பூசை ஒப்புக் கொடுக்கிற ஜெபம்

அர்ச். தமதிரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா!  எங்கள் ஆண்டவரான சேசுக்கிறீஸ்து பாடுபடும் நாளுக்கு முந்தின நாள் இராப்போஜனத்தின் போதும், சிலுவை பீடத்தில் பலியாகும்போதும், தேவரீருக்குக் கொடுத்த மாசற்ற பலியோடும், உலக மெங்குமுள்ள சகல குருக்களால் ஒப்புக் கொடுக்கப்படும் பலிகளோடும் நீசப் பாவியாகிய அடியேனும் மகா பக்தி நம்பிக்கையுடனும், தாழ்ச்சியுடனும், சேசுநாதரின் கருத்தோடும், திருச்சபையின் கருத்தோடும் என் கருத்தையும் சேர்த்து குருவின் கைங்கரியத்தைக் கொண்டு இந்தப் பலியைத் தேவரீருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிறேன். 

ஆண்டவரே, உம் மகிமைப் பிரதாபத்துக்கு ஸ்துதியாகவும், கர்த்தத்துவத்துக்குக் காணிக்கையாகவும், சேசுவின் பாடுகளை எப்போதும் நினைப்பூட்டும் நினைப்பாகவும், தேவமாதா மற்றும் சகல அர்ச்சியசிஷ்டவர்களுக்கு சங்கையாகவும், பாவியாயிருக்கிற அடியேனுக்கு இதுவரை தேவரீர் செய்து வரும் மட்டற்ற உபகாரங்களுக்கு நன்றியறிந்த தோத்திரமாகவும், ஜீவித்திருக்கிறவர்கள் மரித்தவர்களான சகல விசுவாசிகளுடையவும் அடியேனுடையவும் எண்ணற்ற பாவப் பொறுத்தலுக்கும், (இன்னாரின்னாரால் இன்னின்ன உதவி சகாயமடையும்படிக்கும்) நான் யாருக்காக வேண்டிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேனோ, அவர்களெல்லோரும் கடைசியாய் மரித்தவர்கள் இளைப்பாற்றியடையவும், உயிரோடிருக்கிறவர்கள் தேவரீரை அறிந்து சிநேகித்து இந்தப் பரதேசத்தில் உம்மைத் தோத்தரித்தபின், நித்தியத்திற்கும் மோட்சத்தில் உம்மை வாழ்த்தி ஸ்துதித்து வணங்கும்படிக்கும் குருவின் கைங்கரியத்தைக் கொண்டு அடியேன் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிற இப்பூசைப் பலியை தேவரீர் கையேற்றுக் கொண்டு நீசனாயிருக்கிற அடியேன் மன்றாட்டுக்கு செவிகொடுத்தருள வேணுமென்று வேண்டிக்கொள்கிறேன். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் உமது ஏக சுதனான சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும். ஆமென்.

பூசை  ஆரம்பிக்கிற போது

ஆராதனைக்கு பாத்திரமான ஏக திரித்துவமே!  நீசப் பாவியாயிருக்கிற அடியேன் தேவரீருடைய உன்னத மகிமைப் பிரதாப சோபனத்துக்குச் செய்யவேண்டிய பணிவிடை நமஸ்காரங்களைச் செய்யவேண்டுமென்கிற சுத்தக் கருத்துடன் உம் திருநாமத்தைக் குறித்து இந்த உன்னத பரம பூசையைக் காண்கிறேன். என் திவ்ய இரட்சகர் என் ஈடேற்றத்துக்காகக் கொடுக்கிற இந்த மாட்சிமை பொருந்திய பலியைச் செலுத்துகிற குருவுடன் நானும் என் கருத்தால் ஒன்றித்து இந்த பலியை ஒப்புக்கொடுக்க என்னை அனுமதித்தருளும். என் பாவங்களுக்காக தேவரீர் கபால மலைமேல் சிலுவையில் அறையுண்டு செலுத்தின இரத்தப் பலியை நான் கண்ணால் கண்டால் என் இருதயத்தில் எத்தகைய தேவ பற்றுதல் உண்டாகுமோ, அத்தகைய உத்தம கருத்தை இரத்தஞ் சிந்தாத பலியாகிய இந்தப் பூசை நேரத்திலும் என் இருதயத்தில் பிறப்பித்தருளும் சுவாமி.

குரு பாவசங்கீர்த்தன மந்திரம் சொல்லும்போது

என் சர்வேசுரா!  நான் தேவரீருக்குச் செய்த பாவ துரோகங்களை எல்லாம் தேவரீருடைய திருச்சமூகத்திலே சங்கீர்த்தனம் பண்ணுகிறேன்.  நான் என் சிந்தனை வாக்குக் கிரிகைகளினால் அநேக பாவதோ­ங்களைக் கட்டிக்கொண்ட படியினாலே கன்னியர் எல்லாரிலும் தூய்மையான பரிசுத்த கன்னியாகிய அர்ச்சியசிஷ்ட மரியாயி, சகல அர்ச்சியசிஷ்டவர்கள், சமஸ்த விசுவாசிகள் இவர்கள் முன்பாக நான் பாவி என்று வெளிப்படுத்துகிறேன்.  என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால் எப்போதும் கன்னிகையான அர்ச்சியசிஷ்ட மரியாயையும், சகல அர்ச்சியசிஷ்டவர்களையும் எனக்காக ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ள வேண்டுமென்று மன்றாடுகிறேன். என் ஆண்டவரே தயவோடு என் மன்றாட்டைக் கேட்டு எனக்குப் பாவ விமோசனமும், பொறுத்தலும், இஷ்டப்பிரசாதமும் தந்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன் சுவாமி. ஆமென்.

