உத்தரிக்கிற ஸ்தல விளக்கம். 1

76.- கத்தோலிக்கு உரோமான் திருச்சபை வழுவின தென்று ஒப்பிக்க, அதிலே வழங்கி வரும் பல இரகசியங்க ளும், நடந்து வரும் பல முறைகளும் அபத்தமென்று பதி சர் நிந்தையாகச் சொல்லிக்காட்டப் பிரயாசப்படுகிறார்கள். அவைகளில் சொன்ன பலவுமொழிய முதலாவது உத்தரிக் கிற ஸ்தலந்தானே. இது வேதப் புஸ்தகங்களில் அறிவிக் கப்படாமல் மனிதரை ஏய்க்க உண்டுபண்ணின வீண் கதை பென்று கல்வீனியானிகளும், லுத்தேரானிகளுஞ் சொல் லிக்கொண்டு வருகிறார்கள். ஆகிலும், இதிலே நாம் தெளி வோடே நடக்கும்படிக்குக் கத்தோலிக்கு உரோமன் திருச் சபை படிப்பிக்குந் தன்மையால், உத்தரிக்கிற ஸ்தலம் ஏதென்று முந்திக் காட்டக்கடவோம்.

ஆகையால், இதிலே வேதபாரகர் பொதுப்படச் சொல்லுந் தன்மையாவது : பூமியின் கீழே நாலு பாதாளங் கள் உண்டாம்; எல்லாத்துக்குங் கீழே முடியாத நரகம்; இதன் மேல் உத்தரிக்கிற ஸ்தலம்; இதன்மேல் ஞானஸ்நானம் பெறாமல் செத்த அறிவில்லாத குழந்தைகள் இருக் கும் ஸ்தலம்; இதன் மேல் அபிரகாம் மடியென்னும் பிதாக் கள் ஸ்தலமென்னும் நம்முடைய கர்த்தராகிய சேசுநாதர் நமக்காக வேண்டிப் பாடுபட்டு, மோக்ஷ வாசலைத் திறக்கு மட்டும் மோக்ஷத்தை அடைய பேறுபெற்ற மகாத்துமாக் கள் கஸ்தி ஒன்றின்றி, மோகூ தரிசனமுமின்றி, இரட்சிக் குங் கர்த்தர் வருவாரென்று நம்பிக் காத்துக்கொண்டிருந்த ஸ்தலம்.

இதிலே சேசுநாதர் மரணத்தை அடைந்தவுடனே, இறங்கி அந்தப் பிதாக்களுக்குப் பேரின்ப தரிசனத்தைத் தந்து, அவர்களை மோக்ஷ இராச்சியத்துக்குக் கூட்டிக் கொண்டு போனதினால் இப்போது அங்கே ஒருவருமில்லை அதன் கீழ் இருக்குங் குழந்தைகளோவெனில், வேறொரு வருத்தமின்றி தேவ தரிசனம் இல்லாமையால் என்றென் றைக்கும் மனதில் வருந்திக் கரை ஏற்றமின்றிக் கிடப்பார் கள். நரகத்தில் புதைக்கப்பட்ட பாவிகளோவெனில், எக் காலமும் மோக்ஷ தரிசனம் அடையாமல், வேறே நன்மை யும் ஆறுதலும் இல்லாமல், அக்கினி முதல் துன்பங்களெல் லாம் ஒருங்குடன் கலந்து, மிகுந்து கூடிப் பசாசுஞ் சூழ்ந்து, அங்கே விழுந்த நாள் துவக்கின உபாதை எந்நாளும் முடி யாமலும், ஓயாமலும், குறையாமலுஞ் சினத்தோடு அவ்வுயிர்களை வருத்த அவர்களும் வேகாமல் வெந்து, சாகாமல் செத்து, முடியாத காலம் உபாதிக்கப்படுவார்களென்பது சத்தியந்தானே.

