46. வானோருக்காசியும் மனிதருக்கு உறுதியும் பரி சுத்தக் கன்னியும் தேவமாதாவுமாயிருக்கிற அர்ச். மரியாய் என்பவளையும், மற்ற மோக்ஷவாசிகளையும் திருப்புகழாகத் துதித்து நமக்காக ஆண்டவரை அவர்கள் வேண்டிக் கொள்ள மன்றாடி, அவர்களுக்கு நாம் செய்யப்படும் வணக் கமே உத்தமமென்றும், வேதத்திற்கு ஒத்ததென்றும், திருச்சபையில் எப்போதும் வழங்கினதென்றும் ஒப்பித் தாயிற்றல்லோ. இம்முகத்து இழிபடத் தோற்ற பதிதர் அப்பாலே தாண்டித் தேவமாதாவையும் மற்ற மோக்ஷவா சிகளையுஞ் சொன்னபடி வணங்குவது நல்லதாயினும், அவர்கள் உருவங்களையும், சேசுநாதர் உருவத்தையும், சிலுவை முதலான துகளையும் உண்டாக்கி வணங்குவது அக்கியானம் என்பார்கள். அதற்கு மோயீசன் 2-ம் புஸ்த கத்து 20-ம் அதிகாரம், 3-ம் வசனத்தில் ஆண்டவர் திரு வுளம் பற்றினதாவது : நம்மையல்லாதே புறத் தேவர்கள் உனக்கு இல்லாமல் போவதாக. விக்கிரகங்களையும் உரு வங்களையும் உனக்குச் செய்யாதிருப்பாயாக என்றார். ஆகையால் விக்கிரகங்களையும் உருவங்களையும் உண்டாக்கி அதுகளை வணங்குவது வேதத்தில் ஆண்டவரால் விலக்கப் பட்ட அக்கியானமாமே என்று பதிதர் சொல்லுகிறார்கள்.
ஆயினும் அப்படியே ஆண்டவர் முழுதும் உருவங்களை விலக்கினார் என்று நாமும் ஒத்துக்கொண்டாலும் இதனாலாவதென்ன? பழைய வேதத்தில் இது விலக்கின தொழியச் சேசுநாதர் ஸ்தாபித்த திருச்சபையிலும் விலக்கினதென்று சொல்லவேண்டுமோ? இல்லையே. பழைய வேதத்தில் மூன்றாங் கற்பனையாகக் சனிக்கிழமைத் திருநாள் என்று வேலை செய்ய ஆண்டவர் விலக்கியிருக்கச் சேசுநாதர் திருச்சபையில் இது விலக்கினதில்லை என்று நாமும் பதிதருங் கூடச் சனிக்கிழமையில் திருநாளை ஆசரியாமல் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடுகிறோமல்லோ? பழைய வேகத்தில் சனிக்கிழமை வேலை செய்வது பாவமாகி இப்பொழுது அது பாவமல்ல.
அப்படியே பழைய வேதத்தில் சுரூப வணக்கம் பாவமாகி இப்பொழுது அதுவும் பாவமல்ல. முன் சொன்னதை பதிதரும் ஒத்துக்கொண்டதின் மேல் பின் சொன்னதை ஒத்துக்கொள்ளாமலென்ன? அதற்கு அவர்கள் ஆண்டவர் பழைய வேதத்தில் விலக்கின சுரூப வணக்கம் இப்பொழுதும் விலக்கின தல்ல வென்று வேகத்தில் எழுதினது எங்கே என்று கேட்கிறார்கள். ஆகிலும் ஆண்டவர் பழைய வேதத்தில் விலக்கின சனிக்கிழமை வேலை இப்பொழுதும் விலக்கினதல்லவென்று வேதத்தில் எழுதினது எங்கே என்று பதிதர் தாமே சொல்லக்கடவார்கள். எங்கும் எழுதியிருக்கவில்லை என்று நிச்சயமாகையில் சனிக்கிழமை விட்டு ஞாயிற்றுக்கிழமையை திருநாளாக நம்மோடு கூடப் பதிதருங் கொண்டாடுகிறபோது வேதத்தில் எழுதியிராமலே மற்றத் திருச்சபையோடு அவர்களுஞ் சுரூபங்களை வணங்காமலென்ன?
