எது திருச்சபை?

இயேசுகிறிஸ்து ஒரே ஒரு திருச்சபையை ஏற்படுத்தினார். இதை இராயப்பர் (பேதுரு) மீதே ஏற்படுத்தினார். இயேசு சிலுவையடியில் தன் தாயை ஒப்படைத்த போது யோவானிடம் ஒப்படைத்தார் என்று சொல்லாமல், அன்புச் சீடனிடம் ஒப்படைத்தார் என்று பைபிள் சொல்கிறது (யோவான் 19:26-27).

ஏனெனில் தனி ஒருவருக்கு அல்ல, மாறாக இயேசுவின் அன்புச் சீடனாயிருக்க விரும்பும் எவரும் அன்னையைத் தன் தாயாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதால்! ஆனால் அதே சமயம் திருச்சபை கட்டப்படும் பகுதியில் (மத்.16:17) எல்லோர் மீதும் அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட மனிதர் மீது (சீமோன்) திருச்சபை கட்டப்படுகிறது. ஏனெனில் மற்றவர்கள் தலைமை மீது உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக!

எனவே திருச்சபையின் தலைவர் ஒருவரே! அவர் சீமோன் பேதுரு இராயப்பர்) வழிவந்த பாப்பரசர் மட்டுமே! இதையே லூக். 22:31-32 மற்றும் அருளப்பர் (யோவான்) 21:15-17 உறுதிப்படுத்துகின்றன. மாபெரும் மறைபரப்புப்பணி செய்த புனித பவுல் (சின்னப்பர்) கூட, தனித்துப் பணி செய்தால் அது வீணாகி விடும் என்று கடவுளால் உணர்த்தப்பட்டு, ஒரே திருச் சபைக்குத் தன்னை உட்படுத்தித் தன் செயல்களைத் தெரிவித்து ஒப்புதல் பெறுகிறார் (கலா 2:1-2) மற்றும் (1 கொரி 16:3).

மேலும் புனித பவுலால் தீர்க்க முடியாத பிரச்சினை இராயப்பரால் தீர்க்கப்படுகிறது. அப். பணி 15:1-12 , அதாவது முதல் திருச்சங்கம் முதல் பாப்பரசர் தலைமையில் பிரச்சினைகளைத் தீர்க்கிறது. தவறு களைக் கண்டிக்கலாம், திருத்தலாம். ஆனால் திருச் சபை ஒன்றே! அதன் ஒற்றுமையைக் கலைக்க லாகாது. பிரிவினைகள் கூடாது. பின்வரும் வரலாறு உண்மைகளை உணர்த்தும் (1 யோவான் 2:19)

லூத்தரன் சபையை (Lutheran) நிறுவியவர் மார்ட்டின் லூத்தர். இவர் கத்தோலிக்கத் திருச் சபையிலிருந்து விலக்கப்பட்ட ஒரு துறவி. 1517- ஆம் ஆண்டு லூத்தரன் என்ற புரொட்டஸ்டாண்ட் சபையை ஏற்படுத்தினார்.

ஆங்கிலிக்கன் (Church of England) பையை நிறுவியவர், எட்டாம் ஹென்றி (Henry VIII) என்ற அரசன். அப்போதிருந்த போப் இவருக்கு விவாகரத்து உரிமையை அளிக்க மறுத்ததின் காரணமாக 1534 - இல் ஆங்கிலிக்கன் சபையை நிறுவினார்.

பிரிஸ்பிற்றேரியன் (Presbyterian) சபையை ஸ்காட்லாந்து நாட்டில், ஜான்நாக்ஸ் என்பவர் 1560-ல் ஏற்படுத்தினார். புரொட்டஸ்டாண்ட் எபிஸ்கோப்பலியன் (Protestant EpisCoplian) பையை ஆங்கிலிக்கன்பை யிலிருந்து விலகிய சாமுவேல் சிபரி என்பவர் 17-ம் நூற்றாண்டில் வட அமெரிக்காவில் உருவாக்கினார்.

காங்கிரகேஷன் (Congregation) சபை ராபர்ட் பிரவுண் என்பவரால் 1582 இல் ஹாலந்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டது.

மெதடிஸ்ட சபை (Methodist), இங்கிலாந்து நாட்டில் 1774இல் ஜான் மற்றும் சார்லஸ் வெஸ்லி என்பவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

யுனிட்டேரியன் (Unitarian) சபை 1774இல் தியேஸ்பிலஸ்லிண்ட்லி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.

மார்மோன் கடைசி காலப் பரிசுத்தவான்கள் (Latter Day Saints) சபை ஜோசப் ஸ்மித் என்பவரால் பல்மைரா என்ற நகரில் 1829இல் ஆரம்பிக்கப்பட்டது.