77.- உத்தரிக்கிற ஸ்தலத்திலேயோ வெனில், பேரின்ப தேவ தரிசனம் இல்லாமையால் வரும் வருத்தமல் லாமல் அக்கினி முகல் பல உபாதைகள் உண்டாம். இதில் உபாதிக்கப்படுவது ஆரெனில் : மெய்யான கடவுளை வணங் காத அக்கியானிகளும் அல்ல, சேசுநாதர் ஸ்தாபித்த மெய் யான திருச்சபையினின்று பிரிந்த பாதிதரும் அல்ல. சாவான பாவத்தோடு செத்த கிறீஸ்துவர்களும் அல்ல, இவர்கள் எல்லாருந் தேவ இஷ்டப்பிரசாதமின்றி ஆண்டவருக்கு துரோகிகளாய்ச் செத்ததினால் பசாசுகளோடு என்றென்றைக்கும் நரகத்தில் உபாதிக்கப் படுவார்க ளென்று நம்மோடு இந்நாட் பதிதருஞ் சொல்லுகிறார்கள். ஆகையால், இந்த விஷயத்திலே முந்தி அறிய வேண்டியதா வது : இஷ்டப்பிரசாதத்தோடு செத்தவர்களுக்குள்ளே நர கத்திற் போவார் இல்லை. சாவான பாவத்தாலொழிய அற்ப குற்றங்களால் இஷ்டப்பிரசாதம் போக்கடிப்பாருமில்லை. ஆகையால், சாவான பாவங்களின்றி அற்ப குற்றங்களோடு செத்த கிறீஸ்துவர்களுக்குள்ளே நரகத்தில் போவாரில்லை. ஆயினும் அற்ப குற்றத்தோடு முதலாய் மோக்ஷத்தில் சேரப்படாதென்று அர்ச். அருளப்பர் கண்ட காட்சியில் 21-ம் அதிகாரம் 27-ம் வசனத்தில் எழுதிவைத்தார்.

ஆகையால், சாவான பாவமின்றி அற்ப குற்றங்க ளோடு செத்தவர்கள் மோக்ஷத்திற்குச் சேருமுன்னே அந்த அற்ப குற்றங்களுக்கு உத்தரித்துச் சுத்தராகக் கட வார்கள். இதுவே நாம் சொல்லும் உத்தரிக்கிற ஸ்தலம். மீளவும் நாம் மனம் பொருந்திச் செய்த சாவான பாவத் தால் நமக்கு இரண்டு கேடு உண்டாம். பாவதோஷமும், அபராதக் கடனும்; பாவதோஷத்தால் இஷ்டப்பிரசாதத் தைப் போக்கடித்து சுவாமிக்கு துரோகிகளாவோம். அப ராதக் கடனாலோவெனில் அந்த தோஷந் தீராதேபோனால் நாகத்தில் என்றென்றைக்கும் வேக நம்மேல் கடனுண்டாம். ஆண்டவர் நம்முடைய பாவத்தைப் பொறுத்து இஷ்டப் பிரசாதத்தைத் தந்து, சொன்ன தோஷம் போனாலும் நித் திய அபராதக் கடனே அநித்தியமாகி , நாமே வருந்தி அதனை உ.த்தரிக்கக்கடவோம். ஆகையால், ஞானஸ்நானத் துக்குப் பிறகு செய்த பாவத்தால் மனநொந்து, கர்த்தர் கட்டளையிட்ட பச்சாத்தாபத்தோடு திரும்பினவனுக்கு ஆண்டவர் தமது இஷ்டப்பிரசாதத்தைத் தந்து, சொன்ன கோஷமும், நித்திய அபராதக் கடனுந் தீருமென்பது நிச்சயந்தானே.