இதற்குப் பதிதர் சொல்லுந் தன்மையாவது: பழைய வேதத்தில் ஆண்டவர் உலகம் உண்டாக்கின சகாயத்தை நினைக்கும்படிக்கு ஞாயிறு துவக்கி ஆறு நாளாய் வெள்ளி மட்டும் வானம் முதல் எல்லாவற்றையும் உண்டாக்கின பின்பு, சனிக்கிழமை அவர் இளைப்பாறினதுபோல மனித ரும் இளைப்பாறி அன்று திருநாளாகக் கொண்டாட நியா யம் என்றும், பழைய வேதத்தில் கற்பித்திருந்ததாம். இப் பொழுது சேசுநாதர் நம்மை இரட்சித்த சகாயத்தை நினைக்கும்படிக்கு அவர் நமக்காகப் பாடுபட்டுச் சிலுவை யில் அறையுண்டு மரித்தடக்கப்பட்ட மூன்றாம் நாள் ஞாயிற் றுக்கிழமையில் கல்லறையைவிட்டெழுந்தருளினார் என்றும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரன் ஞாயிற்றுக்கிழமை யில் திருச்சபையிலெழுந்தருளினார் என்பதையும் பற்றி, முன் கற்பித்திருந்த சனிக்கிழமையை விட்டு, ஞாயிற்றுக் கிழமையை திருநாளாகக் கொண்டாட நியாயத்தின்படியே திருச்சபைக் கட்டளையிட்ட முறைமை என்று பதிதர் சொல்ல வருகிறார்கள். அவர்கள் சொன்னதை நாமுஞ் சொல்லுவது நியாயந்தானே .
ஆகிலும் அப்படியே பழைய வேத நாளிலே அரூபியாய் நின்ற சர்வேசுரனுஞ் சம்மனசுகளுமல்லாமல் உருவமுள்ளவர் ஒருவராயினும் அப்போது மோக்ஷத்தில் இல்லாமையால், அந்நாளிலே சுரூப வணக்கமாகாதென்று வேதத்தில் விலக்கப்பட்ட தாமே. சேசுநாதர் திரு அவதாபஞ் செய்து, நம்மை இரட்சித்த பின்பு, அரூபியாய் நின்ற சர்வேசுரன் உருவமாகிச், சர்வேசுரனும் மனுஷனும் ஒன் றாகிய சேசுநாதரும், அவரை ஈன்ற தேவமாதாவும், மட் டில்லாத அர்ச்சியசிஷ்டவர்களுங் கண்டிப்புள்ளவர்களாகி மோக்ஷத்திலே வாழ்ந்திருக்க அவர்களை நாம் நினைக்கவும், வணங்கவும், வேண்டிக்கொள்ளவும் அவர்களைக் காட்டின உருவங்களைச் செய்து, முறையோடு வணங்க நியாயத்தின் படியே திருச்சபை கட்டளையிட்ட முறைமை என்று சொல்லத்தகுமே .
இந்நாளிலே ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாகவும், உருவங்களை வணங்கவும் வேதத்தில் எழுதியிராமலும் சேசுநாதர் ஸ்தாபித்த திருச்சபை கட்டளையிட்டதினால், சேசுநாதர் திருச்சபைக்குப் படிப்பித்த முறை என்று எல் லோரும் விசுவசித்து அநுசரிக்கக்கடவோம். இதிலே பதிதர் நம்மோடு ஒன்றை ஒத்துக்கொண்ட பின்பு, மற் றொன்றை ஒத்துக்கொள்ள மாட்டாமல் சலஞ்சாதிப்பது ஆங்காரமல்லோ? அப்படியே லுத்தேர் முதலாய்ச் சந்தே கமில்லாமற் சொன்னான். தன்னை அல்லாத சில பேர்கள் நாம் வணங்குஞ் சேசுநாதர் சுரூபங்களையும், தேவமாதா மோக்ஷவாசிகள் உருவங்களையும் இடித்து உடைத்து அன லிற் சுட்டார்களென்று அறிந்து மிகவும் அவர்களைக் கோபித்து, 1525-ம் ஆண்டில் அவர்களைப் பரலோகத் தீர்க்கத் கரிசிகள் என்று நகைப்பாகச் சொல்லி, அவர் களுக்கு விரோதமாக ஒரு புஸ்தகத்தை உண்டாக்கினான்.
