தேவநற்கருணையை நிஸ்டுரமாய் குத்தின யூதன் வீட்டில் நடந்த புதுமை!

பாரீஸ் பட்டணத்திலிருந்த ஒரு கிறிஸ்தவ பெண் தனது பட்டுச்சேலையை ஒரு யூதனிடத்தில் அடகு வைத்துக் கொஞ்சம் பணம் கடனாக வட்டிக்கு வாங்கினாள் . பாஸ்கு திருநாள் நெருங்கியபோது அவள் அந்த யூதனிடம் " இத்திருநாளில் நான் தேவநற்கருணை வாங்கவேண்டும் , எனக்கு வேறு நல்ல சேலை இல்லாததினால் உன்னிடத்தில் அடகு வைத்த சேலையை நான் உடுத்திக் கொண்டுபோய்த் தேவநற்கருணைவாங்கின பிறகு திரும்பச் சேலையை உன் கையில் கொடுப்பேன் " என்று சொன்னாள் .

அந்த யூதன் ' தேவநற்கருணை ' என்ற வார்த்தையைக் கேட்டு " நீ சொல்லும் தேவநற்கருணையை வாங்கியவுடன் அதைச் சேலைக்குள்ளே வைத்து எனக்குக் கொண்டுவந்து கொடுப்பேனென்று வாக்குக் கொடுத்தால் நான் அந்தச் சேலையைக் கொடுக்கிறதுமல்லாமல் , நீ கடனாக வாங்கின பணத்தையும் உனக்கு இனாமாகக் கொடுப்பேன் . நீ இதற்கு சம்மாதியாதிருந்தால் நான் சேலையை கொடுக்க மாட்டேன் " என்று சொன்னான் . துவக்கத்தில் அந்தக் கிறிஸ்தவப் பெண் சம்மாதியாதிருந்தாலும் சேலையின் பேரில் அவள் மிகவும் ஆசையாயிருந்ததினால் கடைசியில் சம்மதித்தாள் . யூதன் அந்தச் சேலையை அவளுக்குக் கொடுத்தான் .

மறுநாள் அவள் அதை உடுத்திக் கொண்டு கோவிலுக்குப் சென்று தேவநற்கருணை வாங்கும்போது தன்னுடைய நாவில் குருவானவர் தேவநற்கருணையை வைத்தவுடனே அவள் அதை எடுத்துச் சேலைக்குள் வைத்துக்கொண்டு அந்தயூதன் வீட்டுக்கு வந்து அவன் கையில் கொடுத்தாள். அந்த யூதன் கத்தியைக் கொண்டுஅந்தத் தேவநற்கருணையைக் குத்தத் துவங்கினான். அதனால் ஏற்ப்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் வடிந்தது. கொடூர மனிதன் அதிகக் கோபங்கொண்டு அந்த திரு அப்பத்தை எரியும் நெருப்பில் போட முயன்றான். ஆனால் தேவநற்கருணை நெருப்பில் விழுந்து போகாமல் மேலே பறந்து பறந்து போவதைக் கண்டு அவன் அதைத் திரும்பவும் பிடித்து ஒரு கதவில் ஒரு ஆணியால் அறைந்து விட்டான். அந்த ஆணியினால் உண்டான காயத்தி்னின்று இரத்தம் திரளாய்ச் சிந்தியது.

அப்போது கர்வம் அடைந்த யூதன் தன் மனைவி மக்களைக் கூப்பிட்டு இந்தத் தேவநற்குணையை அவர்களுக்குக் காண்பித்து " இதோ கிறிஸ்தவர்களுடைய தெய்வம் ,அவனை மறுபடியும் சிலுவையில் அறைந்தேன், பாருங்கள்" என்றான் . அவர்கள் அதைப் பார்த்துப் பயந்து திகிலடைந்து ஓடிப்போனார்கள் . அவனுடைய மனைவி , சற்று சுதரித்துக் கொண்டு அவனருகில் வந்து அந்த கொடுரத்தை நிறுத்தும்படியாய் மிகவும் கெஞ்சி மன்றாடினாள் . ஆனால் அவன் வெறிகொண்ட நாயைப்போல் கத்தி தன் மனைவியைத் துரத்திவிட்டு ஒரு மேசைக்கத்தியைக் கொண்டு மறுபடியும் முன்னையைப் பார்க்க அதிகக் கொடுரமாய் குத்தினான் . அந்தத் தேவநற்கருணையினின்று ஒவ்வொரு குத்துக்கும் இரத்தம் திரளாய் பீரிட்டு வந்தது .