ஆகிலும், ஞானஸ்நானத்திலே பாவ தோஷமும், அபராதக் கடனும் எல்லாம் முழுதும் பொறுக்கப்படுவதல் லாமல் அதற்குப் பிறகு செய்த பாவத்தினின்று திரும்பின எல்லாருக்கும் எப்போதும் நித்திய அபராதக் கடன் இல் லாதபடிக்கு முழுதும் அதை ஒரோரிடத்திலன்றி ஆண்ட வர் பொறுக்கவும் இல்லை. அப்படியே அரசர் இரண்டாம் ஆகமம் 12-ம் அதிகாரம் 13 ம் வசனத்தில் பரதாரத்தைத் தீண்டி தாவீதரசன் செய்த பாவத்தினால் ஆண்டவருக்கு ஏற்க மனநொந்து அழுது திரும்பின அளவில், நாத்தா னென்னுந் தீர்க்கத்தரிசி சொன்னதாவது: சர்வேசுரனும் உன் பாவத்தைப் பொறுத்தார். ஆயினும் அக்கியானிகள் தேவ நாமத்தைத் தூஷணிக்கக் காரணமானாய் என்றதனால் அந்தப் பாவத்தால் உனக்குப் பிறந்த பிள்ளை சாகுமென் றார். இதோ பாவதோஷத்தை ஆண்டவர் பொறுத்த பின் பும் வந்த ஆக்கினை.

அப்படியே மோயீசன் எழுதின 4-ம் ஆகமம் 12-ம் அதிகாரத்தில் அவர் கூடப் பிறந்த மரியாவென்பவள் ஆண் டவர் மேலே முறைப்பட்டதனால் எங்கும் வெண்குஷ்ட வியாதியைக் கொண்டு மூடிக்கொள்ள மோயீசன் வேண்டு தலினால் ஆண்டவர் இரங்கி, அவள் பாவத்தைப் பொறுத்தா லும் அதன் பிறகு ஏழுநாள் அபராதமாய் வியாதி தீராமல் கிடந்தாளல்லோ? அப்படியே பாவம் பொறுக்கப்பட்டிருந் தாலும், இன்னம் அபராதம் உத்தரிக்கக் கடன் நிற்கும் என்றதனால் அர்ச். மத்தேயுஸ் சுவிசேஷம் 3-ம் அதிகாரம் 8-ம் வசனத்திலும், அர்ச். லூக்காஸ் சுவிசேஷம் 3-ம் அதி காரம் 3-ம் வசனத்திலும் நாம் செய்யுந் தவமானது நல்ல கனிகளைப் பழுத்துத் தரவேண்டுமென்று எழுதின தல்லோ? இதற்கு அர்த்தமே தெனில், பச்சாத்தாபமென்னுந் தவத் தால் பாவதோஷந் தீர்ந்தாலும், அந்தப் பச்சாத்தாபத்தின் பலனாக மரண பரியந்தந் தவத்தை விடாமல் பாவத்தின் அப ராதக்கடனை உத்தரிப்பதற்கேற்ற தருமங்களைச் செய்யக் கடவோமென்று கர்த்தர் அதிலே நமக்குப் படிப்பித்தார்.

அப்படியே இவ்வுலகரசர் முதலாய்க் கடுமையான துரோகத்தைச் செய்தவனுக்கு ஓரோரிடத்தைப் பொறுத் துத் தலை யாக்கினைப் பொறுத்தாலும், வேறாக்கினை அபரா தமாய் இடுவாரல்லோ ? அப்படியே, அரசர் 2-ம் ஆகமம் 3-ம் அதிகாரம் 13-ம் வசனத்தில் அப்னரென்பவனோடு தாவீதாசன் சிநேகத்தைச் செய்தாலும், மீக்கோலென்பவ ளைக் கூட்டிக்கொண்டு வந்தாலொழிய என் முகத்தில் விழிக்க வேண்டாமென்றார். மீளவும் அதிலே தானே 14-ம் அதிகாரம் 24-ம் வசனத்தில் அப்சலோனென்னுந் தன் மகன் செய்த குற்றத்தை தாவீதிராசன் பொறுத்ததற்கு அடையாளமாக அவன் தன் வீட்டில் வந்திருக்க உத்தா ரஞ் செய்தாலும், அபராதமாய் தன் முகத்தைக் காண வேண்டாமென்ாைர். இத்தகைப்பட்ட பலவும் வேதத்தில் எழுதப்பட்டமையால் ஆண்டவர் பாவ கோஷத்தைத் தீர்த் துத் தமது இஷ்டப்பிரசாதத்தைத் தந்தாலும், பொது முறையால் அநித்திய அபராதக் கடன் முழுதுந் தீராமல் பாவிகள் மேலே கிடக்குமென்பது நிச்சயந்தானே.