அதை இரு வகுப்பாகப் பிரித்து முதல் வகுப்பிலே அரூபியான சர்வேசுரன் உருவமுடையதென்று, அவருக்கு வைத்த சுரூபங்களை மாத்திரம் பழைய வேகத்திலே விலக் கினதொழியக், கிறீஸ்துவின் சுரூபங்களும், சிலுவை உரு வமும், தேவமாதா மற்ற மோக்ஷவாசிகள் வடிவுகளும் விலக்கினதல்லவென்றும், அதுகளை விலக்கினவர் யூதராக வேண்டுமொழியக் கிறீஸ்துவர்களல்ல வென்றுஞ் சொல்லக் கடவோம் என்று விரிவாகச் சொல்லி ஒப்பித்தான். இதோ லுத்தேர் சாட்சியாக முதலாய் அந்த வேத கற்பனையால் பழைய வேதத்திலொழிய இப்போது நாம் வணங்குஞ் சுரூபங்கள் விலக்கப்பட்டதல்ல.
47. ஆயினும் முன் சொன்ன வேத கற்பனையிலே ஆண்டவர் முழுதுஞ் சுரூபங்களை விலக்கினவருமல்ல என்று நாம் இங்கே ஒப்பிப்போம், அதெப்படியென்றால், இந்நாட்டில் என்னை அரசனல்லாதே வேறே அரசரை வணங்கவேண்டாம் என்று இராசா கற்பித்தமையால், தன்னை ஈன்ற பிதாவையும், படிப்பித்த உபாத்தியாயரையும் அறநெறி நிறுத்திய குருவையும், மற்றப் பெரியோரையும் வணங்க விலக்கினான் என்றால் மதிகெட்ட ஒருவன் சொல்லுந் தன்மையாகுமல்லோ? ஆகையால் சொன்ன வேத உதாரணத்தால் சர்வேசுான் விலக்கினதாவது: நம் மையன்றிப் பல தேவரை வணங்கவும் வேண்டாம், பல விக்கிரகங்களையும் உருவங்களையுந் தேவர்களாக வைத்து வணங்கவும் வேண்டாம் என்று விலக்கினாரொழிய முழு தும் உருவங்களை விலக்கினவரல்ல. இல்லாவிட்டால் அந் தப் புஸ்தகத்திலே தானே 25-ம் அதிகாரத்தில் எழுதப் பட்டபடி ஆண்டவர் தாமே உருவில்லாத சம்மனசுகளைக் காட்டின இரு உருவங்களைத் தூய தங்கத்தால் உண்டாக் கச் சொல்லி, கோயிலிலே பூசை பண்ணுமிடத்து வேதம் எழுதின இரு கல்லை வைத்த பேழையின் மேலே வைக்கச் சொல்லிக் கட்டளையிடுவானேன்?
உருவம் எல்லாம் அக்கியானமாகில், அந்த அக்கியா னத்தைத் தாமே தமக்குப் பூசை வழங்கின விடத்து வைக்கச் சொல்லுவாரோ? இல்லையே. ஆகையால், தம்மை யல்லாத தேவராக வணங்கத்தகும் உருவங்களை விலக்கின தொழியக் கோயிலிலே முதலாய்ப் புறத் தேவராக வணங் காமல் வைத்த உருவங்களை விலக்கினவரல்ல. அப்ப டித்தானல்லோ அர்ச். சின்னப்பர் திமோத்தேயுஸ் என்ப வருக்கு எழுதின முதல் நிருபத்து முதல் அதிகாரம் 17-ம் வசனத்தில் சர்வேசுரன் ஒருவருக்கே சங்கையும், புகழுந் தகும் என்றார். என்றாலும், மற்றவர்க்கு எவ்வகைச் சங்கை யாயினும் தகாது என்னலாமோர் தகாதெனில், பிதாவை யும், மாதாவையுஞ் சங்கித்திருப்பாயாக என்று நாலாங் கற்பனையில் சொல்வதென்ன?
