புகழ்மிக்க கன்னியும் வேதசாட்சியுமான அர்ச். பிலோமினம்மாளே! கிறீஸ்துவுக்காக நீர் சிந்திய உம்முடைய தூய இரத்தத்திலே துவைந்த ரோஜா மலரே! தேவ இரகசிய ரோஜா மாதாவின் செல்வ மகளே! வாழும் ஜெபமாலையின் வல்லமையுள்ள பாதுகாவலியே! இப்பொழுது நான் உமது திருப்பாதங்களில் சமர்ப்பிக்கப் போகிற பத்து மணி ஜெபத்தையும் திரு ஜெபமாலையின் இராக்கினியிடம் உமது கன்னிக் கரங்களால் சேர்த்தருள்வீராக!
ஆமென்.
(பத்து மணி முடிவில்)
துயரம் நிறைந்த மரியாயின் மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.