78.- ஆகிலும், இன்னும் நாமும் பாவங்களுக்காக உத்தரிக்கவேண்டியதோர் கடன் நமக்கு உண்டானால், சேசுநாதர் பூரணமாய் உத்தரித்துப் பாடுபட்டு அடைந்த அளவில்லாத பலன்களுக்கு ஈனமாகுமென்று பதிதர் ஞானிகளைப்போல் சொல்லி, வேசிகளைப்போல் வெட்க மில்லாமல் உரோமான் திருச்சபையார்மேலே இல்லாத பொய்யெல்லாம் இந்த விஷயத்திலே கக்கிக்கொண்டு வரு கிறார்கள். அப்படியே தரங்கம்பாடியில் 1726-ம் வருஷத் திலே லுசித்தான் பாஷையில் அச்சுப் பதித்துத் தந்த நமக்கும் அவர்களுக்கு முள்ள வித்தியாசமென்னும் புஸ்த கத்தின் எட்டாம் வித்தியாசத்தில் அவர்கள் சொன்ன பொய்களாவது : சேசுநாதர் சென்மப் பாவத்துக்காக மாத் திரம் மரித்தாரென்றும், அவர் அடைந்த மரணத்தினால் நம் பாவ்தோஷத்துக்கு உத்தரித்த தொழியப் பாவத்தினால் வரும் அபராதக் கடனுக்கு உத்தரியாததினால், அதற்கு நாம் உத்தரிக்கக்கடவோமென்று நாம் சொன்னதாக எழுதி வைத்தார்கள்.

ஆகிலும் இந்த இரண்டு அபத்தங்களும் உரோமான் திருச்சபையாருக்குள்ளே ஒருவராலாகிலும், எக்காலத்தி வாகிலுஞ் சொல்லப்பட்டதில்லை. இதிலே உரோமான் திருச்சபை எப்போதும் இப்போதும் படிப்பித்த சத்தி யத்தை இங்கே சொல்லிக் காட்டுவோம். அதேதெனில், சேசுநாதர் ஒருவரே மனிதர் அனைவருஞ் செய்த எல்லாப் பாவங்களுக்காக உத்தரிக்க வல்லவரென்றும், அப்படியே சிலுவையில் அறையுண்டு அடைந்த மாணத்தினால், சென் மப் பாவத்துக்காகவும், சகல கர்மப் பாவங்களுக்காகவும், பாவதோஷமும் அபராதக் கடனுந் தீரவேண்டின முறை யின் மேலும் அளவில்லாத உத்தம போரையால் உத்தரித்தா ரென்றும், உரோமான் திருச்சபை விசுவசிக்குஞ் சத்தியந் தானே. ஆகிலும், தாம் அடைந்த பலனை நமக்குத் தரத் திருவுளமாகி, அதற்கு அளவும், வகையும் அவர் தம் சித் தத்தின்படியே ஸ்தாபிக்க வல்லவால்லோ?

ஆகையால், ஒன்றில் தாம் அடைந்த பலன்கள் பூரண தனி தயை முறையால் நமக்குத் தவச் சித்தமாகிப் பாவ தோஷமும், அபராதக் கடனும் முழுதும் பொறுக்க வல்ல வர்தாமே. ஒன்றில் தயையோடு கூடின நீதி முறையால் பாவதோஷந் தீர்ந்து, நித்திய அபராதக்கடன் முழுதும் தீராமல் மாற்றிய நித்திய அபராதக் கடனாகப் பொறுக்க வல்லவர் தாமே. முதல்வகை அளவில்லாத தயைக்குரியதா கையால் ஞானஸ்நானத்தில் அந்த உத்தம வகையால் மனி தர் பாவங்களைப் பொறுக்கிறார். ஆதலால், ஞானஸ்நானத் திற்கு முந்திச் செய்த பாவங்களுக்காக உத்தரிக்கும்படிக்கு அற்பக் கடனாகிலும் நமக்கு நிற்கிறதில்லையென்றேம்.

