அர்ச். பிலோமினம்மாள் கயிறு அணியும் ஜெபம்

ஓ மிகப் பரிசுத்தமான கன்னிகையே! மகிமை பொருந்திய வேதசாட்சியே!  அர்ச். பிலோமினம்மாளே!  சர்வேசுரன் தமது நித்திய வல்லமையில் இந்த நிர்ப்பாக்கிய நாட்களில், கிறீஸ்தவர்களுடைய ஆன்மாக்களில் விசுவாசம் புதுப்பிக்கப்படவும் நம்பிக்கை தாங்கப்படவும் தேவ சிநேகம் தூண்டப்படவும் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளாரே. உமது பாதத்தில் விழுந்து கிடக்கிற என்னைப் பாரும். நன்மைத்தனமும் கருணையும் நிறைந்த கன்னிகையே! என் மன்றாட்டுக்களை ஏற்க தயை புரியும்.  உலகத்தின் கவர்ச்சி மிக்க இன்பங்களை நீர் பலியாக்கச் செய்த உம்முடைய பரிசுத்தத்தையும், உமக்கெதிரான மிகக் கொடும் தாக்குதல்களையெல்லாம் எதிர்த்து நிற்கச் செய்த ஆன்ம வலிமையையும், உம்முடைய மகா பயங்கரமான உபாதைகளாலும் சேசு மீதுள்ள அவிக்க முடியாத உமது ஆர்வமிக்க அன்பையும் எனக்கு அடைந்து தாரும்.  இவ்விதமாய் உம்முடைய புனித கயிற்றை அணிந்து, உம்மைக் கண்டுபாவித்து ஒருநாள் உம்மோடே நான் மோட்சத்தில் முடிசூட்டப்படுவேனாக.  

ஆமென்.