பாவசங்கீர்த்தனம் செய்யும் வகை

ஆயத்த ஜெபம்

இஸ்பிரீத்துசாந்துவே!  தேவரீர் எழுந்தருளி வாரும்; உமது திவ்விய பிரகாசத்தின் கதிர்களை என் ஆத்துமத்தில் வரவிட்டு, அதிலுள்ள பாவக் கறைகளையும், அந்தப் பாவங்கள் உமக்கு வருவிக்கிற அருவருப்பையும் நான் கண்டறியும்படி தயை செய்தருளும்.  அர்ச்சியசிஷ்ட கன்னிமரியாயே! அர்ச்சியசிஷ்ட சூசையப்பரே! என் பெயர் கொண்டிருக்கிற அர்ச்சியசிஷ்டவரே!  என் ஆத்துமத்திலுள்ள பாவக் கறைகளை எல்லாம் கண்டு, மனஸ்தாபப்பட்டு, கெட்டியான பிரதிக்கினை செய்து நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணும்படி எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆமென்.