ஆகிலும், இந்த சகாய நன்றி அறியமாட்டாமல் ஞானஸ்நானம் பெற்ற பின்பு செய்த பாவம் பச்சாத்தாபத் தால் பொறுக்கும்போது, தயையோடு கூடின நீதிமுறை யால் பாவதோஷமும், நித்திய அபராதக் கடனும் பொறுப் பதொழிய நா.முஞ் சிலநாள் சில தவங்களைச் செய்து, சில துன்பங்களை அனுபவித்து உத்தரிக்கத்தகும் அநித்திய அப்ராதக் கடன் நிற்குமென்றோம். இதுவுஞ் சேசுநாதர் பாடுபட்டு அடைந்த பலன்களுக்கு ஈனமல்ல. சென்மப் பாவத்திற்காக முழுதும் பூரணமாய் சேசுநாதர் உத்தரித் தாரல்லோ? அப்படியாகிலும் சென்மப் பாவத்தால் வந்த மரணக் கடன் தீர்ந்ததோ? இல்லையே. அந்தக் கடன் தீரா மையால் அதற்காக உத்தரித்து ஆண்டவர் அடைந்த பலன் களுக்கு ஈனமோ என்ன?

ஆகையால் சேசுநாதர் செய்த உத்தரிப்புப் போதாத தனால் அந்தக் கடன் நிற்குமென்றால், அவருக்கு ஈனந் தானே. இது நாம் சொல்லுந் தன்மையல்ல. தாம் அடைந்த பலனை அவ்வளவு மாத்திரம் நமக்குக் கொடுக்கச் சித்தமாகிக் கட்டளையிட்டதனால் நிற்குங் கடன் அதென்று சொல்லுகிறோம். இதுவும் நியாயத்தின்படியே கட்டளை யிட்டது தானே. தயையோடுகூடத் தமது நீதி விளங்க வும், பாவத்தின் அகோரந் தோன்றவும், ஆக்கினைக்கு அஞ்சி நாம் பாவங்களை அதிகமாய் வெறுக்கவும், அர்ச். சின்னப்பர் 8-ம் அதிகாரம் 17 ம் வசனத்தில் உரோமாபுரி யாருக்கு எழுதினாற்போல கிறீஸ்துவோடு மோக்ஷத்தில் வாழ அவரோடு இங்கே கஸ்திப்பட்டுப் பொறுமை காட் டவும் முழுதும் அபராதக் கடனைப் பொறாமல் நித்திய அபராதம் அநித்தியமாகத் திருவுளமானார்.

மீளவும் பிறகு நிற்குங் கடனை உத்தரிக்க நாம் செய் யுந் தருமமெல்லாம், அவர் பாடுபட்டு அடைந்த பலனால் உதவுமொழிய அது இல்லாமல் உத்தரிக்க நமக்கு ஒரு வல் லமையும் இல்லையென்று விசுவசிக்கக் கடவோம். இத்தன் மையால் நிற்கும் அபராதக் கடன் ஒன்றில் இவ்வுலகில் சாகுமுன்னே தவத்தாலும், தருமங்களினாலுந் தீரவேண்டி யது. ஒன்றில் இங்கே முழுதுந் தீராமல் செத்தால், உத் தரிக்கிற ஸ்தலத்தில் தீரவேண்டியதென்று சொல்லக்கட வோம். இந்தக் கடன் ஒவ்வொருத்தனுக்கும் வெவ்வேறா கையால், ஒவ்வொருத்தன் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அனு பவிக்கும் வேதனை அகோரமும், நாளளவும் வெவ்வேறாகு மென்று சொல்லுவோம்.

