இறைவன் நம்மைப் படைத்தவர்

5. இறைவனுக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பு யாது?

ஒன்றுமில்லாமையில் இருந்து, இவ்வுலகத்தையும் அதில் வாழும் அனைத்தையும், காணப்படும் எல்லாவற்றை யும் படைத்தவர் இறைவனே. அதனால் அவர் அதன் சிருஷ்டிகர் ஆகிறார். இந்த உண்மையை வேதாகம சரித் திரம் பின்வருமாறு விளக்குகிறது.

சர்வேசுரன் பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்தார். அவர் அனைத்தையும் ஒரு க்ஷணத்திலே படைக்காமல், அவைகளை ஆறு நாட்களில் உண்டாக்கினார்.

பூமண்டலம் முழுதும் காரிருள் அடர்ந்து ஒன்றுமில்லா திருக்கையில், கடவுள் தமது திருவாய் மலர்ந்து, பிரகாசம் உண்டாகக்கடவது"- என்றார் எனவே பிரகாசம் உண் டானது. இது சர்வேசுரன் முதல் நாள் செய்த வேலை.

இரண்டாம் நாளில். கடவுள் வான மண்டலத்தை உண்டாக்கினார்; 

மூன்றாம் நாளில், நீர்ப்பரப்பை ஒன்றாகத் தொகுத்து, ''நிலம் காணப்படக்கடவது"- என்று சொல்ல, உலர்ந்த தரை தோன்றியது. அப்படித் தோன் றின நிலத்தைப் பூமி என்றும், நீர்த் தொகுதியை சமுத்திரம் என்றும் அழைத்தார். பின்பு பூமியின் மீது புல், பூண்டு, செடி, கொடி, மரம் முதலிய பற்பல தாவர வர்க்கங்களையும் உண்டு பண்ணினார்.

நான்காம் நாளில், வானத்தில் பிரகாசிக்கும் சூரிய, சந் திரனையும், நட்சத்திரங்களையும் படைத்தார். 

ஜந்தாம் நாளில் நீரில் வாழும் மீன் முதலிய ஜந்துக்களையும், ஆகா யத்தில் பறக்கும் பறவை இனங்களையும் உண்டாக்கினார்.

ஆறாம் நாளில் ஆடு, மாடு முதலிய நாற்கால் பிராணி களையும், ஊர்வன, நடப்பன, நெளிவன, தத்துவன, தவழ் வன முதலான சகல பிராணிகளையும் உண்டுபண்ணி கடைசியாக நமது ஆதி பிதாவையும் சிருஷ்டித்தார். அது எப்படியெனில்; கடவள் '' நமது சாயலாக மனிதனை உண் டாக்குவோம்" என்று சொல்லி, மண்ணால் மனித உருவை உண்டாக்கி, அதனில் தமது ஆவியைவிட்டு, அழியாத ஒரு ஆத்துமத்தையும் கொடுத்து. அவனுக்கு ஆதாம் என்று பெயரிட்டார்; அதாவது மண்ணால் உண்டாக்கப்பட்டவன் என்று அர்த்தமாகும் பின்பு சர்வேசுரன் தமது கைவேலை யைக்கண்டு சந்தோஷித்தார். அவர்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படி ஆசீர்வதித்தார்.

இத்தகைய நெருங்கிய தொடர்புதான் இறைவனுக்கும், உலகத்துக்குமுள்ள தொடர்பாகும்.

6. சிருஷ்டிப் பொருள்களை மனிதன் எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

உலகில் உள்ள சிருஷ்டிப் பொருள்கள் அனைத்தும் மனிதனுடைய நல்வாழ்வுக்காகவே இறைவனால் அவனுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளாகும். அவன் அப்பொருட் கள் இறைவனை அடைவதற்கு எவ்வளவு தூரம் உதவுமோ அந்த அளவில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இதில் 'எம்மட்டோ அம்மட்டுஎன்னும் மன நிறைவே அவனது குறிக்கோளாகும்

7. மனிதன் தனது ஐம்புலன்களாகிய சிருஷ்டிகளை எவ்விதம் உபயோகிக்க வேண்டும்? 

(a) கண் :- வெளியிடங்களில் நடந்து போகும் போது, வழியில் காணப்படும், இயற்கை எழிலைக் கண்டு கழிக்க இறைவனை நோக்கி எண்ணத்தை எழுப்பச் செய்ய வும், இனிய உருவங்களைப் பார்க்க, நல்ல எண்ணங்களை ஊட்டும் நூல்களைப் படிக்க, பிறரது துன்பம், தேவைகளை அறிந்து உதவ. தன் கடமையைச் செய்து முடிக்க வேண்டிய வற்றைப் பார்த்து செயலாற்றப் பயன்படுத்த வேண்டும். ஆனால் வெகுண்டு நோக்கவோ, சிற்றின்பக் காட்சிகளைக் காணவோ, அல்லது அத்தகைய நோக்கத்துடன் பிறரைப் பார்க்கவோ கண்வலையில் பிறரை வீழ்த்தவோ . விநோதப் பிரியத்தைக் கொடுக்கும் பொருள்களைக் கண்டு, மனதை அலைக்கழிக்கவோ, கட்புலனை உபயோகிக்கக் கூடாது.