குரு “சுவாமி கிருபையாயிரும்” என்கிறமந்திரம் சொல்லுகிறபோது

எங்கள் ஆத்தும சிருஷ்டிகரான கர்த்தாவே, உம்மால் படைக்கப்பட்ட எங்கள் ஆத்துமங்கள் பேரில் இரக்கமாயிரும். தயாள சம்பூரணரான பிதாவே! உம் பிள்ளைகள் பேரில் தயையாயிரும். எங்கள் இரட்சண்யத்தின் காரணருமாய் எங்களுக்காகப் பலியானவருமாயிருக்கிற கர்த்தாவே, உமது திரு இரத்தத்தினாலும் திரு மரணத்தினாலும் வந்த பலன்களை எங்களுக்குக் கட்டளையிட்டருளும். 

மகா நேசத்துக்குரிய மதுர சேசுவே, எங்கள் நிர்ப்பாக்கியத்தைக் கண்டு இரங்கி எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் சுவாமி.

குரு சம்மனசுகள் பாடின தேவ ஸ்துதி சொல்லுகிறபோது

உன்னத பரலோகத்தில் சர்வேசுரனுக்குத் தோத்திரமும், பூலோகத்தில் சுத்த மனதுள்ளவர்களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது.  ஆண்டவரே, இராஜாக்களுக்கு அதிபதி இராஜாவே, உன்னத பரம கடவுளே, மெய்யான தேவனே, சர்வ வல்லபமுள்ள பிதாவே, தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்து ஆராதித்து வணங்கி நமஸ்கரித்து மிகுந்த தாழ்ச்சி வினயத்துடனே உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறோம்.  ஆராதனைக்குப் பாத்திரமான சேசுவே, பிதாவின் ஏக சுதனே, சர்வ கர்த்தரான சர்வேசுரா, உலகத்தினுடைய பாவங்களைப் போக்க வந்த சர்வேசுரனுடைய திவ்விய செம்மறியே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பரமண்டலத்தில் உம் பிதாவோடு இராச்சியபாரம் பண்ணுகிற நீர் எங்கள் பேரில் உமது கருணைக் கண்ணைத் திருப்பும். எங்கள் கர்த்தரான சேசுவே, தேவரீர் ஒருவர் மாத்திரமே பிதாவினுடைய மகிமைச் சோபனத்தில் இஸ்பிரீத்துசாந்துவோடு முடிவற்ற தோத்திரத்திற்குப் பாத்திரமானவருமாய் மட்டற்ற பரிசுத்தருமாய் அளவற்ற வல்லபமுள்ளவருமாய் இருக்கையில் தேவரீர் ஒருவர் மாத்திரமே எங்களை இரட்சிக்கக் கூடும் என்கிறதினாலே எங்களை இரட்சித்தருளும்.

ஜெபம்

என் ஆண்டவரே, அர்ச்சியசிஷ்ட தேவமாதாவின் மன்றாட்டையும், நாங்கள் கொண்டாடுகிற அர்ச்சியசிஷ்டவர்களுடைய மன்றாட்டையும் தேவரீர் ஏற்றுக்கொண்டு குருவானவர் தமக்காகவும் எங்களுக்காகவும் செய்யும் வேண்டு தலையும் நான் யாராருக்காக வேண்டிக்கொள்ள வேண்டியிருக்குமோ அவர்கள் கேட்கிற மன்றாட்டையும் கட்டளை பண்ணியருளும். பின்னும் என் ஆண்டவரே, நானும் அவர்களும் மோட்ச கரை சேர எங்களுக்கு வேண்டிய வரப்பிரசாதங்களை எல்லாம் சேசுக்கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும்.

என் சர்வேசுரா, உமது சத்திய வேதத்தை அறியாத அநேகமாயிரம் பேர்களுக்குள்ளே அடியேனைத் தெரிந்தெடுத்துக் கொண்டு உமது திரு வேதத்தை நான் அறியக் கிருபை செய்தீர். இந்த திவ்விய வேதத்தை நான் முழுமனதோடே கைக்கொண்டு தீர்க்கதரிசிகளைக் கொண்டு தேவரீர் அறிவித்த சத்தியங்களை எல்லாம் மிகுந்த பூஜிதத்துடனே செவிகொடுத்துக் கேட்கிறதுமல்லாமல் அவைகள் தேவ வசனங்களாகையால் மிகவும் பணிந்த மனதோடு அவைகளை வந்தித்து மன மகிழ்ச்சியோடே அந்த வசனங்கள் நிறைவேறுகிறதைக் கண்டு களிகூருகிறேன்.

குரு நிருபம் வாசிக்கிறபோது

என் சர்வேசுரா, பூர்வ வேதத்தில் இருந்த அர்ச்சிஷ்டவர்களைப் போல நானும் பரிசுத்த இருதயம் கொண்டிருந்தாலல்லோ தாவிளை. நான் பிதாப்பிதாக்களைப் போல உம்மை ஆசித்து, தீர்க்கதரிசிகளைப் போல் உம்மை அறிந்து நமஸ்கரித்து அப்போஸ்தலர்களைப் போல் உம்மை சிநேகித்து முழுதும் உமது பாரிசமாய் இருக்கக்கடவேனாக.