79.- பின்னையுஞ் சலொமோன் எழுதின 2-ம் ஆக மம் 9-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில் செத்தவர்கள் நவ மாய் ஒரு பலனும் அடையார்களென்றார். அப்படியே வேதத்திலே பல இடத்தில் சொன்னபடி இந்தக் காலம் மாத்திரம் பலனை அடையுங் காலமாகையால், உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடக்கும் ஆத்துமங்களெல்லாம் இஷ்டப்பிரசா தம் முதலான வரங்களாலும், விசுவாசம் பத்தி முதலான புண்ணியங்களாலும், ஆண்டவருக்கு உகந்தவைகளாயினும், தமக்கு வேதனை குறைக்கவும், பலனை அதிகமாய் அடைய வும் வல்லமையில்லை. அங்கே கிடக்குமளவும் பலனை விளை விக்கும் புண்ணியமும், ஆக்கினை விளைவிக்கும் பாவமும் வர அறியாது. நாமோவென்றால், பூசை செப் தான முத லிய தருமங்களால், அந்த ஆத்துமங்களுக்குள்ள வேதனை குறையும் படிக்குச் செய்ய வல்லமையும், கடனும் நமக்கு உண்டாம்.

அர்ச். அகுஸ்தீனென்பவர், அர்ச். சின்னப்பர் எழு தினதின் மேல் வியாக்கியானஞ் செய்த 312-ம் பிரசங்கத் திலே சொன்னதாவது: திருச்சபை வேண்டுதலினாலே யும், திவ்விய பூசையினாலேயும், தந்த பிச்சையினாலேயுஞ் செத்தவர்களுக்கு உதவியாமென்பதற்குச் சந்தேகம் இல்லை யென்றார். அப்படியே அப்போஸ்தலர் நாளிலே இருந்த அர்ச். சாந்தப்பர் கற்பனை ஸ்தாபித்த 3-ம் புஸ்தகம் 47-ம் அதிகாரத்தில் செத்தவர்களுக்கு வேண்டி அந்நாளிலே பொதுவாய் வழங்கிச் சொல்லப்பட்டிருந்த நெடிதோர் மந் திரத்தை எழுதி வைத்தார். அப்போஸ்தலர் நாளிலிருந்த அர்ச். தியோனிசியுஸென்பவர் எக்கிளேசியாஸ்திக்க வியே ரற்கியவென்னும் புஸ்தகம் 7-ம் அதிகாரம் 3-ம் பிரிவிலே செத்தவன் செய்திருந்த பாவங்களை ஆண்டவர் பொறுத்து மோக்ஷ தரிசனத்தை அவனுக்குக் கொடுக்கும்படி அவனுக் காக மேற்றிராணியார் வேண்டிக்கொள்ளும் வகையை சொல்லிக்கொண்டு வருகிறார்.

அப்படியே கர்த்தர் திரு அவதாரத்தின் பின்பு, 110-ம் ஆண்டிலிருந்த தெற்துலியானென்பவர் சேவித்த வர் முடியென்னும் புஸ்தகத்தில் செத்தவர்களுக்காக வேண் டுவது அப்போஸ்தலர்மார் சொல்லிவந்த முறையென்று எழுதிவைத்தார். அப்படியே அப்போஸ்தலர் நாள் முதற் கொண்டு இந்நாள் வரைக்கும், திருச்சபையிலிருந்த வேத பாரகர் எல்லாருஞ் சொல்லிக்கொண்டு வந்தார்கள். ஆகை யால் திருச்சபையினின்று செத்தவர்களுக்கு இரங்கி அவர் கள் உபாதனை குறைய திவச முதலான தருமங்களை நடத் திக்கொண்டு வருவது நமக்கு நியாயமுங் கடனுமாமே. ஆகிலும் தரங்கம்பாடியிலிருக்கும் லுத்தேரானிகள் மோக்ஷம். நரகமென்று இரண்டொழிய, உத்தரிக்கிற ஸ்த லம் இல்லையென்று சொல்லிக்கொண்டு வருகையில், நடு நாட்டிலே மனிதரை விட்டுத் தம் மதத்திலே செத்தவர்கள் ளுக்கு மோக்ஷ விளக்கு எடுப்பானேன் மோக்ஷவாகிக ளுக்கு உதவி வேண்டுமோ? நரகவாசிகளுக்கு உதவியா குமோ? இதற்கு அவர்கள் இலௌகீகத்தைப் பற்றிச் செய் வோம் என்றார்களாம். ஆகிலும், பதிதான்றி இலௌகிகத் தைப் பற்றித் தாம் அநுசரிக்கும் வேத சாத்தியங்களை மறுத்து நடப்பவர்கள் உண்டோ ?

