தர்மக்கிரியைகளின் பேரில்.

194. ஆத்தும சம்பந்தமான தர்மக் கிரியைகள் எத்தனை?

ஏழு


195. ஏழுஞ்சொல்லு.

1-வது - நல்லபுத்தி சொல்லுகிறது. 
2-வது - தெரியாதவர்களுக்குப் படிப்பிக்கிறது. 
3-வது - தப்பிப்போகிறவர்களைக் கண்டிக்கிறது. 
4-வது - கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேறுதல் சொல்லுகிறது. 
5-வது - நிந்தைகளைப் பொறுமையுடனே சகிக்கிறது. 
6-வது - பொல்லாப்புகளைப் பொறுத்துக் கொள்கிறது. 
7-வது - சீவியர்களுக்காகவும். மரித்தவர்களுக்காகவும், சர்வேசுரனை மன்றாடுகிறது.


196. சரீரசம்பந்தமான தர்மக்கிரியைகள் எத்தனை?

ஏழு,


197. ஏழும் சொல்லு

1-வது - பசியாயிருக்கிறவர்களுக்குப் போசனம் கொடுக்கிறது. 
2-வது - தாகமாயிருக்கிறவர்களுக்கு தண்ணீ ர் கொடுக்கிறது. 
3-வது - உடையில்லாதவர்களுக்கு உடைகொடுக்கிறது. 
4-வது - பரதேசிகளுக்கு இடம் கொடுக்கிறது. 
5-வது - காவலில் இருக்கிறவர்களைச் சந்திக்கிறதும் அல்லாமல். வியாதியாயிருக்கிறவர்களுக்கு ஆறுதல் சொல்லுகிறது. 
6-வது - அடிமைப்பட்டவர்களை மீட்கிறது. 
7-வது - மரித்தவர்களை அடக்கம் செய்கிறது.


198. கிறிஸ்தவ நல்லொழுக்கத்திற்குச் சம்பந்தமான புண்ணியங்களில் பிரதான மானவைகள் எவை? 

விவேகம், நீதி. மனத்திடம், மட்டுத்திட்டம் ஆகிய இவைகளாம்.


199. மேற்சொல்லிய புண்ணியங்களை எல்லாம் அனுசரிப்பதால் நமக்கு உண்டாகும் பிரயோசனம் என்ன? 

அதனால் இவ்வுலகில் முதலாய் பல நன்மைகள் விளையுமல்லாமல் மோட்ச பாக்கியம் அடைவதற்கான பேறுபலன்கள் கிடைக்கும்.


200. பேறுபலன் என்பது என்ன?

தேவ இஷ்டப்பிரசாதத்தோடு இருக்கிறவர்கள் செய்யும் புண்ணியக் கிரியை ஒவ்வொன்றுக்கும் சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளும் சம்பாவனைக்கு சுதந்திர உரிமையே பேறுபலன் எனப்படும்.