குரு சுவிசேஷம் வாசிக்கிறபோது

என் சர்வேசுரா, இனி நான் நடக்க வேண்டிய வழியை அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் அல்ல, உம் ஏக சுதன்தானே எனக்குப் படிப்பிப்பவர்.  அவருடைய திருவசனங்களைத் தானே கேட்கப்போகிறேன்.  ஆனால் என் ஆண்டவராகிய சேசுவே, இந்த வசனங்கள் உம்முடைய திரு வசனங்களென்று விசுவசித்தும் என் விசுவாசத்துக் கொத்த பிரகாரம் நடவாமல் போவேனேயாகில் எனக்கென்ன பிரயோசனம்? உமது திருச்சமூகத்தில் தேவசிநேகமும் நற்கிரியையும் இல்லாமல் விசுவாசம் மாத்திரம் இருந்தால் எனக்கு வரும் பலன் என்ன? நான் விசுவசித்தாலும் விசுவசியாதவனைப் போலவும் உமது சுவிசே­த்துக்கு விரோதமான மற்றொன்றை விசுவசிக்கிறவனைப் போலவும் நடந்து வருகிறேன். என் சர்வேசுரா, உமது போதனைக்கும் எனது நடத்தைக்கும் உண்டாயிருக்கிற பெரும் விரோதத்துக்குத் தக்கபடி என்னைத் தீர்வை இடாதேயும். என் ஆண்டவரே நான் முழு மனதோடு உமது சத்தியத்தை விசுவசிக் கிறேன்.  என் விசுவாசத்துக்கு ஒத்த வண்ணம் நான் நடக்க எனக்கு வேண்டிய தைரியமும் பலமும் கட்டளை பண்ணியருளும்.  ஆண்டவரே அதனால் உமக்கே ஸ்துதியும் தோத்திரமும் உண்டாகும்.

குரு விசுவாச மந்திரம் சொல்லுகிறபோது

சகலத்தையும் படைத்தவருமாய் சர்வ வல்லபமுள்ள பிதாவுமாயிருக்கிற ஏக சர்வேசுரனை விசுவசிக்கிறேன். பிதாவுக்குச் சரிசமமான ஏக சுதனுமாய் நம் ஆண்டவருமாயிருக்கிற சேசுக்கிறீஸ்து நாதரையும் விசுவசிக்கிறேன்.  இவர் மனிதாவதாரம் எடுத்து கடின பாடுபட்டு மரித்து உயிர்த்தெழுந்தருளி மோட்சத்துக்கு ஆரோகணமானார் என்றும் இனி மனிதரை நடுத்தீர்க்க எழுந்தருளி வருவாரென்றும், பிற்பாடு நித்திய காலம் முடிவற்ற பாக்கியமான இராச்சியபாரம் செய்வார் என்றும் உறுதியாக விசுவசிக்கின்றேன்.  பிதாவுக்கும் சுதனுக்கும் சரிசமமான தேவனுமாய் அவர்களிடத் திலே நின்று புறப்பட்டு அவர்களோடு ஒத்த மகிமை யையும் சங்கையையும் உடையவருமாய் நித்திய சீவியத்தின் ஊறணியுமாய், மனிதரை அர்ச்சிக்கும் காரணருமாய், தீர்க்கதரிசிகளுக்கு ஞானம் கொடுக்கிறவருமாயிருக்கிற இஸ்பிரீத்துசாந்துவையும் விசுவசிக்கிறேன்.  அப்போஸ்தலர்களாலே போதிக்கப்பட்ட ஏக கத்தோலிக்கத் திருச்சபையையும், பாவப்பொறுத்தலுக்கான ஞானஸ்நானத்தையும் விசுவசிக்கிறேன்.  சர்வேசுரனுடைய கிருபையினால் மரித்தவர்களிடத்திலே நின்று எழுந்து நித்திய ஜீவியத்தை அடைவேனென்று முழுமனதோடே நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆமென்.

குரு அப்பத்தைக் கையில் ஏந்தி காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிற போது

மட்டற்ற வல்லபத்தையும் அளவற்ற பரிசுத்த தன்மையையும் கொண்டிருக்கிற நித்திய சர்வேசுரா!  நான் உமது திருச்சமுகத்திலே நிற்க எவ்வளவு அபாத்திரவானாயிருந்தாலும் என்  இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துநாதர் இந்தப் பலியை உண்டுபண்ணினபோதும், எனக்காக இந்தப் பீடத்தின் மேல் பலியாகப் போகிற இந்தத் தருணத்திலும் அவருக்குள்ள கருத்துடனே என் கருத்தையும் ஒன்றாகக் கூட்டி குருவின் கைங்கரியத்தைக்கொண்டு உமக்கு இந்தப் பலியை ஒப்புக்கொடுக்கிறேன். அடியேன் மேலும், படைக்கப்பட்ட சகல வஸ்துக்கள் பேரிலும் தேவரீருக்குள்ள மேலான கர்த்தத்துவத்தை அறிந்து நமஸ்கரிக்கவும், என் பாவங்களுக்குப் பொறுத்தல் அடையவும், எனக்கு நீர் செய்த எண்ணிறந்த உபகாரங்களுக்கெல்லாம் நன்றியறிந்த தோத்திரமாகவும் தேவரீருக்கு இந்தப் பலியை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

