பாத்திமா அர்ப்பண ஜெபம்

எங்கள் அன்புத் தாயும் அரசியுமான மரியாயே, ரஷ்யாவை மனந்திருப்பி, உலக மக்களுக்கு சமாதானம் தருவேனென்று பாத்திமாவில் வாக்களித்தீர்களே.  எங்களுடையவும் உலகத்தினுடையவும் பாவங்களால், உங்கள் மாசற்ற இருதயத்திற்கு நேர்ந்த, நிந்தைகளுக்குப் பரிகாரமாக, எங்களுக்கு வரும் சகல துன்பங்களையும் பரித்தியாகமாக ஏற்றுக் கொள்கிறோம்.  ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலையை தியானித்துச் சொல்வோம்.  எங்களை உங்கள் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.  இந்த ஒப்புக் கொடுத்தலின் அடையாளமான கார்மெல் உத்தரியம் அணிந்திருக்கிறோம். 

(இவ்விடத்தில் உத்தரியம் அல்லது உத்தரிய சுரூபத்தை முத்தமிடவும்.)

இந்த ஒப்புக்கொடுத்தலை அடிக்கடி, விசே­மாய் சோதனை நேரத்தில் புதுப்பிப்போம் தாயே.  

ஆமென்.