திருச்சபையின் மேன்மைக்காக பிதாவாகிய சர்வேசுரனை நோக்கி ஜெபம்

நித்திய பிதாவே!  தேவரீர் ஆதியிலேதானே உமக்குச் சொந்தமாய் ஏற்றுக் கொண்ட திருச்சபையை நினைத்தருளும் சுவாமி.  உம்முடைய ஏக சுதனாகிய சேசுகிறீஸ்துநாதர் தமது திரு இரத்தமெல்லாம் சிந்திச்  சுதந்தரித்துக் கொண்ட பரிசுத்த திருப்பத்தினி அதுதான் என்று எண்ணுவீராக.  அது தன்னுடைய திவ்விய பத்தாவுக்கும், தன்னை மீட்ட விலைமதியாத கிரயத்துக்கும் பாத்திரமானதாய் விளங்கத்தக்கதாக, தேவரீர் அதை மேன்மைப்படுத்தி, அர்ச்சியசிஷ்டதன சோதிக்கதிரால் பிரகாசிக்கச் செய்து, மிகுதியான தேவ இஷ்டப்பிரசாதங்களால் பூரிப்பித்தருள வேண்டுமென்று தேவரீரை ஆசைப் பெருக்கத்துடனே மன்றாடுகிறோம். அதன் பிள்ளைகளான சகலரும் பற்றுதலுள்ள விசுவாசத்துடனே தேவரீரை அறிந்து அனுசரித்து, உறுதியான நம்பிக்கையுடனே தொழுது மன்றாடி, உத்தம சிநேகத்துடனே நேசித்துச் சேவிக்கச் செய்தருளும் சுவாமி.  

ஆமென். 

1 பர. 1 அருள்.