(b) காது :- இறைவனது எழிலுறு படைப்புகளின் பற்பல இனிய ஓசைகளைக் கேட்டு மகிழ; பிறருடைய வார்த்தைகளைக் கேட்டு அளவளாவ; அவர்களுடைய குறை களை அநுதாபத்துடன் கேட்டு, தீர்க்க முடிந்தால் தீர்க்க, இறைவனது புகழையும், பெருமைகளையும் இன்பமாகக் கேட் கவும் செவிப்புலனை உபயோகப்படுத்த வேண்டும் அதற்கு மாறாக, ஆபாசப் பேச்சுக்களையும், புறணி, அவதூறு முதலிய தீய சொற்களையும், வீணான, தேவையற்ற செய்திகளை யும், ஒளிந்திருந்து ஓட்டுக்கேட்டலையும் பொய்யான வதந்தி களையும் கேட்கக்கூடாது.

(c) நாசி :- உடல் நலம் பேண சுவாசிக்கும் தொழில் புரிய, நறுமணத்தை நுகர, கெட்டுப்போன, அழுகின நாற்றங்களை விளைக்க நுகரும் புலனை உபயோகிக்க வேண் டும். ஆனால் சிற்றின்ப உணர்ச்சிகளைத் தூண்டும், மயக்க கிறுகிறுப்பை உண்டாக்கும் அளவுக்கு மீறிய வாசனைத் திரவியங்களை நுகராது தவிர்க்க வேண்டும்.

(d) வாய்:- உண்மை பேசவும், நற்புத்தி புகட்டவும் அறவுரை. அறிவுரைகள் வழங்கவும், தன்னைப்பற்றிய கடமையாகவுள்ள விஷயங்களை எடுத்துரைக்கவும் நல்ல காரியங்களை மக்கள் நடுவில் பரவும்படி செய்ய, இறைவனின் புகழைப்பாட நமது நாவை உபயோகிக்க வேண்டும். அதற்குமாறாக பொய். அவதூறு, ஆபாசப் பேச்சுகள், கடுஞ்சொல், துர்ப்புத்தி சொல்லப் பயன்படுத்தக்கூடாது. குரோதத்தினால் காறித்துப்பவும், கடித்துக் காயப்படுத் தவும், காம இச்சையுடன், தவறான வழியில் பிறரை முத்த மிடுவதற்கும் நமது வாயை உபயோகிக்கக் கூடாது.

(e) கைகள் :- தனக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்ள, பிறருக்கு உதவி செய்ய, கடவுளுக்கும், பெரியோ நக்கம் வணக்கம் செய்ய கைகளை உபயோகிக்க வேண்மம் அல்ை, தன்னையோ, பிறரையோ, அவசியமின்றித் தொட. சிற்றின்ப உணர்ச்சியூட்டும் சரசக்கிரிகைகள் செய்ய, பிறரை காயப்படுத்த, பிறர் நமது உதவியைத் தேடும் போது அவர்கட்கு கைகொடுத்து உதவாமல் இருந்து, பிறர் பொருளை அபகரிக்க நமது கரங்களைப் பயன்படுத்தக் கூடாது.

(f) கால்கள் :- அவசியமான இடங்களுக்கு நடந்து செல்ல, மக்கும், பிறருக்கும் உதவியான செயல்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், போகத்தகாத இடங்களுக்குப் போகவோ, ஆத்திரத்தில் பிறரை உதைக் கவோ பயன்படுத்தக் கூடாது.

(g) உற்பவ உறுப்புகள் :- நீங்கள் பலுகிப்பெருகி பூமியை நிரப்புங்கள் '- என்று இறைவன் அளித்த ஆசீர், இவ்வுலகை மக்கள் நிரம்பியதாக ஆக்க வேண்டும் என்று ஆதிபிதா மாதாவுக்குக் கொடுத்த கட்டளைக்கு ஒப்பாகும். இதைச் செயல்படுத்தும்போது பெற்றோர், இறைவனின் படைப்புத் தொழிலில் பங்கு பெறுகின்றனர். எனவே இறைவன் தனது படைக்கும் சக்தியை மனிதனுக்குப் பகிர்ந்து அளித்துள்ளார் என்பது வெள்ளிடைமலை. இச் செயல் புனிதமானது, உயர்ந்தது. தெய்வீகத் தொடர்பு உடையது. இதைச் செயல்படுத்தும் கருவிகளாக, ஆண், பெண் இருபாலரிடத்தும் உள்ளும் புறமுமாக சில உறுப்பு களை உருவாக்கியுள்ளார். இவை வளர்ச்சியடைந்து. தகுந்த காலத்தில் செயல்பட வேண்டும் என்பதே இறை வன் திருவுளமாகும் ' இறைவன் தனது படைப்புகளை ஆணும் பெண்ணுமாகவே படைத்தார்'' என்பது மறை நூல. மறைந்து நின்று செயலாற்றும் இறைவனின் தன்மை முதலியவற்றை எடுத்துரைக்கும் நூல் மறை நூல் எனப் பெயர்பெற்றது போல, தெய்வீகத் தொடர்புடைய படைப்புத் தொழிலுக்குச் சாதனமாக இருக்கும் இவ்வுறுப்பு கள் உடலின் " மறைவிடங்கள்" என அழைக்கப்படுகின் றன. இவை பிறர் மனத்தில் உள்ளக் கிளர்ச்சியை தூண்டி விட்டு அனாவசியமாகத் தத்தளிக்க வைக்காது ஆடை கொண்டு மூடப்பட்டுள்ளதாலும் அவ்வாறு அழைக்கப்பட லாம் என்பதும் புத்திக்கு ஏற்றதே. உடலின் கண் வெளிப் படையாகத் தோன்றும் உற்பவ உறுப்புகளின் வாயிலா கவே, உள்ளே அமைந்துள்ள கருப்பை, வித்துப்பை முதலி யவை தங்களது அலுவலைச் சரியாகச் செய்ய முடியும். எனவே இந்த வெளி உறுப்புகள் கருவாயில்' என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கு இறைவனால் வகுக்கப்பட்ட அலுவல் உண்டு. அவரது திட்டப்படி, இயற்கை ஒழுங்கு முறையில் இவை இயங்கி வருவதை அறிவியல் கலை நமக்கு அறிவுறுத்துகின்றது.

