நித்திய சீவியம்

1. விசுவாசப் பிரமாணத்தின் 12-ம் பிரிவைச் சொல்லு. 

“நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.” 


2. நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன் என்பதினால் என்ன விசுவசிக்கிறோம்?

இப்போதுள்ள சீவியத்துக்குப் பிறகு முடிவில்லாத ஓர் சீவியம் உண்டென்பதை விசுவசிக்கிறோம்.


3. உயிர்த்தபின் மனிதனுடைய நிலை எத்தன்மையாயிருக்கும்?

உயிர்த்தபின் மனிதனுடைய ஸ்திதி சாவில்லாமலும், மாற்றமில்லாமலும் எந்நாளும் ஒரே நிலைமையாயிருக்கும். ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் சீவியம் நித்திய காலமும் நீடித்திருக்கும்.


4. இந்த சீவியத்துக்குப் பிறகு வேறொரு சீவியம் அவசியமா? 

அவசியம். ஏனெனில், நல்லவர்களுக்குச் சம்பாவனை அளிக்கவும் பாவிகளுக்குத் தண்டனையிடவும், மற்றொரு சீவியம் வேணுமென்பது வெளிப்படை.


5. உயிர்த்தபின் மனிதர் சாகாமல் நித்தியமாய்ச் சீவிப்பார்கள் என்பது நிச்சயமா? 

(1) இது திருச்சபை போதிக்கும் விசுவாச சத்தியம்.

(2) பழைய ஏற்பாட்டில் இச்சத்தியம் வெளிப் படுத்தப்பட்டிருக்கிறது (சர்வப்பிர. 31:10).

(3) சுவிசேஷத்தில் சேசுநாதர் அநேக விசை இதை உறுதியாய் அறிவித்திருக்கிறார் (மத். 18:9, 19:29).