133. உத்தமனாதல் நமது சக்திக்கு மேற்பட்டதாயின். அதற்காக முயற்சி செய்வதால் பயன் என்ன ?
மிகவும் பயனுண்டு. உத்தமனாகாவிட்டாலும் நாளுக்கு நாள் நல்லவனாகலாம் அதுபற்றிய மகிழ்ச்சியும், அமைதி யும் நமது உள்ளத்தில் உண்டாகும்.
மனிதனின் உயர்வெல்லாம், சிறந்ததை மேலானதை அடைய வாழ்நாளெல்லாம் முயற்சி செய்வதில்தான் அடங்கி யுள்ளது. அதில் வெற்றி அடையாவிடினும் அஃதோர் சிறந்த முயற்சியேயாகும் முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார் என்பது முற்றிலும் சிறந்த வாக்கு. இறு தவளை முயற்சிப்பதே நமது ஆவலாக இருக்கவேண்டும்,
ஒருவன் சிறந்த கொள்கையை நோக்கி தன் வாழ்வை வகுத்துக்கொள்ளும் போது, அது, அவனுக்கு கடவுளுடைய கட்டளையை அனுசரிக்க எளிதாகிறது. ஏனெனில் முதலா வது, நன்மையைச் செய்வதில் உள்ள ஆர்வம் அதிகரிக்கு மாகில், தீயனவற்றை விரும்பான். தீமைக்கு இடங் கொடான்.
புண்ணியம் வீரத்தன்மையல்லவா; ஆகையால் புண் ணியத்தில் பயிற்சியடைகிற அளவு ஒருவன் சோதனையை வெற்றிகொள்வதற்கான மன உறுதி உள்ளவனாவான்.
134. புனிதத்தனத்தை நாடி முயற்சி செய்பவன் கூட பாவத்தில் தவறிவிடக் கூடுமா?
ஆம். மனிதன் குறையுள்ளவன் ஆனபடியால், ஒரு வன் புனிதத்தன்மையை நாடி அதையடைய முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலும், அவன் மிக அருவருப் பான பாவத்தில் தவறி விழக்கூடும்.
இதில் வியக்கத்தக்கது ஒன்றுமில்லை. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? அதுபோல மனி தன் எவ்வளவுதான் உயர்ந்த நிலையை நோக்கிச் சென்ற றும், மனித சுபாவம் அவனைவிட்டு நீங்காது. அவனு டைய பாசப்பற்றுதல்கள் அவனுடன் எப்போதும் இருக் கின்றன ஆகையால், திடீரென்று மிக்கக் கடுமையான சோதனை வந்து அவனைத் தாக்கினால், அவன் அதற்கு இணங்கி பாவம் செய்யக்கூடும்.
இன்னும் சிலர் மெய்யான புண்ணியத்தில் நிலை நிற்கும் புனிதத்தன்மையை நாடாமல், ஏதோ ஒன்றைத் தங்கள் கற்பனையில் விசித்திரமாய் நினைத்துக்கொண்டு, அதன்படி நடக்கப் பார்க்கிறார்கள். இப்படிப் பகற்கனவு கண்டு கொண்டு முக்கியமான விஷயத்தை மறந்து போகிறார்கள்.
கடவுளுடைய சட்டத்துக்கு மாறாக கற்பனையில் தோன் றும் ஏதோ ஒரு சிறந்த நிலையை ஒருவன் தனக்கு, மாதிரி கையாகப் பாவித்துக்கொள்ளக்கூடாது. கடவுளின் சட் டத்தை அனுசரிப்பதில் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும். அதன்பின் சிறந்த புண்ணியங்களைத் தேடும் வழிவகைகளை கைக்கொள்ள வேண்டும்.
135. இம்முயற்சியில் நமக்கு வேண்டிய மனப்பான்மை யாது?
(1) சிறந்த மாதிரிகையைப் பின்பற்றி நடக்கும்போது பாவத்தில் தவறி விழுந்தால், புனிதத் தன்மையடைதல் தன் போன்றவர்களுக்கல்ல என்று விட்டுவிடக்கூடாது. தனது பலக்குறைவை இதனால் கண்டறிந்து இன்னும் அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.
(2) நமது புண்ணியத்துக்கும். அதை அடைவதற்கும் நாம் செய்த முயற்சிகளுக்கும் ஏற்றவாறு சம்பாவனை அளிப் பார். கடவுள் சம்பாவனை அளிப்பதில், நாம் அடைந்த புண்ணியத் தேர்ச்சிக்கல்ல; நாம் அதற்காக செய்த முயற் சிக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது நியாயமாகத் தோன்றுகிறது. இந்த நினைவு நமக்குத் தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கத்தக்கதாகும்.