அர்ச். சலேத்மலை மாதாவின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நீதிமான்களுக்கு உறுதியாயிருக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமான சலேத் மாதாவே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்கு தேற்றரவான சலேத் மாதாவே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்குச் சுகிர்த புத்திமதிகளைச் சொல் லத்தக்கதாக மோட்சத்திலிருந்து இறங்கி இரண்டு ஏழைப் பிள்ளைகளுக்குத் தரிசனையான சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நாங்கள் பாவ வழியை விட்டு மனந்திரும்பத் தக்கதாக, எங்களுக்கு வரப் போகிற பொல்லாப்புகளை முன் அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுஷர் செய்கிற பாவங்களைப் பற்றித் திரளான கண்ணீரைச் சொரிந்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளான எங்கள் பேரில் கோபமாயிருக் கிற சர்வேசுரனுடைய கோபாக்கினையை உம்முடைய மன்றாட்டால் நிறுத்துகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

“நம்முடைய ஜனங்களான கிறீஸ்தவர்கள் மனந்திரும்பாதேபோனால், நமது திவ்விய குமார னுடைய திருக்கையானது அவர்களைத் தண்டிக்க வேண்டியதாய் இருக்கும்” என்று திருவுளம் பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுடைய பாவங்களைப் பற்றி அதிக வருத்தமும் பிரயாசமும் படுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மலையில் இரண்டு சிறு பிள்ளை களுக்குப் புத்திமதிகளைச் சொன்ன பிற்பாடு, இதெல்லாவற்றையும் சகல சனங்களுக்கும் அறிவியுங்கள் என்று திருவுளம் பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மக்கள் மனம் திரும்பாதேபோனால் அவர்களுக்கு மிகவும் பயங்கரமான தண்டனைகள் நேரிடும் என்று திருவுளம்பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மக்கள் மனம் திரும்பாதேபோனால் வெள்ளாண்மை கெட்டுக் கடின பஞ்சம் வரு மென்று முன்னறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மக்கள் மனம் திரும்பாதேபோனால் உருளைக் கிழங்குகளும், முந்திரிகைக் குலைகளும், கோதுமை முதலான விளைவுகளும் அழிந்து போய் ஜனங்களுக்கு மிகுந்த வருத்தமுண்டாகு மென்று அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மக்கள் மனம் திரும்பாமல் போனால், ஏழு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் நடுக்கமெடுத்து சாவார்கள் என்று முன்னறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மக்கள் மனம் திரும்பினால் சர்வேசுரனுடைய கோபம் மாறி வெள்ளாண்மை சரியாய்  விளைந்து பஞ்சம் நீங்கி எங்கும் சவுக்கியமும் செழிப்பும் உண்டாகுமென்று திருவுளம்பற்றின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மலையில் தேவரீர் சொன்ன சுகிர்த புத்திகளினால் அநேக பாவிகளை மனந்திருப் பின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மனுஷருடைய ஆங்காரம் அடங்காததைப் பற்றித் தேவரீர் முன் அறிவித்த பொல்லாப்புகள் எங்களுக்குச் சம்பவித்ததினால் எங்கும் பேர் போன சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மலையில் தேவரீர் காண்பித்த அற்புத மானது பூலோகத்தின் எத்திசையிலும் பிரபலிய மானதினாலே பேர் பெற்ற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மாதா என்கிற பேராலே கூப்பிடப் பட்டு எண்ணிக்கைக்குள் அடங்காத புதுமை களைச் செய்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சலேத் மாதாவின் பேராலே கட்டுவித்த நானூற்றுக்கு மேலான கோயில்களில் வணங்கப் படுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீருடைய உபகார சகாயங்களினால் நானாவித சனங்களை உம்மிடத்தில் வரப் பண்ணுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எத்திசையிலும் மென்மேலும் அதிகமதிக மாய்த் துதிக்கப்படுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீரை மன்றாடுகிறவர்களில் ஒருவரையும் வீணாய்ப் போக விடாத சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவரீர் திருப்பாதம் வைத்த இடத்தில் தண்ணீரூற்று அற்புதமாய்ப் புறப்படப் பண்ணின சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இந்தப் புதுமையான ஊற்றுத் தண்ணீரைக் கொண்டு கணக்கில்லாத அற்புதங்களைச் செய் விக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குருடருக்குப் பார்வையும் செவிடருக்கு செவியும் சப்பாணிகளுக்கு நடையும் மற்ற வியாதியஸ்தருக்கு ஆரோக்கியமும் கட்டளை யிடுகிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எவ்வித துன்பக் கஸ்திப்படுகிறவர்களுக்கும் ஆறுதலையும் தேற்றரவையும் கொடுக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சூரியனை மங்கச் செய்யும் ஜோதிப் பிரகாசத் தோடு சலேத் மலையில் காண்பித்த சலேத்  மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ரோஜாப்பூமுடியும் நட்சத்திரகிரீடமும் காந்தியுள்ள மற்றச் ஜோடிப்புகளும் அணியப் பட்டுத் தரிசனையான சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுக்கிறீஸ்துநாதர் பாடுபட்ட திருச்சிலுவை யும், குறடு சுத்தியலும் மார்பில் அணியாக வைக்கப்பட்டுக் காண்பித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சர்வேசுரனுடைய நாளான ஞாயிற்றுக் கிழமையை நாங்கள் அனுசரியாதேபோனால், எங்களுக்கு கடின ஆக்கினை நேரிடும் என்று முன் அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞாயிற்றுக்கிழமையை அநுசரியாத பாவமும், தேவதூ­ணம் சொல்லுகிற பாவமும், இவ் விரண்டு பாவங்களும் விசேஷமாய்த் தேவ கோபத்தை மூட்டுகிறதென்று முன் அறிவித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சுத்தபோசனக் கடனும், ஒருசந்தியும் சரியாய் அனுசரிக்க வேண்டுமென்று கட்டளையிட்ட சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

