அர்ச்.சியென்னா கத்தரினம்மாள் கீதம்

வரபிரசாதத்தின் கர்த்தாவே! என் இனிய இரட்சகரே மாசற்ற கன்னிகையிடமிருந்து அழியக் கூடிய எங்கள் மனுவுருவெடுத்த உமது திருமாம்சம் தெய்வீகமானது என்று நினைத்தருளும்.

ஓ மரியாயே! வரப்ரசாதங்கள் அனைத்திற்கும் மாதாவே! எம் இனத்தாருக்கு இரக்கத்தின் தாயாரே பசாசின் வல்லமையிலிருந்து இப்பொழுது எங்களைப் பாதுகாத்தருளும். எங்கள் மரண நேரத்தில் எங்களைச் சுதந்தரித்துக் கொள்ளும்.

ஓ ஆண்டவரே! எல்லா மகிமையும் உமக்கே உண்டாவதாக! பரிசுத்த கன்னிகையின் சுதனாய் அவதரித்த தேவரீர் சகலராலும் ஆராதிக்கப் படுவீராக. மேலும் பிதாவோடும், தேற்றுகிறவரோடும் தேவரீர் சதாகாலமும் ஒரே ஸ்துதி புகழ்ச்சியைப் பெற்று கொள்வீராக.

ஆமென்.