எல்லோரையுஞ் சங்கை செய்யுங்கள் என்று அர்ச். இரா யப்பர் முதல் நிருபத்து உ-ம் அதிகாரத்தில் 13-ம் வசனத் தில் எழுதினதென்ன? ஆகையால், அர்ச். சின்னப்பர் சொன்னதற்கு அர்த்தமேதெனில், தேவ சங்கையும் தேவ புகழுஞ் சர்வேசுரனுக்கொழிய மற்ற ஒருவருக்குந் தகா தென்பது ஆகுமல்லாமல், வேறே எவ்வகைச் சங்கையாயி னும் பிறருக்குச் செய்யலாகாதென்று அவர் சொன்னதாகச் சொல்லவும், கருதவுங் கூடாது. அப்படியே தேவராக உருவங்களை ஆக்கவும், வணங்கவும், வேண்டாம் என்று சர்வேசுரன் விலக்கினாரென்று சொல்ல வேண்டு மொழிய, மற்ற எவ்வகை உருவங்களையுஞ் செய்ய வேண்டாமென் றும், அதுகளுக்கு எவ்வகை வணக்கமும் இடவேண்டா மென்றும் விலக்கினதாக எண்ணத் தேவையில்லையே.
43. இதெல்லாம் இப்படியாகையில் திருச்சபை உருவங்களைச் செய்து வணங்கும் வகையை ஆண்டவர் விலக் கினவரல்லவென்று ஒப்பிப்போம். அதெப்படியெனில் உருவங்களுக்குச் செய்த வணக்கம் அதுகளை விட்டு அப் பாலே நிற்கும் பொருளைச் சேராமல் அவ்வுருவங்களைச் சேர்ந்ததாகில் அக்கியானந்தானே. அவ்வுருவங்களை அடையாளமாக வைத்துச் செய்த வணக்கம் அப்பாலே தாண்டிச் சேரும் பொருள் அவ்வணக்கத்துக்குரியதல்ல வெனில் அதற்குச் செய்யும் வணக்கமும் அக்கியானந் தானே. ஆகையால் தேவன் அல்லாதவனைத் தேவனாக எண்ணி, அவன் உருவத்தை வணங்கினால் அக்கியானம் என்னத்தகுமே.
நாமோவெனில் சேசுநாதர் உருவை நோக்கிச் செய் யும் வணக்கம் அதிலே நில்லாமல், அவ்வுரு அடையாள மாத்திரமாகக் காட்டின நாதரைச் சேருதலினாலுஞ் சிலு வைக்குச் செய்த வணக்கமுஞ் சிலுவையில் நில்லாமல் நமக் காக வேண்டிச் சிலுவையில் அறையுண்டு இறந்த நாதரைச் சேருதலினாலும் முதல் வகை அக்கியானமில்லை. மீளவுஞ் சேசுநாதர் மெய்யான தேவனாகையால் அவ்வுருவங்களுக்கு நாம் செய்யுந் தேவ வணக்கம் அவருக்குரியதாகக்கொள்ள இரண்டாம் வகை அக்கியானமுமில்லை. அப்படியே தேவ மாதாவையும், மற்ற மோக்ஷவாசிகளையுங் குறித்து வைத்த உருவங்களை வணங்கினபோதும், அதுகளை அடையாள மாக மாத்திரம் எண்ணுவதொழிய, தேவ வணக்கஞ் செய்யாமல், போன அதிகாரத்தில் சொன்ன படியே தேவ மாதாவுக்குரிய உத்தம ஆராதனையும், மற்ற மோக்ஷ வாசிகளுக்குரிய வணக்கமுமாத்திரஞ் செய்தமையால் இரு வகை அக்கியானமும் இல்லை.
இது இன்னம் வெளியாகும்படிக்கு நாம் நற்கருணை யை வணங்கும் முறையைப் பார்க்கக் கடவோம். அதெப்ப டியென்றால், திவ்விய நற்கருணையை நாம் வணங்கும் போது, அதுவே சேசுநாதரென்று வணங்குகிறோம் அல்லோ ? அப்படியே சேசுநாதர் சுரூபங்களையும், அவர் தாமென்று வணங்கினோமாகில் அக்கியானந்தானே. நா மோவெனில், நற்கருணை சேசுநாதருக்கு அடையாளமாத் திரம் ஆகாமல் அவர்தாம் அங்கே இருப்பவரென்று நிச்ச யமாகச் சொல்லுவதொழியச் சேசுநாதர் சுரூபங்கள் அவ ரல்லாது அவரைக்காட்டும் அடையாளமாத்திரமென்று ஸ்திரமாய் எண்ணி , வைத்த சுரூபங்களால் சேசுநாகரை நினைத்து, அந்தச் சுரூபங்களில் நில்லாமல் அவரை வணங் குகிறோம் அல்லோ ?