இராச் செபமும், காலைச் செபமும் தப்பாமல் செபிக்க வேண்டுமென்று கற்பித்த சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பாவிகளான எங்களுக்குத் தாயும் அடைக் கலமும் நம்பிக்கையும் ஆதரவுமாயிருக்கிற சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தயாபரியாயிருந்து எங்களைத் தயாபரித்துக் கொள்ளும் மாதாவே. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தயாபரியாயிருந்து  எங்கள் பிரார்த்தனை யைக் கேட்டருளும் மாதாவே. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்களுக்கு வரப்போகிற பொல்லாப்புகளை உமது வல்லபமுள்ள மன்றாட்டுகளினால்     அகற்ற வேண்டுமென்று தேவரீரை மன்றாடு கிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே.

பஞ்சம் படை பெருவாரிக் காய்ச்சல் முத லான ஆக்கினைகளிலிருந்து எங்களை இரட்சிக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே.

வெள்ளாண்மைப் பயிர் விளைவுகள் சரியாய் விளைந்து எங்களுக்கு செழிப்பும் சவுக்கியமும் வரப் பண்ண வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே.

சகலமான கிறீஸ்தவர்கள் தேவ ஆக்கினைக் குப் பயந்து சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையினுடைய கட்டளைகளையும் சுமுத் திரையாய் அநுசரிக்கப் பண்ண வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே.

சத்திய வேதம் எத்திசையிலும் பரவவும் திருச்சபை எங்கும் ஸ்தாபிக்கப்படவும் செய்ய வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே.

ஓ மாதாவே! எங்களுடைய சந்தோ­த்தில் திருப்தியும், கஸ்திகளில் ஆறுதலும், புண்ணியங் களில் உறுதியும், எந்தக் கிரியைகளிலும் துணை யுமாயிருக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடு கிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே.

எங்கள் மரணத் தறுவாயில் எங்களைக் கைவிடாமல் நல்ல பாவசங்கீர்த்தனமும், அவஸ் தைப்பூசுதலும், கடைசி நன்மையும், இஷ்டப் பிரசாதமும் கட்டளையிட்டருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் மாதாவே.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

சேசுக்கிறீஸ்துநாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக, பாவிகளுக்கு அடைக்கலமா யிருக்கிற அர்ச். சலேத் மாதாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வசீவ தயாபர சேசுவே! பாவிகளாயிருக்கிற அடியோர்களை மீட்டு இரட்சிக்கத்தக்கதாக உம்முடைய பரிசுத்த தாயாரான தேவமாதா  வைக் கொண்டு உம்முடைய நீதிக் கோபத்தினால் எங்களுக்கு வரப் போகிற ஆக்கினைகளைச் சலேத் மலையிலே முன் அறிவிக்கச் சித்தமானீரே.  நாங்கள் எல்லோரும் தக்க பயபக்தியோடு அஞ்சிப் பாவ வழிகளை விட்டு மனந்திரும்பி உம்முடைய கற்பனைகளையும் திருச்சபையினுடைய கட்டளைகளையும் சுமுத் திரையாய் அனுசரிக்க அனுக்கிரகம் பண்ணி யருளும்.  எங்களுடைய பாவங்களின் நிமித்தமாக எங்களுக்கு நேரிட்ட பொல்லாப்புகளை நீக்கி வரப்போகிற ஆக்கினைகளை அகற்றி வேண்டிய நன்மைகளைத் தந்து சந்தோ­மான மனதோடு நாங்கள் உமக்கு இவ்வுலகத்தில் ஊழியம் பண்ணவும், மறுலோகத்தில் உம்மோடுகூட என்றென்றைக்கும் வாழவும் செய்ய வேண்டு மென்று பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.  பிதாவோடேயும், இஸ்பிரீத்துசாந்துவோடேயும் ஒன்றாயிருந்து சதா காலம் சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்து கொண்டு வருகிறவருமா யிருக்கிற ஆண்டவரே.  

ஆமென்.

(சலேத் மாதாவைக் குறித்து 3 பர. அருள். திரி மந்திரம் வேண்டிக் கொள்ளவும்.)