பாப்டிஸ்ட் (Baptist) பை ஆம்ஸ்ட ர்டாம் நகரில், ஜான்ஸ்மித் என்பவரால் 1606இல் உண்டாக்கப்பட்டது.

டச் ரிபார்ம்ட் (Dutch Reformed) சபை மைக்கேலிஸ் ஜோன்ஸ் என்பவரால் நியூயார்க் நகரில் 1628இல் உருவானது.

இரட்சணிய சேனை (Salvation Army) சபை வில்லியம் பூத் என்பவரால் லண்டன் நகரில் 1865இல் உருவாக்கப்பட்டது.

கிறிஸ்டியன்ஸ யன்ட்டிஸ்ட் (Christian Scientist) சபை 1879 இல் மேரி பேக்கர் எடி என்ற பெண்மணியால் ஆரம்பிக்கப்பட்டது.

நஸ்ரேன் சபை, அசெம்ளி ஆப் காட், பெந்த கோஸ்த் சபை, ஹோலின்ஸ் சபை, ஜெகோவா விட்னஸ் சபை போன்ற சபைகள் அனைத்தும் கடந்த நூறு வருடங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்டவைகளே.

ஆனால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை (Roman Catholic Church) கடவுளின் திருக்குமார் னாகிய இயேசுகிறிஸ்துவினால் 33 - ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வரை எவ்வித மாற்றமின்றித் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது.

மேலும் இன்றைக்கும் நின்று நிலைக்கும் நான்கு பெரும் அடையாளங்களைக் கடவுள் தன் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அளித்துள்ளார்.

நற்கருணைப் புதுமைகள் :

அப்பமும், ரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும், இரத்தமாகவும் மாறி 1300 ஆண்டுகளாக எவ்வித ரசாயனப் பாதுகாப்பும் இன்றி இயற்கையாகவே நின்று நிலைக்கும் புதுமை லான்சியானோ புதுமை (காண்க: பின் அட்டை உள்பக்கம்) இதுபோன்ற பல புதுமைகள் நற்கருணையில் நடந்துள்ளன.

யோவான் (அரு.) 6:50, 51 மற்றும் 48 - ன் படி அப்ப வடிவில் மட்டும் நற்கருணை உட்கொண் டாலும் நித்திய வாழ்வு உண்டு. மேலும் அது ஆண்டவருடைய சரீரமாக மட்டுமல்ல, அவராகவே இருப்பதால் (அரு. 6:51), நற்கருணை ஆராதிக்கப்பட வேண்டும். நற்கருணை ஆராதனை அவசியமானது.

புனிதர்களின் அழியா உடல் :

புனித சவேரியார், ஜான் மேரி வியான்னி, பெர்னதெத் உட்பட ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட கத்தோலிக்கப் புனிதர்களின் உடல்கள் இறந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் ரசாயனப் பாதுகாப்பு ஏதுமின்றி அழியாது இருக்கும் புதுமை கத்தோலிக்கத் துக்கு மட்டுமே உரியது.

ஐந்து காய வரம் :

கத்தோலிக்கப் புனிதர்கள் மட்டுமே ஏசுவின் ஐந்து காயங்களை நவீன விஞ்ஞானமே ஆச்சரியப் படும் வகையில் தங்கள் உடலில் தாங்கியுள்ளனர். (உ-ம்) புனித அசிசியார், புனித சியன்னா கத்தரீன், புனித ஜெம்மா, புனித பியோ உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர். லூர்து அற்புதங்கள் :

நாத்திக மற்றும் பிறமத மருத்துவர்கள் கண் முன்னாலேயே விஞ்ஞான அறிவுக்கு எட்டாத புதுமைகள் நடைபெறும் இடம் பிரான்சின் லூர்து திருத்தலம் ஆகும். ஜெபக் கூட்டங்களில் நாம் கேள்விப்படும் புதுமைகள் போல் அல்லாது உலகின் மிகப்பெரிய மருத்துவர்களும் கண்டு வியக்கும் புதுமைகள் இங்கு நடக்கின்றன. (உ-ம்) மண்டை ஓட்டில் ஓட்டை விழுந்து மூளை வெளியே தெரிந்த ஒரு மனிதன் மாதா தீர்த்தத்தில் குளித்து நற்கருணை நாதரால் முழுதும் குணமாகி வந்தான்! காண்க : சென்னை தி.நகர் நர்மதா பதிப் பகத்தின் உலகப் புகழ்பெற்ற புத்தக வரிசை வெளியீடான ''லூர்து அற்புதங்கள்" என்ற புத்தகம், பக். 244 - 262.