சேசுநாதருடைய திரு இருதயத்தின் மந்திரமாலை

மந்திரமாலை ஜெபிக்குமுன் ஜெபம்

எல்லாரும்: ஆண்டவரே, உமது திரு நாமத்தை வாழ்த்த என் நாவைத் திறந்தருளும் (நாவில் சிலுவை அடையாளம் வரையவும்). சகலமான பொல்லாத வீண் புறத்தி விசாரங்களினின்று என் இருதயத்தைப் பரிசுத்தப்படுத்தும் (நெஞ்சில் சிலுவை அடையாளம்  வரையவும்). நான் இந்த மந்திரமாலையை சரியான கவனத்தோடும் பக்தியோடும் ஜெபிக்கும்படிக்கும்  தேவரீருடைய திருச் சமூகத்தில் நான் கேட்கும் மன்றாட்டை அடையும் படிக்கும் ஆண்டவரான சேசுகிறீஸ்துநாதரைப் பற்றி என் புத்திக்குப் பிரகாசத்தையும் என் நேசத்துக்கு அக்கினியையும் கொடுத்தருளும் சுவாமி ஆமென்.

ஆண்டவரே நீர் பூமியிலிருக்கும்போது எந்தக் கருத்தோடு சர்வேசுரனுக்குப் புகழ் புரிந்தீரோ அந்தக் கருத்தோடு இச்செபத்தை நான் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

யாமப் புகழ்

முதல்வர் : சர்வேசுரா எனக்கு உதவியாக நோக்கியருளுரும்.
துணைவர் : கர்த்தாவே எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்.
முதல்வர் : பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
துணைவர்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.  அல்லேலூயா.

(தபசு காலத்தில்: நித்திய மகிமைக்கு இராஜாவாகிய ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண் டாகக் கடவது.)

1. தேவ நற்கருணையில் மறைந்திருக்கும் என் சேசுவின் திரு இருதயமே, இதோ உம் முடைய சந்நிதியில் வந்திருக்கிறேன். உலகம் பசாசு சரீரம் எனப்பட்ட சத்துருக்களை, நான் ஜெயித்து உம்மைச் சிநேகிக்கத்தக்கதாக, ஆங்காரம், கோபம், மோகம், உலோபித்தனம், போசனப் பிரியம், காய்மகாரம், சோம்பல் முதலிய துர்க் குணங்களை விட்டுவிடவும், அக புற பற்றுக்களில் நின்று நீங்கவும் கிருபை செய்தருளும்.

2. தாவீதின் வம்சமே, திராட்சையயன்னும் செடியே, மாசற்ற செம்மறியே, மனுக்குலத்தின் ஈடேற்றமே, பரலோக சம்மனசுகளை நரக பாதா ளத்தில் தள்ளினதும், தேவ குமாரனாகிய உம்மை சிலுவையிலே கொலைப்படுத்தினதும், மனுக் குலத்தை நித்திய ஆக்கினைக்கு உட்படுத்துவது மாகிய சாவான பாவத்தினின்று என்னைக் காத்தருளும். புண்ணியங்களின் வளர்ச்சியைக் கெடுத்து, ஒழுக்கங்களை மங்கச் செய்து, வரப் பிரசாதத்தைக் குறைத்து, இருளைக் கொண்டு வரும் அற்பப் பாவத்தில் நான் விழாதபடி என்னைக் காப்பாற்ற மன்றாடுகிறேன்.

3. மனிதனான தேவனே, பிதாவின் ஆராதனைக்குரிய பலியே, உலகத்தின் பாவங்களைப் போக்குகிறவரே, அருளுள்ள ஆத்துமாக்களின் அப்பமே, காமம், குரோதம், வெகுளி, மயக்கம் என்ற குற்றங்களிலிருந்து நான் நீங்கவும், அவைகளுக் கடுத்த பொய், வஞ்சனை, சூது, வைராக்கியம், பிடிவாதம் முதலான துர்க்குணங்களை விட்டொழித்து, ஞானத்தின் ஜலத்தினால் கனிந்த நற்றவத்தின் கனியை நான் உமக்கு ஒப்புக்கொடுக் கவும், நன்மைத்தனம் தயையிலும் நல்லுணர்வு இரக்கத்திலும் நான் வளர்ந்தோங்கச் செய்யும் சுவாமி.

