலும் ஒவ்வொரு வினாடியும் சேர்ந்து இயங்கி வாழ் வதற்கு வேண்டிய உதவியையும் அளித்து வருகிறார் இந்த உதவியை இறைவன் நிறுத்தும்போது, இவை, ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து, உடல் சவமாகவும், ஆன்மா ஆவி உருவான உயிர்ப்பொருளாகவும் தனித்து நிற்கும். இந்நிலையே சாவு அல்லது மரணம் எனப்படும். எனவே, நாம் உயிர்வாழும் ஒவ்வொரு வினாடியும் இறைவனது அளவற்ற கருணையால் தான் என்பது தெளிவாகிறது. மேலும், ஆன்மா, உடல் ஆகிய இவை இரண்டும் சேர்ந் திருக்குமட்டும் அல்ல. அவை புலன்களின் சக்தியுடன் இயங்கி செயலாற்றுவதற்குரிய வசதிகள், உயிர், உடலின் கண் நிலைத்திருப்பதற்குத் தேவையான உணவு முதலிய வற்றையும் அளித்துப் பராமரித்து வருகிறார். எனவே, அவனன்றி ஓரணுவும் அசையாது' - என்பது முற்றிலும் பொருந்தும். இந்த வசதிகளில், ஏற்றத்தாழ்வு முதலிய வேறுபாடுகள் மிகவும் உண்டு. இவைகளும் இறைவனது திட்டத்தின் படியே. அவரது அனுமதிக்குட்பட்டு செயல் படுபவை. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது நமது ஒத்துழைப்பு மட்டுமே. இந்த ஒத்துழைப்பில் நமக்கு வழிகாட்ட அவரே சில கட்டளைகளைக் கொடுத்திருக்கின்றார்.
14. இந்த கட்டளையைக் கடவுள் மனிதனுக்கு எப்போது கொடுத்தார்?
(1) உலகத் துவக்க முதல் பாக்கள் தம் மனதிலேயே நல்லது கெட்டது எதுவென்று உணர்ந்து நடக்கும்படி செய்து வருகிறார் .
(2) தாமே நேர்முகமாகவோ, வேறு மக்கள் வழியாக வோ மக்களுக்குப் போதித்து வந்திருக்கிறார்.
(3) அவரால் குறிக்கப்பட்ட சில பெரியோர்களைக் கொண்டு எழுத்து மூலமாகவும் அறிவித்திருக்கிறார்
(4) வேதாகமம் என்னும் வரலாற்று நூற்றொகுதியில் குறித்துள்ளபடி, கடவுள் தமது திருக்குமாரனாகிய சேசுக் கிறிஸ்துவை மனித அவதாரம் எடுக்கவைத்து, மக்களுக்குப் போதிக்கும்படி செய்துள்ளார்.
(5) கிறிஸ்துவுக்குப் பிறகு அவருடைய பிரதிநிதிகள் வழியாகத் தெரிவிக்கிறார்.
15. நாம் கடவுளின் கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
(1) நாம் இவ்வுலக வாழ்வில் மன நிம்மதியும், அவரது ஆசீரை அடையவும்;
(2) மறுவாழ்வில் பேரின்ப சுகமடையவும்.
(3) நாம் அவருடைய உடமையாதலால், அவருக்கு கீழ்ப்படிதல் நமது கடமையாதலும் ;
(4) கீழ்ப்படியா விட்டால் இம்மையிலும், மறுமையிலும் அவரால் தண்டிக்கப்படுவோம் என்பதாலும், நாம் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
16. நாம் இந்தக் கடமையை எவ்வாறு நிறைவேற்றலாம்?
கடவுளை அறிந்து. சிநேகித்து. ஆராதித்து, கீழ்ப்படி தலாலும் இந்தக் கடமையை நிறைவேற்றலாம்.
17. கடவுளைப் பற்றி நாம் அறியவேண்டியதென்ன?
அவரைப்பற்றி அறிந்தவர்களோடு பழகுவதாலும், அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களைப் படித்தறிவ தாலும், நாம் படித்தவற்றைப்பற்றி தியானித்தலாலும் நமது அறிவை விசாலமடையச் செய்யலாம்.