இந்த உறுப்புகளைச் செயல்படுத்தும் உரிமையை இல்லற வாழ்வை ஏற்றுக்கொண்டுள்ள அனைவரும் உபயோகிக்க எத்தகைய தவறுமில்லை. மண வாழ்வை ஏற்றபின்பே. இவ்வுறுப்புகளை முறைப்படி பயன்படுத்த வேண்டும், 

அது வரை, வயதுவந்த இளைஞரும், பெண்களும் தவறான முறையில் இவற்றை உபயோகிக்கும் உரிமையைச் செயல்படுத்தக் கூடாது. 

இது இயற்கைச் சட்டத்துடன், இறைவன் சட்டத்தையும் எதிர்ப்பதாகும் இப்படிச் செய்வதால் மனிதன் பலவிதங்களில் குற்றம் செய்தவன் ஆகிறான் - எப்படி யெனில் :

(1) இறைவனது சட்டத்துக்கு எதிராக, மனிதன் தனது சுயவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இவற்றைச் செயல்படச் செய்வானாகில், அவன் திருடுவதற் குச் சமமாகிறது. அதாவது. தனக்கு அனுமதிக்கப்படாத இன்பத்தை முறைதவறி, திருட்டுத்தனமாக அனுபவிக்கிறான். எடுத்துக்காட்டாக, தனது உறுப்புகளை காம இச்சையுடன் பார்த்து, அல்லது தொட்டு, மனதிலேயே சிற்றின்பத்தை அனுபவிப்பது.

(2) பிறருக்குள்ள உரிமையைப் பறிமுதல் செய்யலாம். (உ-ம்.) பிறனுடைய மனைவி, பிறரது கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து, இல்லற உறவை அனுபவித்துக்கொண்டு, உரிமை யுடையவர்களுக்குத் துரோகம் செய்வது.

(3) இறைவனின் உடமையை வீணாக்கலாம். (உ-ம்.) ஆண், பெண் உறவினால் ஏற்படும் கருவை அழித்து அவ ரது சிருஷ்டிப்பின் அலுவலுக்குக் கேடு விளைவிக்கலாம்.. எனவே, இந்த உறுப்புகளை, இறைவன் உண்டாக்கியது உடலின்பத்தை மட்டும் அனுபவித்துவிட்டு, அதன் விளைவை நீக்கி விடுவதற்கல்ல, என்பதைத் தெளிவாக உணரவேண்டும். மண வாழ்க்கையின் தலையாய நோக்கம் மக்கட்பேறு. இது பற்றியே திருவள்ளுவரும், "மங்கலம் என்ப வணை மாட்சி- மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு" என்று கூறிப்போந்தார். இறைவனது படைப்புத் தொழிலில் பங்கு பெற்று அவருடன் ஒத்துழைக்கும் இந்த புனித அலுவலைச் செய்வதில் பற்பலவித இடையூறுகளும் துன்பங்களும் ஏற்படுவது சகஜமே. எடுத்துக்காட்டாக, மக்கட் பெருக்கத்துக்கு நிலைக் களனாக அமைந்துள்ள குடும்ப வாழ்வை உருவாக்கும் முன்னும், குடும்பத்தின் பொறுப்பு உணர்ந்து, அதை நடத்திவரும் போதும் குழந்தை கருவில் உருவாகி வளரும் போதும், குழந்தை பிறக்கும் போதும், அதை வளர்த்து உருவாக்கும் வகையிலும் பற்பலகஷ்டங்கள் ஏற்படுவ துண்டு. இவற்றை முன்னிட்டு இந்த புனித அலுவலை நிறைவேற்ற மக்கள் தயங்கிப் பின்னிடலாம், இதை மாற்றி, அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், அவர்கள் இந்தக் கடமையை நிறைவேற்றும் போது இயற்கை இன் பத்தையும் இறைவன் இத்துடன் இணைத்திருக்கின்றார். இயல்பாகவே இன்பத்தை நாடும் மக்கள், அதன் விளைவாக வரும் துன்பத்தையும் பொருட்படுத்துவதில்லை. எனவே, மக்கட் பெருக்கம் நடந்துவருகிறது. ஆனால் மக்கட்பேற்றை விரும்பாதவர்கள் இன்பத்தை மட்டும் சுகிக்கும் உரிமை எடுத்துக்கொள்ளக் கூடாது.

8. மக்கட்பேற்றுக்காக இறைவன் அமைத்துள்ள திட்டம் யாது? 

