பெரியக் குறிப்பிடம்

1. நீ கிறிஸ்துவனா?

ஆம். சர்வேசுரனுடைய கிருபையினால் நான் கிறிஸ்துவன். 


2. கிறிஸ்துவன் எனக்காட்டும் வெளி அடையாளம் என்ன? 

சிலுவை அடையாளம். 


3. சிலுவைபோடு. 

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே .... 


4. சிலுவை அடையாளத்தை எந்த சமயத்தில் வரைய வேண்டும்? 

நல்ல கிறிஸ்துவன் நித்திரைக்கு முன்னும் பின்னும். சாப்பிடும் முன்னும் பின்னும், பிரதான வேலை ஆரம்பிக்கும் போதும், ஆபத்து சோதனை முதலிய சமயங்களிலும் சிலுவை வரைய வேண்டும். 


5. மெய்யான கிறிஸ்துவன் யார்?

ஞானஸ்நானம் பெற்று யேசு கிறிஸ்துநாதருடைய போதனையை விசுவசித்து அதன் பிரகாரம் நடக்கிறவனே மெய்யான கிறிஸ்துவன். 


6. கிறிஸ்துவன் விசுவசிக்க வேண்டிய பிரதான வேதசத்தியங்கள் எதிலே அடங்கி இருக்கின்றன? 

விசுவாசப் பிரமாணத்தில் சுருக்கமாயும், ஞான உபதேசத்தில்
விரிவாயும் அடங்கியிருக்கின்றன. 


7. கிறிஸ்துவன் அனுசரிக்க வேண்டிய வேதகற்பனைகள் எதிலே அடங்கியிருக்கின்றன? 

பத்துக்கற்பனை மந்திரத்திலும், திருச்சபையின் கட்டளை மந்திரத்திலும் சுருக்கமாய் அடங்கியிருக்கின்றன. 


8. கிறிஸ்துவன் தேவகிருபை அடைவதற்கு உபயோகிக்க வேண்டிய வழிபாடுகள் எவை? 

தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுதல், செபம் செய்தல் முதலிய வேத நடைமுறைகளேயாகும். 


9. இந்த வேத நடைமுறைகளை அறிவதற்குச் செய்யவேண்டிய தென்ன? 

கத்தோலிக்கத் திருச்சபையின் ஞானோபதேசத்தைப் படித்தறிய வேண்டியது.