4. மனுக்குலத்தின் ஏக எண்ணமே, பரகதிக்கு மெய்யான பாதையே! சீவியத்தின் ஊருணியே, இரட்சண்யத்தின் ஒளியுள்ள கபாடமே, என் அன்புக்குரிய இரட்சகரே, எனக்குப் புண்ணியத் தின் ஆசையையும், நிலைதவறாத விசுவாசத் தையும், கெட்டியான நம்பிக்கையையும், உருக்க மான சிநேகத்தையும் தந்து, நான் பிறர்சிநேகத் திலும், இருதய சமாதானத்திலும், ஞான சந்தோ­த்திலும், மதிப்பை உதறித் தள்ளுவதிலும் நிலைகொள்ளும்படி செய்தருளும்.

பிரார்த்திக்கக் கடவோம்.

தயை நிறைந்த சர்வேசுரா! நீர் அருமையோடு நேசித்த உமது திருக்குமாரனின் மதுரமான இருதய மானது எங்களுக்காக அனுபவித்த தாங்கொணா துயரத்தையும் எங்கள் பாவங்களுக்காக அவரளித்த தகுந்த பரிகாரங்களையும் பார்த்து, எங்கள் பேரில் உமக்குள்ள கோபத்தைத் தணித்து எங்கள் பாவங் களைப் பொறுத்தருளும்.  அவருடைய திவ்விய இருதயத்தின் துக்கங்களைப் பார்த்து, எங்கள் இருதயம் அக்கினிமயமாய் எரியவும் நாங்கள் உத்தம பிரகாரம் அவரைச் சிநேகிக்கவும் எங்க ளுக்கு அனுக்கிரகம் புரிந்தருளும் சுவாமி. ஆமென்.

முதல்வர் : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணை : என் அபயசத்தம் உம் சந்நிதி மட்டும் வரக்  கடவது.
முதல் : ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்.
துணை : சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல் : மரித்த   விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
துணை : ஆமென்.  

காலைப் புகழ் (முதற் கணித ஜெபம்)

முதல்வர் : சர்வேசுரா எனக்கு உதவியாக நோக்கியருளுரும்.
துணைவர் : கர்த்தாவே எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்.
முதல்வர் : பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
துணைவர்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.  அல்லேலூயா.

(தபசு காலத்தில்: நித்திய மகிமைக்கு இராஜா வாகிய ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண் டாகக்கடவது.)

1. பிதாவின் தயையைக் காண்பிக்கும் பிரகாசமே, நித்திய மகிமையின் பரஞ்சோதி அரசரே, நீதியின் சூரியனே, என் நல்ல தகப்பனே, எனக்கு தாழ்ச்சி, பொறுமை, கற்பையும், உதாரம், மட்டசனம், பிறர்சிநேகம், சுறுசுறுப்பையும் தந்து, உமது ஞானத் தால் என்னை ஆண்டு நீதியால் காப்பாற்றி, இரக்கத்தால் என் துயரத்தை ஆற்றி, வல்லபத்தால் ஆதரியும்.

2. நித்திய பரம ஆலோசனையின் தூதரே, கற்பை சிநேகிக்கிறவரே, கரை காணா சமுத் திரமே, சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையே, என் நேச நம்பிக்கையே, எனக்கு ஞானம், புத்தி, அறிவு, விமரிசை, திடம், பக்தி, தேவபயத்தைத் தந்து, நான் நினைக்கிறதெல்லாம் சரியாய் நினைக்கவும், சொல்வதையயல்லாம் நிதானமாய்ச் சொல்லவும், செய்வதையயல்லாம் நீதிப் பிரகாரம் செய்யவும், பொறுப்பதையயல்லாம் உமக்காகப் பொறுக்கவும் செய்தருளும்.