கடைசியில் யூதன் களைத்து இனி குத்தப் பலமற்றவனாய் அந்தத் தேவநற்கருணையை எடுத்துக் கொதிக்கும் வெந்நீர்ப் பானையிலே போட்டான் . உடனே நீரெல்லாம் இரத்தமாய் மாறினதுமல்லாமல் கிறிஸ்துநாதர் சிலுவையில் அறையுண்ட காட்சி அவன் கண்ணுக்குக் தெரிந்தது . இதெல்லாம் வீட்டுக்குள் நடக்கும்போது , திருநாள் பூசைக்கு மணி அடித்ததினால் மக்கள் கூட்டமாகப் பூசைக்கு அடுத்த கோவிலுக்குப் போனார்கள் .

அந்த யூதனுடைய மகன் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து பூசைக்கு செல்லும் மகளைப் பார்த்து ; ஐயோ! நீங்கள் வீணாய் கோயிலுக்குப் போகிறீர்கள், இதோ என் தகப்பன் உங்கள் தேவனைப் பிடித்துக் கொலை செய்கிறார்" என்று சொல்லிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுப்பிள்ளை சொல்வதை அநேகம் பேர்கள் கண்டுப்பிடிக்காமல், பொருட்ப்படுத்தாமல் போய் விட்டார்கள்.

ஆனால் , ஒரு பக்த்தியுள்ளப் பெண் அந்த வார்த்தைகளைக் கேட்டு பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுச் சீக்கிரமாய் தன் விட்டுக்குப்போய் ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு நெருப்பு எடுக்கப்போவதுப்போல் யூதனுடைய வீட்டுக்குள்ளே நுழைந்தாள். அவள் அங்கே நடப்பதைக்கண்டுப் பயந்து மிகுந்த வணக்கத்துடனே முழங்காலில் இருந்து தான் கொண்டுவந்த பாத்திரத்தை நீட்டினால். அப்போது தேவநற்கருணை தேவ துரோகியான யூதன் கையிலிருந்து தப்பித்துக் கொண்டு மகிமையோடு பாத்திரத்தில் வந்து இறங்கிற்று.

அவள் அதை மிகுந்த பக்தியோடும், பட்சத்தோடும் அணைத்தும் அருகாமையிலிருந்த புனித அருளப்பருடைய கோவிலுக்குக் கொண்டுப்போய் அங்கிருந்த குருவானவரிடத்தில்கொடுத்தாள். இந்தப் புதுமை எங்கும் பிரபலமாகவே பாரீஸ் பட்டணத்தார் கூட்டமாய் தேவநற்கருணையை ஆராதிக்கப் போனார்கள்.அந்தத் துரோகியான யூதனின் மனைவியும் பிள்ளைகளும் மனந்திரும்பிக் கிறிஸ்தவர்களனார்கள். அவனோவென்றால், நீதிமன்றத்தினரால் பிடிக்கப்பட்டுச் சிறைசாலையில் போடப்பட்டு, மனம் திரும்பாததினால் சாவுக்குத் தீர்வையிடப்பட்டான். அந்தத் தேவதுரோகியான யூதன் வீடு இருந்த இடத்தில் ஒரு கோவிலையும் ஒரு சந்நியாசி மடத்தையும் கட்டினர்.

கிறிஸ்தவர்களே! அந்தப் பெண் தேவநற்கருணையை யூதனுக்குக் கொடுத்தாள். தேவதுரோகம் செய்கிறாள். சாவான பாவத்திலிருக்கிற ஆத்துமத்தில் பிசாசு குடிகொண்டிருக்கிறது.அப்படியிருக்க, நன்மை வாங்குபவர்கள் நமது மீட்பராகிய இயேசுகிறிஸ்துநாதரை பிசாசுக்கு கையளிக்கிறார்கள். தேவநற்கருணைக் காயங்களிலே நின்று இரத்தம் புறப்பட்டதை யூதன் பார்த்துப் பயந்து நிஷ்டூரத்தை விட்டுவிடாமல் அதிகக் கொடூரம் செய்தானென்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள்.

ஆயினும் கிறிஸ்தவர்களுக்குள்ளே எத்தனையோ பேர்கள் இப்படி நடக்கிறார்கள். எப்படியெனில், இயேசு கிறிஸ்துநாதர் துணோடு கட்டப்பட்டுத் தாங்கள் செய்த பாவத்தினால் அடிபட்டு இரத்தம் சிந்தினாரென்று அறிந்தாலும், பயப்படாமலும் இரங்காமலும் மறுபடியும் அப்படிபட்டப் பாவங்களை கட்டிக்கொள்ளத் துணிகிறார்கள். இயேசுகிறிஸ்துநாதரை தாங்கள் செய்கிற பல பாவங்களினால் இரும்பாணிகளைக் கொண்டு சிலுவையில் அறைகிறார்கள். இதை உணர்ந்து மறுபடியும் அப்படிப்பட்டப் பாவங்கள் செய்வதை விட்டு விட வேண்டும்.