சதா சகாய மாதாவை நோக்கி ஜெபம்

சதா சகாய மாதாவே, உமது பிள்ளைகளாகிய எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அதிபரிசுத்த கன்னிமரியாயின் அர்ச்சியசிஷ்ட மாசில்லாத உற்பவம் ஸ்துதிக்கப் படுவதாக. ஒரு பர. அரு. திரி.

(இச்செபங்களை 3 முறை சொல்லவும்.)

உமது உற்பவத்தில் மாசில்லாதவளா யிருந்த கன்னிமரியாயே, உமது திருக்குமாரனின் பரம பிதாவிடம் எங்களுக்காக பரிந்து பேசியருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி!  தேவரீர் மாசில்லாத கன்னிகையின் திரு உதரத்திலே உம்முடைய திருச்சுதனுக்குத் தகுதியான வாசஸ்தலம் ஒன்றை ஆயத்தப்படுத்தியருளினீரே.  எங்கள் ஆண்டவ ருடைய திருமரணத்தை முன்னிட்டு அவர் திருத் தாயாரின் வழியாக எங்களைச் சகல பாவக் கறையில் நின்று காத்து தேவரீரிடத்தில் வந்து சேரத்  தயை பண்ணியருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரான சேசு கிறீஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். 

ஆமென்.