இன்று உலகில் நிறைவேறும் சகல திவ்விய பலி பூசைகளையும் ஒப்புக்கொடுக்கும் ஜெபம்

இந்நேரத்தில் உலக முழுவதும் ஒப்புக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு திவ்யபலி பூசையோடும் அடியேன் என்னை ஒன்றித்துக் கொள்கிறேன்.  மகா பரிசுத்த தமத்திரித்துவத்திற்குக் கிறீஸ்துநாதரின் திரு இரத்தம் ஒப்புக்கொடுக்கப் படுவதன் வழியாக, சகல வரப்பிரசாதங்களுக்கும் மத்தியஸ்தியாகிய பரிசுத்த கன்னிமாமரி, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு நித்திய இளைப்பாற்றியையும், வியாதியஸ்தருக்கும், மரிக்கிறவர்களுக்கும் நிவாரணத்தையும், நாஸ்தீகர்களுக்கும் அஞ்ஞானிகளுக்கும், பாவிகளுக்கும் மனந்திரும்புதலையும், சகல விசுவாசிகளுக்கும் நிலைமை வரத்தையும் பெற்றுத் தருமாறு அந்தப் பூசைகளை அடியேன் தேவமாதாவின் திருக்கரங்களில் வைக்கிறேன்.  

ஆமென்.