பெண்ணுக்கு கடவுள் வகுத்திருக்கும் திட்டம் :

இல்லற வாழ்க்கையைத்தெரிந்து கொள்ளும் ஒரு பெண், மனுக்குல விருத்திக்குரிய இறைவன் திட்டத்தில் பங்கு கொள்ளும்படி, பெண்ணின் இயல்பில் எத்தகைய ஆசைகளையும், உடல் இயக்கங்களையும், கடவுள் பொருத்தியிருக் கிறார் என்று ஊன்றி பார்க்கவேண்டும். கருவாகி, சந்தை யாகக்கூடிய நுண் அணு ஒன்று, (ஏறக்குறைய) மாதமொரு முறை தயாராகும் அதிசயத்திட்டம் தன்னுடலில் கடவுளால் அமைக்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு பெண்ணும் உணர்கிறாள் இந்த நுண் அணு கருவாவதற்கு. எதிர் பாலாரிடம் கடவுள் அமைத்துள்ள மற்றொரு நுண் அணுவுடன் அது சேர்வது அவசியம். இவ்விரு நுண் அணுக்களும், இணைந்து ஒன்றாகி, கடவுளால் நேரடியாகப் படைக்கப்படும் ஆன்மாவிடமிருந்து உயிர் பெரும்போது தான் புது மனிதன் உருவாகிறான். பெண்ணுடலில் உரு வாகும் அந்த நுண் அணுக்கள். எதிர்பாலாரிடம் கடவுள் அமைத்துள்ள நுண் அணுவுடன் ஒன்றுசேர்ந்து மேற் கூறியபடி உயிர்பெறாவிடில், அவை மாதமொரு முறை வேறு அழிவுப் பொருள்களுடன் சேர்ந்து இயற்கையாகவே வெளியேற்றப்படுகின்றன. இதையே மாதவிடாய் என் கின்ற னர்.

ஆனால் தங்கள் உடலில் இடைவிடாது நிகழும் ஓர் தொடர் இயக்கத்தின் வெளிப்படையான அறிகுறி மட்டுமே மாதவிடாய் என்பதை அநேகப்பெண்கள் உணர்வதில்லை. கடவுளின் அளவில்லா ஞானத்தைக்காண்பிக்கும் அதிசயத் துக்குரிய ஒரு சுழல் நிகழ்ச்சி (Cycle) இது. ஓரு சுழல் முடிந்ததும் மறு சுழல் உடனடியாக ஆரம்பமாகிறது. திரும்பத் திரும்ப நடைபெறும் சுழல் நிகழ்ச்சி இது.

இந்த சுழல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகையில், கடவுளின் திட்டப்படி இயற்கையாகவே, பெண்ணின் இரத்த ஓட்டத்திலும், நரம்புத் தொகுதியிலும் ஹார்மோன்கள்'' என்னும் ஒருவித அதிசயசுரப்பிகளைப் பாய்ச்சுகிறது. இவை மேற்குறிப்பிட்ட சுழல் இயக்கத்துக்கு உதவியாக இருப்பதுடன், புது மனிதன் உருவாவதற்கு தயாராகும் அணுக்கள் எதிர்பாலாரிடம் அமைக்கப்பட்டிருக் கும் அணுக்களுடன் ஒன்று சேர்வதற்கு அவசியமான செயல்களைத் தூண்டும் ஆசைகளையும், உணர்ச்சிகளையும் அவளிடம் எழுப்புகின்றன. அந்த சுரப்பிகளில் சில எதிர் பாலாரோடு உடல் உறவுகொள்வதற்குப் பெண் களைத் தூண்டுகின்றன; மற்றவை தாய்மைக்குரிய அலுவல்களுக்கு அவளைப் பக்குவப்படுத்துகின்றன. உடல் உறவுக்குத் தூண்டும் சுரப்பிகள், மாதச் சக்கரத்தின் ( Monthly Cycle) முற்பகுதியில், முக்கியமாக உள் உறுப்புகளின் இயக்கங்கள், கரு ஆரம்ப அணுக்களை முற்றிலும் தயாரித்துத் தரும். அதன் மைய நாட்களில், மிகவேகமாக வேலை செய்கின்றன எனினும் அவைகள் மாதச் சக்கரத்தின் எல்லா நாட்களிலுமே, சில சமயம் அதன் இறுதி நாட்களில் (மாதவிடாய்க்கு முந்தின நாட்களில் கூட செயலாற்றுகின்றன.

மாதச் சக்கரமும், மேற்கூறிய சுரப்பிகளும் திட்டமான விதிகளுக்குட்பட்டு இயங்குவதிலிருந்து தமது தலைசிறந்த படைப்பாம் பெண்ணியல்புக்கென, கடவுள் கொண்டுள்ள கருத்து என்னவென்று விளங்குகிறது.

ஆண்மகனைப் பொறுத்தமட்டில் கவனிக்கத்தக்கது: பருவமடைந்த இளைஞரின், உடலின் உள் இயக்கங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன வலிமை வாய்ந்த உற்பத்தி சக்திகளையும், அவைகளைச் சார்ந்த நாட்டங்களையும், உணர்ச்சிகளையும் சமயா சமயம் உணர் வது அம்மனிதனுக்கும் சகஜமே. தூக்கத்தில்கூட, உடலின் இவ்வியக்கங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன; ஆகவே மனத்திரையில் கனவுக் காட்சிகள். உயிர்க்களை யுடன் தோன்றி மன உணர்ச்சிகளையும், முக்கியமாக இளம் வயதினரில் புலன் எழுச்சிகளையும்கூட தோற்றுவிக்கலாம். இவ்வனுபவங்கள் ஏற்படுவது இயற்கையே; இதில் பாவம் ஒன்றுமில்லை.

