கத்தோலிக்கத் திருச்சபைக்கான பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்!
கிறீஸ்துவே கிருபையாயிரும்!
சுவாமி கிருபையாயிரும்!

திருச்சபையை நிறுவிய கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!

போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து எங்களை எச்சரித்த கிறீஸ்துவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்!

பரலோகப் பிதாவாகிய சர்வேசுரா! எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

உலகத்தினை மீட்ட சுதனாகிய சர்வேசுரா! எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி !

இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரா! எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி!

அர்ச்சியசிஷ்ட தமதிரித்துவமாகிய ஏக சர்வேசுரா! எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி!

திருச்சபையின் தாயாகிய பரிசுத்த மரியாயே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

கடைசி யுத்தத்தில் எமது கேடயமும், தளபதியு மான அர்ச். மிக்கேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

திருச்சபையின் பாதுகாவலராகிய அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இயேசு கிறிஸ்து கட்டிய தமது திருச்சபையின் அஸ்திவாரமாகிய அர்ச். இராயப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இறுதி வரை நிலைத்து நிற்கும் சிறு மந்தையின் பாதுகாவலரான அர்ச். சின்னப்பரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

திருச்சபையைத் திரும்பவும் கட்டி எழுப்பிய அர்ச். பிரான்சிஸ்கு அசிஸியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

தப்பறைகளின் சம்மட்டியான அர்ச். அந்தோனியாரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பரிசுத்த திவ்ய பலிபூசையின் அழகையும் மேன்மையையும் நிலை நிறுத்திய அர்ச். 5-ம் பத்தி நாதரே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

நவீனர்களின் தப்பறைகளைக் கண்டித்த அர்ச். 10 ஆம் பத்திநாதரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!

தூதர்களும் அதிதூதர்களுமான சகல சம்மனசுக்களே! எங்களது தினசரி யுத்தத்தில் நாங்கள் சாத்தானை ஜெயிக்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

இயேசுகிறிஸ்துவின் பிரதிநிதியானவர் உலக மயமான நவீனத் தப்பறைகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெறும்படி, அர்ச். சீயன்னா கத்தரீன் அம்மாளே! பரிசுத்த பாப்பானவருக்காக வேண்டிக் கொள்ளும்.

அவசங்கையையும் பதிதத்தையும் எதிர்த்து வெற்றி பெறும் துணிவைப் பெறும்படி அர்ச். ஜான் பிஷ்ஷரே! கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆத்தும் இரட்சணிய தாகத்தையும், அதைத் தேடிச் செல்லும் ஆவலைப் பெறவும் அர்ச். சவேரியாரே! குருக்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தவறான கொள்கைகளையும், தப்பறை களையும் போதிக்கும் ஆபத்திலிருந்து குருமடங்களை காப்பாற்ற அர்ச. சார்லஸ் புரோமியோவே! குருமடங் களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருமடங்கள் தியானத்திலும் ஜெபத்திலும் நிலைத்திருக்கும் வாழ்வைத் திரும்பவும் அடைய அர்ச். வின்சென்ட் தே பவுலே! இரட்சணிய குருமடங் களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துறவு வாழ்க்கை அன்பிலும் தியாகத்திலும் தான் உள்ளது என்பதைத் துறவியர்கள் யாவரும் கண்டுணர்ந்து வாழும் வரம் பெற, அர்ச். குழந்தை தெரசம்மாளே! துறவிகளுக்காக வேண்டிக்கொள்ளும்.

தப்பறைகளுக்கு விசுவாசிகள் அடிமை யாகாதபடி அர்ச். தாமஸ் மூரே! விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த பரம் திவ்ய நற்கருணைக்கு முந்தைய சங்கையும், பயபக்தியும், ஆராதனையும் மறுமலர்ச்சி அடைய அர்ச். பாஸ்காலே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்த ஜெபமாலை எங்களின் மேலான பொக்கிஷம் என்பதைக் கண்டுணர்ந்து தினமும் ஜெபிக்க, அர்ச். சாமிநாதரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரியம் அணிவது நரகத்தில் விழாமல் தப்பிக்கச் சிறந்த வழி என்பதை உணர்ந்து, எல்லோரும் உத்தரியம் அணிந்து மாதாவின் பாது காவலைப் பெற , புனித சைமன் ஸ்டாக்கே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப்புருவையாகிய இயேசுவே! எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே! எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி!

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வே சுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே! எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

இயேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாகத் தக்கதாக, சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெபிப்போமாக :

எங்கள் ஆண்டவராகிய இயேசுவே! இருண்ட காலமாகிய இந்நாட்களில் எங்களைக் கண் நோக்கும். உமது ஞான சரீரமான பரிசுத்த திருச்சபை யின் பாடுகளையும் சோதனைகளையும் பாரும். துன்பப்படும் உமது திருச்சபையின் மீது இறங்கும். ஆண்டவரே! தேற்றுபவரான திவ்ய இஸ்பிரீத்து சாந்துவை எம்மில் இறங்கச் செய்யும். அவர் வழியாக எங்கள் உள்ளமும் மனதும் ஒளி பெற்றுத் திடமடை வோமாக. ஓ மகா பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண் டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரா! நீர் வாக்குத் தத்தம் மாறாதவர். அவ்வாக்குத்தத்தத்தினை எம்மில் நிறைவேறச் செய்பவரும் நீரே! உலகம் முடியமட்டும் உமது திருச்சபையோடு இருப்பேன் என்று வாக்களித்தீர். தவறிப் போகாத திடனான விசுவாசத்தினை எங்க ளுக்குத் தாரும். நாங்கள் எப்பொழுதும் உமது திருச் சித்தத்திற்கு அமைந்து நடக்கும் வரம் அருளும். நிச்சயமற்ற கலக்கமான இந்நாட்களில் உமது விசே - அருளை வேண்டுகிறோம். உமது மகா பரிசுத்த இருத யமும், அமலோற்பவ அன்னையின் வியாகுலம் நிறைந்த மாசற்ற இருதயமும் எங்களுக்குக் காவலாக வும், அடைக்கலமாகவும் என்றென்றும் இருப்பதாக.

ஆமென்.

திருச்சபை பாதுகாக்கப்பட பாப்பரசர் 13ஆம் சிங்கராயர் இயற்றிய அதிதூதர் ஜெபம் :

அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே! எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். பசாசின் வஞ்சகத் தந்திரங்களில் எங்களுக்குத் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட் டைக் கேட்டு சர்வேசுரன் பசாசைக் கண்டிப்பாராக! மோட்சசேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங் களை அழிக்கிறதற்கு உலகத்தில் சுற்றித் திரியும் பசாசையும், மற்ற தீய அரூபிகளையும் தேவவல்லமை யின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக.

ஆமென்.