நவவிலாச சம்மனசுக்களின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுக்களுக்கு இராக்கினியாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். பக்திச்சுவாலகர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். ஞானாதிக்கர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். பத்திராசனர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். நாதகிருத்தியர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். சத்துவகர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். பலவத்தர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். பிராதமிகர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். அதிதூதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அர்ச். காவல் தூதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நவவிலாச சம்மனசுக்களுக்கும், சர்வேசுர னுடைய மக்களுக்கும் எப்போதும் பரிபாலகரா யிருந்த அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

லூசிபேரையும் அவனைச் சேர்ந்த கெட்ட சம்மனசுக்களையும் நரகத்தில் தள்ளின அர்ச். மிக்காயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தானியேல் என்பவருக்கு அதிசய காட்சியை விளக்கிக் கூறிய அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஸ்நாபக அருளப்பருடைய பிறப்பையும், அலுவல்களையும் சக்கரியாஸ் என்பவருக்கு முன் னறிவித்த அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய சுதனின் மனிதாவதாரத்தை கன்னி மரியம்மாளுக்கு அறிவித்த அர்ச். கபிரியேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தோபியாஸ் என்பவரை சிந்தாயாத்திரையாய் கூட்டிக்கொண்டு போய், மீண்டும் கூட்டிக் கொண்டு சேர்த்த அர்ச். இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சாராள் என்பவளைப் பசாசின் சோதனையில் நின்று இரட்சித்த அர்ச். இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பெரிய தொபியாஸ் என்பவருக்குப் பார் வையை மீண்டும் தந்தருளின அர்ச். இரபாயேலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உன்னத சர்வேசுரனுடைய மகிமை சிங்காசனத் தைப் புடைசூழ்ந்திருக்கிற நவவிலாச சம்மன சுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று என்றென்றைக்கும் சர்வேசுரனை ஸ்துதிக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பரலோகத்திலே இருக்கிற சர்வேசுரனுடைய சன்னிதானத்தை இடைவிடாமல் தரிசித்துக் கொண்டிருக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சூரியனை ஆடையாக அணிந்து நின்ற நித்திய பெண்மணியைச் சூழ்ந்து நிற்கின்ற நவவிலாச சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நவவிலாச சம்மனசுக்களிலிருந்து தேவமாதா வின் பணிவிடைக்காக சர்வேசுரனால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆயிரம் சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மனுமக்களை விசாரித்துக் காப்பதற்கும், நல் வழியில் நடத்துவதற்கும் சர்வேசுரனால் கட்டளை பெற்றிருக்கிற அர்ச். காவல் சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சோதோம் மக்களின் அக்கிரம குருட்டாட்டத் தால் அவர்களைத் தண்டித்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அந்த அக்கிரம அவிசுவாசிகளில் நின்று  லோத் என்பவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மீட்டுக் காப்பாற்றின அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

யாக்கோபு என்பவரை சகல பொல்லாப்புகளி லிருந்து தப்புவித்தருளின அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அவர் காட்சியில் கண்ட ஏணியிலே ஏறியும் இறங்கியும் இருந்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மோயீசனுக்குத் தேவ கற்பனைகளைக் கொடுத்தருளிய அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

உலக இரட்சகர் பிறந்த சமயத்தில் சர்வேசுர னுக்கு ஸ்துதியும், மனிதர்களுக்கு சமாதானமும் உண்டாகக் கடவது என்று வாழ்த்திப் பாடிய அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சேசுநாதரைச் சோதித்த பசாசு நீங்கினவுடனே வனாந்தரத்தில் அவருக்குப் பணிவிடை புரிந்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பூங்காவனத்தில் மரண அவஸ்தைப்பட்ட சேசுநாதருக்கு ஆறுதல் சொல்லிய அர்ச். சம்மன சுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அவருடைய கல்லறையில் தூய வெண்ணாடை அணிந்தவர்களாய்க் காணப்பட்ட சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அவர் மோட்சத்திற்கு ஆரோகணமானபோது அவருடைய சீடர்களுக்குத் தரிசனையான அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சேசுநாதர் ஜீவியரையும், மரித்தோரையும் நடுத் தீர்க்க மகிமையோடு எழுந்தருளி வரும்போது, தேவமாதாவுடன் அவரைப் புடைசூழ்ந்து வரவிருக்கும் அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அச்சமயத்தில் ஆண்டவருக்கும் மாதாவுக்கும் முன்பாக சிலுவைக் கொடியை ஏந்தி வரப்போகிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அப்போது நல்லோர்களையும், தீயோர் களையும் பிரிக்கப் போகிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

எங்கள் மன்றாட்டுக்களை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மனஸ்தாபப்படுகிற பாவியின் மேல் ஆனந்த சந்தோ­ம் கொள்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