என் சர்வேசுரா!  சகல பாவப் பொறுத்தலுக்காகப் பலியானவருமாய் எல்லாத்திலும் பரிசுத்தருமாயிருக்கிற உம்முடைய ஏக சுதனுடைய புண்ணியங்களைக் குறித்து பாவிகளுக்காகத் தந்தருளப்பட்ட இரட்சணியத்தின் இஷ்டப் பிரசாதப் பலன்களை அடியேனும் என் தாய் தந்தை உறவின் முறையார் உபகாரிகள் சிநேகிதர் பகைவர் எல்லோரும் அடையும்படிக்கும் இந்த திவ்விய பலியைத் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

பின்னும் அடியேன் தேவரீருக்கு ஒப்புக் கொடுக்கிற இந்தப் பூசையின் பலனை அர்ச்சியசிஷ்ட பாப்பானவர், மேற்றிராணிமார், குருக்கள், சகலமான கிறீஸ்தவர்களும் அடையப் பண்ணி யருளும்.

என் ஆண்டவரே, உம்முடைய திருக்குமாரன் பெற்ற பேறுபலன்களைப் பார்த்து உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கிற ஆத்துமாக்கள் பேரில் இரங்கி அவர்களுக்கு இளைப்பாற்றியையும், பிரகாசமும், சமாதானமும் உள்ள இடத்தையும் கட்டளை யிட்டருளும்.

என் சர்வேசுரா!  உம்முடைய சத்துராதிகளுக்கும் என் விரோதிகளுக்கும் தயை புரிந்தருளும். புறமதத்தார் மேலும் பொல்லாத கிறீஸ்தவர்கள் பேரிலும் இரக்கமாயிரும். என்னை உபத்திரவப் படுத்துகிறவர்களை ஆசீர்வதித்தருளும். அவர்கள் எனக்குச் செய்கிற குற்றங்களை நான் நல்ல மனதோடு பொறுத்துக் கொள்ளுகிறதுபோல அடியேன் தேவரீருக்குச் செய்த குற்றங்கள் எல்லா வற்றையும் பொறுத்தருளும்.

பலிக்கு ஆயத்தமான ஜெபத்தை குருவானவர் சொல்லுகிறபோது

சம்மனசுகளுக்கும் மனிதருக்கும் அதிபதி இராஜாவானவர் இதோ இந்தப் பீடத்தின் மேல் எழுந்தருளி வரப்போகிறார். உலக காரியங்களின்மேல் என் சிந்தை கவிழ்ந்து உழலாமல், உம்மை மாத்திரமே நாடியிருக்க, ஆண்டவரே எனக்கு உமது ஞானத்தை நிரம்பத் தந்தருளும்.  பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் பரம கர்த்தருமாய் சர்வ வல்லபமுள்ளவருமாயிருக்கிற நித்தியபிதாவே, நான் எக்காலத்திலும் எவ்விடத்திலும் உம்மை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டுவர எனக்குக் கடனுண்டே. அவ்விதமாகத் தேவரீரை இடைவிடாமல் ஆராதித்துக் கொண்டு வரும் படிக்கு சேசுகிறீஸ்துநாதரோடே ஐக்கியப் படுவதைவிட நியாயமும் உத்தமமுமானது ஒன்றும் காணேன் சுவாமி. சகல முத்திப்பேறு பெற்றவர்களும் அவரைக்கொண்டு தேவரீருக்கு சங்கை செலுத்துகிறார்கள். சகல சம்மனசுகளும் பூசித அச்சத்தோடு நடுக்கமுற்றுத் தங்களில் ஒருமித்து அவரைக்கொண்டு தேவரீரை ஸ்துதித் துப் புகழுகிறார்கள். ஆண்டவரே, எங்கள் அற்பப் புகழை அந்தச் சம்மனசுகளுடைய திருப்புகழோடு ஒன்றாகக் கூட்டி தேவரீருக்குக் காணிக்கையாய் வைக்க எங்களுக்கு உத்தாரம் தந்தருளும்.

குரு “பரிசுத்தர், பரிசுத்தர்” என்னும் திருப்புகழ் கூறும் போது

நாங்கள் சந்தோஷத்தினால் அகமகிழ்ந்து பிரமித்துத் தளத்துக்குக் கர்த்தராகிய தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்றும், அவருடைய மகிமைப் பிரதாபம் உலகமெங்கும் நிறைந்திருக்கிறதென்றும் சம்மனசுக்களும் முத்திப்பேறு பெற்றவர்களும் அவரைப் பரலோகத்தில் ஸ்துதிக் கிறதுபோல நாங்களும் அவரைப் புகழக்கடவோமாக! பிதாவுக்கு சரிசமமான தேவனாயிருந்தும் பிதாவினால் அனுப்பப்பட்டு பூலோகத்தில் எழுந்தருளி வருகிறவருக்கு மாறாத தோத்திரம் உண்டாகக்கடவதென்னும் தேவ ஸ்துதியைக் கூறுவோமாக.