இத்தன்மையால் உரியமுறையோடு மற்றச் சுரூபங் களை வணங்கினதினால் திருச்சபை கட்டளையிட்ட முறை யில் நாம் வைத்த சுரூபங்களைக் குறித்துச் செய்யும் வணக் கம் ஆண்டவரால் விலக்கப்பட்ட விக்கிரக வணக்கம் அல்ல. மீளவும் அடையாளமாக வைத்த உருவங்களை நாம் வணங் கும்போது, மனிதர் கையால் செய்யப்பட்ட பொருளை வணங்குவோமென்றும்; பொன், வெள்ளி, செம்பு, மர மென்று அதுகளை வணங்குவோமென்றும், சொல்லவும் கருதவுங் கூடாது.
49. உருவங்களைச் செய்து வணங்கும்படிக்குத் திருச்ச பையில் வழங்கின முறையின் நியாயமோவெனில், செய்த உருவங்களைக் கண்டு அனைவரும் அவ்வுருவங்கள் அடை யாளமாகக் காட்டுகிற சேசுநாதரும், தேவமாதாவும், மற்ற மோக்ஷவாசிகளும் நன்னெறி வழுவாமல் செய்த தருமங்களை நினைத்து, நாமும் ஒத்த நெறியில் போகத் துணிவதற்கு உபாயமாக வழங்கின முறைமையாகும். உருவங்களோ எழுத்து வாசனை அறியாதவரும் வாசிக்கத்தகும் ஒரு புஸ்தகமாமே. ஒரு பார்வையினால் முழுதும் வாசிக்கத் தகும் தேவ நூலாமே.
மீளவும் அதிலே ஒரு பார்வையினால் சகலதையும் ஒருபட அறிவதொழிய, காதால் கேட்டு உணர்தலினும், கண்ணால் கண்டு அறிவது உறுதியாமே, அப்படியல்லோ கண்ணால் கண்டதின் முன்னே, காதால் கேட்டது நில்லா தென்பார். அப்படியல்லோ அவனவன் வாய்மொழியால் காதிற்கு உணர்த்தின தொழிலைத் தாம் அதைச் செய்து, கண்னுக்குக் காட்டுவார். அப்படியல்லோ பாடுபட்ட கர்த்தர் சுரூபத்தைக் கண்ட வளவிற் பரலோகத்தையும் பூலோகத் தையும் உறவாக்கின சுவாமி எம்மேல் இயங்கி, மனிதனாய்ப் பிறந்து, எளிதாய்த் திரிந்து, நம்மால் ஆற்றாத கொடூர பாவ வினைகளைத் தீர்க்க அதுகளைத் தம்மேற் போட்டுக்கொண்டு, நம்மை இரட்சித்துப் பரமகதி மோக்ஷவாசலைத் திறந்து, நாம் அங்கே என்றென்றைக்கும். வா பூம்பொருட்டு, தாம் அடிபட்டு, நிந்தைப்பட்டு, முண்முடி சூட்டித், தாமே சுமந்த நெடுஞ் சிலுவையின மேலே பெரும் இருப்பாணிகளினால் அறையுண்டு, இரத்தமுஞ் சிந்தி, உயிருந்தந்து, கொடிய மரணத்தை மனம் பொருந்தி அடைந்தாரென்று ஒரு பார்வையாகக் கண்டறிந்து, நாம் மன நொந்து உருகவும், அவர்மேல் இரங்கி வருந்தவும், பாவங்களை ஒழித்து வெறுப்பதும், திறந்த மோக்ஷ இராச்சியத்தில் செல்லத் துணியவும் உறுதியாகும் அல்லவோ.
