சேசுநாதர் சகோதரி பவுஸ்தீனாவிடம் இவ்வாறு கூறினார்:
“பிற்பகல் மூன்றுமணி வேளையில் என் இரக்கத்தினிடம் பாவிகளுக்காக விசேமாய் மன்றாடு. சொற்ப நேரமாகிலும் என்னுடைய பாடுகளிலும் விசேமாக என் மரண அவஸ்தையிலே நான் கைவிடப்பட்டதிலும் உன்னை மூழ்க வை. உலகம் முழுவதற்கும் இது பெரிய இரக்கத்தின் நேரம். இந்நேரத்தில் என் பாடுகளைக் குறித்து ஒரு ஆன்மா கேட்கிற எதையும் நான் மறுக்கமாட்டேன். கடிகாரம் மூன்று மணி அடிப்பதை நீ கேட்கும்போது என் இரக்கத்தினுள் உன்னை மூழ்க வை. என் இரக்கத்தை அப்போது ஆராதி. மகிமைப்படுத்து. அதன் சர்வ வல்லபத்தை உலகம் முழுவதற்கும் விசேமாய் பாவிகளுக்காகவும் மன்றாடு. ஏனென்றால் அந்நேரத்தில் ஒவ்வொரு ஆன்மாவிற்காகவும் என் இரக்கம் திறக்கப்பட்டது. அப்போது நீ உனக்காகவும் பிறருக்காகவும் கேட்பதையயல்லாம் பெற்றுக் கொள்வாய். உலகம் முழுமைக்கும் அது வரப் பிரசாதத்தின் நேரம். நீதியை இரக்கம் வென்ற நேரம் அது.”