80. - இன்றைவரைக்குங் கத்தோலிக்கு உரோமான் திருச்சபை படிப்பித்த தன்மையால், உத்தரிக்கிற ஸ்தல மும் அதற்கு அடுத்த பலதையும் வெளிப்படுத்தினோம். இப்பொழுது இங்கே இப்படிப்பட்ட ஸ்தலம் உண்டென்று ஒப்பிக்கக்கடவோம். இதிலே முன் சொன்ன நியாயங்களி னால் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று தெளிவாய்க் கண் ணுடைய பாவருங் காண்பாராயினும், விசுவசிக்கத் தகுஞ் சத்தியம் இதுவென்று காட்டாதவனுக்கு வேத உதாரணங் களினால் ஒப்பிப்போம். மக்கபெயர் இரண்டாம் ஆகமம் 12-ம் அதிகாரத்தில் யூதஸ் என்பவர் தம் படையிலே செத் தவர்களுக்கு வேண்டிய் பூசை செய்ய எருசலேம் பட்ட ணத்திலிருந்த கோயிலுக்கு வெகு பணங்களை அனுப்பினார் என்று சொன்ன பின்பு, 46-ம் வசனத்தில் எழுதின தாவது : ஆகையால் செத்தவர்களுடைய பாவக் கடன் தீர அவர்களுக்காக வேண்டிக்கொள்வதே உத்தம நினைவு தானே , பலனுள்ள நினைவுதானே என்று எழுதியிருக்க வாசிக்கிறோம்.

ஆகையால் செத்தவர்களுக்குந் தீரத்தகும் பாவக் கடன் உண்டென்றும், அதனைத் தீர்க்க நம்மால் உதவியா கும் என்றும், அதனால் முன் சொன்னபடி உத்கரிக்கிற ஸ்தலம் உண்டென்றும், வேத உதாரணத்தாற் சொல்லக் கடவோம். பின்னையும் அர்ச். மத்தேயுஸ் எழுதின சுவிசே ஷம் 12-ம் அதிகாரம் 32-ம் வசனத்திலே சேசுநாதர் திரு வுளம் பற்றின தாவது: இஸ்பிரீத்து சாந்துவைத் தூஷணித்த பாவம், இந்நாளிலேயும், செத்த பின்பு வரும் நாளிலேயும், பொறுக்கப்படாத பாவம் என்றார். ஆகையால் இந்தப் பாவஞ் செத்த பிற்பாடும் பொறுக்கப்படாது என்றால், செத்த பிற்பாடும் பொறுக்கத்தகும் பாவம் வேறு உண்டென்பதாகுமல்லோ

அப்படியே ஒருவன் வைத்திருந்த மணியின் மேலே தனக்கிருக்கும் பிரியத்தைக் காட்ட, இதை என் பிதாவுக் குங் கொடேன் என்றால், என் பிதா கேட்ட யாவையுங் கொடுக்க இருக்கிற நான் இந்த மணியை அவருக்குங் கொடேன் என்றபோது, அதன்மேல் எனக்கிருக்கும் பிரி யத்தை அறியக்கடவீர்கள் என்றாற்போல் ஆயிற்றல்லோ? அத்தன்மையால் சேசுநாதரும் இஸ்பிரீத்து சாந்துவைத் தூஷித்த பாவத்தின் அகோரத்தைக் காட்ட இந்நாளிலே யும், செத்த பின்பும், பொறுக்கப்படும் பாவங்கள் இருந்தா லும், இதுமாத்திரம் எப்போதும் பொறுக்கப்படாது என் றார். ஆகையால் வேத நியாயங்களினால் செத்தவர்களுக் குச் சில பாவங்கள் பொறுக்கப்படும் இடம் உண்டாமே. உண்டானால் அதுவே நாம் சொல்லும் உத்தரிக்கிற ஸ்தலம் தானே.