அவ்வண்ணமே தேவமாதாவையும், மற்ற மோக்ஷவா சிகளையுங் குறித்து, அடையாளமாக வைத்த பல சுரூபங் களைக் கண்ட வளவில் கண் வழி உறுதி, உணர்ச்சியாகித் தெளிநினைவு எழும்பி அவர்கள் கொண்ட பொறுமையால் நமது கோபம் மாறவும் , அவர்கள் காட்டின தாழ்ச்சியால் நமது ஆங்காரந் தணியவும், அவர்கள் முடித்த தவத்தால் நமது காமம் ஒழியவும், அவர்கள் நடந்த அறத்தின் ஒழுக் கத்தால் நமது பாவந் தவிர்ந்து போகவும் உதவுமல்லோ . அப்படியே, அர்ச். யுவான் குவால்பேர் த்தென்பவர் தன் தம்பியைக் கொன்ற பகையாளிபைத் தனியே கண்டு, அவனைக் கொல்லக் கையை ஓங்கின வளவில் அவன் விரித்த கையால் காட்டின சிலுவையின் அடையாளங் கண்டு, தம் பாவக்கைப் பொறுக்கச் சேசுநாதர் சிலுவையில் அறை யுண்டு இறந்ததை நினைத்துத், தாமும் பகையை விட்டுப், பகைவனைத் தம்பியாகக் கட்டிக்கொண்டார். அதன்பின்பு, கோயிலினுட் புகுந்து, பாடுபட்ட கர்த்தர் சுரூபத்தைத் தெண்டனாக வணங்கும்போது, நீ நமக்குப் பிரியமாக நன் றாய்ச் செய்தாயென்றாற்போலச் சேசுநாதர் சுரூபந் தலை குனிந்து, தம்மை இன்பமாக நோக்கக் கண்டார். கண்ட மாத்திரத்தில் உள்ள முருகி, வேறாகி, உலக செல்வங்களை வெறுத்துச், சந்நியாசம் பண்ணி அர்ச்சியசிஷ்டவரானார்,
அப்படியே வேறொருவன் நெடுநாள் ஆசை வைத்த ஸ்திரீ உடன்பட்டு, நடுச்சாமத்தில் அவள் அண்டைக்குப் போய்ப், பலநாள் உட்பற்றி எரிந்த ஆசையால், பாவத் திற்கு அமையும்போது, அவள் மார்பில் அணிந்திருந்த பாடுபட்ட கர்த்தர் சுரூபத்தைக் கண்டு அஞ்சி, என் ஆண் டவர் பாவங்களை ஒழிக்கச், சிலுவையில் அறையுண்டிருக்க, நான் நீசச் சுகத்தை விரும்பிப், பாவம் இன்பமென்று முடிப்பதோவென்று தேறி, அவளைத் தீண்டாமற் போய் நெடுநாள் அருந்தவஞ் செய்தான். இத்தகைப்பட்ட வர்த் தமான கெள் ஆயிரம் உண்டாயினும் அதுகளை விட்டு அக்கி யானியாய்ப் பாவத்திலமிழ்ந்தின உணர்வினளாய், உயிரும், நாணமும், உடலும் விற்றுக்கொள்ளும் பாவத்தால் பிழைத் தவளான, வேசி ஒருத்தி தன் தொழிலை முடிக்கப் போகை யில், பெரிதோர் படத்தில் எழுதப்பட்ட ஒரு ஞானியாகிய போலேமோனென்பவன் தன்னைச் சினந்து பார்த்த பாவ னையாகக் கண்டவுடனே பொருள் ஆசையும், காமத்தாசை யும் மாறி, மனது கூசி வெட்க, நினைத்த தின்மையை முடிக்காதே போனாள்.
இதெல்லாம் இப்படியாகையில் சேசுநாதரையும், அவர் திருமாதாவையும், மற்ற அர்ச்சியசிஷ்டவர்களையும் காட்டின அடையாளச் சுரூபங்களை வடிவோடு உண்டாக்கி, எவரும் வாசிக்கத்தகுந் தேவ நூலாக வைத்த முறையின் உத்தம் நியாயமாமே. இதனால் எவருக்குந் தோன்றுமென் பதற்குச் சந்தேகமில்லை இதனால் உரோமான் திருச்சபை யைத் தோத்திரஞ் செய்து, லுத்தேர் முதலாய்த் தனிப் பூசை விலக்க எழுதின புஸ்தகத்தில், 1534 ம் ஆண்டிற் றானே உரோமான் திருச்சபையினின்று பிரிந்த பதினேழு வருஷமான பின் சொன்னதாவது: உரோமான் திருச்சபை மெய்யான திருச்சபை என்றும், சத்தியத்தைத் தாங்கின தூண் அதுவே என்றுஞ் சொன்ன பின்பு, சர்வேசுரன் அற்புதமாக உரோமான் திருச்சபையில் சில வேத முறை கள் வழுவாதபடிக்குக் காத்துக்சொண்டிருந்தாரென்று அதுகளை எண்ணி, ஞானஸ்நான முதற் பலவுஞ் சொன்ன தின்மேல் சாகிறவர்களுக்கு ஆறுதலும், உறுதியுமாகச் சிலுவையில் அறையுண்ட கர்த்தர் சுரூபமும், அதனோடு அவர் பாடுபட்டு அடைந்த மரணத்தின் நினைவும், உத்தம முறையாக உரோமான் திருச்சபையில் ஆண்டவர் தாமே காத்து நிறுத்தினாரென்று எழுதினான்.