மேலும், இத்தகைய உணர்ச்சிகளினால் உற்பவ உறுப் பின் வழியாக உயிரணுத் திரவம் வெளிப்படலாம் இதனால் உடல் சிறிது அசுத்தப்படலாமே தவிர, ஆன்மா கறைபடுகிறதாகச் சொல்ல முடியாது. உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை முதலிய கழிவுப் பொருள்களைப்போல இதுவும் ஒரு கழிவே தவிர வேறு ஒன்றுமில்லை. சில சமயங்களில் விழிப்பாயிருக்கும்போதுகூட இக்கழிவு ஏற்படலாம். அச் சமயங்களில், உடல் இன்ப உணர்ச்சிகொள்வதுபோல் மனதில் தோன்றலாம். இதுவும் பாவமல்ல. ஆனால் இவ் வின்பத்தைச் சுகிக்க வேண்டும் என்னும் தீய எண்ணத் துடன் இக்கழிவை வருவிக்கிறவன் குற்றம் செய்பவன் ஆகி றான். ஏனெனில், இறைவன் திட்டத்துக்கு எதிரான வழி யில் உயிரணுக்களைச் சேதப்படுத்துகிறான். மக்கட்பேற்றை விரும்புவர்களுக்கே இந்தச் செயலைச் செய்ய உரிமையுண்டு. எனவே இக்கழிவை உண்டு பண்ணக்கூடிய பல உணர்ச்சி களையும், அவை மனதில் எழுப்பும் தீய எண்ணங்களையும் தள்ளிவிடாது. நீண்ட நேரம் ரசித்துக்கொண்டிருப்பது குற்றமாகும். அன்றியும் பல உணர்ச்சிகளால் உந்தப் பட்டு, தன்னுடைய அல்லது பிறருடைய உற்பவ உறுப்பு களையோ அல்லது அதனுடன் தொடர்புள்ள நெருக்கமான அங்கங்களையோ, சிற்றின்ப நோக்குடன் பார்ப்பதும், தொடுவதும், அதன் விளைவாக இக்கழிவை வருவிப்பது குற்றமேயாகும்.

9. மக்கட்பேற்றுக்கு ஏதுவாக இறைவன் தம்பதிகளுக்கு இடையே ஏற்படுத்தியுள்ள உறவு யாது?

''ஆதியிலே மனிதனைப் படைத்தவர். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அதனிமித்தம் ஒருவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டு, தன் மனைவி யுடனே சார்ந்து, இருவரும் ஒரே மாம்சமாய் இருக்கக்கட வார்கள். ஆகையால் அவர்கள் இப்போது இருவராயிரா மல், ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள். இதனால் சர்வேசுரன் இணைத்ததை மனிதன் பிரிக்கா திருப்பானாக. என்னும் கிறிஸ்துவின் மொழிகளை ஊன்றிப் பார்த்தால், தம்பதிகள் ஒருவர் ஒருவரிடம் தங்களைப் பூரணமாக ஒப்படைக்கும் அர்ப்பண வாழ்வு விளங்கும். இதனால் அவர்களுக்குள் இன்பமான பேச்சுரிமையும், தொட்டுப் பழகும் நெருங்கிய உறவும் இருப்பதற்கு எத்தகைய தடையுமில்லை. இத் தகைய செயல்களில் அவர்கள் தம்மை மறந்து ஈடுபடுங்கால் தம்மைச் சுற்றியுள்ள சிறியோர், பெரியோர்களுக்கு எவ்வித மான இடறலும் ஏற்படாத வண்ணம் கவனிக்க வேண்டும். திருமணத்தால் ஏற்படும் இல்லற உரிமையை எந்த அளவி லும் என்றைக்கும் எந்நேரத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு எச்சரிக்கை! இல்லற உரிமையால் ஏற்படக் கூடிய கருதரித்தலைத் தடுக்கும் நிச்சயமான முறைகளை மட் டும் கையாளக்கூடாது.

10. கரு தரிக்காமல் இருக்கக் கையாளும் முறைகள் யாவை?

மணவாழ்வின் முதன்மையும், முக்கியமானதும் ஆகிய நோக்கம் மக்கட்பேறாகும். இதற்கு மாறாக. 

(1) உயிரணுக்களை உற்பத்தியாக்கும் சக்தியை அழிக்க அறுவை முறை முதலியவைகளை உபயோகிப்பது.

(2) ஆணின் உயிர் அணுக்கள், பெண்ணின் கருப்பையில் ஒன்று சேர்ந்துவிடாதபடி பலவித சூழ்ச்சி களால் தடுப்பது. உதாரணமாக, கரு தரித்தற்கென கொடுக்கப்பட்ட உயிர் அணுக்களை வீணாக்குதல்.

(3) கரு தரித்திருக்கலாம் என்று நினைத்தவுடனேயே, மருந்துகளைக் கொண்டு உயிர் அணுக்களை அழித்து, அல்லது அப்படியே வெளியாக்குவது.

