வல்லமையுள்ள கன்னிகைக்கு ஜெபம்

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! இணை மீட்பரான எம் தாயே! சேசுவின் இரட்சண்ய அலுவலில் மனமுவந்து பங்கு கொண்ட மாதாவே! அவரோடு நாங்களும் இணைந்து எங்கள் அயலாரின் இரட் சண்யத்துக்காக உழைக்க எங்களுக்குக் கற்றுத் தாரும். உம்மைத் தேடி வரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியே! உங்கள் கரங்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொள்ளும் வரப்பிரசாதங்களுக்கு நாங்கள் நன்றியறிந் தவர்களாயிருக்கச் செய்தருளும். உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வல்லமையுள்ள கன்னிகையே! ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே! உம்மைத் தேடி வரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆமென்.