இதனைப்பற்றி லுத்தேர் செத்து மூன்று வருஷமாகி, 1549-ம் ஆண்டில் அவன் வீற்றிருந்த இராசதானியாகிய வித்தெம்பேர்க் நகரில் அவன் சீஷர்களே லுத்தேர் எழுதினதெல்லாஞ் சேர்த்து அச்சிட்டு தலைப்பில் லுத்தேரும், அவனை ஆதரித்த சக்சோனிய துரையும், ஒரு பெருஞ் சிலுவையில் பாடுபட்ட கர்த்தர் சுரூபத் தின் முன்னே கைகூப்பி முழங்காலிலிருக்க எழுதி வைத் தார்கள். இச் சுரூபத்தை நெடுநாளைக்குப் பிறகு லுத்தேரானிகளில் ஒருவனுக்குக் காட்டினபோது, லுத் தேரானிகள் செய்வித்ததென்று கண்டு, மிகவும் அதிசயப் பட்டபின்பு, லுத்தேர் முதலாய்ச் சுரூபங்களை வணங்கின பாவனை எழுதித் தந்து, பிறகு சுரூபங்களை வணங்குவது அக்கியானமென்று, லுத்தேரானிகள் மனிதரை ஏய்க்கப் படிப்பிக்கிறார்களோ. இதிலே நம்மை ஏய்த்தபடி மற்ற முறைகளிலேயும் நம்மை ஏய்த்தவரென்று அஞ்சுவது நியாயமல்லோவென்று, லுத்தேர் மதத்தை வெறுத்து, உரோமன் திருச்சபையில் உட்பட்டுத் தருமவானாக நடந் தான்.
50. பின்னையும் பதிதர் தாமே தம்முடைய இராசா உருவையும், இறந்துவிட்ட பெரியோர் உருவங்களையும் உருவாக்கி அதற்குரிய வணக்கத்தோடு ஏற்றுக்கொண்டு வருகிறார்களே. இப்படிச் செய்து கொண்டு வருகையில் சர் வேசுரன் மொத்தமாய் , பொதுவாய், முழுதாய்ச் சுரூபங் களையும், உருவங்களையும் விலக்கினவர் அல்லவென்று காமுஞ் சொல்ல வேண்டியிருக்குமே. ஆகையால் பாவிக ளாய் நடந்து, நாகில் என்றென்றைக்கும் வேகா நிற்கும் சிலரைக் காட்டின் உருவங்களை முதலாய்ப் பதிதர் தாமே செய்வித்துப் பூச்சியத்துடனே வைத்திருக்க நாம் சேசு நாகனாயும், தேவமாதாவையும், மோக்ஷத்தில் வாழும் மகாத்துமாக்களையுங் குறித்துச் சுரூபங்களை உண்டாக்கு தலே மாத்திரம் ஆண்டவரால் விலக்கப்பட்ட அக்கியான மென்று வெட்கமில்லாமல் சொல்லுவதென்ன?
பதிதர் தாம் தம்முடைய கண்ணைப் பிடுங்கினதினால் மற்றவருக்கு ஒளி தெரியாதோ என்ன? உச்சிப் பகலினும் விளங்கின நியாயத்தை மற்றவருக்குத் தாமே மறைப்பார் களோ என்ன? நாம் செய்யுஞ் சுரூபவணக்க முறையில் அக்கியானம் உண்டென்று மதி கெட்டவனுஞ் சொல்ல மாட்டாமல் சலஞ்சாதிக்க, வெட்கமில்லாமல் நியாயமெல் லாம் மிதித்து, உதைத்த பாவிகளாகிய பதிதர் மாத்திரங் கூசாமல் சொல்லுவார்கள். சொன்னாலும் அவர்களுக் குள்ள அறிவீனமும், பகை அகோரமும், ஆங்காரமும் மிகுதியுந் தோன்று மொழியத் திருச்சபையில் வழங்கின உத்தம வேதமுறைக்கு ஒரு குறையும் வராதென்பது நிச்சயந்தானே.