தேவ ஊழியத்தில் அசட்டைத்தனம்

1. தேவ ஊழியத்தில் அசட்டைத்தனம் என்பது என்ன?

(1) சர்வேசுரனுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ள மகிமையையும், ஆராதனை முயற்சிகளையும் செய்யாமல் விடுவதும்,

(2) திருச்சபையின் போதனைகளைச் சொந்த தப்பிதத்தால் அறியாதிருப்பதும்,

(3) தேவ விஷயத்தில் கவலையில்லாதிருந்து, அதன் அதிமுக்கிய கடமைகளை முதலாய் நிறைவேற்றுவதில் அசமந்தமாயிருப்பதும் தேவ ஊழியத்தில் அசட்டைத்தனமாகும்.


2. தேவ ஊழியத்தில் அசட்டைத்தனமாயிருக்கிறவர்கள் யார்? 

(1) வழக்கமாய் சர்வேசுரனை நினைக்காமல் நடக்கிறவர்களும், 

(2)  நெடுங்காலம் செபிக்காமலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சை காணாமலும் இருக்கிறவர்களும், 

(3) வாடிக்கையாய் பக்தி கவனமில்லாமல் செபிப்பவர்களும்,

(4) கோவிலில் பேசி, விளையாடி, சிரித்துக்கொண்டு தக்க மரியாதையில்லாமல் இருக்கிறவர்களும், 

(5) ஞானோபதேசம் படிக்க மனதில்லாதவர்களும்,

(6) குருக்களைக் குறை சொல்வோர் முதலானவர்களுமாம்.


3. தேவ ஊழியத்தில் அசட்டைத்தனமானது எப்படி முதல் கற்பனைக்கு விரோதமான பாவமாயிருக்கிறது?

கடமையாய் சர்வேசுரனுக்குச் செலுத்த வேண்டிய மகிமையையும், ஆராதனை முயற்சிகளையும் செய்யாமல் விடுவது, அவருடைய உண்மைக்கும், ஞானத்துக்கும், மகிமைக்கும் நிந்தையா யிருக்கிறபடியால்தான்.