மரணசமயத்தில் எங்களுக்கு உதவியாயிருக் கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆபிரகாமின் மடியில் இலாசரைக் கூட்டிக் கொண்டு போய் வைத்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சகல பாவங்களுக்கும் பரிகாரம் செய்த பரி சுத்த ஆன்மாக்களை மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போகிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

தேவ வல்லபவரத்தால் பற்பல அற்புதங் களையும், அதிசயங்களையும் செய்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

தங்கள் இரட்சண்ணிய சுதந்திரத்தைப் பற்றிக் கொள்கிறவர்களுக்கு உதவி செய்பவர்களாய் அனுப் பப்படுகிற பராமரிப்புள்ள அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சர்வேசுரனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிற தேவ ஊழியர்களாகிய அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

இராச்சியங்களுக்கும் நாடுகளுக்கும் பரிபாலகர் களாக ஏற்படுத்தப்பட்டிருக்கிற அர்ச்.  சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

அநேகமுறை சத்துருக்களுடைய சேனை களைத் தோற்கடித்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சிறைச்சாலைகளிலும் மற்ற அநேக ஆபத்துக் களிலுமிருந்து சர்வேசுரனுடைய அடியார்களை மீட்டுக் கொண்ட அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

வேதசாட்சிகளின் வேதனைகளில் அடிக்கடி ஆறுதலாயிருந்த அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

திருச்சபையை ஆளுகிற குரு சிரேஷ்டர்களை மிகுந்த பட்சத்தோடு பராமரிக்கிற அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

நவவிலாச சபைகளாய்ப் பகுக்கப்பட்டிருக்கிற சகல அர்ச். சம்மனசுக்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

சகல பொல்லாப்புகளிலேயும் நின்று உம் முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பசாசினுடைய தந்திரங்களிலே  நின்று உம் முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

சகல பாவங்களிலேயும் நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பிரிவினையிலும், பதிதத்தனத்திலேயும் நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

கொள்ளை நோய், பஞ்சம், படையிலே நின்று உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

ஆயத்தமில்லாமல் சடுதியிலே வருகிற துர்மரணத் திலே நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

நித்திய மரணத்திலே நின்று, உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களால், எங்களை இரட்சித்துக் கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் அர்ச். சம்மன சுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் பாவங்களைப் போக்கியருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களுக்குத் தயைசெய்து இரட்சித்தருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பரிசுத்த பாப்பரசர் மற்றும் அதிசிரேஷ்ட அதிகாரிகளையும், சத்திய திருச்சபையில் ஏற்பட்ட சகல குருக்கள், துறவியரையும் தற்காத்தருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சத்திய வேத இராஜாக்களுக்கும் பிரபுக் களுக்கும், ஜனங்களுக்கும் சமாதானத்தையும், சரியான ஒருமைப்பாட்டையும் தந்தருள வேண்டு மென்று, அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

பூமியிலே நல்ல பயிர் விளைவின் பலன் தந்து காப்பாற்ற வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணமடைந்த சகல விசுவாசிகளுக்கும் நித்திய இளைப்பாற்றியைக் கட்டளையிட்டருள வேண்டுமென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் மரண சமயத்தில் உம்முடைய சம்மன சுக்களை எங்களிடத்தில் அனுப்பியருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

மரணத்துக்குப் பின் எங்கள் ஆன்மாக்களைப்  பரிசுத்த சம்மனசுக்கள் மூலமாக ஏற்று, நித்தியப் பேரின்ப பாக்கியத்தைத் தந்தருள வேண்டு மென்று அர்ச். சம்மனசுக்கள் மூலமாக தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

சர்வேசுரனுடைய சுதனே, தேவரீரை மன்றாடுகிறோம், எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுகிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்கள் ஆகத் தக்கதாக, முத்தரான பரிசுத்த சம்மனசுக்களுடைய சகலவித சபைகளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

பிரார்த்திக்கக்கடவோம்

தயாபரரான சர்வேசுரா, சொல்லற்கரிய தேவ பராமரிப்பினால் எங்களைக் காத்து நடத்த உம்முடைய பரிசுத்த சம்மனசுக்களை அனுப்பி யருளுகிறீரே.  உமக்கே தோத்திரம் உண்டாகக் கடவது.  தேவரீரை மன்றாடுகிற அடியோர்கள் இவ்வுலகத்தில் சம்மனசுக்களின் ஆதரவால் காப் பாற்றப்பட்டு, உமக்கும், அவர்களுக்கும் பிரியப் பட பிரமாணிக்க பக்தியாய் நடக்கவும், மோட் சத்தில் அவர்களோடு உம்மை என்றென்றும் ஸ்துதித்து வாழ்த்தவும் கிருபை செய்தருளும் சுவாமி. 

ஆமென்.