பரிசுத்த இருதயம்

ஒரு நாள் ஒருவன் நமது ஆண்டவரிடம் வந்து ஒரு கடினமான கேள்வியைக் கேட்க எண்ணினான். "குருவே, எல்லாக் கட்டளைகளிலும் முதலானதும் பெரிதும் எது?'' எனக் கேட்டான். நமது ஆண்டவர் நேரடியாக சொன்ன தாவது: "உன் முழு இருதயத்தோடும், உன் ஆத்துமத் தோடும், உன் முழுப் புத்தியோடும் உன் தேவனாகிய ஆண்டவரை சிநேகிப்பாயாக'' என்றார்.

ஒவ்வொரு நாளும் உன் ஜெபத்தில், "ஆ, என் ஆண்டவரே! நான் உம்மை முழு மனதோடு நேசிக்கிறேன்'' என்று சொல்கிறாய். ஆனால் இது உண்மையா? அல்லது வெறும் வார்த்தைகள்தானா? வாலிபனே! நீ உண்மை யாகவே சர்வேசுரனை முழு இருதயத்தோடு நேசிக்கிறாயா? சர்வேசுரனை முழு இருதயத்தோடு நேசிப்பது தூய இருத யத்தோடு இருப்பதாகும்.

''எல்லா பாவங்களும் இருதயத் திலிருந்தே புறப்படுகின்றன'' என்று நமது ஆண்டவர் ஒரு சமயம் விளக்கிக் காண்பித்தார். மனிதர்கள் இருதயம் மாசுள்ளதாயிருப்பதால்தான் பாவத்தில் விழுகிறார்கள். சர்வேசுரனைச் சிநேகிக்க வேண்டிய அளவு அவர்கள் நேசிப்பதில்லை. ஆனால் சர்வேசுரனை முழு மனதோடு நேசிக்கும் பரிசுத்த ஆத்துமங்களோ வெகு சொற்ப பாவத்தையும் விலக்க மிகுந்த பிரயாசைப்படுவார்கள்.

திவ்விய பலிபூசையின் முகவுரையில் குருவானவர் ''சூர்சும் கோர்தா" "உங்கள் இருதயங்களை சர்வேசுரனை நோக்கி எழுப்புங்கள்" என்று உரக்கச் சொல்லும்போது "ஆபேமுஸ் அத் தோமினும்,'' "நாங்களும் அவ்விதமே செய்திருக்கிறோம்'' என்று பதில் கூறுகிறீர்கள். ஆம், உங்க ளது இருதயங்களை ஆண்டவரை நோக்கி எழுப்புங்கள்.

பூசைப்பலி சமயத்தில் மட்டுமல்ல, ஆனால் எந்த சமயத் திலும் குருவானவர் உங்களிடம் அதே வார்த்தைகளைச் சொல்கிறார். "உங்கள் இருதயங்களை சர்வேசுரனை நோக்கி எழுப்புங்கள்.'' ''நாங்கள் அவ்வாறே செய்திருக் கிறோம்'' என்று நீ எப்பொழுதும் சொல்லக் கூடுமானால் நீ பாக்கியவான். ஆம் உன் இருதயத்தை ஆண்டவரை நோக்கி எழுப்பு. அழிந்து போகும் உலக காரியங்களில் லிருந்து பரலோக காரியங்களுக்கும், பாவ காரியங்களிலிருந்து பரிசுத்தத்திற்கும், சர்வேசுரனுக்கும் அதைத் திருப்பு.

சர்வேசுரனை உன் முழு இருதயத்தோடு சிநேகிப் பாயாக. தேவ சிநேகத்தைக் குறைக்கக்கூடிய எவ்வித நேசத்தையும் அறவே ஒழி. நமது ஆண்டவரோடு நீ கொண் டுள்ள சிநேகத்தை பங்கப்படுத்தக்கூடிய எவ்வித சிநேகத் தையும் முற்றிலும் அகற்று.

