சொன்ன வணக்கப் பழமை.

38. இன்றையவரைக்குஞ் சொன்ன யாவையும் ஆராய்ந்து பார்க்கில், நாம் தேவமாதாவுக்கும் மற்ற மோக்ஷவாசிகளுக்குஞ் செய்யும் ஆராதனை வேதத்தில் கற்பிக்கப்படாததாயினும் வேதத்திற்கு ஒத்ததாய் எவருக்குந் தோன்றப்படுமே. அதற்குப் பதிதர் நியாயத்தைக் காணாத படிக்குக் கண்ணை மூடிக்கையால் தடவினாற்போல, சொன்னதற்குச் சரியான மறுமொழி சொல்ல அறியாமல் அப்பாலே காண்டி அப்போஸ்தலர்மார் நாளிலேயும், திருச்சபையின் முதற்காலத்திலேயுமில்லாமல், கர்த்தர் பிறந்த 500 வருஷத்திற்குப் பிறகு புதிதாய் முளைத்த வணக்கம் இதாகையால், ஆகாதென்று சாதிக்கிறார்கள். ஆகிலுங் கர்த்தர் பிறந்த 1517 வருஷத்திற்குப் பிறகு லுத்தேர் மதம் முளைத்ததானாலும் அதனைத்தாம் மெய்யென்று அநுசரிப்பானேன்?

39- ஆகிலும் இதிலே தெளிவாகும்படிக்குப் பதிதர் சொன்னதை அறியக்கடவீர்கள். லுத்தேர் சீஷர்களுங் கல்வீன் சீஷர்களும் பிதற்றின அபத்தமேதெனில், கர்த்தர் திரு அவதாரஞ் செய்து பிறந்த 500 வருஷமட்டுந் திருச்சபை வழுவா முறையோடே விளங்கின பின்பு, முழுதுங் கெட்டு அழிந்து, ஆயிரம் வருஷமும் அழிவாகக் கிடந்து, கர்த்தர் பிறந்த 1517-ம் வருஷம் லுத்தேர் சகல பாவத்தோடு எழுப்பின துர்ச்சமயத்தைக்கொண்டு திருச்சபை மீளவும் விளங்கத் துவக்கினது என்பார்கள்.

ஆகையால் அந்த முதல் 500 வருஷத்திலே திருச்சபையிலே வழங்கினது மாத்திரமே மெய்யென்றும், ஆண்டவர் அருளிச் செய்த வேதத்திற்கு ஒத்ததென்றுஞ் சொல்லவேண்டுமொழியப் பின்பு புதிதாய் வழங்கின முறை எல்லாம் அபத்தமென்றும், அக்கியானமென்றும், இக்காலத்துப் பதிதர் எல்லோருஞ் சொல்லுகிறார்கள். விலை மாதர் முகத்தோடு இகழ்ச்சிக்கு அஞ்சாமல் பிதற்றி வெட்கமில்லாமல் பதிதர் சொல்லும் இந்தத் தப்பறை இனிமேல் மறுத்து நெருப்பில் போட்ட வெள்ளைப் பொன் அழிவது போல, நாம் சொல்லத்தகும் நியாயத்தால் அவர்கள் தப்பறை எல்லாம் அழிந்து, சத்திய வேத முறைமையை செம்பொன்னாக விளங்கச் செய்வோம்.

இங்கேயோவெனில், பதிதர் சொன்னதைக் கொண்டு பதிதரைக் குத்தி எளிதாய் வெல்வதற்கு அவர்கள் பிதற்றின தப்பறையை மெய்யாக ஒத்துக்கொண்டது போலப் பேசி, முதல் 500 வருஷத்திலே தானே திருச்சபையில் வழங்கின முறைமைமாத்திரம் வேதத்திற்கு ஒத்த முறைமை என்றாலும், அக்காலத்திலேதானே தேவமாதா ஆராதனையும், மோக்ஷ வாசிகள் வணக்கமும் வழங்கினதென்று நாமே ஒப்பித்தால் அதனைப் பதிதரும் ஒத்துக்கொண்டு புதிதாய் முளைத்த முறை என்னாமல் பழைய வேத முறைமை என்று ஒப்பித்தாற்போல் ஆகுமல்லோ