19. கடவுளை அறிவது நமக்குக் கடமையாக இருப்பதேன்?
(1) உண்மையையும், நன்மைத்தனத்தையும் அறிவதே நமது புத்தியின் கதி; உன்னத உண்மையும், நன்மைத் தனமும் பொருந்தியவர் கடவுள் ஒருவரே ஆகையால் அவரை அறிவது அவசியம்.
(2) கடவுள், நம்மை உண்டாக்கிக்காப்பாற்றி, நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ள நமது எஜமான்; ஆகையால் நாமும் அவர் மீது அன்புடையவர்களாயிருப்பது நியாயம்; இதற்காக முதன் முதல் அவரை அறிவது அவசியம்.
(3) நாம் கடவுளின் சித்தப்படி நடக்க வேண்டியவர் கள் ஆகையால் அவர் சித்தம் என்ன வென்றரிய அவரை அறிய வேண்டும்.
(4) நமது பரிபூரணமாகிய கடைசி கதியை அடைவதற்கு அவரை அறிவது அவசியம்; ஏனெனில் அவரை அறிந்து, அவரைசிநேகிப்பதே நமது பூரணபாக்கியமாகும்.
20. அவரை ஏன் நேசிக்க வேண்டும் ?
நன்மையானதைத் தேடி, அதை நேசிப்பதே நமது மனதின் தொழில் ; கடவுள் சர்வ நன் மையிலும் சிறந்தவர். அவரே நன்மைத்தனம் என்றிருப்பதால் அவரை நேசிக்க வேண்டும்.
21. கடவுளை நாம் எப்படி நேசிக்கக்கூடும்?
அவரையும், அவருடைய இலட்சணங்களையும் அறிந்து, அவற்றைத் தியானித்து, அவர் தம்மிலே எவ்வளவு நன்மைத் தனமுளளவரென்றும், நம்மீது எவ்வளவு கருணையுள்ளவ ரென்றும் கண்டுணர்வதால், அவர் மட்டில் நமக்கு கால பாகவே சிநேகம் ஏற்படும்.
22. கடவுளை நாம் எவ்வளவு சிநேகிக்க வேண்டும்?
அவர் சகலத்திலும் உத்தமரான துபற்றி, மற்றெந்த பொருட்களை விட அதிகமாய் சிநேகிக்க வேண்டும்.
23. கடவுளைச் சிநேகிப்பதைவிட, மற்றப்பொருட்களை சிநேகிப்பது எளிதல்லவா?
ஆம். மற்றப் பொருட்கள் நமதருகே இருக்கின்றன. அவற்றை நாம் காணவும், தொடவும், அவை நமது அன்பை கவர்ந்து கொள்ளுகின்றன என்று நாம் உணரவும் கூடுமாதலால், அவற்றை நேசிப்பது மிகமிக எளிது என்ப தற்குச் சந்தேகமில்லை ஆனால், கடவுளை நாம் பார்க்கவும் முடியாது, தொடவும் முடியாது; ஆகையால் அவரைச் சிநேகிப்பது அவ்வளவு எளிதல்ல.
24. கடவுள் நமது அன்பைக் கவர்ந்து கொள்ளுகிறார் என்பதை நாம் உணராதிருக்க, மற்றப் பொருட்களை விட, அவரை அதிகமாய் சிநே கிப்பது முடியாத காரியமல்லவா?
இல்லை. நமது உணர்ச்சிகளால் அவரை சிநேகிக்க வேண்டுமென்பது கடமையல்ல; நமது புத்தியையும், மனதையும் கொண்டு, மற்றெந்தப் பொருட்களையும் விட அவரை அதிகமாய் சிநேகிக்க வேண்டும்; அதெப்படி யெனில் மற்றப் பொருட்களின் மட்டில் நமக்குள்ள சிநேகம் கெட்டது எனில் அதை விட்டுவிட வேண்டும்; ஒன்றில் கடவுளை அல்லது வேறு எதையாவது கைவிட வேண்டியிருந்தால், மற்யாவையும் விட்டுவிட்டுக் கடவுளையே நாம் கைக்கொள்ள வேண்டும்.