3. ஞானத்தின் வற்றாத நதியே, நற்றவத் தோர்க்கு மங்கா ஒளியே, திருச்சபையின் அரசே, நித்தியானந்த வடிவே, என் ஆசைக்குரிய தெய் வமே, விருப்பமுள்ள தரித்திரத்தையும் ஓயாத கற்பையும், பழுதற்ற கீழ்ப்படிதலையும் தந்து எனக்கு வேதத்தின் மீது பற்றுதலையும், தர்மத்தில் நிலைத்திருத்தலையும், சஞ்சலத்தில் திடனையும் தந்தருள்வீராக.

4. பூலோக இரட்சகரே, பரலோகத்துக்கு ஏணியே, பரம போதகரே, பட்சம் நிறைந்த ஆத்தும பத்தாவே, அடிப்படைப் புண்ணியங் களாகிய விவேகம், நீதி, மனத்திடம், மட்டுத் திட்டத் தையும், நான்கு இறுதி முடிவுகளாகிய மரணம், தீர்வை, மோட்சம், நரகத்தையும் நன்றாய்த் தியா னித்து, உமது இரக்கத்தை மதித்து, சிநேகமயமான சிரவணத்தால் உமது பிள்ளையயன்கிற பெய ரெடுக்க எனக்குக் கிருபை கூர்ந்தருளும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்.

சேசுநாதருடைய சிநேகம் நிறைந்த இருத யமே! தயையின் சமுத்திரமே! உம்மில் அகமகி ழும் பாக்கியமான காலம் எனக்கு நேரிட்டது.  உமது சகல இலட்சணங்களோடு என்னிடம் எழுந் தருளி வந்து, என் கன்னெஞ்சை மாற்றி, மதுர குண மும், மனத்தாழ்ச்சியும், உமது அன்பும் நிறைந்த புது இருதயத்தை எனக்குத் தந்தருளும் சுவாமி.

முதல்வர் : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணை : என் அபயசத்தம் உம் சந்நிதி மட்டும் வரக்  கடவது.
முதல் : ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்.
துணை : சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல் : மரித்த   விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
துணை : ஆமென்.  

மூன்றாம் கணித ஜெபம்

முதல்வர் : சர்வேசுரா எனக்கு உதவியாக நோக்கியருளுரும்.
துணைவர் : கர்த்தாவே எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்.
முதல்வர் : பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
துணைவர்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.  அல்லேலூயா.

(தபசு காலத்தில்: நித்திய மகிமைக்கு இராஜாவாகிய ஆண்டவரே, உமக்கே தோத்திர முண்டாகக்கடவது.)

1. சமாதானக்கடலே, சதானந்த பொக்கிஷமே, வல்லபம் பொருந்திய சிங்கமே, பிராயச் சித்தப் பலியே, என்னைக் காப்பாற்றும் ஆண்ட வரே.  நான் தெய்வீக அறிவையும், என் சுய துர்ப்பலத்தையும் உணர்ந்து, பிறருக்கு நற்புத்தி சொல்லவும், தெரியாதவர்களுக்குப் படிப்பிக்க வும், தப்பிப் போகிறவர்களைத் திருத்தவும், கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதல்சொல்லவும், நிந்தைகளை சகித்து, பொல்லாப்புகளைப் பொறுத்துக் கொள்ளவும், சீவியர்களுக்காகவும், மரித்தவர்களுக்காகவும் உம்மை நான் வேண்டிக் கொள்ளவும் எனக்கு அனுக்கிரகம் செய்தருளும்.

2. புண்ணிய ஆன்மாக்களை சிநேக பந்தனம் பண்ணும் நாதனே, பாவிகளுடைய மதுரமான தஞ்சமே, மெய்யான ஞான மேய்ப்பனே, என் சங்கைக் குரிய கர்த்தனே, என் புத்தியைத் துலக்கும், மனதை நன்மையில் எழுப்பும், என் சரீரத்தைப் பரிசுத்தப்படுத்தி, ஆத்துமத்தை அர்ச்சித்தருளும்.