(4) கருதரித்த சில நாள், வாரம், மாதங்களுக்குப்பின் வலுவந்தமாக குறை மாதத்தில் வெளியாக்கி அழிப்பது. இது பெரிய பாதகமாகும். ஏனெனில், கருவென உருவான உடனே. அதில் கடவுள் ஆன்மாவை இணைத்து வைக் கிறார். இந்த ஆன்மா அவ்வுடலில் வளர்ந்து, தெய்வப் பணியில் ஈடுபட முடியாது பிரிக்கப்படுகிறது. அதனால் நித்தியத்துக்கும் கடவுளைக் காணாது துன்புறும் அவதியில் அகப்பட்டுத் தத்தளிக்கிறது. எவ்வளவு பொருத்தமான காரணங்களைக் காட்டி உலகம் கர்ப்பத்தடையை ஆதரித் தாலும், இது கொலைபாதகம் என்பதற்குச் சந்தேகமில்லை. தலைமுறை தலைமுறையாக குடும்ப வாழ்வை பாதிக்கக்கூடிய கொலை என்பது உண்மை.

11. கருத்தடைக்கு , அதை ஆதரிப்போர் காட்டும் காரணங்கள் யாவை?

கருத்தடை நமது நாட்டில், அரசாங்க ஆதரவுபெற்று, பல மருத்துவ நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரு கிறது என்பது யாவரும் அறிந்த விஷயமாகும். அரசினர் சாட்டும் ஆதாரங்களும், அவைகளுக்குரிய மறுப்புகளையும் கற்று பார்ப்போம்.

"நாளுக்கு நாள் பெருகும் ஜனத்தொகையைக் கர்ப்பத் தடையால் கட்டுப்படுத்தினாலொழிய ; உணவு நெருக்கடியை ஒழிக்க வழியில்லை. எனவே, இந்தத் திட்டம் அவசியம் ' - என்பது நமது இந்திய அரசினர் கூறும் முதல் நிபந்தனை.

மறுப்பு :

நமது வசமுள்ள சக்திகளைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை வேண்டிய அளவுக்கு உற்பத்தி செய்யாமல், சோம்பி நின்று, '' மக்கள் அதிகம், உணவு போதாது; கர்ப்பத்தடை மூலம் மக்கட்பெருக்கைக் குறைக்க வேண்டும்"என்று பிதற்றுவது கையாலாகாத தன்மையன்றி வேறல்ல. உணவுத்தட்டுப்பாடு ஒரு நாட்டுப் பிரச்சனை மட்டுமல்ல. உலகப் பிரச்சனை நாடுகள் ஒன்றோடொன்று ஒன்றித்து, உணவு அதிகமுடைய நாடுகள் இல்லாத நாடுகளுக்குக் கொடுத்துதவி உணவுத்தொல்லைகளைத் தொலைக்க வேண்டும்.

இத்தகைய வழிவகைகளைத் உபயோகித்து எவ்விதத் திலும் உணவு நெருக்கடியைப் போக்க இயலாது. மக்கட் பெருக்கை தடுத்துதான் ஆகவேண்டும் என்றே வைத்துக் கொள்வோம்; அப்போது முதலாய், கர்ப்பத்தடையைக் கையாளக் கூடவே கூடாது. கர்ப்பத்தடைக்குப் பதிலாகப் புலனடக்கத்தை (Self Control) காந்தியடிகளைப் பின்பற்றி அரசினர் ஆதரிக்கட்டும் ; பிரச்சாரம் செய்யட்டும் ; குடி மக்கள் கடைப்பிடிக்கட்டும்; அதாவது சதிபதிகள் தங்கள் இல்லற உறவிலிருந்து சற்று விலகி நிற்கட்டும். ஜனத் தொகை குறைய வேண்டுமானால், மக்கட்பேறு குறைய வேண்டும். மக்கட்பேறு குறையவேண்டுமானால், சதிபதிகள், மக்கட் பேற்றுக்கான செயலில் அடிக்கடி ஈடுபடாமல், தங்களைச் சற்றுக் கட்டுப்படுத்திக்கொள்ளட்டும். தங்கள் சரீர இச்சையைச் சற்று அடக்கி மட்டுப்படுத்தட்டும். இவ் விதம் செய்வதில் தவறு எதுவுமில்லை.மேலும், ''மரம் வைத்தவன் தண்ணீ ர் ஊற்றாமல் போகான் ;" "கருப்பைக்குள் முட்டைக்கும், கல்லினுள் தேரைக்கும். விருப்புற்று அமுதளிக்கும் மெய்யன்"-என்பது போன்ற நம் நாட்டுப் பழமொழிகளை சிந்திக்குங்கால், ஆன்மீக வாழ்வில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த நம் முன்னோர் இறைவனது பராமரிப்பில் எவ்வளவு நம்பிக்கை யு உறுதியும் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகும். ஆதியில் மனிதனை உண்டாக்கிய கடவுள் அவன். தங்கி வாழ் தற் குரிய இடம், உணவு முதலிய வசதிகளை அமைத் துக் கொடுத்தார். அவர்கள் பெருகிப் பலுகிய போது; அவைகளுக்குரிய உணவுவகைகளை, அவர்களுடைய ஒத்துழைப்பினால் விளைவின் வழியாகப் பெருக்கினார் . அ மூலம் அவர்கள் இவ்வுலகில் வாழ, வழி வகுத்துக் கொத்துப் பாதுகாத்து வருகிறார் அவருடைய இந்தப் பராமரிப்பு என்றாவது ஒரு நாள் திடீரென்று நின்றுவிடும் என்று நாம் நினைப்போமாகில், அஃது அவரை அவமானப் படுத்தி தூஷிப்பதாகும். எனவே, கடவுளின் மீது திட நம்பிக்கை வைத்து. நமது கடமைகளைச் சரிவர செய்து வரவேண்டுமே தவிர, அவரது திட்டத்துக்கு எதிராக எத்தகைய வழிவகைகளையும் கையாளக்கூடாது.