40. - ஆகையால் சேசுநாதர் பிறந்த 500 வருஷத்திற்குள்ளாக விளங்கின வேதபாரகர் இந்த விஷயத்திலே எழுதி வைத்ததைச் சொல்லிக் காட்டுவோம். நெஸ்தோரியுஸ் என்பவன் சொன்ன பல அபத்தங்களுக்குள்ளே சேசுநாதரை ஈன்ற பரம தாயைச் சர்வேசுரனுடைய மாதாவென்று சொல்லக்கூடாது என்றான். அதனை மறுக்க வேண்டுமென்றமையால் அர்ச். பாப்பு செலெஸ்தீன் என்பவர் உத்தாரத்தின்படியே எபெசி என்னும் நகரிடத்து 431-ம் ஆண்டில் ஆனி மீ 22-ம் தேதியில் பல வேதபாரகரோடே இருநூறு மேற்றிராணியார்களுங் கூடி, நெஸ்தோரியுஸ் என்பவன் சொன்ன அபத்தங்களை வேதத்திற்கு ஏற்காததென்று சபித்துச், சேசுநாதர் தாயைச் சர்வேசுரனுடைய தாய் என்றும், தேவமாதா என்றுஞ் சொல்லக் கட்டளையிட்டார்கள்.

மீளவும் நெஸ்தோரியுஸ் என்பவன் சொன்ன தூஷணத்திற்கு எதிராகத், தேவதாயை உலகமெல்லாம் விசேஷமாய் எப்போதுந் துதிக்கும்படிக்குத், திரு அவதார நாளில் சம்மனசு வாயினால் துவக்கின பிரியதத்த மந்திரம் ஜெபிக்கக் கட்டளையிட்டார்கள். அதிலே பிரியதத்தத்தினாலே பூரண மரியாயே வாழ்க (இது வேத வாக்கியத்தின் அர்த்தத்திர்குச் சரியென்கிரதற்குப் பச்சிமகாண்டம் 7-ம் இலம்பகம் அத்தாட்சி.) கர்த்தர் உம்முடனே பெண்சாதிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே என்கிற மட்டுங் கபிரயேல் என்னுஞ் சம்மனசு சொன்ன மங்களம். மீளவும் பெண்சாதிகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப் பட்டவளும் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவருமாமே என்கிற மட்டும் எலிசபேத்தம்மாள் சொன்ன மங்களம். அர்ச். மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக . இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் என்று முன் சொன்ன திருச்சபை அன்று கட்டளையிட்ட மங்களமாக மந்திரம் முடிந்ததாமே.

ஆகையால் தேவமாதாவுக்குத் தோத்திரமாகிய இந்த மந்திரத்தைத் தேவமாதாவைப் பகைத்த இந்நாட் பதிதரும் மறுத்தாலும், 431-ம் ஆண்டில் அவர்கள் சொன்னபடி வழுவாதிருந்த திருச்சபை கட்டளையிட்டதென்றும், அப்போது தானே தேவமாதாவை வணங்கின முறையும், அவளை நமக்காக வேண்டிக்கொள்ளச் சொல்லி மன்றாடின முறையும் வழங்கினதென்றுஞ் சொல்லி, அதனால் தேவமாதா வணக்கம் வழுவாத திருச்சபை முறைமை என்று பதிதருஞ் சொல்லக்கடவார்கள்.

41. - மீளவுங் கர்த்த ர் பிறந்த 430-ம் வருஷத்தில் மரணத்தை அடைந்த அர்ச். அகுஸ்தீன் உண்டாக்கின தியானப் புஸ்தகத்து 24-ம் அதிகாரத்தில் எழுதினதா வது : சகல அர்ச்சியசிஷ்டவர்களே, நீங்கள் பாக்கியமுடை யவர்கள். அழிவுள்ள இவ்வுலகென்னும் பெருங்கடல் கடந்து நிலையும், சுகமும், அன்பும், வழங்கின மோக்ஷக் கரையில் சேரப் பேறு பெற்று அடைந்தீர்களே, நீங்களே அச்சமின்றி, அலைவின்றி, எக்காலத்துங் களிக்கவும், மகிழ வுஞ் செய்வீர்கள். ஆகையால் நான் இங்கே உங்கள் எல் லோரையும் மன்றாடி , உங்களுக்கு அச்சமில்லாமையால் அஞ்சின எங்களைப் பாதுகாக்கவும், அழியாத பேரின்ப பாக்கியம் உங்களுக்குக் குறையமாட்டாமையால் நாங்கள் அடைந்த பல துன்ப நிர்ப்பாக்கியங்களுக்கு இரங்கி, எங் களைக் காக்கவும் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.