3. மோட்சத்தின் எளிமையான வழியே, உண்மையின் நிகரற்ற போதகரே, சீவியத்தின் தெளிந்த ஊற்றே, சிறப்புள்ள மகிமையின் ஆபரணமே, என் மெய்யான பாக்கியமே, நான் ஆங்காரத்தால் உயராமலும், இச்சகத்தால் பூரிக் காமலும், பூலோகத்தால் மோசம் போகாமலும், பசாசின் சோதனையில் உட்படாமலுமிருக்கக் கிருபை செய்தருளும்.

4. நித்தியத்தின் ஞான விளக்கே, பரலோ கத்தில் சேர்க்கும் கப்பலே, ஒருவராலும் முழுமை யும் கண்டு மதிக்கப்படாத வேத மாணிக்கமே, என் நித்திய பொக்கி­மே, என் ஞாபகத்தில் உம்முடைய நினைவு நிரந்தரம் அகலாதிருக்கவும், என் நாவு உம்மைப் புகழவும், என் இருதயம் உம்மில் மூழ்கியிருக்கவும் செய்தருளும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்.

நித்திய பிதாவின் ஏக சுதனே, தேவ வார்த்தையே, என் இருதயம் உமது திருஇருதயம்போல் ஆகத் தக்கதாக, நீர் மனுவுருஎடுத்து, மனித இருதயத் தைக் கைக்கொண்டதை நினைத்து, எனக்கு கபடற்ற மதுரமுள்ள, தீமையகன்று நன்மையயல்லாம் கொண்ட புதிதான ஓர் இருதயத்தைத் தாரும் சுவாமி.

முதல்வர் : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணை : என் அபயசத்தம் உம் சந்நிதி மட்டும் வரக்  கடவது.
முதல் : ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்.
துணை : சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல் : மரித்த   விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
துணை : ஆமென்.  

ஆறாம் கணித ஜெபம்

முதல்வர் : சர்வேசுரா எனக்கு உதவியாக நோக்கியருளுரும்.
துணைவர் : கர்த்தாவே எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்.
முதல்வர் : பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
துணைவர்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.  அல்லேலூயா.

(தபசு காலத்தில்: நித்திய மகிமைக்கு இராஜாவாகிய ஆண்டவரே, உமக்கே தோத்திர முண்டாகக்கடவது.)

1. பிதாப்பிதாக்களுக்கு அதிபதியே, தீர்க்க தரிசிகளுக்கு ஞானங் கொடுக்கிறவரே, அப்போஸ் தலர்களுக்கு உபாத்தியாயரே, சுவிசேஷகர்களுக்குப் போதகரே, என்னைக் காப்பாற்று கிறவரே, நான் முன்செய்த பாவங்களையயல்லாம் வெறுக்கவும், வரும் தந்திரங்களை ஜெயிக்கவும், என் துர்க்குணங்களைத் திருத்தி புண்ணியங் களைச் செய்யவும் ஒத்தாசை செய்தருளும்.

2. வேதசாட்சிகளுடைய திடமே, ஸ்துதியர் களுடைய பிரகாசமே, கன்னியர்களின் ஞானப் பத்தாவே, சகல அர்ச்சியசிஷ்டவர்களுடைய கிரீடமே, எனது பக்திக்கு ஆனந்தமே, நான் உம்மைச் சிநேகிக்கவும், என்னைப் பகைக்கவும், பிறரை உயர்த்தவும், புவியை நிந்திக்கவும் தயை செய்தருளும்.

3. மனுக்குலத்தின் மேல் சிநேகம் நிறைந்த கர்த்தாவே, ஒருவராலும் கண்டுபிடிக்கக்கூடாத தயையின் சமுத்திரமே, நித்திய பிதாவுக்கு உகந்த தேவ ஆலயமே, எனக்கு நித்திய ஆஸ்தியே, நான் பெரியோருக்கு சங்கை செய்யவும், சிறியோரை அரவணைக்கவும், சிநேகிதர்களுக்கு இணங்கவும், ஒருவரையும் பகையாதிருக்கவும் செய்தருளும்.

4. இஸ்பிரீத்துசாந்துவின் அரண்மனையே, திரித்துவத்தின் மூலஸ்தானமே, சிநேகத்தின் சிம்மாசனமே, என் அன்பே, நான் என் சத்துருக் களை நேசிக்கவும், நிந்தைகளைப் பொறுமை யோடு சகிக்கவும், தீமை செய்வோருக்கு நன்மை செய்யவும், என் மேல் அவதூறு சொல்பவர் களுக்காக ஜெபம் செய்யவும் கிருபை செய்தருளும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்.

