நற்குணபான்மையின் வளர்ச்சி விசேஷ புண்ணியங்கள்

115. மேலே எடுத்துக்கூறிய தீயகுணங்களுக்கு மாறான புண்ணியங்கள் யாவை? 

தாழ்ச்சி, மன அமைதி, பிறர் சிநேகம், சாந்தம், கற்பு, மட்ட சனம், சுறுசுறுப்பு

116. தாழச்சி என்பது என்ன?

நமக்குப் பெரியவர்களிடத்தும், சிறியோரிடத்தும் தகுந்த மரியாதையுடன் நடந்து கொள்வதற்காக, நமது நிலைமையைச் சரியானபடி கண்டுணர்ந்து அதன்படி அவர்களுடன் பழகுதல் தாழ்ச்சியாகும். இது ஆங்காரத் துக்கு எதிரானது.

117. இதைச் சற்று விளக்கமாகக் கூறுக.

நாம் கடவுளுடைய சட்டத்துக்கும், சித்தத்திற்கும் கீழ்ப்பட்ட அவருடைய சிருஷ்டிகளென்றும் நமது நற் குணங்கள் முதலாய் பற்பல குறைகளால் பழுதுபடுகின்ற வென்றும் நம்மிலும் நல்லோர், திறமையுள்ளோர் பலர் உண்டென்றும், நம்மிடமுள்ள நற்குணங்கள் நாம் சம்பா திப்பவையல்ல, கடவுளால் அருளப்பட்ட நன்கொடைகள் என்பதே உண்மையென்றும், நாமே ஏற்றுக்கொள்ளும்படி செய்வது தாழ்ச்சியின் இயல்பு ஆகையால் மெய்யான தாழ்ச்சியுள்ளவர்கள். தங்களுக்கு மேலானவர்களை அவ மதியார் , கீழானவர்களைப் புறக்கணியார். அனைவரையும் தகுந்த மரியாதை வணக்கத்துடன் நடத்துவார்கள்.

118. அமைதி என்றால் என்ன?

நம்மிடம் உள்ளதையும் நேர்மை நியாயத்துடன் நாம் அடையக்கூடியதையும் கொண்டு மன நிறைவு அடைவதே அமைதி எனப்படும், நாம் அடையக்கூடாத பிறர் பொருளின் மேல் ஆசைப்படாவண்ணம் இந்தப் புண்ணியம் நம்மைத் தடுக்கிறது. இது பேராசைக்கு எதிரானது. 

119. உதாரகுணத்தையும் பேராசைக்கு எதிரானது என்று கூறலாமா? 

நம்மிடம் இருப்பதைவிட அதிகமாய் அடைய விரும்பு வதற்குப் பதிலாக, நம்மிடம் உள்ளதைப் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கவும், நாம் ஆசிக்கிறோம் என்று உதாரகுணம் காட்டுவதால், இது பேராசைக்கு எதிரானது என்று சொல்லாமலே விளங்கும்!

120. பிறர் சிநேகம் என்றால் என்ன?

பிறரிடமுள்ள நன்மையைப்பற்றி அழுக்காறுகொள்ளா மல் அவர்களுக்கு உண்டாகும் லாபம், வெற்றி முதலியவை களைப்பற்றி மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு, நன்மை செய்யத் தேடுவது பிறர் சிநேக குணமாகும். இது காய்மகாரம் அல்லது பொறாமைக்கு எதிரானது.

121. சாந்தம் என்பது என்ன?

சாந்தம் (பொறுமை, சகிப்புத்தன்மை) என்பது கோபத்தால் ஏற்படும் கொடுமைக்கு இடங்கொடுக்கா மலும், பிறருடன் முரட்டுத்தனமாக இருக்காமலும். நமக்குப் பிரியமற்றதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்ளுத லாகும்.

122. கற்பு என்பது யாது?

நினைவு, வாக்கு, கிரிகைகளில், உடலின்பம்பற்றி எழும் ஆசையானது கடவுளுடைய சித்தத்துக்கும், நோக்கத்துக் கும் விபரீதமான வழியில் செயல்படாது. அதைத் தடுத்து அடக்குவதே கற்பு எனப்படும்.

123. மட்டசனம் என்றால் என்ன?

நமக்கு நன்மை விளைவிக்கக்கூடிய அளவுக்கு மீறி உணவு, குடி வகைகளை அருந்தாமல், உடல் நலத்துக்குத் தேவையானதை மட்டும் அருந்துவது மட்டசனம் அல்லது மிதவுணவு எனப்படும்.

124. சுறுசுறுப்பு என்றால் என்ன?

சுறுசுறுப்பு, முயற்சி, ஊக்கம் என்றால் நமது வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தேடிக்கொள்ளவும். பிறருக்கு உதவி செய்யவும். நமது கடமையை செவ்வையாய் நிறைவேற்றவும், அவசியமான அலுவலைச்செய்து உழைக்க விரும்புகிறோம் என்றும், சோம்பல், அசதி, அசட்டைத் தனம், தாமத குணம் ஆகியவற்றால் எந்த நற்கிரிகையையும் அலட்சியம் செய்யமாட்டோம் என்றும் பொருள்படும்.