பரிசுத்த ஆரோக்கிய மாதாவின் பிரார்த்தனை


சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்ம மாசில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வலோகம் படைக்குமுன்னே சர்வேசுர னால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுக்கள் சிருஷ்டிக்கப்பட்டவுடனே அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சிங்காரத்தோப்பில் ஆதி மனிதனுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய  மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவமுள்ள இருளை அகற்றுகிற ஞானப் பிரகாசமான பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உதிக்கிற நட்சத்திரமென்று தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகத்துக்குப் பிரயோசனம் வருத்து விக்கிற மேகமென்றும் சொல்லப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நன்மைத்தனத்துக்கு யோக்கியமான பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப்பிதாக்களால் அர்ச்சியசிஷ்டவள் என்று உரைக்கப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜென்மப்பாவம் இல்லாமல் உற்பவித்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அகங்காரமுள்ள பசாசின் தலையை மிதித்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராச்சியம் ஆண்ட பதினான்கு இராஜாக் களுடைய கோத்திரங்களுக்குள்ளே உயர்ந்த கோத் திரத்தில் பிறந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மகாத்துமாவான அன்னம்மாள் சுவக்கீன் இடமாய்ப் பிறந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வயது முதிர்ந்த தாய் தகப்பனிடத்திலிருந்து பிறந்தவர்களான பரிசுத்த ஆரோக்கிய   மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அவர்கள் வேண்டுதலாலும் இடும் தருமங் களாலும் பிறந்தவர்களான பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல சம்மனசுக்கள் அர்ச்சியசிஷ்டவர்களைப் பார்க்க அதிக பிரகாசத்தோடே பிறந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

படைக்கப்பட்ட வஸ்துக்களைப் பார்க்கிலும் அதிக பக்தியோடே பிறந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மேலாங்கிஷத்துக்கும் கீழாங்கிஷத்துக்கும் எட்டாத பிரகாசத்துடனே பிறந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ இஷ்டப்பிரசாதக் கொழுந்தான பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ இஷ்டப்பிரசாதமின்றி விசே­ தேவ சம்பந்தம் அடைந்தவர்களான பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தர்ம வழியிலே சகல அர்ச்சியசிஷ்டவர்களைப் பார்க்க அதிக சாங்கோபாங்கமாய் நடந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் பிறந்தவுடனே மோட்சப் பிரகாச மடைந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்முடைய பிறப்பைக் கொண்டு பரலோகத் தாருக்குச் சந்தோ­ம் வருத்துவித்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீர் பிரகாசமாய்ப் பிறந்தவுடனே பிதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மிகுந்த மகிமையுள்ள மரியாயயன்னும் நாமம் அடைந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மூன்று வயதிலே தேவாலயத்தில் காணிக்கை யாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னிமையாகிற புண்ணியத்தின் வழியில் முந்தமுந்த நடந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியர் மடத்தில் இருக்கிறபோது சகலருக் கும் நன்மாதிரிகையாய் நடந்த பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருடைய வினையகற்றுகிற பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத தயாபரியாகிய பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கும் மோட்ச முடியான பரிசுத்த ஆரோக்கிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  பரிசுத்த கன்னிகையான அர்ச்சியசிஷ்ட மரியம்மாளைச் சகல வரப்பிர சாதங்களினால் அலங்கரித்து உமது திருக்குமார னைப்பெற்று அமுதூட்டி வளர்க்கும் தாயாக ஏற்கெனவே தெரிந்து கொண்டீரே. அந்த உத்தம நாயகி எங்களுக்காகக் கேட்கிற மன்றாட்டை நாங்கள் அடைந்து பஞ்சம் படை சகல நோய் உபத்திரவங்களில் ஆரோக்கியமும் சந்தோ­மும் அடைந்து நல்வழியில் நடந்து மோட்ச முடி பெறக் கிருபை செய்தருளும்.  இந்த மன்றாட்டை சேசுக்கிறீஸ்துநாதர் மூலமாய் தந்தருளும்.  

ஆமென்.