சேசுகிறீஸ்துநாதரே, என் ஆண்டவரே, கரை கடந்த உமது திரு இருதயத்தின் ஆஸ்திகளை உமது திருச்சபைக்கு அளிக்கச் சித்தமானதால் உமது திவ்விய இருதயத்தின் அன்பிற்கு நான் சம்மதிக் கவும், என்னால் கூடுமான வரையில் உமது         திரு இருதயத்துக்கு வரும் நிந்தை அவமானங் களைப் பரிகரிக்கவும் கிருபை செய்தருளும் சுவாமி.

முதல் : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணை : என் அபயசத்தம்  உம் சந்நிதி மட்டும் வரக்  கடவது.
முதல் : ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்.
துணை : சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல் : மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
துணை : ஆமென்.  

ஒன்பதாம் கணித ஜெபம்

முதல்வர் : சர்வேசுரா எனக்கு உதவியாக நோக்கியருளுரும்.
துணைவர் : கர்த்தாவே எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்.
முதல்வர் : பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
துணைவர்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.  அல்லேலூயா.

(தபசு காலத்தில்: நித்திய மகிமைக்கு இராஜா வாகிய ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண் டாகக்கடவது.)

1. மெய்யறிவின் களஞ்சியமே, குறையாத ஞானப் பொக்கி­மே, சிநேக பந்தனம் செய்யும் நாயகனே, என் நித்திய திரவியமே, நான் தபசி னால் என் சிற்றின்ப சுகத்தை வெறுக்கவும், கொடையால் என் உலோபித்தனத்தைத் தொலைக் கவும், மதுர குணத்தால் என் கோபத்தைத் தணிக்க வும், பக்தி சுறுசுறுப்பால் என் மந்த குணத்தை அகற்றவும் செய்தருளும்.

2. நித்திய ஜீவியத்திற்கு வழியே, உச்சித மான அருட்பிரவாகமே, எங்கள் மேல் வைத்த அன்பென்னும் வாளால் ஊடுருவப்பட்ட நாயகரே, ஆறுதல் தரும் தந்தையே, நான் பிறருக்குப் புத்தி சொல்லுவதில் விமரிசை உள்ளவனாகவும், ஆபத்தில் தைரியமுள்ளவனாகவும், தரித்திரத்தில் பொறுமையுள்ளவனாகவும், செல்வத்தில் தாழ்ச்சி யுள்ளவனாகவும் இருக்கச்  செய்தருளும்.

3. மேக மண்டலத்துக்கு மேலாக நிற்கும் சந்திர, சூரிய, நட்சத்திரங்களைத்தாண்டி, வானத்தின் திரையால் நித்திய பேரின்ப ஸ்தலமா கிய மோட்சத்தை எங்கள் கண்களுக்கு மறைத் ததுபோல, தேவ நற்கருணையில் உமது தெய்வீ கத்தை மறைத்த மதுர சேசுவே, நான் ஜெபத்தில் நிலை கொண்டவனாகவும், போசனத்தில் மட்டசனம் உள்ளவனாகவும், கடமையில் சுறுசுறுப் புள்ளவனாகவும், நல்ல பிரதிக்கினைகளில் உறுதி யுள்ளவனாகவும் இருக்கத் தயை செய்தருளும்.

4. பகலில் பூமியை சூரியனால் விளக்கி, இரவில் இருள் திரையை அதன்மேல் வீசுவது போல, உம்மை நேசிக்கிறவர்களுடைய இருதயத்தில் பிரகாசித்து, துஷ்டத்தனத்தால் பிடிவாதங் கொண்டு, உமது அருளை நிந்தித்துப் புறக்கணிக் கிறவர்களுடைய மன அந்தகாரத்தில் அவர்களை விட்டு விடுகிற என் நேச சேசுவே, என் இருதயத் தில் நான் அர்ச்சியசிஷ்டவனாகவும், உரையாடு வதில் தேன் போன்ற நாவுடையவனாகவும், வாழ்வில் ஒழுங்குள்ளவனாகவும் இருக்கும்படி செய்தருளும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்.