உங்களைத் தெரிந்தவருமாய், உங்களை மோக்ஷவாசிக் ளாகச் சேர்த்தவருமாய்த், தம் அழகிய பேரின்பத்தால் நிரப்பினவருமாய்த், தம் நிலையினால் நன்மையில் நிறுத்தி னவருமாய்த் , தன் தரிசனத்தினால் வாழ்வித்தவருமாய் இருக்கிற நாதர் திரு முகத்தைப் பார்த்து நீங்கள் எங்களுக்கு இரங்க மன்றாடுவேன். பூவுலகாகிய கடலின் துன்ப வலையினுள் அலையும் எங்களை நினைக்கவும், எங்களுக்கு உதவியாகவுஞ் செய்வீர்கள். இடைவிடாமலும், முடிவில் லாமலுந் துயரில் அமிழ்ந்தின பாவிகளாய் இருக்கிற எங் களுக்காக ஆண்டவரை வேண்டவும் மன்றாடவுங் கடவீர் கள் என்றார்.

மீளவும் அதிலேதானே 40- ம் அதிகாரத்தில் எழுதி னதாவது: மாசில்லாக் கன்னியுமாய், அர்ச். தேவமாதா வுமாய் , என் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துவை ஈன்ற தாயு மாயிருக்கிற அர்ச். மரியாய் என்பவளே, ஆண்டவருக்குத் தேவாலயமாக நின்றவளாகி, அவரை எங்களுக்காக வேண்டி மன்றாடத் தயை புரிந்தருளவும், அர்ச். மிக்கயேலே, கபிரி யேலே, இரபயேலே, மற்ற சம்மனசு சபைகளே, பிதாக் களே, தீர்க்கத்தரிசிகளே, அப்போஸ்தலரே , சுவிசேஷகரே வேதசாட்சிகளே , துதிக்கிறவர்களே, குருக்களே, சந்நியா சிகளே , கன்னிகளே, சகல மோக்ஷவாசிகளே, உங்களைத் தெரிந்து மோக்ஷத்திலே பேரின்ப தரிசனத்தால் உங்களை வாழ்விக்கும் நாதர் திரு முகத்தைப் பார்த்து, எனமேல் இரங்கி ஆண்டவரை நோக்கி எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன் என்று அர்ச். அகுஸ்தீனு எழுதி வைத்தார்.

42. - இவருக்கு முன்னே 420-ம் ஆண்டில் இறந்த அர்ச். எரோனிமுஸ் என்கிறவர் கன்னி எவுஸ்தோக்கி என்பவளுக்கு எழுதின 27-ம் நிருபத்து 14-ம் அதிகாரத் தில் முன் இறந்த பாவுல் என்பவளை நோக்கிச் சொன்ன தாவது: பாவுல் என்பவளே, வாழ்க. உன்னை வணங்கின அடியோர்க்குள்ள தளர்ந்த மூப்பினை உன் வேண்டுதலி னால் காப்பாயாக. தீ தளராமல் தெளிந்து பிடித்த விசுவா சமும், வழுவாமல் நடந்து செய்த தருமங்களும் உன்னைச் சேசுகிறீஸ்துவோடே சேர்த்ததாகையால் அங்கே ஆண்ட வரை முகமுகமாய்க் கண்டு நீ கேட்ட மன்றாட்டை எளி தாய் அடைவாய் என்றார்.

மீளவும் இவருக்குமுன்னே 407-ம் வருஷத்தில் இறந்த அர்ச். யுவான் கிரிசோஸ்தொமுஸ் என்பவர் அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதின 2-ம் நிருபத்திற்கு வியாக்கியானம் பண்ணின புஸ்தகத்தில் 26-ம் பிரசங் கத்து முடிவில் எழுதின தாவது: சிலுவையில் அறையுண் டவருக்கு அடிமைகளாகிய அர்ச். இராயப்பர் சின்னப்பர் இவர்கள் திரு மேனி வைத்த கல்லறையை சேவிக்கவருங் கூட்டத்தினால் அது அரசர் வாழும் அரண்மனையினும் விளங் கின தல்லோ பூஷணம் அணிந்து, முடியைச் சூடினவர்க ளும், நெடுவழி நடந்து சென்று, கீழே விழுந்து, இந்த அர்ச்சியசிஷ்டவர்களைத் தமக்கு வேண்டி ஆண்டவரை மன் றாடச் சொல்லிப் பிரார்த்தித்துக்கொள்ளுகிறார்கள். தொ ழிற் செய்து உயிர் பிழைத்திருந்த அர்ச் சின்னப்பரும், இராயப்பரும் இறந்தபின்பு, தமக்கு உதவியாகும் படிக்குக் கிரீடஞ் சூடி, ஆள்பவர்கள் முதலாய் மன்றாடுகிறார்கள் என்றார்.