(2) ஏழ்மையை ஒழிக்க வேறு வழியில்லை; மக்கட் பெருக்கம் அதிகமாகும் காரணத்தால் பல குடும்பங்கள் தரித்திரத்தில் அமிழ்ந்திக் கிடக்க நேரிடுகின்றது ; எனவே, குழந்தைகள் வேண்டாம்; அல்லது ஒன்றிரண்டு போதும். அதிகக் குழந்தைகள் வேண்டாம். கர்ப்பத்தடையைக் கையாளுங்கள்'' என்று பறைசாற்றுகின்றனர். 

மறுப்பு :

இந்த ஆட்சேபனை சாரமற்றது. ஏழ்மையை ஒழிக்க வழி சமூக சீர்திருத்தமே தவிர கர்ப்பத்தடை அல்ல. பல குடும்பங்கள் ஏழ்மையில் வருந்துவதற்கு காரணம் அவற் மின் பிள்ளைப் பேறு அல்ல; நாட்டின் செல்வம் பெரும் பாலும், ஒரு சில சுயநலவாதிகளின் கையில் சிக்கி இருப்ப தேயாகும். இந்த சீர்கேட்டைச் செம்மை செய்வது அரசாங் கத்தாரின் கடமை ; அவர்களுடன் ஒத்துழைப்பது சமுதா யத்தின் உச்ச நிலையில் இருப்போரது கடமை.

பிள்ளைகள் பலரால் குடும்பத்தின் ஏழ்மை நிலை அதி கரிக்கும் என்று இல்லறம் நடத்துவோர் அஞ்சத்தேவை யில்லை. பிள்ளைப் பேற்றை அளிக்கும் இறைவன் அவர்களை வளர்க்க வழிகாட்டுவான். மரம் நட்டவனுக்கு தண்ணீர் ஊற்றத்தெரியும். அதனால் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, பெற்றோர் சோம்பித்திரியலாம் என்பதல்ல. தெய்வ பரா மரிப்பில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அத்துடன் பெற்ற பிள்ளைகளை பேணி வளர்ப்பது தங்கள் மேல் சுமந்த பெருங்கடமை என்பதை அவர்கள் அறிந்து, கடமை உணர்ச்சியால் தூண்டப்பட்டு, உழைப்பைப் பெருக்கி, ஊதியத்தை அதிகமாக்க வேண்டும் ; சிக்கன முறைகளைக் கையாள வேண்டும். பாடின்றி பலி தமில்லை. ஆதலால், பிள்ளைகளால் பெருமகிழ்ச்சி அடையும் பெற்றோர், சில கஷ்ட நஷ்டங்களை மேற்கொள்ளத்தான் வேண்டும். இவ்வாறு தாங்கள் செய்யவேண்டியதை-தங்களால் ஆனதைச் செய்வோருக்கு, இறைவன் மனமுவந்து உதவி புரிவார் நல்வழி காட்டுவார் , துன்பதுயரங்களில் துணை நிற்பார். கஷ்ட நஷ்டங்கள் வரும் போது கைதூக்கி விடுவார்.

(3) 'தாயின் உடல் நலத்தைக்காக்க வேறுவழியில்லை பல குழந்தைகளைப் பெறும் 'தாயின் உடல் நலம்' குறை கிறது: ஆயுட்காலமும் மட்டுப்படுகின்றது; தேக பலமும் குறைகின்றது. ஆகவே, தாயின் சுகத்தையும், பலத்தையும், நீடிய ஆயுளையும் காக்க, கர்ப்பத்தடைப்பிரயோகம் அவசியம்.'' 

மறுப்பு:

" பிள்ளைகளைப் பெறுவதால் தாயின் உடல் பலம் குலை கிறது. ஆயுள் குறைகிறது!"- இது உண்மையல்ல. இங்கி லாந்தில் சிசு பரிபாலன இலாக்கா நடத்திய சோதனை, மேற் கண்ட கூற்றைப் பொய்யாக்கிவிட்டது. 500 குடும்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அவற்றுள் ஐந்திற்கு அதிகமான பிள்ளைகளுடைய குடும்பங்கள் 350; ஐந்தற்கு குறைவான பிள்ளைகளுடைய குடும்பங்கள் 150 அந்த 350 குடும்பங் களின் தாய்மாரும், இந்த 150 குடும்பங்களின் தாய்மாரை விட, சற்று மேலான உடல் நலம் படைத்தவர்களாக இருந் தனர். அவ்வாறே அமெரிக்காவில் நடந்த ஓர் ஆராய்ச்சி யில் இருந்து; ஒரு குழந்தையை மட்டும் ஈன்றெடுத்த 45 தாய்மார் சராசரி 68 வயதுவரை வாழ்ந்ததாகவும், ஒன்பது, பத்து குழந்தைகளைப் பெற்ற 43 தாய்மார்கள் சராசரி 76 வயதுவரை வாழ்ந்ததாகவும் தெரியவருகிறது. ஆகவே, பிள்ளைப்பேற்றால், பெற்றவளின் சுகமும், ஆயுளும் குறை கின்றன என்பது அபத்தம். அதற்கு மாறாக, மக்கட் பேற்றால் தாயின் உடலில் இருக்கும் துர் நீர் வெளிப்படு கின்றது. உடல் நலமும் நீடிய ஆயுளும் கிட்டுகின்றன. பல குழந்தைகளைப் பெற்ற ஒரு தாய், வியாதியாய் விழ நேர்ந் தால், வியாதிக்குக் காரணம் பிரசவம் அல்ல ; உணவு. உடை, சுவாசம். சூழ்நிலை முதலியவற்றிலுள்ள கோளாறு களேயாகும்.