என் நேசத்துக்குரிய சேசுவின் ஆத்துமமே, என்னை அர்ச்சித்தருளும்.  சேசுநாதரின் திவ்விய சரீரமே, என்னை இரட்சித்துக் கொள்ளும்.  கிறீஸ்துநாதருடைய திரு இருதயமே, என் அகம் மகிழச் செய்தருளும். கிறீஸ்துவின் திருவிலா வினின்று ஓடி விழுந்த திருத்தண்ணீரே, என்னைக் கழுவியருளும்.  கிறீஸ்துநாதரின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்துங்கள். என் நல்ல சேசுவே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.  உமது காயங் களுக்குள்ளே என்னை மறைத்துக் கொள்ளும். உம்மை விட்டு என்னைப் பிரிய விடாதேயும்.  என் சத்துருக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்.  என் மரண வேளையில் உமதருகில் என்னை அழைத்தருளும். உமது அர்ச்சியசிஷ்டவர் களோடு நான் நித்திய காலமும் வாழ அனுக்கிரகம் செய்தருளும் சுவாமி.  ஆமென்.

முதல்வர் : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணை : என் அபயசத்தம் உம் சந்நிதி மட்டும் வரக்  கடவது.
முதல் : ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்.
துணை : சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல் : மரித்த   விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
துணை : ஆமென்.  

வெஸ்பர்ஸ் என்னும் மாலை ஜெபம்

முதல்வர் : சர்வேசுரா எனக்கு உதவியாக நோக்கியருளுரும்.
துணைவர் : கர்த்தாவே எனக்கு ஒத்தாசை செய்யத் தீவிரியும்.
முதல்வர் : பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்துவுக்கும் மகிமையுண்டாவதாக.
துணைவர்: ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.  அல்லேலூயா.

(தபசு காலத்தில்: நித்திய மகிமைக்கு இராஜா வாகிய ஆண்டவரே, உமக்கே தோத்திரமுண்டாகக்கடவது.)

1. சூரியனிடத்தினின்று சந்திரன் ஒளி அடைவதுபோல, உம்மிடத்தினின்று உம்மை நேசிக்கிறவர்கள் பிரகாசமடையச் செய்யும் என் மதுர சேசுவே, என்னை என் சுபாவம் மேற்கொள் ளாதபடிக்கு, தேவ வரப்பிரசாதத்தை ஆபரண மாய்ப் பூண்டு, வேதத்தை நுணுக்கமாய் அனுசரித்து, நான் நற்கதியடையச் செய்தருளும்.

2.  உமது தயையின் விசாலத்திற்குத் தக்க பிரகாரம், உமது நன்மைத்தனத்தின் பெருக்கத் திற்கு ஏற்ப, உமது அளவற்ற பொறுமைக்குத் தகுந்த முறையில், உமது இன்பம் பொருந்திய மதுர குணத்திற்கு ஏற்றபடி, என்னைக் கண் ணோக்கிப் பார்த்து, நான் நல்ல பாவசங்கீர்த் தனத்தால் அர்ச்சிக்கப்படவும், தகுதியான வித மாய் நன்மை வாங்கி, அருளைப் பெறவும், நான் உள்ளிந்திரியங்களையும், பஞ்சேந்திரியங்களை யும் அடக்கி புத்தியிலே உயரவும், இருதயத்தின் சுத்த கருத்தால் தூய்மையாகவும் செய்தருளும்.

3. உமது தெய்வீகத்தின் வல்லபத்தைப் பார்த்தும், உமது மனுUகத்தின் தாழ்மையைப் பார்த்தும், உம்முடைய பாடுகளின் அகோரத் தைப் பார்த்தும், பூசைப் பலியின் மகத்துவத்தைப் பார்த்தும், மனித வாழ்நாள் எவ்வளவு அற்பமென்றும், பேரின்ப வாழ்வு எம்மாத்திரம் உயர்ந்ததென்றும், உலக செல்வம் எவ்வளவு சின்னக் காரியமென்றும், நித்திய மகிமை எம்மாத்திரம் நீடித்ததென்றும் நான் அறியத் தயை செய்தருளும்.