“பரிசுத்தர்” என்கிற மந்திரம் சொன்ன பிறகு மட்டற்ற தயை நிறைந்த பிதாவே! தேவரீருக்கு ஏக சுதனுமாய் ஆண்டவருமாயிருக்கிற சேசுக் கிறீஸ்துநாதருடைய திரு முகத்தைப் பார்த்து நாங்கள் தேவரீருக்குச் செலுத்துகிற இந்தக் காணிக்கையைக் கையேற்றுக் கொண்டு சத்திய சாதாரண சபையாகிய கத்தோலிக்கத் திருச்சபையையும் அதற்குப் பிரத்தியட்ச தலைவராகிய அர்ச்சியசிஷ்ட பாப்பானவரையும் மேற்றிராணிமார்களையும், சகல விசுவாசிகளை யும் ஆண்டு நடத்தி காத்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.

பின்னும் எங்கள் தந்தை தாய், உறவின் முறையார், சிநேகிதர், உபகாரிகள், பகையாளி களுக்கும் இந்தத் திவ்விய பலிபூசையைக் காண்கிறவர்களுக்கும், (இன்னார் இன்னாருக் கும்) வேண்டிய உதவி சகாயங்களைக் கட்டளை யிட்டருளும் சுவாமி. நாங்கள் கேட்கிற மன்றாட்டு தேவரீருக்கு அதிகப் பிரியமாகும்படி அர்ச்சியசிஷ்ட தேவமாதா, அப்போஸ்தலர்கள், வேதசாட்சிகள் இவர்களுடைய மன்றாட்டு களுடனே எங்கள் மன்றாட்டுகளையும் கூட்டித் தேவரீருக்குக் காணிக்கையாக வைக்கிறோம்.

முன்னாள் பிதாப்பிதாக்கள் உலக இரட்சகர் எப்போது வருவாரோவென்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தது போல, இப்போது நானும் அவர் இந்தப் பீடத்தின்மேல் எப்போது எழுந்தருளி வருவாரென்று மிகுந்த பக்தி ஆசையோடே காத்திராமல் இருப்பேனோ?  அவர்களிடத்திலே விளங்கின விசுவாசமும் தேவசிநேகமும் என்னிடத்திலேயும் விளங்கா திருக்குமோ?

தேவ நற்கருணை வசீகரம்

ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறீஸ்துவே,  உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, எழுந்தருளி வாரும்.  உம்முடைய அற்புதங்களின் மேலான அற்புதமாகிய இந்தப் பரம தேவ இரகசியத்தை நிறைவேற்ற வாரும்.  இதோ உலகத்தினுடைய பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய திவ்விய செம்மறியானவர் எழுந்தருளிவருகிறார்.  என்னை உண்டாக்கி இரட்சித்த கர்த்தர் உன்னத மோட்சத்தினின்று எனக்காகப் பலியாய் இறங்கி வருகிறார்.  என் ஆத்துமமே, பக்தியோடே அவரை ஸ்துதித்து ஆராதிப்பாயாக.

குரு அப்பம் எழுந்தருளப் பண்ணுகிறபோது

என் ஆண்டவரே, என் தேவனே, அவதரித்த வார்த்தையே, திவ்விய சேசுவே, மெய்யான தேவனும் மெய்யான மனிதனும் ஒன்றானவரே, தேவரீர் இந்தப் பீடத்தின் பேரிலே மெய்யாகவே எழுந்தருளி வந்திருக்கிறீரென்று உறுதியாக விசுவசித்து மிகுந்த தாழ்ச்சியோடு வணங்கி ஆராதித்து முழுமனதோடு உம்மை அபேட்சித்து நேசிக்கிறேன்.  என்மேல் வைத்த நிகரில்லாத அன்பினால் தேவரீர் இந்தப் பீடத்தின் மேல் எழுந்தருளி வந்தமையால், என்னை முழுவதும் உமக்கு தேவ வசீகரம் பண்ணுகிறேன் சுவாமி.

குரு திருப்பாத்திரம் எழுந்தருளப்  பண்ணுகிற போது

என் ஆண்டவரே, என் தேவனே! சகல மனு­ருக்காகத் தேவரீர் சிந்தின இந்த விலைமதியாத திரு இரத்தத்தை ஆராதனை பண்ணுகிறேன். என் சர்வேசுரா, எனக்காகச் சிந்தின இந்தத் திரு இரத்தம் வீண்போகாதென்று நம்பு கிறேன். உமது திருஇரத்தப் பலன்களை நான் அடையும்படி அநுக்கிரகம் பண்ணியருளும். மகா அன்புக்குரிய எனது திவ்விய சேசுவே, எனக்காக உம்முடைய திரு இரத்தத்தைச் சிந்தக் காரணமான அளவில்லாத உமது சிநேகத்துக்கு நன்றியறிந்த தோத்திரமாக நானும் என் இரத்தத்தையயல்லாம் தேவரீருக்கு முழுதும் ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி.

