ஐந்து காய வரம் பெற்ற அர்ச். பிரான்சிஸ் அசிசியார் பிரார்த்தனை

(திருநாள் : அக்டோபர் 4)

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அமலோற்பவியாகிய அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அர்ச். பிரான்சிஸ்குவின் சபையை ஆதரிக்கிறவர்களாகிய அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்திச்சுவாலகரை ஒத்த அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரர்களின் பிதாப்பிதாவாகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தைப் புறக்கணித்தவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தவத்தின் மாதிரிகையாகிய அர்ச். பிரான் சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் துர்க்குணங்களை ஜெயித்தவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய இரட்சகரைக் கண்டுபாவித்தவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துநாதருடைய திருக்காயங்களைத் தரிசித்துக் கொண்டவராகிய அர்ச். பிரான் சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சேசுநாதருடைய சற்குணங்களினாலும், அடையாளங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கற்பின் மாதிரிகையான அர்ச். பிரான் சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தாழ்ச்சியின் உத்தம மாதிரிகையான அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தேவ இஷ்டப்பிரசாத வரங்களால் சிங்கா ரிக்கப்பட்ட அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தவறுகிறவர்களின் நெறியாகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நோயாளிகளுக்கு மருந்தாகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திருச்சபையின் தூணாகிய அர்ச். பிரான் சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

விசுவாசத்தைக் காக்கிறவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கிறீஸ்துநாதருடைய திரு மல்ல யுத்தராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஞானப் போரிடுகிறவர்களின் அரணாகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஊடுருவப்படாத கேடயமாகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதிதர்களை மறுத்து ஜெயித்தவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

புறவினத்தாரை மனந்திருப்பினவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

நொண்டிகளை செவ்வைப்படுத்தினவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மரித்தோரை உயிர்ப்பித்தவராகிய அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

குஷ்டரோகிகளைக் குணப்படுத்தின அர்ச். பிரான்சிஸ்குவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எங்கள் நகரத்தின் பரிபாலகராகிய அர்ச். பிரான் சிஸ்குவே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும். கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பிதாவாகிய அர்ச். பிரான்சிஸ்குவே, நிர்ப்பாக்கியரான உம்முடைய பிள்ளைகளை சந்தித்தருளும். மரண நித்திரையிலிருந்து அவர்களை எழுப்பியருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

முத்தரான எங்கள் பிதாவாகிய அர்ச்சிய சிஷ்ட பிரான்சிஸ்குவின் புண்ணியப் பேறுகளி னால் உமது திருச்சபையை ஒரு புது சந்நியாச சபையாலே பெருகச் செய்தருளின சர்வேசுரா, அவருடைய பாவனையாகப் பிரபஞ்சக் காரியங் களைப் புறக்கணிக்கவும், பரலோக வரங்களுக்கு எப்போதும் பங்காளியாயிருப்பதினால், அகமகிழ்ந் திருக்கவும் எங்களுக்கு அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி.  இந்த மன்றாட்டை சேசுகிறீஸ்துநாத ருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.  

ஆமென்.