சாதி வேற்றுமை நீங்க செபம்.

எல்லா மனிதரையும் ஒரே இரத்தத்தினால் உண்டாக்கி, நாங்கள் யாவரும் ஒருவருக்கொருவர் அவயவங்கள் என்று கற்பித்த கடவுளே! இத்தேசத்திலுள்ள சகல சனங்களும் சாதிவித்தியாசம் பாராது சகோதர ஐக்கியமாய்ச் சீவிக்க, உதவி செய்தருளும். எல்லாவித அவநம்பிக்கையும் கசப்பும் எங்களை விட்டு நீங்க அருள் செய்யுமென்று வேண்டுகிறோம்.

கிறிஸ்து எங்கள் சகோதாருக்காகவும் மரித்திருக்க, நாங்கள் அவர்களை அற்பராய் மதிக்கும் பெருமையிலிருந்து எங்களைக் காத்தருளும். பெரியவர்கள் சிறியவர்களுக்கும், பலவித சலாக்கியங்களைப் பெற்றவர்கள் குறைவுள்ளவர்களுக்கும் உதவி செய்யக் கிருபை செய்தருளும்.

நாங்கள் நீதியையும் சமத்துவத்தையும் நாடி, மற்றவர்களின் தேவைகளுக்காகக் கவலைப்பட்டு, அவர்களோடே ஐக்கியமாய் ஒத்துழைத்து, எங்கள் எல்லாருக்கும் ஒரே ஆண்டவரானவருடைய நாமத்துக்கு மகிமையாய்ச் சீவிக்க, உதவி செய்ய வேண்டுமென்று தாழ்மையாய் வேண்டி நிற்கின்றோம்.

ஆமென்.