தேவ நற்கருணை எழுந்தருளப் பண்ணின பின்பு

என் ஆண்டவரே, தேவரீர் செய்த இவ்வற் புதத்தை நான் கண்ணால் கண்டிருந்தும் தேவரீ ருக்கும் ஏற்காத துரோகங்களைச் செய்யத் துணிந் தேனாகில், என் அக்கிரமமும், நன்றிகெட்ட தன்மையும் இவ்வளவென்று சொல்லக் கூடுமோ?  இந்தப் பூசிதமான பலிச் சடங்குகளைக் கொண்டு தேவரீர் எனக்குக் காட்டுகிற உம்முடைய பாடு களின் கடின வேதனைகளையும் உத்தானத்தின் ஒட்டலோகத்தையும் மோட்ச மகிமையையும் நான் ஒருபோதும் மறப்பதில்லை சுவாமி.  அடிக ளால் கிழிந்துதெறிபட்ட உமது திருச்சரீரமும் எங்களுக்காகச் சிந்தின திரு இரத்தமும் இதோ என் கண்முன்பாக இந்தப் பீடத்தின் மேல் பிரத் தியட்சமாய் எழுந்தருளி இருக்கிறதே.  நித்திய ஆனந்த மகிமைப் பிரதாபமுள்ள பிதாவே, இதோ தேவரீர் சித்தமிரங்கி அடியோர்களுக்குத் தந்தரு ளின மாசற்ற செம்மறியைத் தேவரீருக்கு மெய் யான பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.

முன்னால் ஆபேல், ஆபிரகாம், மெல்கிசெதேக் என்கிற மகாத்துமாக்கள் செலுத்தின பலியயல் லாம் இந்த மெய்யான பலியின் குறிப்பாயிருந்த தொழிய வேறல்ல. உமது நித்திய நேசரான சுதனுமாய் எங்கள் ஆண்டவருமாயிருக்கிற சேசுகிறீஸ்து ஒருவர் மாத்திரமே உமது பீடத்துக்கு யோக்கியமான பலியாயிருக்கிறார். நாங்கள் அவரைத்தானே தேவரீருக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.

இந்த உந்நத பலியில் தங்கள் தங்கள் மன மொழிகளால் ஒன்றித்திருக்கிறவர்கள் எல்லாரும் அதனால் வரும் பலனை அடையக் கடவார்கள்.

என் ஆண்டவரே! திருச்சபையில் மரித்த சகல விசுவாசிகளுடைய ஆத்துமங்களுக்கும் இந்தத் திவ்விய பலியின் பலனில் பங்குண்டா யிருக்கக் கடவது.  விசேஷமாய் இந்தத் திவ்விய பலியைப் பார்த்து (இன்னார் இன்னாருடைய) ஆத்துமங்களின் வேதனையை நீக்கி அவர் களுக்கு இளைப்பாற்றியைக் கட்டளை யிட்டருளும்.

அனந்த காருண்ணியரான பிதாவே, இனி ஒருநாள் எங்களுக்கும் இந்த உபகாரத்தைக் கட்டளையிட்டு நித்திய காலம் நாங்கள் அப்போஸ்தலர்கள், வேதசாட்சிகள், சகல அர்ச்சியசிஷ்டவர்களுடன் தேவரீரை சிநேகித்து ஸ்துதித்து தோத்தரித்துக் கொண்டிருக்கும் படியாக எங்களுக்கு அநுக்கிரகம் பண்ணி யருளும் சுவாமி.

குரு பரமண்டல மந்திரம் சொல்லுகிற போது

என் சர்வேசுரா, தேவரீர் எனக்குப் பிதாவா யிருக்கிறபடியால் எனக்கு எத்தனையோ பாக்கி யம்.  தேவரீர் வீற்றிருக்கிற மோட்ச இராச்சியமே ஒருநாள் நான் வாழும் இடமாயிருக்குமென்று நினைக்கும்போது எனக்கு எத்தனையோ அக மகிழ்ச்சி.  உமது திருநாமம் உலகமெங்கும் ஸ்துதி பெறக்கடவது.  சகல மனிதர் இருதயத்திலும், நினைவிலும் ஏகாதிபதியாய் நின்று ஆண்ட ருளும். உமது பிள்ளைகளுக்கு வேண்டிய ஆத்தும சரீர உணவுகள் குறைவுபட விடாதேயும்.  புறத்தியாருடைய குற்றங்களை நாங்கள் முழு மனதோடு பொறுத்துக் கொள்ளுகிறோம்.  தேவரீரும் எங்கள் குற்றங்களைப் பொறுத்தரு ளும்.  இந்த நிர்ப்பாக் கியம் நிறைந்த உலகத்தில் நாங்கள் சீவித்திருக்குமட்டும் எங்களை தொடர்ந்து வரும் சோதனையில் நாங்கள் அகப்பட்டு மோசம் போக விடாதேயும்.  சகல கேட்டிலும் கொடிய கேடாகிய பாவத்தில் நாங்கள் விழாதபடி எங்களைக் காத்து இரட்சியும் சுவாமி.

குரு “உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியே” என்கிற மந்திரம் சொல்லிப் பிழை தட்டிக் கொள்ளுகிற போது

எனக்காகப் பலியான சர்வேசுரனுடைய திவ்விய செம்மறியே, என் மேல் இரக்கமாயிரும். என் இரட்சணியத்துக்காக ஒப்புக்கொடுக்கப் பட்ட ஆராதனைக்குரிய பலியே,  என்னை இரட் சித்துக் கொள்ளும்.  பிதாவினிடத்தில் எனக்காக மனுப்பேசும் பரம கர்த்தரே, உம்முடைய பிதாவி னிடத்தில் எனக்கு வேண்டிய இஷ்டப்பிர சாதத்தை நான் அடையச் செய்து உமது சமாதா னத்தை எனக்குத் தந்தருளும்.