அர்ச். பெர்நார்து பதினெட்டாவது வயதில் உன் னைப் போல் ஓர் வாலிபனாக இருந்தார். அவருடைய சிநேகத் தன்மையினாலே அவருக்கு அநேக தோழர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் கூடிப் படிப்பார்கள்! உல்லாசமாகச் சிரித்து விளையாடுவார்கள். அடிக்கடி காட் டுப்புறங்களுக்கும் மலைகளுக்கும் உலாவப் போவார்கள். எவ்வளவு உல்லாசமான சிநேகிதர்களின் கூட்டம்! ஆயி னும் அவர்கள் மத்தியில் எவ்வளவு பரிசுத்த சிநேகம்! தகுதி யற்ற ஒரு வார்த்தையும் அவர்கள் பேசியது கிடையாது. அர்ச். பொநார்து குருவானவராக வேண்டுமென்ற தனது ஆசையை வெளிப்படுத்தினதும், அவர்களில் முப்பது பேர் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

உனக்கும் சிநேகிதர்கள் அவசியம். ஆனால் உன் சிநேகமும் நல்லதும், பரிசுத்தமுமாயிருக்க வேண்டும். எவன் நீ நல்லவனாயிருக்க உதவி செய்கிறானோ, அவனே உன் நண்பன். இப்பேர்ப்பட்டவனையே உன் சிநேகித னாகத் தெரிந்துகொள். வேறொருவனையும் ஒருபோதும் நண்பனாகக் கொள்ள வேண்டாம். சில சமயத்தில் உன் தோழர்களில் ஒருவன் மேல் தகுதியற்ற பிரியம் உதிக்கலாம்.

அப்படியானால் அவ்விதமான பிரியத்தை உன் இருதயத்திலிருந்து அகற்றிவிடு. அவனோடு கூடுமான வரை அதிகப் பழக்கம் வைக்காதே. அவனோடு போக விருப்பம் தோன்றும்போது அவ்விதம் செய்யாதே. அதே சமயத்தில் சர்வேசுரனை நோக்கி உன் இருதயத்தை எழுப்பி, முழு இருதயத்தோடு தேவ சிநேக முயற்சியை செய் : ஆண்டவரே ... நான் உம்மை சிநேகிக்கிறேன்... என் முழு இருதயத்தோடு ... எல்லாவற்றையும்விட வேறு யாரையும் விட -- மனிதர்களுடைய சிநேகத்தைவிட உமது சிநேகத்தை அதிகமாய் நாடுகிறேன்.

தேவமாதாவைப் பற்றி நினை. அவர்களுடைய இருதயம் எவ்வளவோ மாசற்றது! எவ்வளவோ பரிசுத்த மாயிருந்தது. சர்வேசுரனை முழு இருதயத்தோடு நேசித் தார்கள். அவர்களது இருதயத்தைப் போல் உன் இருதயத் தையும் பரிசுத்தமாக்கும்படி மன்றாடு. அவர்களைப் போல் நீயும் சர்வேசுரனைச் சிநேகிக்கும்படி செய்ய வேண்டிக் கொள்.

ஒரு வாலிபன் பாவங்கட்டிக் கொண்டபின், அர்ச். வியாகுலமாதா சுரூபத்தின் முன் செபிக்கச் சென்றான். அச்சமயம் மாதாவின் இருதயத்தை எட்டு வாள்கள் ஊடுருவியிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அதே சமயத்தில் "உன் பாவத்தால் இந்த எட்டாவது வாளை என் இருதயத்தில் குத்தினாய்" என்ற ஒரு குரல் கேட்டது. ஆ! என்ன கொடுமை! நமது தாயின் இருதயத்தை வாளால் குத்துவதா! நீ மனம் பொருந்தி தகுதியற்ற சிநேகத்தை உன் இருதயத்தில் வைத்துக் கொண்டிருக்கும்போது, நீ செய்வது இதுவே. ஆகவே இருதயத்தில் பரிசுத்தவானாயிரு. சர்வேசுரனை உன் முழு இருதயத்தோடு நேசி.

காண்டர்பரி மேற்றிராணியாரான எட்மண்ட், கல்லூரி மாணவனாக இருக்கும் பொழுது, தேவசிநேகத் தைக் குறைக்கக் கூடிய எவ்வித தோழர்களையும் விட்டு விட அதிகப் பிரயாசை கொண்டார். ஒருநாள் நள்ளிரவில் பாலன் சேசு அவருக்குத் தோன்றி "எட்மண்ட், நீ இந்தத் தோழர்களை விட்டு விலகி இருப்பதால் நான் உன் தோழனாக வந்திருக்கிறேன்'' என்றார்.

நீயும் அப்படிச் செய். சேசுவும் உன் தோழனாயிருப்பார்.

பரிசுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்!

அர்ச். மரியாயின் மாசற்ற திரு இருதயமே! எங்கள் இருதயத்தை உமது இருதயத்தைப் போல் ஆக்கியருளும்.