அப்போஸ்தலத்துவம்

1. மெய்யான திருச்சபையின் 4-ம் அடையாளத்தைச் சொல்லு.

அப்போஸ்தலிக்காயிருக்க வேண்டும்.


2. அதற்கு அர்த்தமென்ன?

திருச்சபையானது அப்போஸ்தலர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட போதனைகளையும், தேவத்திரவிய அநுமானங் களையும், ஒன்றையும் மாற்றாமலும், விடாமலும் முழுதும் காப்பாற் றியும், தன்னை ஆண்டுவரும் அதிகாரிகள், அப்போஸ்தலர்கள் கால முதல் இடைவிடாமல் தொடர்ந்தும் வரவேண்டுமென்றும் அர்த்த மாகும்.


3. திருச்சபையானது அப்போஸ்தலிக்காயிருக்க வேண்டுமா? 

(1) சேசுநாதர் தமது திருச்சபையை அர்ச். இராயப் பரின் மேல் கட்டி, அதை அப்போஸ்தலர்கள் மூலமாய் மாத்திரம் ஸ்தாபிக்கச் சித்தமானார்.  ஆதலால் “நீங்கள் அப்போஸ்தலர்களின் அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கிறீர்கள்” என்று அர்ச். சின்னப்பர் எழுதி வைத்தார் (எபே.2:20).

(2) சேசுநாதர் தமது அப்போஸ்தலர்களைத் திருச் சபையின் முதல் மேற்றிராணிமார்களாகத் தெரிந்து கொண்டார்.


93. மெய்யான திருச்சபை அப்போஸ்தலிக்காக இருக்கிற தெப்படி?

மெய்யான திருச்சபை அப்போஸ்தலர்களுடைய போதனையைப் போதித்து, அவர்களிலிருந்து ஞான அதிகாரத்தை உண்மையாய்ப் பெற்றவர்களால் ஆளப்பட்டு வருகிறதினாலேதான்.


1. கீழ்த்திசையிலிருக்கும் கிரேக்க சபை முதலிய பிரிவினைச் சபைகள் அப்போஸ்தலிக்காக இருக்கின்றனவா?

பிரிவினைக்காரர்களிடம் மெய்யான விசுவாச சத்தியங்களும், தேவத்திரவிய அநுமானங்களும் இருக்கக்கூடும். அந்தச் சபைகளை ஆண்டுவருகிறவர்கள் அப்போஸ்தலர்களுடைய ஸ்தானத்தில் நியாயமான முறைமைப்படி ஞான அதிகாரம் பெறாதவர்களாயிருக்கிறார்கள்.  ஏனென்றால் அந்தச் சபைகள் ரோமான் திருச்சபையினின்று என்றைக்குப் பிரிந்து போனார்களோ, அன்றைக்கே அவைகளுக்கு அப்போஸ்தலர்களோடுள்ள தொடர்ச்சி முடிவு பெற்றது.


2. புரோட்டஸ்டாண்டு மதங்கள் அப்போஸ்தலிக்காக இருப்பவையா? 

இல்லை.  ஏனென்றால்:

(1)  அவை அப்போஸ்தலர்கள் போதித்த வேத சத்தியங்களையும், பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறதில்லை.  அவைகள் பற்பல சத்தியங்களைத் தள்ளிவிட்டு, ஏழு தேவத்திரவிய அநுமானங்களில் சிலவற்றை மாத்திரம் அங்கீகரித்துக் கொண்டு மற்றதைத் தள்ளிப் போட்டன.  மேலும் அப்போஸ்தலர்கள் போதித்த படிப்பினை மாறாமல் எப்போதும் ஒருவிதமாய் நிலைத் திருக்கிறது.  ஆனால் புரோட்டஸ்டாண்டு மதங்கள் போதிக்கிற போதகங்களோ அடிக்கடி மாறுகின்றன. 

(2) அப்போஸ்தலர்களோடுள்ள தொடர்ச்சி அவை களுக்கு இல்லை.  ஏனெனில் அந்த மதங்கள் ரோமன் திருச்சபை யினின்று பிரிந்து போனது என்றைக்கோ, அன்றைக்கே அவை களுக்கு அப்போஸ்தலர்களோடுள்ள தொடர்ச்சி முடிவு பெற்றது.

(3) மேலும் புரோட்டஸ்டாண்டு மதங்களை ஆண்டு வருகிறவர்கள், தங்கள் அதிகாரத்தை விசுவாசிகளிடத்தினின்று  பெற்றுக் கொள்ளுகிறார்களென்று சொன்னதினாலே, அவர்கள் அப்போஸ்தலர்களோடுள்ள தொடர்ச்சியை இழந்துவிட்டார்கள்.


3. அப்போஸ்தலிக்கு என்னும் அடையாளம் கத்தோலிக்க திருச்சபையில் உண்டா? 

உண்டு.  ஏனென்றால்:

(1) அப்போஸ்தலர்கள் போதித்து வந்த வேத சத்தியங்களும், அவர்கள் தங்கள் வாய்மொழியாகப் போதித்த யாவும் கத்தோலிக்க சபையில் எக்காலத்திலும் மாறாமல் படிப்பிக்கப்பட்டு வருகின்றன.

(2) அது சேசுநாதர் ஸ்தாபித்த ஏழு தேவதிரவிய அநுமானங்களை அங்கீகரித்துவருகிறது.

(3) நமதாண்டவரால் அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஞான அதிகாரம் இந்நாள் வரையில் இடைவிடா மல் அதில் இருந்திருக்கிறது.  அர்ச். இராயப்பர் வேதத்துக்குச் சாட்சி சொல்லி மரணித்தபின், அவருக்குப் பதிலாக வந்தவர்கள் ரோமா புரியில் இருந்த சபையை ஆண்டுவந்தார்கள். முன்சொன்னபடி அந்நாள் முதல் இந்நாள்வரையில் அர்ச். இராயப்பருக்குப் பதிலாளியாகிற 268 பாப்பானவர்கள் ரோமாபுரி மேற்றிராணியாராயிருந்து இடைவிடாமல் திருச்சபையை நடத்தி வந்திருக் கிறார்கள்.


4. கடைசியாய் தீர்மானிக்க வேண்டியதென்ன? 

சேசுக்கிறீஸ்துநாதரின் மெய்யான சபைக்குரிய காணக்கூடிய நான்கு அடையாளங்கள் ரோமன் திருச்சபையில் மாத்திரம் இருக்கிறபடியால், அதுவே சேசுகிறீஸ்துநாதரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான திருச்சபையென்று தீர்மானிக்க வேண்டும்.