தேவவரப்பிசாதத்தின் பேரில்.

201. பாவத்தை விலக்கி மோட்சத்தை அடைவதற்கு நம்முடைய சொந்தப் பலன் போதுமா? 

போதாது. நமக்குத் தேவவரப்பிரசாதத்தின் அனுக்கிரகம் வேண்டியது 


202. தேவ வரப்பிரசாதம் ஆவது என்ன?

நாம் மோட்சம் அடைவதற்காக கிறிஸ்துநாதருடைய பேறுபலன்களை முன்னிட்டு சர்வேசுரன் நமக்கு இலவசமாகக் கொடுக்கும் சுபாவத்திற்கு மேற்பட்ட வரமேயாம். 


203. தேவ வரப்பிரசாதம் எத்தனை வகையுண்டு?

தேவ இஷ்டப்பிரசாதம், உதவி வரப்பிரசாதம் ஆகிய இரண்டுவகை உண்டு. 


204. தேவ இஷ்டப்பிரசாதம் ஆவதென்ன?

நம்மை பரிசுத்தப்படுத்தி சர்வேசுரனுக்கு உகந்த பாக்கியத்துக்குச் சுதந்திரவாளிகளாயிருக்கச் செய்யும் பரமஞான வரமே தேவ இஷ்டப்பிரசாதமாம். 


205. உதவிவரப்பிரசாதம் ஆவது என்ன?

பாவத்தை விலக்கிப் புண்ணியத்தைச் செய்வதற்கு ஏதுவாக சர்வேசுரன் அவர்களுக்கு வேண்டிய சமயத்தில் தந்தருளும் ஞான சகாயமே உதவி வரப்பிரசாதம் எனப்படும். 


206. தேவ இஷ்டப்பிரசாத மில்லாதவன் தான் செய்யும் புண்ணியக் கிரிகைகளால் பேறுபலன் அடையக்கூடுமோ? 

கூடாது. அவன் உதவி வரப்பிரசாதத்தின் மூலமாய் செய்யும் புண்ணிய் கிரிகைகள் பாவமன்னிப்புக்கு வழியாகுமேயொழிய அவைகளால் அவன் மோட்சத்திற்கான பேறுபலன்களைப் பெற்க்கூடாது. 


207, தேவ வரப்பிரசாதங்களை அடைவது எப்படி?

செபத்தினாலும் தேவத்திரவிய அனுமானங்களாலும் அடையலாம்.