குரு தேவ நற்கருணை உட்கொள்ளுகிற போது

என் ஆத்தும நேசரான இரட்சகரே, பக்தி யுருக்கத்தோடு நாள்தோறும் உம்மை உட்கொள்கிற பாக்கியவான்களிலே நானும் ஒருவனா யிருந்தாலல்லோ எனக்கு இனிய ஆனந்தமாகும்.  இத்தருணத்தில் உம்மை என் இருதயத்தில் வரவேற்று வணங்கி நமஸ்கரித்து என் அவசரங் களை எல்லாம் உமக்கு வெளிப்படுத்தி தேவரீர் கொடுத்தருளுகிற இஷ்டப்பிரசாதங்களுக்கு நானும் பங்காளியானால் எனக்கு எத்தனையோ நன்மை.  ஆனால் என் கர்த்தரே, நான் முழுவதும் அபாத் திரனாயிருக்கிறபடியினாலே என் ஆத்துமத்தின் குறைகளைத் தீர்த்தருளும்.  நான் செய்த பாவ தோ­ங்களையயல்லாம் பொறுத்தருளும்.  தேவரீ ருக்குப் பொருந்தாதென்கிறதினால் அவைகளை அருவெறுத்துத் தள்ளுகிறேன்.  நான் உம்மோடு ஐக்கியமாக வேணுமென்கிற என் ஆசையைக் கையேற்றுக் கொள்ளும். என்னை உமது கடைக்கண்ணால் பார்த்துச் சுத்திகரித்தருளும்.  தாமத மின்றியே உம்மை நான் தகுதியான வகையில் உட்கொள்ள என்னை ஆயத்தப்படுத்தும்.  இப்பொழுதோவெனில் இந்தத் திவ்விய பூசை யைக் காண்கிற சகல விசுவாசிகளுக்கும் வர   வேண்டிய பலன் அடியேனுக்கும் உண்டா யிருக்கக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறேன். இந்தத் தேவதிரவிய அநுமானத்தின் பலத்தினால் என் விசுவாசத்தை வளரப்பண்ணும். என்னிடத்திலுள்ள அன்பைச் சுத்தமாக்கும்.  நான் உம்மையே நாடி உமக் காகவே ஜீவித்திருக்கும்படி உமது அன்பை எனக்கு நிறையக் கொடுத்தருளும்.

குரு கடைசி ஜெபம் சொல்லுகிறபோது

என் கர்த்தரே, தேவரீர் என்னுடைய இரட் சணியத்துக்காகப் பலியானதினால் என்னை முழுவதும் உமது தோத்திரத்துக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கிறேன். உமக்குப் பலியான என்னை உமது சித்தத்துக்கு ஒத்த வண்ணமாய் நடத்தும்.  நான் அனுபவிக்க வேணுமென்று தேவரீர் சித்தமா யிருக்கிற துன்ப துரிதங்களை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். அவைகள் தேவரீர் கையி லிருந்து வருகிறபடியினாலே  அவைகளை வாழ்த்திக் கையேற்றுக்கொண்டு தேவரீருடைய துன்ப துரிதங்களோடு ஒன்றாகக் கூட்டி உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

இந்த திவ்விய பூசையின் பலனால் என்னைச் சுத்திகரித்தருளும். இனி அற்பப் பாவங்களையும் அருவெறுத்துத் தள்ளுவேன்.  விசே­மாய் என் னிடத்தில் இருக்கிற பிரதான துர்க்குணத்தினால் உண்டாக்கக் கூடிய பாவத்திலே விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்பேன்.  உம்முடைய திருக் கற்பனைகளின்படியே பிரமாணிக்கமாய் நடக்க முயலுவேன்.  உம்முடைய திருக்கற்பனைகளை மீறுகிறதை விட சகல துன்ப துரிதங்களையும் அனுபவிக்கவும் உயிரை முதலாய் இழக்கவும் துணிந்திருக்கிறேன் சுவாமி.

குரு ஆசீர்வாதம் கொடுக்கிறபோது

என் சர்வேசுரா, நான் பண்ணின இந்த நல்ல பிரதிக்கினைகளை ஆசீர்வதித்தருளும்.  பின் னையும் உம்முடைய ஸ்தானாதிபதியாகிய குருவின் கையால் எங்களை ஆசீர்வதித்தருளும்.  இந்த ஆசீர்வாதத்தின் பலன் நிரந்தரம் எங்கள் மேல் குடிகொண்டிருக்கக் கடவது. பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் பெயராலே.  ஆமென்.

குரு கடைசி சுவிசேஷம் வாசிக்கிற போது

திவ்விய வார்த்தையுமாய் பிதாவினுடைய ஏக குமாரனுமாய் மோட்ச வழியை அடியோர் களுக்குக் காண்பிக்கப் பரலோகத்திலே நின்று எழுந்தருளி வந்து இவ்வுலகத்துக்கு ஒளியா யிருக்கிற சேசுவே, தேவரீர் பிதாவினால் அனுப்பப் பட்டீரென்று ஏற்றுக் கொள்ளாமல், புறக்கணித்துத் தள்ளிவிட்டு நித்திய கேட்டுக்குள்ளான அவிசுவாசி களைப் போல நான் ஆகாதபடிக்குக் காத்தருளும்.  தேவரீர் தர வந்த சர்வேசுரனுடைய பிள்ளைகள் என்கிற மகிமையான சுவீகாரத்துக்குப் பங்காளி களாகிறதைப் பார்க்கிலும் பசாசின் அடிமைகளா கிறது தாவிளையயன்று எண்ணின அந்த நிர்ப் பாக்கியருடைய குருட்டாட்டத்திலே நானும் விழாதபடிக்கு காப்பாற்றி இரட்சியும் சுவாமி.