'பிள்ளைப்பேற்றால் தாயின் பலம் குறைகிறது" இதில் சிறிது உண்மையிருக்கிறது. காமவெறிகொண்டு. சிலர் தங்கள் மனைவியரை இடைவிடாப் பிரசவத்தால் நலிவுறச் செய்கின்றனர். நலிவு அதிகம் ஏற்படுவது பிரசவத்தால் அல்ல - இடை விடாமல், அடிக்கடி நேரும் பிரசவத்தால் என்பதே உண்மை . ஆகவே, மனைவியரின் உடல் நலத்தைக் காக்க கணவன்மார் தங்கள் சரீர இச்சையைக் கட்டுப்படுத்த வேண்டும். மனிதப்பண்புடன் நடந்துகொள்ளவேண்டும். சாதாரணமாய் இரு பிரசவங்களுக்கிடையே குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இருப்பதுதான் நல்லது இதைச் சதிபதிகள் அனுசரித்து ஒழுகவேண்டும். அதற்காக கர்ப்பத் தடையைக் கையாளுதல் கூடாது. புலனடக்கம் வேண்டும். மேலும், எந்தப் பிரசவத்திலும், தாய்க்கு சிறிது நலிவு ஏற்பட்டே தீரும். அதைப் போக்கிக் கொள்ளத் தாய்மார் தகுந்த சவரட்சனை பெறுதல் அவசியம்.

மேலும், குழந்தைப்பேறு அளிப்பவர் கடவுள். அவர் பழிவாங்கும் கொடிய எஜமான் அல்ல. ஒருவரால் தாங்க முடியாத் துன்பத்தை அனுப்பி அவர்கள் தத்தளிப்பதைக் கண்டு ஆனந்தம் அடைபவரும் அல்ல. குழந்தைப்பேற்றை அளிப்பதும், இல்லாமல் செய்வதும் அவரது சித்தமாகும். இல்லற உரிமையை உபயோகிப்பதால், அது எப்போதும் குழந்தைகள் உற்பத்தியாகுமாறு செய்வதில்லை. இந்த உற்பவவிஷயம் மனிதமுயற்சியால் மட்டும் உருவாவதில்லை. கடவுளின் அளவற்ற ஞானமும், வல்லமையும் இல்லா விட்டால் குழந்தைப்பேறு கிடையாது. மனித முயற்சி மட்டுமே இதற்குப் போதுமென்றால், குழந்தைகள் வேண்டு மென்று தீர்த்த யாத்திரை போவதும், வரம் வேண்டி கோவில்களில் பாடுகிடப்பதும் தேவையில்லையே ! எனவே, இறைவன் மீது உறுதியான நம்பிக்கையுடன் அவாது திட்டப்படி நடப்பவர்கள் எத்தகைய ஏமாற்றமும் அடைய மாட்டார்கள்.

12. குழந்தைகள் வேண்டாமென்று நினைப்பதேகுற்றமா? 

(1) குழந்தைப் பேற்றின் அடிப்படைச் செயலான ஆண் பெண் உறவை மட்டும் அறவே ஒதுக்கி, கடவுள் திட்டத்துக்கு முரண் இல்லாது இன்புற்று வாழ்ந்த புனிதர்கள் இருந்திருக்கிறார்கள் இன்றும் இருக்கலாம். இவர்கள், இறைவனால் அளிக்கப்பட்டுள்ள உயிரணுக்களை சேதமாக்குதல் இல்லை. ஆதலால், இத்தகைய வாழ்வு நடத்துதல் குற்றமில்லை.

(2) இவர்கள் இல்லற வாழ்வு முழுமையும் இல்லா விடினும் சமயாசமயத்தில் இந்த தன்னடக்கத்தை அனுசரிப் பது ஓரளவுக்கு குடும்பத்தின நல்வாழ்வை வளர்க்கச் செய் யும் நற்பழக்கமாகும். இப்பழக்கத்தை அநேகர் கையாள முடியும். தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்கள், அவர்கள் இப்பழக்கத்தை அனுசரிக்க கட்டாயப்படுத்தலாம். எடுத் துக்காட்டாக தம்பதிகள் நோயுற்று இருக்கும் காலங்களி லும், தொழில், அலுவல், படிப்பு முதலிய காரணத்தை முன் னிட்டும் அவர்கள் ஒருவர் ஒருவரைவிட்டுப் பிரிந்து, தனி வாழ்க்கை நடத்தி, கற்புநெறி தவறாது இருத்தலும் உண்டு.

(3) விஞ்ஞானிகள் கூறும் விதிகளை அனுசரித்து (Safe Period) எனப்படும் உற்ப சக்தியற்ற காலங்களில் சதிபதிகள் இல்லற உறவுகொண்டு இன்பம் நுகரலாம். இந்தக் காலத்தின் வரையறையை, தகுந்த மருத்துவரின் உதவியைக்கொண்டு கணித்துக்கொள்ளலாம். இவ்வாறு இல்லற உரிமையால் அனுபவிக்கும் இன்பத்தை இறைவன் திட்டத்துக்கு எதிர்ப்பில்லாமல் சுகிக்க எத்தகைய தடையும் இல்லை .