43.- மீளவும் அதற்கு முன்னே 3) 7-ம் வருஷத்தில் இறந்த அர்ச். அம்புரோசி என்பவர் கைம்பெண் முறை மை என்னும் புஸ்தகத்தில் எழுதின தாவது: ஆண்டவர் நமக்கு உதவியாகக் கட்டளையிட்ட சம்மனசுகளை நமக்காக வேண்டும் படிக்கு நாமே வேண்டிக்கொள்ளக்கடவோம். நமக்கு உதவுவார்கள் என்ற அடையாளமாக இங்கே தம் திருமேனியை வைத்த சாட்சிகளையும் மன்றாடக்கடவோம். தாம் குறை ஏதாகிலுஞ் செய்திருந்தாலும் அதுகளைத் தாங்கள் சிந்தின இரத்தத்தினால் கழுவினவர்களாகையால் அவர்களே நம்முடைய பாவங்களைத் தீர்ப்பதற்கு ஆண்ட வரை மன்றாட வல்லவர்களாய் இருக்கிறார்கள். தம் இரத் தத்தைச் சிந்தித் சர்வேசுரன் வேதத்திற்குச் சாட்சியாக இருந்தவர் இவர்கள் தாமே. நமக்குத் தலைவராக நின்றவர் கள் இவர்கள் தாமே. நாம் நடக்கும் முறைகளை நோக்கி அறிந்தவர்கள் இவர்கள் தாமே. ஆகையால் நமக்குள்ள குறைபாடுகளைத் தீர்க்க மன்றாடினவர்களாக அவர்களை எண்ணி, எக்காலமும் பிரார்த்தித்துக்கொள்ளக் கூசவுந் தேவையில்லை என்றார்.

44.- மீளவும் அதற்கு முன்னே 393-ம் ஆண்டில் இறந்த அர்ச். கிறகோரியு நிசெனுஸ், வேதசாட்சியாகிய அர்ச். தேயோதோரனுக்குத் தோத்திரமாகச் செய்த பிர சங்கத்தில் அவரைப் பார்த்து எழுதினதாவது : இந்நாள் வரைக்குங் குறையுங் கேடுமின்றி நாங்கள் வாழ்ந்திருப்பது உன் வேண்டுதலினால் எங்களுக்கு வந்த சகாயமென்று தோத்திரம் பண்ணுகிறோம். இனி வருங்காலத்து அழி வின்றி எங்களைக் காப்பாயாக என்று மிகவும் மன்றாடுகி றோம் என்றார். 390-ம் வருஷத்தில் மரித்த அர்ச். கிற கோரியு நதியஞ்செனோவெனில் அர்ச். சிப்பிரியானுக்குத் தோத்திரப் பிரசங்க முடிவில் எழுதின தாவது : உயரத்தி னின்று நீயே எங்களைப் பட்சமாய் நோக்கி எங்கள் வார்த் தையுஞ் செய்கையும் வழுவாதபடிக்கு நடத்துவாயாக என் றார்.

மீளவும் 378-ம் ஆண்டில் இறந்த அர்ச். எப்பிரேம் என்பவர் வேதசாட்சிகளைப் புகழ்ந்து சொன்ன பிரசங்கத் தில் எழுதினதாவது : இரட்சித்த நாதருக்கு வேண்டி மனம் பொருந்தி கொடிய உபாதைகளை அனுபவித்துப் பிரா ணனைத் தந்த தேவபத்தியளவாக ஆண்டவரோடு ஒருமித் துக் கூடி வாழும் வேதசாட்சிகளே, தேவ பத்தியாகிய திருக் கதிர் வீசுங் கிறீஸ்துவின் இஷ்டப் பிரசாதம் எங் கள் இருதயத்துட் புகுந்து விளங்கும்படிக்குத் துயரும், ஈனமும், நிறைந்த பாவிகளாகிய எங்களுக்காக வேண்டி, நீங்களே ஆண்டவரை மன்றாடுவதற்கு இரங்கவேண்டு மென்று வேண்டிக்கொள்ளுகிறோம் என்றார். அதற்கு முன்னே -293-ம் ஆண்டில் இறந்த நெகித்தாரி என்பவர் அர்ச். தேயோதோர் என்பவரைப் புகழ்ந்து சொன்னதாவது:

வேதசாட்சிகளினுள் விளங்கும் பெருஞ் சுடரே, மற்ற மோக்ஷவாசிகளினுள் மாட்சியால் உயர்ந்த திரு ஒளியே, ஆண்டவருடைய பிரசாதமே, திருச்சபைக்கு உறு திக் காவலே, எங்கள் குறைபாடுகளையும், தளர்ந்த இழிவு களையும், மறவா தவராய் இடைவிடாமல் எங்களுக்காக வேண்டி, ஆண்டவரை மன்றாடச் சலிக்கவேண்டாம் என் றார். மீளவும் 254-ம் வருஷத்தில் இறந்த ஒரிசென் என் பவர் புலம்பல் என்னும் புஸ்தகத்தில் எழுதின தாவது: நானே கீழே தெண்டனாக விழுந்து, நான் செய்த பாவத் தின் மிகுதியால் சர்வேசுரனை மன்றாட அஞ்சியிருக்க எனக்கு உதவியாகச் சகல மோக்ஷவாசிகளை வேண்டிக் கொள்ளத் தொடங்குவேன். அர்ச்சியசிஷ்டவர்களே துன் பத்தில் அழுந்தின அடியேனுக்கு ஆண்டவர் தயை செய் யும்படிக்கு நீங்களே வேண்டிக்கொள்ள வேண்டுமென்று மிகவும் மனம் வருந்திக் கண்ணீர்விட்டு அழுது உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றார்.

45.- குறித்த அளவு விரிந்து பெருகுமென்றும், கேட்டவர் சலித்து வருந்துவார் என்றும் அஞ்சேனாயின் இத்தகைப்பட்ட உதாரணங்களை நூறு நாமுகக் குவித்துக் காட்டுவது எளிதாம். ஆகிலுஞ் சொன்னது சால்பென்று இதிலே ஆலோசிக்கக்கடவதாவது : நாம் இற்றைவரைக் குஞ் சொன்னதெல்லாந் திரு அவதாரமாகி முதல் 500 வருஷத்திற்குள்ளே வேதபாரகர் எழுதின தாம். அவர்கள் எல்லோரும் மோக்ஷவாசிகள் வணக்கம் வழங்கினதாக எழு தினார்கள். ஆகையால் மோக்ஷவாசிகளைத் துதித்து நமக் காக ஆண்டவரை மன்றாடும் படிக்கு அவர்களை வேண்டிக் கொண்டு, செய்யப்படும் வணக்கம் முதல் 500 வருஷத்துத் திருச்சபையில் வழங்கினதாம்.

ஆகிலும் முதல் 500 வருஷத்துத் திருச்சபையில் வழங்கின முறை எல்லாம் நல்லதென்றும், வேதத்திற்கு ஒத்ததென்றும் பதிதருஞ் சொல்லுகிறார்கள். ஆகையால் அக்காலத்தில் வழங்கின மோக்ஷவாசிகள் வணக்கம் நல்ல தென்றும், வேதத்திறகு ஒத்ததென்றும் பதி தருஞ் சொல் லக்கடவார்கள். சொல்லமாட்டார்களாயின் அவர்களை மதிகெட்டவர்கள் என்றும், அக்கிரமக் கசடர் என்றும், சலஞ் சாதித்தவர் என்றும், தப்பறைக்கு அஞ்சாதவர்கள் என் றும், நியாயத்தை உதைத்தவர்கள் என்றும், தமக்குத் தாம் கண்ணைப் பிடுங்கின குருடர் என்றும், அக்கியானி கள் என்றும், வஞ்சகர் என்றும், சகல பாவத்திலும் அமிழ்ந்தினவர்கள் என்றும் உலகமெல்லாஞ் சொல்லக்கடவதா மல்லோ,