இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். இஞ்ஞாசியாரை நோக்கி செபம்

(திருநாள் : ஜு லை 31)

தேவ தோத்திரத்தை இப்பூவுலகில் பரப்பச் செய்வதற்கும், எண்ணிக்கையில்லாத ஆத்துமங்களை பரகதியில் சேர்ப்பதற்கும் சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்ட அர்ச். இஞ்ஞாசியாரே, அடியேன் எவ்வளவு அபாத்திரவானாயினும், தேவரீர் பேரிலுள்ள நம்பிக்கையாலும், உமது செல்வாக்கு வல்லபத்தாலும் ஏவப்பட்டு உமது சரணமாய் ஓடி வந்தேன்.  நீரே என் பரிபாலன காவலனாயிருந்து என் ஆத்துமத்தை பாதுகாத்தருள வேணுமென்று உம்மை மன்றாடுகிறேன்.  

ஏனெனில் என் சீவனை உம்மிடம் கையளிக்கிறேன். என் மரண காலத்தையும் உம்மிடமே ஒப்படைத்து விடுகிறேன். சோதனை வேளையில் எனக்கு ஆதரவாயிரும். தேவ சந்நிதியில் என் மத்தியஸ்தராயிருந்து மனுப்பேசி என் குறைகளைப் போக்கியருளும். விசேஷமாய் என் கிரியைகளையயல்லாம் அர்ச்சித்துப் பேறுபலன் உள்ளதாக்கி நித்திய மோட்ச சம்பாவனையை நிச்சயப்படுத்தும்.  சக்தியுடையதாகிய உத்தம தேவசிநேகத்தை எனக்காகக் கேட்டுத் தந்தருளும். 

ஆமென்.