அவதரித்த வார்த்தையே, உம்மை மகா தாழ்ச்சி விநயத்துடனே வணங்கி நமஸ்கரிக் கிறேன். நீர் என் கர்த்தாவுமாய், சகல மனிதரையும் இரட்சிக்க மனிதனான தேவனுமாயிருக்கிற தினாலே, நான் அர்ச்சியசிஷ்டவனாகவும் உம்மை நிரந்தரம் பரலோகத்தில் தரிசித்திருக்கவும் வேண்டிய வரப்பிரசாதங்களைக் கட்டளை யிடுவீரென்று உறுதியாக விசுவசித்து, உம்மு டைய பேரில் என் நம்பிக்கை யாவும் வைத்திருக் கிறேன் சுவாமி. ஆமென்.

பூசை முடிந்தபின் ஜெபம்

ஆண்டவரே, இந்தப் பூசை காண்கிற பாக்கியம் அநேகம் பேர்களுக்குக் கிடைக்காமலிருக்க அடியேனுக்குக் கிடைக்கத் தயைபுரிந்ததினாலே உமக்கு நன்றியறிந்த தோத்திரம் பண்ணுகிறேன்.  உம்முடைய திருச்சமூகத்தில் என்னுடைய அசட்டையினாலேயும் பராக்கினாலேயும் செய்த தப்பிதங் களையும் அனாசாரங்களையும் பொறுத்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறேன்.  சர்வேசுரா சுவாமி!  நான் செய்த பாவங்களுக்குப் பொறுத்தலும், இனி அவைகளில் விழாதபடி இஷ்டப்பிரசாதமும் பலமும் இந்தத் திவ்விய பலியினால் எனக்குத் தந்தருளும்.  இதோ தேவரீரை நம்பிக்கொண்டு உம்முடைய சித்தத் தின்படியே நடக்கப் பிரதிக்கினை பண்ணுகிறேன்.  நீர் எனக்கு இப்போது செய்த உபகாரத்தை நான் இந்த நாள் முழுவதும் நினைத்துக் கொண்டு வருவதன்றி, நான் இப்போது அடைந்த  பூசையின் பலனை இழந்து போகச் செய்யும் அற்ப துராசைக்கும் வார்த்தைக்கும் இடங்கொடாமல் இருக்க உமது திவ்விய அநுக்கிரக உதவியால் தீர்மானித்திருக்கிறேன் சுவாமி. ஆமென்.

1884-ம் வருஷம் ஜனவரி மாதம் 6-ம் தேதி 13-ம் சிங்கராயர் என்கிற அர்ச். பாப்பானவர் கட்டளையிட்ட உத்தரவுப்படி இதற்கடியில் வரும் செபங்களை முழங்காலிலிருந்து பூசைக்குப் பிறகு குருவுடனே வேண்டிக்கொள்ளுகிறவர்கள் 300 நாட்பலன் அடையலாம்.

மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லவும்.  கிருபை தயாபத்து மந்திரம்

பிரார்த்திக்கக்கடவோம்

எங்கள் அடைக்கலமும் பலமுமாயிருக்கிற சர்வேசுரா! உம்மை நோக்கிக் கூப்பிடுகிற ஜனங்களின் பேரில் கிருபாநோக்கம் பாலித்தருளும். அன்றியும் மகத்துவம் பொருந்திய அமலோற்பவ கன்னியும் தேவதாயாருமாகிய அர்ச்சியசிஷ்ட மரியம்மாள், அவர்களுடைய பரிசுத்த பத்தா வாகிய அர்ச்சியசிஷ்ட சூசையப்பர், உமது அப்போஸ்தலராகிய அர்ச்சியசிஷ்ட இராயப்பர், சின்னப்பர் முதலிய சகல அர்ச்சியசிஷ்டவர் களுடைய மன்றாட்டுகளுக்குத் தேவரீர் திருவுள மிரங்கி பாவிகள் மனந்திரும்புவதற்காகவும் நமது தாயாகிய திருச்சபை சுயாதீனம் பெற்றுத் தழைத்து ஓங்குவதற்காகவும் நாங்கள் செய்து வருகிற செபங்களைக் கிருபை தயாபத்தோடே கேட்டருளும் சுவாமி. இந்த மன்றாட்டுக்களை எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும். ஆமென்.

அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேல் சம்மனசானவர் ஜெபம்

அதிதூதரான அர்ச்சியசிஷ்ட மிக்கேலே எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத் தருளும். பசாசின் துர்க்கருத்தையும் அதன் சற்பனைகளையும் அகற்றி எங்களுக்குத் துணை யாயிரும்.  தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு சர்வேசுரன் பசாசுக்குக் கற்பிப்பாராக. நீரும் மோட்ச சேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங்களை அழிக்கிறதற்கு உலகத்தில் சுற்றித் திரியும் பேயையும் மற்ற துஷ்ட அரூபிகளையும் தேவ வல்லமையின் பலத்தால் நரகத்தில் தள்ளுவீராக. ஆமென்.

சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே, எங்கள் பேரில் இரக்கமாயிரும் (மூன்று தடவை)