குணபான்மை : அதன் பொருள் அதன் மதிப்பு

1. குணம் என்றால் என்ன?

வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில், சூழ்நிலைக்கேற்றபடி உள்ளத் தூண்டுதலை ஒட்டி நடந்துகொள்வது குணம். 

2. குணபான்மை என்பது யாது?

எந்த வித சூழ்நிலையாலும் அலைக்கழிக்கப்படாது. நெறிப்படி இயங்கச் செய்யும் முழு ஆளுகையினால் பயின்ற கூறுகளின் தொகுதியே குணபான்மை.

3. குணபான்மை உள்ளவன் யார்?

தான் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் ஏதேனும் ஒரு கொள்கையின் அடிப்படையில் செய்து வருகிறவனே குண பான்மை உள்ளவன் எனப்படுவான்

4. கொள்கைகள், சான்றுகள் என்பன யாவை?

நமது வாழ்க்கையின் நடைமுறை எப்போதும் சீராக அமையும்படி சில பொதுக்குறிப்புகளை உள்ளத்தில் ஆழ்ந்து பதியும்படி அமைத்துக்கொண்டு அவ்வண்ணமே நடந்த வருவது. இவ்விதம் நமது மனதில் ஊன்றியிருக்கும் குறிப்புகளே கொள்கைகள், சான்றுகள் எனப்படும்.

கொள்கைகள் மனதில் உறுதியாக வேரூன்றியிருக்க வேண்டும். அப்படி இருந்தாலதான் அவற்றை நன்றாய் கண்டுபிடிக்கவும் நமக்குத் தேவையானபோதெல்லாம். அவற்றை எளிதாய் நினைவுபடுத்திக்கொள்ளவும் முடியும், மேலும் அவற்றில் கவனம் செலுத்தி அதன்படியே நடந்து வர மனதைப் பயிற்சிக்க வேண்டும்.

5. இதனால் விளையும் பயன் யாது?

இதனால் குணபான்மை உள்ளவன் தனது செயல் ஒவ் வொன்றிலும் உறுதியாகவும், சீராகவும் இருப்பான்; அவனது வாழ்க்கை ஒழுங்காகவும், முறை தவறாமலும் இருக் கும். 

6. குணபான்மை இல்லாவிட்டால் என்ன?

குணபான்மையில்லாத மனிதனுக்கு எவ்விதமான கொள்கைகளும், சான்றுகளுமில்லை. அவற்றின் பயிற்சியோ பழக்கமோ அவனுக்கு இருக்காது. சமயத்துக்குத் தகுந்தது போல் மாறிமாறி நடப்பான் ஒரு சமயம் ஒருவிதமாகவும். மறுசமயம் வேறுவிதமாகவும் நிலையற்றவிதமாக நடந்து கொள்வான். அவனது வாழ்க்கை ஒழுங்கற்றதாகவும், நிலைதவறியதாகவும் இருக்கும்.