அர்ச். கன்னி மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகார ஜெபம்

அர்ச். கன்னிமரியாயின் மாசற்ற இருதயமே, திவ்விய கர்த்தருக்கு உகந்ததும், அவரோடு அந்நியோன்னிய ஐக்கியம் அமைந்ததுமான உமது திரு இருதய கமலத்தை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.  அன்பிற் சிறந்த அன்னையர்க்கு அன்னையின் இருதயமாக உம்மை நேசித்து,      உமது மகிமைப் பிரதாப இலட்சணங்களின் நிமித்தம் மனமகிழ்ந்து, உம்மை வாழ்த்தித் துதிக்கிறேன். அடியேனாலும் மற்ற சகல மனிதர்களாலும் தேவரீருக்கு வந்த நிந்தை தூஷண அவமானங்களுக்குப் பரிகாரமாக, இதோ! உமது சமூகத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து தாழ்ச்சியுடனே இந்தப் பரிகார முயற்சியை ஒப்புக் கொடுக்கிறேன்.  உமக்கு மிகவும் நன்றிகெட்ட தனம் காண்பித்து பலதரம் நான் குற்றவாளியாய் நடந்தது உண்மைதானென்று தாழ்ச்சியோடு இப்போது வெளிப்படுத்துகிறேன்.  ஆகிலும் தேவ கிருபையும் மன்னிப்பும் உம்மாலே எனக்கு  அநேக விசை உண்டாயிற்று என்று உணர்ந்து தேவரீர் என்னை ஒருபோதும் கைவிட மாட்டீரென்று உறுதியாக நம்பியிருக்கிறேன்.  இந்த மனோகரமான நம்பிக்கையால் திடப்பட்டு உமது பேரில் இனி அதிக பக்தி உருக்கம் பிரமாணிக்கமுள்ளவனாய் நடக்க ஆசையா யிருக்கிறேன்.  இனி நான் உமது தோத்திரத்திற் காக செய்யத் தீர்மானித்திருக்கிற சுகிர்த கிரியைகளை யயல்லாம் தயவாய் கையேற்றுக் கொண்டு அவைகளை உமது திருக்குமாரன் சேசுநாதர் சுவாமிக்கு ஒப்புக்கொடுத்து, உம்மாலே அந்த அன்புள்ள திவ்விய கர்த்தர் என் பேரிலும் என் இனத்தார் பேரிலும் இரங்கி, தமது வரப்பிரசாதங்களைத் திரளாய்ப் பொழிந்தருளும் படி தேவரீர் மனுப்பேச வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.