4. உமது திருத்தாயார் அனுபவித்த துயரங் களைக் கொண்டும், உமது சம்மனசுக்கள், அர்ச்சிய சிஷ்டவர்களின் புகழ்ச்சிகளைக் கொண்டும், சத்திய வேதத்தின் பரம இரகசியங்களைக் கொண்டும்,  பூலோகத்தில் மனுமக்கள் செய்யும் செப தவங்களைக் கொண்டும், நான் நல்ல மரணம் அடையவும், உமது பயங்கரமான நீதிக்குத் தப்பித்துக் கொள்ளவும், நரகத்துக்கு ஆளாகாமல் மோட்ச முடி பெறவும் தயை புரிந்தருளும் சுவாமி.

பிரார்த்திக்கக்கடவோம்.

ஆகாயமும், பூலோகமும் தாங்கிய சகலமான உயிருள்ள வஸ்துக்களுக்கும் அமுதளிக்கும் நாதனே, எனக்கு யாவற்றையும் கொடுத்து, உம்மையும் என் ஆத்தும போஜனமாக தேவ நற்கருணையில் கொடுத்து விட்ட ஆண்டவரே, உமது மட்டற்ற தயாளத்தையும், சிநேகத்தையும் கண்டு பிரமித்து, இந்த தேவ நற்கருணையில் பயபக்தியோடு உம்மை வணங்கி, என்னை முழுமையும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். வானம் கொண்ட ஆச்சரியமான அண்டகோளங்களுக்குப் பிரகாசம் தந்து, ஒன்றோ டொன்று தட்டாமல் இயக்கும் தேவனே, நான் பொன்னாசை, புவியாசை, சரீர ஆசைகளில் தட்டுப் படாமல் சுகந்த பரலோக பரிமளம் வீசும் உம்மில் இளைப்பாறச் செய்தருளும். சர்வலோகங்களிலும் அடங்காத கர்த்தாவே, என் மேல் வைத்த சிநேகப் பெருக்கத்தால் தேவ நற்கருணையில் அடங்கி னதை யோசித்து நடுநடுங்கி எல்லாவற்றையும் வெறுத்து, உம்மைக் கெட்டியாய்ப் பற்றி ஆராதிக் கிறேன்.  என் சித்தம், புத்தி, ஞாபகம், ஆசையெல்லாம் ஒன்றிலும் அடங்காமல், உம்மில் மாத்திரம் அடங்கிப் போகச் செய்தருளும் சுவாமி.  ஆமென்.

முதல்வர் : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணை : என் அபயசத்தம் உம் சந்நிதி மட்டும் வரக்  கடவது.
முதல் : ஆண்டவரை வாழ்த்தக் கடவோம்.
துணை : சர்வேசுரனுக்கு நன்றியுண்டாவதாக.
முதல் : மரித்த   விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
துணை : ஆமென்.  

மந்திரமாலை முடிவில் ஜெபம்

மகா பூசிக்கத்தக்க ஏக திரித்துவத்திற்கும் சிலுவையில் அறையுண்ட நமதாண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய மனுUகத்திற்கும், ஒட்ட லோக மாட்சிமை தங்கி ஒருபோதும் கன்னிமை குன்றாத அர்ச்சியசிஷ்ட மரியாயின் குறை யில்லாக் கன்னிமைக்கும், சகல அர்ச்சியசிஷ்டவர் களுடைய கூட்டத்திற்கும் சகல சிருஷ்டிகளி னாலே துதியும், தோத்திரமும், மகிமையும், புகழும் அனவரத காலமும் உண்டாகக்கடவது.  நமக்கோவென்றால் சதாகாலமும் பாவ விமோசனம் உண்டாவதாக. ஆமென்.

முதல் : நித்திய பிதாவின் சுதனைத் தாங்கின கன்னிமரியாயின் உதரம்  பாக்கியம் பெற்றது.
துணை : ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் பாலுண்ட கொங்கைகள் பாக்கியம் பெற்றன.